கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

ஆசாரகீனன்


திண்ணையில், சூடான் இனப் படுகொலைகள் சம்மந்தமான செய்திகளும் வேண்டுகோளும் கடந்த சில வாரங்களில் வெளிவந்தன. என்.ராம் போன்ற கோடாஸ்வர இடதுசாரியால் நடத்தப்பட்டு சென்னையிலிருந்து வெளிவரும் சீன தேசியப் பத்திரிகை, ‘மவுண்ட் ரோடு மாஒ ‘ – ஹிண்டு போன்ற இந்தியப் பத்திரிகைகள் இப் பிரச்சினையைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கான காரணங்களையும் எழுதியிருந்தேன். லண்டனிலிருந்து வெளிவரும்

‘கார்டியன் ‘என்ற பிரபல பத்திரிகையும், இப் பிரச்சினையில் மவுனம் சாதிப்பதற்காக இடதுசாரிகளை விளாசி இருந்தது.

வேறு வழியில்லாமல், தன் உறக்கத்தைக் கலைத்துக் கொண்ட ‘மவுண்ட் ரோடு மாஒ ‘, ஜூலை 21, 2004 இதழின் International பகுதியில் இப் பிரச்சினை சம்மந்தமாக சிறிய அளவிலாவது ஒரு செய்தியை வெளியிட முன் வந்திருக்கிறது. பார்க்க: http://www.hinduonnet.com/2004/07/21/stories/2004072102511500.htm.

இச் செய்தி ஹிண்டுவின் இணையப் பதிப்பில் மட்டும் வெளிவந்துள்ளதா அல்லது அச்சுப் பதிப்புகளிலும் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியவில்லை. வழக்கம் போல, இப் பிரச்சினையின் உண்மையான காரணங்களை வெளியிடாமல் ஏதோ சுரைக்காய்க்கு உப்பில்லை என்ற விதத்தில் இச் செய்தி வெளியிடப் பட்டிருந்தாலும், பல்லாயிரம் பேர் கொல்லப்பட்ட பிறகாவது, ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றாவது ஹிண்டு ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதல் தருகிறது.

சூடான் இனப் படுகொலை பற்றி மேலும் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. Amnesty International அமைப்பு தன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அராபிய ஜஞ்ஜாவீதுகள் கறுப்பின முஸ்லிம் பெண்களை ‘பாலியல் அடிமைகளாக்கி ‘ அவர்களை எப்படியெல்லாம் துன்புறுத்தியுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பார்க்க: www.vibrani.com/honorkillings2.htm

இதில் ஒரு வருந்தத்தக்க செய்தி – இனவெறி எப்படிப் பெண்களின் மனிதாபிமானத்தையும் அழித்து விட்டது என்பது. அராபியப் பெண்கள், ஆப்பிரிக்க கறுப்பினப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் போது, அருகில் நின்று கொண்டு பாட்டுப் பாடி, கற்பழிக்கும் அரபு ஆண்களுக்கு உற்சாகம் ஊட்டியதாக இந்தச் செய்தி கூறுகிறது. மதங்களாலும், உலகளாவிய கருத்தாக்கங்களாலும் இனவெறியை அழிக்க முடியாது என்பதற்கு இன்னொரு உறுதியான சான்று இது.

ஆனால் இனவெறிக்கு எதுதான் நல்ல சிகிச்சை ? மனித குலம் சரியான வழிகளைத் தேட வேண்டிய அவசர அவசியம் எதிரே நிற்கிறது.

இணைய வசதி உள்ளவர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள். சூடான் இனப் படுகொலையைத் தடுப்பதில் புஷ் தலைமையிலான கிறிஸ்தவ எவாஞ்சலிஸ்டுகளின் அரசாங்கம் காட்டும் மெத்தனத்தைக் கண்டித்து அமெரிக்க உள்துறை செயலருக்கு இணையத்தின் வழியே அனுப்பப்பட வேண்டிய கடிதம்:

http://capwiz.com/africaaction/mail/oneclick_compose/ ?alertid=6004806

பண உதவி செய்ய விரும்புவோர் பார்க்க:

Doctors Without Borders

International Rescue Committee

Friends of the World Food Programme

CARE USA

Save the Children

American Jewish World Service

aacharakeen@yahoo.com

Series Navigation

ஆசாரகீனன்

ஆசாரகீனன்