“மந்திர யோகம்”

This entry is part [part not set] of 34 in the series 20100206_Issue

முனைவர் சி.சேதுராமன்



E.Mail. sethumalar68 yahoo.com

மந்திரத்தினை செபித்து (மனதில் உருவேற்றி) இறைவனை அடைவதற்குரிய சாதனமே மந்திரயோகமாகும். யோக சாதனையால் சாதகர் இறைவனை அகண்டமாகத் தியானித்துக் கண்டநிலை நீங்கி அகண்டமாய்த்த திகழ்வர். மந்திர செபத்தால் புறத்தே அமைந்த உருவத்தில் இறைவனை வழிபாடு செய்து தேவதா(இறைவடிவம்) வடிவம் பெறுவர். உருவ வழிபாட்டில் ஆசிரியர் சதாசிவ மூர்த்தியின் வழிபாட்டைச் சிறப்பித்துப் பேசுகிறார். இறைவனை அடசரவடிமாகச்(எழுத்து வடிமாக) சக்கரத்தில் எழுந்தருளியிருப்பதாகக் கருதி அங்கு வழிபடுவதும் புறவழிபாட்டைச் சேர்ந்த ஒன்றாகும். திருமூலர் திருவம்பலச் சக்கரம், சாம்பவிமண்டலச் சக்கரம், புவனாபதி சக்கரம், நவாக்கா¢சக்கரம் முதலியவற்றைச் சிறப்பாகக் கூறுகிறார்.

மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்பது பொருளாகும். மந்திர யோகம் என்றால் நினைப்பவனைக் காத்து இறைவனோடு சேர்க்கும் நெறி என்று பொருள். மந்திரங்களில் ஓம் என்ற பிரணவமே தலையாய மந்திரமாகும்.ஓம் என்பது எல்லா மந்திரர்களுக்கும் முதலில் சேர்த்து உச்சா¢க்க வேண்டிய ஒன்றாகும். இதனை எவ்வித வேறுபாடுமின்றி அனைவரும் செபிக்கலாம் என்று பதஞ்சலி முனிவர் தமது யோகசூத்திரத்தில் கூறியுள்ளார். “Word is God” என்று விவிலியம்(பைபிள்) மொழிவது நோக்கத்தக்கது.

ஓங்காரத்தில் அடங்கியவைகளே ஐம்பூதங்களும், ஐம்பூதநாயகர்களும், சரம் அசரமாகிய எல்லாமுமாகும். மூவகை ஆன்மாக்களும் ஓங்காரத்தின் உயச்சியில் உள்ளன. அதனால் ஓங்காரம் சீவனுக்கும் மேலான ஆன்மாவாகிய பரத்துக்கும், சிவத்துகுகும் உருவாக அமைவதாக உள்ளது என்பதனைத் திருமூலர்,

“ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்

ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்

ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன

ஓங்கார சீவ பரசிவ ரூபமே” (திருமந்திரம்- 2677)

என நவில்கிறார்.

ஓம் என்பது அ உ ம என்ற மூன்று பாதங்களை உடையது. அ·து அகரமாகிய முதல் பாதத்தால் உலக மெல்லாம் பரவி அதுவதுவாய் விளங்கி இரண்டாவது பாதமாகிய உகரத்தால் உடம்பினுள் பொருந்திச் சிவசக்தியாய் மூன்றாவது பாதமாகிய மகரத்தால் சீவர்களை அறியாது மயக்கத்தைப் பொருந்தும் வண்ணம் செய்வது. இதனை சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்று கூறுவர். அ·தாவது விழிப்பு, கனவு, உறக்கநிலை என்பர். இதனை,

“ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி

ஈரெழுத் தாலே இசைந்தங் கிருவராய்

மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை

மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே” (திருமந்திரம் 885)

எனத் திருமந்திரம் மொழிகிறது.

