கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா



சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன்பு யாழ் பல்கலைக்கலைக்கழக மருத்துவபீட மாணவர் சொன்ன கருத்து ஓன்று என்னை சிந்திக்க வைத்தது. யாழ் வைத்தியசாலைக்கு பயிற்ச்சிக்காக சென்ற போது அங்கு செல் அடிபட்டு வரும் ஆட்களுக்கு சத்திரசிகிச்சையை மாணவர்கள் செய்வார்கள். அது எங்களுக்கு நல்ல அனுபவம்தானே என்று யாரும் கருதினால் அது தவறானது. ஏனெனில் வெட்டுவதும் தைப்பதும் மருத்துவபீட மாணவர்களுக்கு பெரிய நன்மை தருப்போவதில்லை. நாம் எமது கவனத்தை இதில் செலுத்துவாதால் வேறு நோய்களைப்பற்றியோ அதற்கான சிகிற்சைபற்றிய அனுபவம் எமக்கு கிடைப்பதில்லை. இதேபோல் செல்லடிபட்ட நோயாளிகளினிடம் எமது கவனம் முழுமையாக இருப்பதனால் ஏனைய நோயாளிகள் கவனிப்பாரின்றி கொஞ்சம் கொஞ்சமாக செத்து மடிவார்கள். இது மருத்துவத்துறைக்கு மட்டுமல்ல இலக்கியத்துறைக்கும் பொருந்தும்.

எமது இலக்கியத்தில் யுத்தமும் அவலமும் நிறையவே நிரம்பிக்கிடக்கிறது. இதனால் எமது சமுதாயத்தில் உள்ள ஏனைய பிரச்சனைகள் எமது இலக்கியத்தில. மிகக்குறைவாகவே வெளிவருகின்றது. இது எழுத்தாளனது குறைபாடல்ல. டொக்டரின் கவனம் துப்பாக்கிச் சூட்டுக்காயப்பட்டு உயிருக்குப் போராடும் ஓருவர் மீது இருக்குமா? அல்லது ஓரிரு வருடத்தில் இறக்க இருக்கும் புற்றுநோயாளி மீது இருக்குமா? இதே நிலைதான் எமது எழுத்தாளனுக்கு. இதனால் எமது இலக்கியம் புலம்பல் இலக்கியமாக, ஒப்பாரி இலக்கியமாக தமிழகத்தில் பார்க்கப்படுகிறது. இந்த விமர்சனமும் தவறானதல்ல. அப்படியாயின் தவறு எங்கேயிருக்கிறது? அது உங்கள் சிந்தனைக்கு.

வாடைக்காற்று, காட்டாறு, யானை (குறுநாவல்) நந்திக்கடல் (நாடகம்) போன்ற படைப்புக்களை வௌ;வேறு களங்களில் புதிய வடிவங்களில் இலக்கியமாகத் தந்தவர் செங்கை ஆழியான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரின் படைப்புக்களை (சிறுகதைத் தொகுதிகள்) வாசித்தேன். அவை இரவு நேரப் பயணிகள், கூடில்லா நத்தையும் ஓடில்லா ஆமையும் ஆகும். அவை களத்திலும் மாற்றமில்லை, வடிவத்திலும் மாற்றமில்லை. நான் எதிர்பார்த்த செங்கையாழியானின் ஆற்றலை காணமுடியவில்லை.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் என்று தமிழக இலக்கியவாதிகள் எங்களை தூற்றுகிறார்;கள் என எம்மவர் சிலர் கொதித்தெழுவதில் நியாயமில்லை. அ.முத்துலிங்கம், சோபாசத்தி ஆகியோர் தமிழக இலக்கிய வட்டத்தில் பேசப்படுவர்களாக இருக்கிறார்கள். வெகுஜென ஊடகளும் இவர்களைக் கவனிக்கத் தெடங்கிவிட்டன. அண்மையில் வந்த குமுதத்தின் அரசு பதில் பகுதியில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தை சிலாகித்திருந்தது. இந்த விடயங்களை எம்மவர்கள் கவனத்தில் எடுத்தால் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புதுமை இலக்கியமாக மாறும்.

அண்மையில் சிட்னி, மெல்பேண் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்ட புத்தகங்களில் கே.எஸ்.சுதாகர் எழுதிய எங்கே போகிறோமும் ஒன்று. இந்தப் புத்தகத்தை வாசிக்க வெளிக்கிடேக்கதான் மேலே குறிப்பிட்ட எண்ணம் தோன்றியது. எமது இலக்கிய அரிப்பைப் போக்குவதற்காக ஒருவரது முதுகை ஒருவர் மாறி மாறி சொறிந்து கொண்டிருக்காமல் ஆரோக்கியமான விமர்சனத்தை முன்வைத்தால் எதிர்காலத்தில் தரமான இலக்கியம் கிடைக்கும் எனறரீதியில் இந்த நூலைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

