ஈராக் அட்டவணை – டிசம்பர் 9 2002

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

திண்ணை


1945-ல் அமெரிக்க முண்டு வீச்சினால் இறந்த ஜப்பானியர்களைப் போல எத்தனை மடங்கு ஈராக்கியர்கள் ஐ நா பொருளாதாரத்தடையினால் இறந்திருக்கிறார்கள் : 3 மடங்கு

ஈராக் அணு அயுதம் உற்பத்தி செய்யக் கூடும் என்பதற்கு அளித்த புதிய ஆதார அறிக்கை தயாரான வருடம் : 1998

அந்த வருடம் அணு ஆயுதத்திற்குத் தேவையான தளவாடங்கள் எத்தனை உள்ளன என்று குறிப்பிடப்பட்டது : 0

செப்டம்பர் 11, 2001-ல் உலக வர்த்தக மையங்கள் மீது நடந்த தாக்குதல் பற்றி ‘சார்பற்ற ‘ ஆய்வு நடத்தும் கழிஷனுக்குத் தலைமைப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர் : ஹென்ரி கிஸிங்கர்

ஹென்ரி கிஸிங்கர் மீது யுத்தக் குற்றங்கள் புரிந்ததாய் குற்றம் சொல்லியுள்ள நாடுகள் : சிலி, கம்பூசியா, வியட்நாம், கிழக்கு தைமோர்

ஈராக் யுத்தம் மூண்டால் அமெரிக்கா செலவு செய்யவிருக்கும் தொகை : 100 பில்லியன் டாலர்

***

Series Navigation