திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

கோமதி நடராஜன்


இன்னாபா உன்க்கு கவலை அல்லாம் மறந்து மூணுஅவரு சிாிக்கணுமாபா ?பீகேஎஸ் சின்மாக்கு ஒரு தபா போய்கினேன்னா, ரெண்டு பெக்கு போட்டாமாதிாி, சும்மா ஜிங்குன்னு பூடுவே.

நம்ம அண்ணாத்தே கமலு ஸார்கீராரே,ஸ்டண்ட் க்ரூப்ல டூப் பார்ட்டி, கனத்த பாடியை வச்சிகினு பல்டி அடிக்கிறாரு,டான்ஸ் ஆடுறாரு,வெளுத்து கட்டிட்டார்பா.படத்தில ஒரு ஸீன்ல ,காதுலே என்ன செடியான்னு கேக்க சொல்லச்சே கமலு துளசியைக் காட்டுவார்பா,ஆனா எனக்கு என்னமோ,நம்ம காதுலே மரத்தையே வச்சா மாதிாி ாீல் ாீல்லா வுட்டுக்கினே இருக்கார்பா,க்ரேசி மோகன் ஸாரும்,கமல் ஸாரும்,இந்த சிம்ரனும் ஸ்னேஹாவும் கமலோட ஆக்ட்கொடுக்கணும்னு வந்த சான்ஸை கபக்குனு புடிச்சிகினாங்க.

நம்ம ஊர்வசியோட அக்காகீதே,அதப்பாக்கச்சே பாவமாகீதுடா.அது என்னாங்கடா ?சட்டக்காாிங்கல்லாம் 5தபா கண்ணாலமும் 7தபா டைவர்சுமாவா இருப்பாங்க,அந்தமாதிாியெல்லாம் ஜோக் அடிக்கலாமா தப்பில்லையா ?, அந்த அம்மாவை பாத்து ,ஏசியானெட்டுன்னு கமல் சொல்லச்செ எனக்கு என்னமோ சாியாப்படாத மாதிாி தோணுச்சு,சிாிக்கச்சொல்ல மிஸ்டேக் பதுங்கிடுது அண்ணாத்தே! அப்பாஸ்ஸும் கமலு ஸாரும் ஒரு ஸீன்ல வந்தாங்கன்னு வச்சுக்க, ஸ்கிாீன் ரொம்பி பிதுங்கிடுதுபா,ஸ்கீாீனு கிழிஞ்சிடுமோன்னு பயந்துபூட்டேன்.

பீயெஸ்கே தவுத்து, ஆருக்கும் படத்திலே ஜோலியே கிடையாதுபா,சும்மா ஜாலியா ஆக்ட் குடுத்துட்டு போய்க்கினே இருக்காங்கோ.நம்ம விஸ்கி பிராந்தி கடைங்கள்லே குடிமகன்களை அட்ராக்ட் பண்றதுக்கொசரம்,மினுக் மினுக்னு சீாியல் பல்புங்களை தொங்க போட்டு டெகோரேஷன் பண்ணுவான்களே அதப்போல நம்ம க்ரேசி ஸார்,ஜோக் ஜோக்கா ஷோக்கா மாட்டி, ‘பளிச் பளிச் ‘ பண்ணி அல்லாரையும் மயக்கிட்டார்பா.என்ன கேட்ட ?பாட்டா ?அப்படி எதுவும் இல்லையே,கமல்தான் கந்தசாமி ராமசாமின்னு தோஸ்துங்களை கூவி கூவி கூப்பிட்டாமாதிாி ஒரு டயலாக்சாங்கு ஒண்ணு வருது,மத்தபடி சொல்லிக்றாபோல இல்லை.

கார்ட்டூன் பாக்றச்சே ‘டாம் அண்டு ஜெர்ாியை ‘ சிாிச்சுகினே பாக்றா மாதிாி ,பீயெஸ்கேயையும் பாத்திட்டுப் போய்கினே இரு. ,வெளிய வரப்ப மனசிலே எதையும் வச்சிக்காம வந்தியான பொழச்சே,இல்லாங்காட்டி ,இது நடக்குமா ?இது முடியுமான்னு ?கேள்வியா கேட்டு என்னை பேஜார் பண்ணினே மவனே! ,ஒன்னை டூப் இல்லாமலியே பொரட்டி எடுத்துடுவேன் பொரட்டி.அடுத்த தபா க்ரேசி/கமல் ஜோடி சேரச்சொல்ல கதையும் இஸ்ட்ராங்கா நல்ல ஃபில்ட்டர் காபி மாதிாி கம கமன்னு இருந்தா சூப்பர் ஜோடி ஆயிடுவீங்க அண்ணாத்தைங்களா.

இப்போ தந்தீங்களே காபி ,மெய்யாலுமே அது காப்பிங்களா ? த்தூ!ஒரே தித்திப்பு,தெகட்டிடுச்சு. சக்கரையை நிறைய கொட்டித் துளியூண்டு டிகாக்ஷனைச் சொட்டி இதாண்டா காபின்னு ஏமாத்திட்டாங்களேசடுக்குமா ஸாருங்களா ?அடுத்தவாட்டி நீங்க ரெடி பண்ற காபி ‘பேஷ் பேஷ் நன்னாகீது ‘ன்னு சொல்ல வைக்கணும் ,சாியா ஸாரு ?பெஸ்ட் ஆஃப் லக்![மூணு வார்த்தைசொல்லிட்டேன்] வரட்டா ஸாரே ?

[பம்மல் கே சம்பந்தம் பார்த்த சூட்டோடு விமாிசனம் எழுதியதால் , எழுத்தில் சென்னை தமிழ் மணக்கிறது

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்