பிரணவத்தை ஐந்தெழுத்தாகக் கூறுவர். அ·தாவது அ உ ம விந்து நாதம் என்பதாகும். அஉம என்பன தூநிலை; விந்து நாதம் சூக்கும நிலை. அஉம என்ற தூலநிலையினைக் கடந்து சீவன் விந்து நாதங்களை உணர்ந்தபோது துரியம் துரியாதீத நிலைகளைப் பொருந்தும்.விந்து-ஒளியையும், நாதம்-ஒலியையும் குறிக்கும். இத்தகைய சூக்கும பிரணவமாகிய விந்து நாதங்களை அறிவினால் அடைந்து சமாதி கூடலே மனிதன் எடுத்த பிறவியின் பேறு என்றுதிருமூலர் பலவாறு திருமந்திரத்தில் எடுத்துரைக்கிறார்.

பஞ்சாட்சர மந்திரமாகிய நமசிவாய என்ற ஐந்தெழுத்தே மந்திரயோகத்திற்குரிய மந்திரமாகும். நமசிவாய மந்திரத்தில் உள்ள ந-விருதிவியையும், ம- அப்புவையும், சி-தேயுவையும், வ-வாயுவையும், ய-ஆகாயத்தையும் குறிப்பனவாகும். உடலில் உள்ள சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை என்ற ஆதாரங்கள் முறையே பிருதிவி(நிலம்), அப்பு(தீ), தேயு(நீர்), வாயு(காற்று), ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களுக்கு உரிய இடங்களாகும். எனவே நமசிவாய என்பது உடலில் சுவாதிட்டானம் முதலிய இடங்களில் நிற்கும் நிலையாகும். இதனை திருமூலர்,

“நகார முதலாக நந்திதன் நாமமே”

என நந்தியின் நாமம் என்று கூறுகிறார்.

பஞ்சாட்சரம் என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தூலம் (வெளிப்படையாகத் தொ¢வது), சூக்கும்(புலப்படாதது-உணரக்கூடியது), அதிசூக்குமம்(ஞானிகளால் மட்டும் உணரமுடிவது) என மூவகையாக திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார். தூல பஞ்சாட்சரம் அல்லது தூல ஐந்தெழுத்து என்பது சிவாயநம என்பதாகும். சிவாயநம என மானசீகமாகச் (மனதிற்குள்ளேயே கூறுதல்) செபித்தால் சூக்கும அசைவுகள் ஆகாயத்தில் பொருந்தி மூலாதாரம் முதலாக நிற்கும்.நமசிவாய என்ற இறைவனை உடலில் பொருந்துமாறு செய்துவிடும்.

அ·து எவ்வாறு உடலில் பொருந்தும் என்பதை,

“வாயொடு கண்டம் இதய மருவுந்தி

ஆய இலிங்க மவற்றின்மே லேயவ்வாய்த்

தூயதோர் துண்ட மிருமத் தகஞ்செல்லல்

ஆயதீ றாமைந்தோ டாமெழுத் தஞ்சுமே” (திருமந்திரம், 2701)

