கடிதம் ஜூலை 22,2004

This entry is part of 54 in the series 20040722_Issue

ரெ கார்த்திகேசு


‘பட்டரின் பதில் – பிள்ளாய், நீ கற்றவனாயினும் சொற்போக்கு அறிந்தில்லை போலும். ‘பிள்ளைக்கு இரைதேடும் ‘ என்றுள்ளது காண். அங்குள்ள மண் மிதிமண் ஆகையால் மீன்கள் தூணும் துலாமுமாய்த் தடித்திருக்கும். அவை பறவைக் குஞ்சுகளின் வாய்க்குக் கொள்ளாது. ஆகையால் அவற்றின் வாய்க்குப் பிடிக்கும்படியாக உரிய சிறிய மீன்களைத் தேடிப் பிடிக்க வேண்டியிருக்குமன்றோ ? ‘

மத்தளராயரின் மேற்கண்ட மேற்கோளைப் படித்தபோது (திண்ணை 15/7/04) பல காலத்திற்கு முன்பு பிபிசி-யில் பார்த்து

மனதில் பதித்துக்கொண்ட அரிய தகவல் ஒன்று நினைவுக்கு வந்தது. குயிலியா என்ற பறவையினத்தில் (ஆப்பிரிக்காவில் என

நினைக்கிறேன்) ஒவ்வொரு பறவையும் ஆயிரக் கணக்கில் முட்டையிடுகிறது. தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தெரியாத இந்தப்

பறவைக்கு இந்த எண்ணிக்கை ஒன்றுதான் காப்பு. குட்டையான மரங்களில் தாழ்ந்த கிளைகளில் இவை இடும் முட்டைகளை பாம்புகளும் பிற

predatory பறவைகளும் கொத்துக் கொத்தாகத் தின்கின்றன. தின்ற மீதி குஞ்சு பொரிக்கிறது. குஞ்சுகளையும் எதிரிகள்

இப்படித் தின்கின்றன. இவற்றில் தப்பியவைதான் முதிர்ந்து பறந்து பெரிதாகின்றன. தாய்ப் பறவைகள் முட்டையையும் குஞ்சுகளையும்

காக்க முயற்சியே செய்வதில்லை. அப்படியும் மிஞ்சுவது பல்லாயிரக் கணக்கில்.

குயிலியா பறவைகளின் தீனி இந்தப் பிரதேசத்தில் எதேஷ்டமாக வளரும் ஒரு விதப் புல்லின் விதைகள். குயிலியா பறவைகளை

ஆராய்ந்த உயிரியலாளர்களுக்குப் புதிராக இருந்த ஒரு செய்தி மரத்தடியில் கிடைக்கும் ஏராளமான இந்த விதைகளை நாடாமல்

தாய்ப் பறவைகள் பல கிலோமீட்டர் பறந்து போய் அதே விதைகளைப் பொறுக்கிச் சாப்பிடுவதும் குஞ்சுகளுக்கு ஊட்டுவதும் ஏன்

என்பது. பிறகு விளக்கம் கிடைத்தது. குஞ்சுகள் பறக்கத் தெரிந்து தாமே தீனி உண்ணத் தொடங்கும்போது அருகே உள்ள

புல்விதைகளைத்தான் உண்ண முடியும். இதை முன்னறிந்து தாய்ப்பறவைகள் அந்த விதைகளைத் தொடாமல் தூர உள்ள விதைகளை

நாடுகின்றன.

தொல்காப்பியர் பறவைக்கு எத்தனை அறிவுகளைச் சொன்னார் என்று தெரியவில்லை. னால் இந்த அறிவு அதற்கு வாய்த்திருப்பது

அபூர்வமானது. ஆகவே பட்டர் சொன்ன விளக்கம் சாதுர்யமானது மட்டுமல்ல; ஓர் அடிப்படை உயிரியல் உண்மையாகவும் இருக்கலாம்.

அன்புடன்

ரெ.கா.

அன்புடன்

ரெ.கா.

karthi@myjaring.net

Series Navigation