எங்கே போகிறோம் சிறுகதைத் தொகுதியில்யுள்ள சிறுகதையைகளை மூன்றாக வகைப்படுத்தலாம்.. ஒன்று, யுத்தத்தை மையப்படுத்தி ஆக்கப்பட்டுள்ளது. மற்றது, புலம்பெயர்ந்த நாட்டினைக் களமாக்கொண்டு கதையைப் பின்னப்பட்டுள்ளது. மூன்றாவது, இலங்கையைக் களமாக்கொண்டுள்ளது. ஆனால் யுத்தத்தை மையப்படுத்தாத கதைகள். இதில் முதல்வகையான போர்க்கதைகள்ளதான் இந்தத் தொகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்தளது. பதினெட்டுக்கதைகள் கொண்ட இப்புத்தகத்தில் எட்டுக்கதைகள் யுத்தம் சம்மந்தமானது. யுத்ததினால் ஏற்பட்ட இடப்பெயர்வு, இழப்புக்கள் என்பவற்றை இந்த எட்டுக்கதைகளும் சொல்கின்றன. வேவ்வேறு இடத்தைக் களமாக் கொண்டுள்ளதுடன், சம்பவங்களும் சற்று வேறுபட்டுக் காணப்டுகிறது. ஆனால் வாழையிலைக்கட்டுக்குள் இயக்க நோட்டீர்சை வைத்து பஸ்க்குள் கொண்டு வந்த சம்பவத்தை இரு கதைகளில் குறிப்பிட்டுள்ளார் கதாசிரியர். இதைகத் தொகுக்கும்போது சரி செய்திருக்கலாம்.

இரண்டாவதாக, புலம்பெயர்த நாட்டைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஐந்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இதில் புதிய வருகை என்ற கதை நீயூசிலாந்தைக் களமாகக் கொண்டுள்ளது. ஏனைய நான்கும் அவுஸ்ரேலியாவை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில் விலங்குமனத்தால் என்ற கதை, தனது கணவனது பெண் சகவாசத்தை நிறுத்துவதற்காக தன்னை கணவனது நண்பன் அடையமுயற்சி செய்வதாக குற்றச்சாட்டுகிறாள் மனைவி. இது சற்று அதீத கற்பனையாக தெரிகிறது. விருந்து என்ற கதை இஙகுள்ள போலிக் கௌரவத்தைப் புட்டுக் காட்டுகிறது. விகுதி மாற்றம் இங்கு எமது சந்ததி எதிர்நோக்கும் கலாச்சார சிக்கல், பால் மாற்று சிகிச்சையைச் சித்தரிக்கிறது. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் இந்த நாட்டில் எமது முதியோரின் அவல நிலையைச் சித்தரிக்கிறது.

மூன்றாம் வகைச் சிறுகதைகள் யுத்தமில்லாத ஈழச் சிறுகதைகள் இதில் ரிப்ஸ் என்ற கதை சாப்பாட்டுக்கடையை மையமாக வைத்துப் புனையப்பட்டுள்ளது. ஏனைய மூன்றும் வேறு வடிவத்தில் கதை சொல்ல முற்பட்டிருக்கிறார். கதாசிரியர்.

புல சிறு கதைகளில் எமது கிராமத்து சொல்வழக்கை பயன்படுத்தியுள்ளார். பொட்டைபிரிச்சு பூராயம் பார்கிறாய், சுடுகுது மடியைப்பிடி, மூக்குமுட்ட, ஐயா என்று இராகமிழுத்துக் கொண.டு போன்ற வசனங்களைக் குறிப்பிடலாம். இவை இந்தத் தொகுப்புக்கு வலுவூட்டுகிறது. சில கதைளில் பிரச்சார வாடை சற்று வீசுகிறது. மற்றது பல சிறுதைகளில் அதிக கதாப்பாத்திரங்களை உலாவவிட்டுள்ளார். இது கதையின் வேகத்துக்கு தடையாக இருக்கிறது. வாசகர்களுக்கு பெயர் குழப்பத்தையும் உண்டுக்கிறது.

கே.எஸ்.சுதாகர் எழுதி இருபத்திரண்டு ஆண்டுகளாக பல ஏடுகளில் வெளிவந்த கதைகளின் தொகுப்பே இது. இந்தகாலத்தை ஓப்பிட்டுப்பார்;க்கும் போது எழுத்தின் வளர்ச்சியைக் காணமுடியும். அத்துடன் இவற்றில்; சில போட்டிகளில் பரிசு பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்தப் புத்தகத்தின் அட்டைப்படம் வித்தியாசமாக உள்ளது.

இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய காவலூர் ராசதுரை குறிப்பிட்டது போல கணணி வருகைக்குப் பின்னர் யார் வேண்டுமானாலும் நூல் வெளியிடலாம் என்னும் நிலமை தோன்றியுள்ளது. ஆனால் வாசகர்கள் தொகையோ அருகிவருகிறது. மேலே அவர் குறிப்பிட்டதை மனதில் வைத்து படைப்புக்கள் சென்றடைய வேண்டிய இடத்தை படைப்பாளிகளும் வெளியீட்டாளர்களும் தீர்மானிதத்தால் ஆரோக்கியமாக இருக்கும்.

பிரதிகளுக்கு :- கே.எஸ்.சுதாகர்- (03) 9363 1124 , நஅயடை- மளளரவாய@hழவஅயடை.உழஅ

Series Navigation

எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா

எஸ்.கிரு~;ணமூர்த்தி அவுஸ்திரேலியா