என்ற பாடலில் திருமூலர் தெளிவுறுத்துகிறார். சிவாயநம என்ற ஐந்தெழுத்தினைச் செபித்தால் ஆகாயத்தில் உண்டாகும் உணர்வு அலைகள் படர்ந்து விரிவதில் அவை மேலும் கீழுமாகவும், வட்டம் வட்டமாகவும் வாய்க்குக் கீழான கண்டத்தையும், நெஞ்சத்தையும், நாபியையும், இலிங்கத்தையும் அடைகின்றன. கூர்மாசனம் முதலிய ஆசனத்தில் அமர்ந்திருப்பதால் அவை மேலும் விரிவடையாமல் மூலாதராம் சுருக்கப்பட்டு இலிங்கத்தின் வழியாக நேரே பிரமரந்திரத்தை(சிரசு உச்சியை-உச்சந்தலை)அடையும். இவ்வாறு மூலாதாரத்தை அடைந்து நேரே பிரமரந்திரத்துக்குச் சுழுமுனை வழியாகச் செல்லும் உணர்வுதான் வாசியாகும். இந்த அமைப்பில் நமசிவாய என்ற சோதி உருவம் நீண்டு உயர்ந்து எழும். இதுவே பஞ்காட்சர தரிசனமாகும். இவ்விதமாக நமசிவாய உதிப்பில் ஆகாய மண்டலம் சிறப்புற்று விளங்கி விந்துநாதங்கள் பொருந்தும்.மனித உடலில் உள்ள ஐம்பது எழுத்துக்களும்( அகார முதலாக க்ஷ£கார முடியவுள்ள கிரந்த எழுத்துக்கள், மூலாதாரம்-4, சுவாதிட்டானம்-6, மணிபூரகம்-10, அநாகதம்-12, விசுக்தி-16, ஆக்ஞை-2 ஆகிய ஐம்பது எழுத்துக்கள் ஆறாதாரங்களில் உள்ளன) ஐந்தெழுத்தாய்ப் பிரணவமாய் மாறி விந்துநாதங்களாய் விளங்குவதில் சகல வேதாகம ஞானம் அடங்கிவிடும். எனவே திருமூலர் சிவாயநம என்று ஒருமுறை கூறுங்கள் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இதனை,

“தெள்ளமு தூறச் சிவாய நமவென்

றுள்ளமு தூற வொருகால் உரைத்திடும்

வெள்ளமு தூறல் விருபியுண் ணாதவர்

துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே” (திருமந்திரம்-2704)

என்று திருமந்திரம் குறிப்பிடுகிறது. மேலும் மனம் தடுமாற்றத்தை அடையும் வண்ணம் தீவினையால் உண்டாகும்நிலை வந்தபோது சீவனில் செறிந்துள்ள சிவத்தைப் பிரகாசிக்கச் செய்ய ஐந்தெழுத்தை ஓதவேண்டும். சிவாயநம என்று ஓதுபவருக்கு நாதவெளிப்பாடுகிட்டி சிவவடிவம் கிடைக்கும். நாள்தோறும் உறங்கும்போதும் திருவைந்தெழுத்தை நினைத்திருந்தால் சிவனருள் கிட்டும். அது மரணம் வந்தபோது பாதுகாவலாகத் துணைசெய்யும் என்பதனை,

“மரணங்கை வைத்துயிர் மாற்றிடும் போதும்

அரணங்கை கூட்டுவ தஞ்செழுத் தாமே”( திருமந்திரம்-2072)

எனத் திருமூலர் எடுத்துரைக்கிறார்.

சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவாயநம என்பதை ஒளியாக நினைந்து ஓதுதல் ஆகும் இதனை,

“ஒளியை என்னி உருகு மனத்தராய்த்

தெளிய வோதிச் சிவாய நமவென்னும்”(திருமந்திரம்-2709)

என்று திருமூலர் கூறுகிறார். சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தில் சி-என்பது சிவனையும், வ-என்பது சக்தியையும், ய-என்பது சீவனையும்(உயிர்), ந-என்பது மலத்தையும்(ஆணவம், கன்மம், மாயை-மும்மலங்கள்), ம-என்பது மாயையையும்குறிக்கும். இப்பஞ்சாட்சர செபத்தால் துன்பத்தைக் கொடுக்கும் ஆணவம் கன்மம், மாயை மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் நீங்கும். இதனைத் திருமூலர்,

“சிவன்சத்தி சிவன் செறுமல மாயை

அவஞ்சேர்த்த பாச மலமைந்த தகலச்

சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர

அவம் சேர்த்த பாசம் அணுககி லாவே” (திருமந்திரம்-2710)

என்று குறிப்பிடுகிறார். மேற்கூறியவாறு சிவாயநம என்று செபிப்பதில் நகர மகரத்தால் குறிக்கப்பெறும் மலமனைத்தும் அகன்று குண்டலியின் பிடிப்பிலிருந்து நீங்கிச் சிற்சத்தியால் யகரமாகிய அன்மாவுக்குத் தீமையில்லாத சிவஞானயோகம் கிட்டும். மேலும்,

“ஓதிய நம்மலம் எல்லாம் ஒழிந்திட்டல்

வாதி தனைவிட் டிறையருட் சத்தியால்

தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்

ஓதுஞ் சிவாய மலமற்ற உண்மையே” (திருமந்திரம், 2712)

எனச் சிவாய என்ற ஒளியைப் பூசிப்பதே மலம் நீங்கிய உண்மை நிலையாகும் எனத் திருமூலர் நவில்கிறார்.

