கேப்டனும் பேண்டேஜ் பாண்டியனும்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

செல்வன்


கேப்டனை பார்க்க பான்டேஜ் பாண்டியன் போனபோது அவர் காப்பி குடித்துக் கொண்டிருந்தார்.”வாய்யா பாண்டியா.பெரிய கட்சிகளை கண்டுகிட்டு எங்களை எல்லாம் மறந்துட்டியோன்னு நினைச்சேன்” என அட்டகாசமாக சிரித்தபடி வரவேற்றார்.

“முதல் முதலா சட்டசபைக்கு போயிருக்கீங்க.எப்படி இருக்குங்க அனுபவம்?” என்று கேட்டார் பாண்டியன்.

“அதை ஏம்பா கேக்கறெ?நான் சினிமால போடறதெல்லாம் ஒரு ஸ்டன்ட்டா?பறந்து பறந்து அடிச்சுகிறாங்க.போலீஸ்காரனை நான் சினிமாவுல தான் அடிப்பேன்,.இங்க எம்.எல்.ஏக்களே அடிக்கறாங்க.இவங்க எல்லாம் நடிக்க வந்தா என் மார்க்கட் அம்பேல்” என பயத்துடன் சொன்னார் கேப்டன்.

“ஜோசியர் பேச்சை கேட்டு கட்சி ஆரம்பிச்சுருக்கீங்கன்னு ஸ்டாலின் சொல்றாரே உண்மையா” என கேட்டார் பாண்டியன்.

கேப்டனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.குரலை மெதுவாக தாழ்த்திக்கொண்டு சொன்னார். “பாண்டியா அப்படியாவது அந்த ஜோசியர் பேரை நான் சொல்லுவனான்னு பாத்திருக்கார்.நான் சொல்லிருந்தா எல்லா அரசியல்வாதிகளும் அவர் கிட்டதான் போய் நின்னிருப்பாங்க” என நமட்டு சிரிப்புடன் சொன்னார் கேப்டன்.

“மன்சூர் அலிகான் உங்களை பத்தி ரொம்ப மோசமா பேசிருக்காரே?” என கேட்டார் பாண்டியன்.

“நான் பாத்து சினிமாவுக்கு கொண்டுவந்த பய.அப்படி என்ன பேசிட்டான்?” என கண்கள் சிவக்க கேட்டார் கேப்டன்.

“பொண்டாட்டி பேச்சை கேட்டு கட்சி ஆரம்பிச்ச ஒரே ஆளு நீங்கதான்” அப்படின்னு பேசிருக்காரே” என்றார் பாண்டியன்.

“ஓகோ.அந்த அளவுக்கு ஆயிடுச்சா அவருக்கு?பொண்டாட்டி பேச்சை கேட்டா என்ன தப்புங்கறேன்?சுத்த ஆணாதிக்க பூர்ஷுவா பேச்சா இல்ல இருக்கு இது?” என சத்தம் போட்டார் கேப்டன்.

“இல்லைங்க.உங்க படத்துல எல்லாம் நீங்க பொண்டாட்டி புருஷன் பேச்சை கேக்கணும்னு அட்வைஸ் மழையா பொழிவீங்க.அதை கிண்டலடிக்கிராரோ என்னவோ” என்றார் பாண்டியன்.

“படத்துல நான் ஆயிரம் டயலாக் பேசுவேன்.அதெல்லாம் உண்மையா என்ன?” என்றார் கேப்டன்.

“அப்ப நீங்க கனல் தெரிக்க படத்துல அரசியல்வாதிகளை திட்டினது உண்மையா பொய்யா?” என கேட்டார் பாண்டியன்.

“யோவ் பாண்டியா.அதெல்லாம் உண்மை.மத்ததெல்லாம் பொய்.நீ சுத்த வில்லங்கம் புடிச்ச ஆளா இருப்பே போலிருகே?” என சத்தம் போட்டார் கேப்டன்.

“வேற என்ன சொன்னார் மன்சூர்” என கேட்டார் அருகே நின்ற ஒருவர்.

“எங்க போனாலும் உங்க சம்சாரத்தை கூடவே கூட்டிட்டு போறீங்கன்னு கிண்டலடிக்கிறார்” என்றார் பாண்டியன்.

“என் சம்சாரத்தை தானேயா கூட்டிட்டு போறேன்?அடுத்தவன் சம்சாரத்தையா கூட்டிட்டு போறேன்.இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா?” என சத்தம் போட்டார் கேப்டன்.

“இல்லைங்க.உங்க மச்சினன் பேச்சை தான் நீங்க கேக்கறீங்களாம்” என்றார் பாண்டியன்.

“மச்சினன் துனையிருந்தா மலையேறலாம்.மச்சினன் பேச்சை கேட்டா என்னய்யா தப்பு?மச்சினி பேச்சை தான் கேக்க கூடாது.நான்சென்ஸ்” என சத்தம் போட்டார் கேப்டன்.

“இல்லைங்க.குடும்ப அரசியலா போச்சேன்னு தான்…” என இழுத்தார் பாண்டியன்.

“என்னைய்யா பெரிய குடும்ப அரசியல்.தமிழ்நாட்டுல புருஷன் பண்ற வியாபாரத்துல மனைவி உதவி பண்றது கிடையாதா?என்னை மட்டும் ஏனய்யா கிண்டலடிக்கறீங்க?” என கடும்கோபத்துடன் கேட்டார் கேப்டன்.

“அப்ப நீங்க கட்சி நடத்தறது வியாபாரமா?” என கேட்டார் பாண்டியன்.

“யோவ் பாண்டியா.ரொம்ப குசும்பு பண்ணாதையா.பேருக்கேத்த மாதிரி பேன்டேஜ் போட்டுடுவேன்” என எச்சரித்தார் கேப்டன்.

“உங்க கட்சில கை அமுக்கினவன் பொது செயலாளர்.கால் அமுக்கினவன் மாநில செயலாளர்ன்னு” எஸ்.எஸ்.சந்திரன் கிண்டல் பண்ணிருக்காரே என கேட்டார் பாண்டியன்.

“நான் பாத்து சினிமா சான்ஸ் குடுத்த பய.என்னையே கிண்டல் பண்றானா?நடிகர் சங்க மீட்டிங்குக்கு வராமயா இருக்கபோறான்?அப்ப வெச்சுக்கறேன் கச்சேரியை” என உறுமினார் கேப்டன்.

“சரிங்க நீங்க இருக்கற கோபத்தை பாத்தா என்னை போட்டு பரேடு கிளப்பிடுவீங்க போலிருக்கு.ஐயா சாமி ஆளை விடுங்க” என சொல்லி எஸ்கேப் ஆனார் பாண்டியன்.

www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz?hl=en

Series Navigation

செல்வன்

செல்வன்