கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்

This entry is part of 51 in the series 20041118_Issue

ஆசாரகீனன்


இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நெதர்லாந்து இயக்குனர் தியோ வான் கோ பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும், இப் படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட Submission குறும்படம் பற்றியும் திண்ணையில் எழுதி இருந்தேன்.

இக் குறும்படத்தை, இணையத்தில் இப்போது முழுவதும் இலவசமாகப் பார்க்கலாம்: http://www.ifilm.com/ifilmdetail/2655656 ?htv=12

வான் கோ படுகொலை பற்றியும், நான் திண்ணையில் எழுதியுள்ள பிற கட்டுரைகள் பற்றியும் ரவி ஸ்ரீனிவாஸ் எழுதியுள்ள குறிப்புக்கான எதிர் வினையை (சற்று நீளமாக) எழுதிக் கொண்டிருக்கிறேன். வரும் வாரத்தில் அதைத் திண்ணை ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப இருக்கிறேன். ஆசிரியர் குழுவின் விருப்பத்தைப் பொறுத்து அது திண்ணையில் வெளிவரக்கூடும்.

aacharakeen@yahoo.com

Series Navigation