சிவாயநம என்ற திருவைந்தெழுத்தைச் செபிக்கும் முறையில் ந ம என்ற எழுத்துக்களை நாவினுள் கண்டப் பிரதேசத்தில் அடக்கிச் சிவ என்னும் நாமத்தைச் சிரசின் மேல் மன மண்டலத்தில் நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்தால் ஆன்மவொளி பெருகிப் பிறவியானது நீங்கும் என ஐந்தெழுத்து மந்திரத்தை தியானம் செய்யும் முறையை,

“நமவென்று நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவவென்னு நாமத்தைச் சிந்தையு ளேற்றப்

பவமது தீரும் பா¢சும தற்றால்

அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ” (திருமந்திரம்,2717)

என்ற பாடலில் திருமூலர் தெளிவுறுத்துகிறார்.

அதிசூக்கும பஞ்சாட்சரம்: சிவாய சிவ சிவ என்பது அதிசூக்கும பஞ்சாட்சரமாகும். அதாவது இருளை விட்ட ஆன்மா சிவசத்தியைத் தாரகமாகக் கொண்டு அழிவற்ற நிலைபெறும். ஒளியில் நினைப்பும் அற்று அடக்கி நிற்றலே அதிசூக்கும பஞ்சாட்சர தா¢சனம் ஆகும்.

சிவாயநம என்று செபித்துச் சித்தத்தைப் புறத்தே செல்லாது அக நிலையதாக்கி, மலத்தாலாகிய துன்பத்தை நீங்கச் சிவத்துக்கு அடிமையாக்கி, சிவாய சிவசிவ என்று பலமுறை சித்தத்தில் நினைக்க அத்துன்பம் நீங்க மகிழ்ச்சி உண்டாகும். இதனை,

“சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை

அவாயங் கெடநிற்க ஆனந்த மாமே” (திருமந்திரம், 2718)

என்று திருமூலர் உரைக்கின்றார்.

அவயம் அறுதலாவது, ந ம என்பன நீங்குதல். சிவாய சிவ சிவ என்பது மலம் நீங்கிய சீவன் சிவசத்தியோடு ஒளி மயமாய் நிற்றல் ஆகும். அதாவது, மலம் நீங்கிய சீவன் சிவசத்தியோடு பொருந்தி ஆனந்த நிலையில் இருக்கும்.

அதிசூக்கும பஞ்சாட்சர தா¢சனத்தால் மூலாதாரத்தில் உள்ள அக்கினி சூரிய மண்டலத்தைக் கடந்து சென்று தோளுக்குமேல் விளங்கும் சந்திரமண்டல ஒளியில் ஐம்புல அறிவுகளும் அடங்கும் முறையில் பொருந்தியிருக்கின்ற சாதகர்(பயிற்சிசெய்பவர்)சிவத்தைப் பிரியாதிருக்கும் நிலையை அடைவர். இதுவே ஐந்தெழுத்து மந்திரத்தால் பெறும் யோகமாகும் என்ற அரிய கருத்தினைத்திருமூலர்,

“செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புற

மஞூசண வும்முறை சூயறி வழிக்கொண்டு

துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை

நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே” (திருமந்திரம்-2719)

என உரைக்கின்றார்.

சத்திபீசம்

திருமூலர் சத்திக்குரிய ஹ்ரீம் என்ற பீச மந்திரத்தைப் பற்றிக் கூறுகிறார். பிரணவம் ¦வ்வாறு ஓரெழுத்தொருமொழியாகச் சிறந்து விளங்குகிறதோ அது போல ஹ்ரீம் என்பதும் ஓரெழுத்தொருமொழியாகச் சிறந்து விளங்குகிறது என்று சத்தியை வழிபடுவோர் கூறுவர். இச்சக்திபீசத்தின் பெருமையை,

“ஓங்காரி என்பா ளவரொரு பெண்பிள்ளை

நீங்காத பச்சை நிறத்தை ளூடையவள்

ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு

ரீங்காரத்துள்ளே யினிதிருந் தாளே” (திருமந்திரம்-1073)

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். பிரணவ வடிவான தேவியே

பஞ்சக்கிருத்தியங்களுக்கும்(ஐம்புலன்களுக்கும்)தலைவியாவாள். இவளே படைப்பில் முனைந்தவளாய் விளங்கும்போது சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியோரைத் தனது அம்சமாக உண்டாக்கிவிட்டு ஹ்ரீம் என்ற பீசமந்திரத்தில் எழுந்தருளியுள்ளாள். அதனால் தேவியை வழிபடுவதற்குரிய சிறந்த மந்திரம் ஹ்ரீம் என்பதாகும். ஹ்-ர்-ஈ-ம்-ஹ்ரீம் என்பது முறையே சிவபீசம் அக்னிபீசம், மாமாயை, விந்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூலாதாரத்தில் ஹகாரத்தையும், இதயத்தில் ரகாரத்தையும், புருவநடுவில் ஈகாரத்தையும், சிரசில்(தலையில்)ஹ்ரீங்காரத்தையும் வைத்துத் தியானித்தல்(நியாசம்)வேண்டும்.

திருமூலர் பஞ்கதசாட்சா¢மந்திரத்தை மறைவாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பஞ்கதசாட்சா¢யை,

“ககராதி யோரைந்துங் காணிய பொன்மை

அகராதி யோரா றரத்தமே போலும்

சகராதி யோர்நான்குந் தான்சுத்த வெண்மை

ககராதி மூவித்தை காமிய முத்தியே”(திருமந்திரம், 1307)

என்ற பாடலில் திருமூலர் தெளிவுறுத்துகிறார். ககராதி ஓர் ஐந்தாவன, க ஏ ஈ ல ஹ்ரீம். அகராதி ஓர் ஆறாவன, ஹ ஸ க ல ஹ்ரீம். சகராதி ஒரு நான்காவன ஸ க ல ஹ்ரீம். மூலவித்தையாவன(மூன்று கண்டம்) வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம் ஆகும்.வாக்பவ கூடம் பொன்னிறம், காமராஜ கூடம் செந்நிறம், சத்தி கூடம் வெண்ணிறமாகும். இம்மந்திரம் பதினைந்து அட்சரங்களைக் கொண்டமையால் பஞ்சதசாட்சா¢ எனப்பெறும் .

நவாக்கா¢மந்திரம்

பஞ்சதசாடசா¢ போன்றே நவாக்கா¢ மந்திரம் திருந்திரத்தில் திருமூலரால் குறிப்பிடப்படுகிறது நவ-அக்கா¢-நவாக்கா¢ என்பது ஒன்பது அட்சரங்களைப் பீசமாகக்கொண்டுள்ள தேவியின் மந்திரம்ஆகும். கிலீம், ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், கெளம், க்ரீம், ஹெளம், ஒள, ஸெளம் என்பன நவாக்கா¢யின் பீசங்களாகும். இதனைத் திருமூலர்,

“செளமுதல் அவ்வொடு ஹெளவுட னாங்கிரீம்

கெளவு ளுமையுளுங் கலந்திரீம் சிரீமென்

றெவ்வில் எழுங்கிலீ மந்திர பாதமாச்

செவ்வுள் எழுந்து சிவாய நமவென்னே” (திருமந்திரம், 1320)

என்று குறிப்பிடுகிறார். செளம் ஒளம் ஹெளவுடளாகக் கிரீம் கெளம் ஐம் கலந்து ஹ்ரீம் ஸ்ரீம் என்று கிலீம் மந்திரத்தை மூலமாகக் கொண்டு செம்மையாக உள்ளே அடியிலிருந்து நினைந்து சிவாயநம எனக் கூறவேண்டும். செவ்வுள் எழுதலாவது, கிலீம், ஸ்ரீம்,ஐம்கெளம் கிரீம் ஹெளம் ஒள ஸெளம் என எழுதல் வேண்டும் என்று இப்பாடலில் திருமூலர் தெளிவுறுத்துகிறார்.

மேலும் இங்கு விமர்சவப் பிரணவங்களாக உள்ள ஸ்ரீம்ஹ்ரீம் கிலீம் ஐம் செளம் ஆகிய ஐந்தும் இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் வேறு கத்தியுள்ள பீசங்களோடு பரமேசுவா¢ மந்திரமான சிவாயநம என்பதையும் இது கொண்டுள்ளது. சிவயநம என்பது சிவ பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சத்தி பஞ்சாட்சரம். வகாரம் நீண்டு தீர்க்கமாக இருப்பதால் சத்தி பஞ்சாட்சரமாகும். இ·து ஆகமத்தில் கண்ட நவாக்கா¢யாகும். நவாக்கா¢யைக் கிலீம் முதலாகச் செபிப்பதில் இம்மைப் பயனாகிய கல்வியும், மறுமைப் பயனாகிய ஞானமும் உண்டாகும் என்பதனை,

“நலந்தரும் ஞானமும் கல்வியும் எல்லாம்”

என்று திருமந்திரம் நவில்கிறது. இப்பீசங்களை(மந்திரங்கள்) மாற்றி மாற்றி

ஒவ்வொன்றையும் முதலாக அமைத்துச் செபிப்பதில் ஒன்பதாக விரியும். ஸ்ரீம் ஹ்ரீம்ஐம் கெளம் கிரீம் ஸெம் கிலீம் சிவாயநம என்பது இரண்டாது பிரயோகமாகும். “நினைத்திடு மச்சிரீ மக்கிலீ மீறா” என்பது திருமூலர் வாக்கு. இதன் மூலம் ஸ்ரீம் முதல் கிலீம் இறுதியாக நினைக்கவேண்டும் என்பது நன்கு தெளிவாகிறது. அவ்வாறு நினைந்து வழிபடுவோருக்கு இறைவி நேர்நின்றருள்வாள்.

ஹ்ரீம் ஐம் செளம் கிரீம் ஹெளம் ஒளம் செளம் கிலீம் ஸ்ரீம் என்பது மூன்றாவது பிரயோகமாகும். இதனை,

“பாரணி யும்ஹ்ரீ முன்ஸ்ரீ மீறாம்

தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக்

காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே”. (திருமந்திரம்,1329)

என்று திருமூலர் குறிப்பிடுகிறார். ஹ்ரீம் முதல் ஸ்ரீம் ஈறாகத் தியானிக்கில் நாட்டை ஆளும் மன்னரும் சாதகா¢ன் வசமாவர். அவருக்குப் பகையானவரும் இல்லை. அவ்வாறான தேவியை நினைத்து வழிபட்டு உலகப்பற்றினை நீங்கவேண்டும் என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார். இறைவியின் திருவடியை மனதால் நினைப்பவர் திருவடி ஞானம் பெறுவர்.

ஐம் யெகளம்கிரீம் ஹெளம் ஒளம் செளம் கிரீம் ஸ்ரீம் ஹ்ரீம் என்பது அடுத்துவரும் பிரயோகமாகும். இதனை,

“ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்

அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை

மைம்முத லாக வழுத்திடு நீயே. (திருமந்திரம்,1334)

என்று திருமூலர் குறிப்பிடுகிறார். இம்மந்திரத்தை சாதனை செய்பவர் நாவினால் கூறும் நன்மையானவை யெல்லாம் கிட்டும்.

“கெளமுதல் ஐயது ஈறாக”(1334).என்று அடுத்த மந்திரத்தைத்திருமூலர் குறிப்பிடுகிறார். அதாவது கெளம் கிரீம் ஹெளம் ஒளம் செளம் கிலீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் என்று ஜெபித்தால் சாதகா¢டமுள்ள காமம் வெகுளி மயக்கமாகிய மும் மலங்களும் நீங்கி நலம் பெறுவர். அவரது வினைகளும் நீங்கி போகப் புண்ணியராக விளங்குவர். அவர் பிறருக்கும் நன்மை செய்து இனியவராக வாழ்வார் என்பதனை,

“வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்

பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்

தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை

முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே”(திருமந்திரம்,1335 ).

என உரைக்கின்றார்.

கிரீம் ஹெளம் ஒளம் செளம் கிலீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கெளம் னெச் செபித்தால் மந்திரத்தைக் கூறுபவர் நினைத்த வண்ணம் நாட்டில் மழை பெய்து வறுமை நீங்கும். இம்மந்திர சாதனை செய்பவர்க்குப் பகையில்லை; கோபமும் துக்கமும் இருக்காது. இவா¢டம் பரவி எழுகின்ற உள்ளொளி அவர் வாழும் இடத்தில் படர்ந்து அப்பகுதியில் வாழ்கின்றவர்களும் அஞ்ஞானம் மறைய ஒளி பெற்று அறிவுச்சுடராக வாழ்வார்கள். இக்கருத்தை,

“வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை

நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்

நலங்கிடும் காம வெகுளி மயக்கந்

துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே”(திருமந்திரம்,1340).

எனும் திருமந்திரப்பாடல் தெளிவுறுத்துகிறது.

ஹெளம் ஒளம் செளம் கிலீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கெளம் கிரீம் என்பது பிறிதோரு மந்திரப் பிரயோகமாகும். இதனைத் திருமூலர்,

“ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாம்

களியது சக்கரம் கண்டறி வார்க்குத்

தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்

பணிவது பஞ்சாக் கரமது வாமே”.(திருமந்திரம், 1349.)

என்று குறிப்பிடுகின்றார். இம்மந்திரத்தைக் கூறுவதால் சாதகர் தெளிவும் ஞானமும் கைவரப்பெறுவர்.

ஒளம் செளம் கிலீம் ஸ்ரீம் ஹ்றீம் ஐம் கெளம் கிரீம் ஹெளம் என்பது ஒள முதல் ஹெளவது ஈறாக உள்ள அடுத்த மந்திரப் பிரயோகமாகும்.இவ்வாறு மந்திர சாதனை செய்து மூலாதாரம் முதல் பிரமரந்திரம் வரை சோதியாக விளர்கும் அமுதேசுவா¢யிடம் மூலவாயுவை மேலே கொண்டுவந்து பொருந்தும்வண்ணம் செய்யின் நாள்தோறும் சாதகர் புதுமைகளைக் காண்பர். அவரது உடலுக்கும் அழிவில்லை. மூலாதாரத்தில் இருந்து மேலோங்கி எழும் ஒளியை அறிந்தபின் ஒருவிதமான கேடும் அவரை வந்தடையாது.பேரொளியைக் கண்டபின் தேசம் முதலிய இட வேறுபாடும் அவருக்கு இராது. பின் காலை,மாலை என்ற நாள் வேறுபாடும் அறும். அதுவும் அற்றபின் கீழ்மேல் முன்பின் என்ற தகுதி வேறுபாடும் இராது. ஆதலால் அமுதேசுவா¢யைப் பொருந்திக் கால தேசம் கடந்து நிற்கவேண்டும். இதனை,

மெய்ப்பொருள் ஔமுதல் ¦.ªவது ஈறாக்

கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்

தற்பொரு ளாகச் சமைந்தமு தே.வரி

நற்பொரு ளாக நடுவிருந் தாளே. (திருமந்திரம்,1354.)

தாளதின் உள்ளே சமைந்தமு தே.வரி

காலது கொண்டு கலந்துற வீசிடில்

நாளது நாளும் புதுமைகள் கண்டபின்

கேளது காயமும் கேடில்லை காணுமே. (1355)

கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்

நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்

மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்

காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே.(1356)

எனத் திருமூலர் தெளிவுறுத்துகின்றார்.

செளம் கிலீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் கெளம் கிரீம் ஹெளம் ஒளம் என்பது நவாக்கா¢யின் ஒன்பதாவது பிரயோகமாகும்.இத்தேவியே ஆகாயம்போன்று உருவின்றி வியாபகமாய் நிற்பவளாவாள். எல்லாப் பொருளுமாகி அவை அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டவளும் அவளேயாவாள். எல்லா அண்டங்களும் தாமேயானவள். இக்கருத்தைத் திருமூலர்,

“தானே வௌiயென எங்கும் நிறைந்தவன்

தானே பரம வௌiயது வானவள்

தானே சகலமும் ஆக்கி அழித்தவன்

தானே அனைத்துள அண்ட சகலமே. (1361)

என்று மொழிகிறார். மேலும்,

அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன்

பிண்டத்தி னுள்ளே பெருபௌi கண்டவன்

குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்

கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே.(1362)

என்றும் எடுத்துரைக்கிறார். அண்டங்கள் அனைத்திலும் விரிந்திருந்தாலும் பிண்டமாகிய உடம்பினுள்ளும் ஞானம் விளங்கும் பெருவெளியைத் தனக்கு இடமாக்கிக் கொண்டவள் என்று உணரவேண்டும். அவள் கண்டத்துக்கு மேல் கலந்திருத்தலை உணர்ந்து அங்கே வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடாவிட்டால் அவர்கள் வினைகளைச் சுமந்து நிற்பவராவர் என்று இப்பாடலில் திருமூலர் தெளிவுறுத்துகிறார்.

மந்திர செபத்தைக் கூறிய திருமூலர் மந்திரமில்லாச் செபமாகிய அசபை குறித்தும் கூறுகிறார். மந்திரமில்லாத செபம் அசபை எனப்பெறும்.செபிக்கப்படாமல் பிராணனோடு இழைந்து இயங்கும்மந்திரமாதலின் இப்பெயர் பெற்றது. இம்மந்திரத்தை ஹம்ச மந்திரம் என்றும் கூறுவர்.மாயானை போன்ற இந்திரயங்களைத் தன் வழிப்படுத்தலால் அங்குசம் என்றும் கூறுவர் மூச்சுக் காற்று ஹ என்ற ஒலியுடன் வெளிப்படுகின்றது. ஸ என்ற ஒலியுடன் உள் நுழைகின்றது. இதுவே ஹம்ச மந்திரமாகிறது. இதனை எல்லா உயிர்களும் செபிக்கின்றன. இவ்வாறு பிராணன் வெளியில் செல்லாது சிரசின்மேல் அமைவதே அசபாவித்தையாகும்.

மந்திரங்களைக் கூறிய திருமூலர் மந்திரவடிவான திருவம்பலச்சக்கரம்(923-929), சாம்பவி மண்டலச் சக்கரம்(1299-1303), புவனாபதி சக்கரம்(1307-1315), நவாக்கா¢ சக்கரம்(1319-1417) ஏரொளிச் சக்கரம்(1281-1283)ஆகியவற்றைப் பற்றியும் தெளிவுற எடுத்துரைக்கிறார். பிரணவம் முதலிய மந்திரங்களும் திருவம்பலம்முதலிய சக்கரங்களும் இறைவனைக் காண்பதற்குரிய சாதனங்களாகும். அவற்றின் துணைகொண்டு மூலாதாரத்தில் உள்ள அசபா சத்தயைச் சிரசுக்குச் செலுத்தி அர்கு விளஙகுகின்ற ஒளி மயமான வட்டத்தில் திளைத்திருத்தலே மந்திரயந்திரங்களின் பயனாகும். இந்நிலை பெறுதலே மந்திர சாதனையால் அடையும் யோக சித்தியாகும்.

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை,

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.