விஜயன்
என்னடா இது தலைப்பே அம்மாவாசைக்கும், அப்துர் காதருக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்பவர்கள், முழுவதையும் படித்து முடிவுக்கு வரவும்.
அக்டோபர் 13 : மிருகம் படப்பிடிப்பில் நடிகை பத்மப்பிரியாவின் கண்ணத்தில் பளார், டைரக்கர் சாமி. அழும் காட்சிக்கு க்ளோஸப் தத்ரூபமாக இருப்பதற்காக அறைந்ததாக சப்பைக்கட்டு. “மிருகம்” படப்பிடிப்பில் இப்படி ஒரு நிகழ்வு. படத்தின் பெயர் மிருகம் என்றதாலா? “கண்ணத்தில் முத்தமிட்டால்” என்று சொன்னால் “இனிய உளவாக” இன்னாத கூறல் என்ற குறளுக்கு இணங்க இனிமையாக உள்ளது, ஆனால் “கண்ணத்தில் அறைந்தால்” என்றால் கனியிருப்ப காய் கவர்ந்தற்று ஆகியது. மணிரத்னம் படம் வந்தபோது பரவலான ஒரு ஜோக் “ஒரு பெண் ஆணிடம், கண்ணத்தில் முத்தமிட்டால்” பார்த்தீர்களா எப்படியிருக்கிறது? என்று கேட்க இதுவரை பார்க்கவில்லை இட்டால்தானே தெரியும்! என்று ஆண் சொன்னதாக! ஜோக்ஸ் அப்பார்ட். சர்வதேச மனித உரிமைச் சட்;டத்தில் 1995ல் பெண்களுக்கு எதிரான எல்லாவிதமான பாகுபாட்டையும் அறவே களைய தீர்மானித்து ஆகஸ்ட் 13 1997ல் உச்ச நீதிமன்ற நீதிபதி வர்மா விசாக மற்றும் ராஜஸ்தான் மாநிலம் என்கிற வழக்கில் பெண்களுக்கெதிரான வன்முறை வீட்டில் மற்றும் வெளியே வேலை செய்யுமிடத்தில் தவிர்க்கப்படவேண்டிய ஒரு குற்றம் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றவேண்டும் எனவும் அதுவரை உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் பெண்களை அவதூறாக பேசவோ, நடத்தவோ கூடாது, பெண்களுக்கு எதிரான வன்முறை தவிர்க்கத் தகுந்த பரிகாரம் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, பத்து வருடம் ஆகியும்;; பெண்களை வன் கொடுமையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு “டொமஸ்டிக் வயலன்ஸ்” சட்டம் 2005ல் இயற்றி அது அமலில் இருக்கும்போது, எந்த ஒரு காரணமாயிருந்தாலும், டைரக்டர் சாமி ஒரு நடிகையை அனைவருக்கும் முன்னால் கண்ணத்தில் அறைந்தது தவறு, தவறு, தவறு.
நாடெங்கிலும் பல ஆண்கள் பெண்களை அடிப்பது தொடர்ந்தாலும் “பதம்பிரியாவின்” நிகழ்ச்சி பத்திரிக்கையில் வந்ததால் பொதுவாக எல்லா பெண்களுக்கு எதிராகவும் இது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம், என்பதை பறைசாற்றிக் கொள்கிறேன். மனைவியிடம் (பெண்களிடம்) அடிவாங்கும் (கோவை சரளா, வடிவேலு போல) ஆண்களின் நிவாரணம் பற்றி வேறொரு சமயம் எழுதுகிறேன். ஆண் பெண்னை அடிப்பது என்பது ஒருவிதமான ஆதிக்க பழக்கம், ஒரு ஆண் அடையாளமாக நினைக்கப்பட்டு தொடரும் அநாகரீகம். கலாச்சாரம் மற்றும் நாகரீகம் சார்ந்த பழக்க வழக்கங்களை பழகிக் கொள்ளாததே இதற்கு முழு காரணம், பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் முழங்குபவர்கள் முதலில், பொது நாகரீகம் பற்றி சிந்திக்க வேண்டும் “மனித மரியாதைக் கூறியீட்டில் (ஹயுமன் டிகினிட்டி இண்டக்ஸ்)ல் இந்தியா தற்சமயம் 121வது இடத்திலிருந்து 127க்கு சென்றுள்ளது என்கிறது. சர்வதேச “மனித உரிமைத் தகவல்” மொத்தம் 177 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐக்கிய நாட்டு சபை மனித மரியாதை குறியீடாக, எட்டு மனித வாழ்வு அம்சங்களை உள்ளடக்கி, அதில் எந்த நாடு முன்னுள்ளது என்றும் பின்னுள்ளது என்றும் ஒரு பட்டியல் வைத்துள்ளார்கள் அதில் 121வது இடத்திலிருந்து இந்தியா 127 இடத்துக்கு கீழே இறக்கப்பட்டுள்ளது. 2020ல் வல்லரசாகும் கணவு கண்டு என்ன பயன்? மனித உரிமை மரியாதையில் செல்லா காசாகிப் போனால்!
கூட்டணி தர்மம் : போன வாரம் நான் ஆக்ஸிமொரான் என்ற ஆங்கில சொல் பற்றி எழுதினாலும் எழுதினேன், இந்த வாரம் அந்த சொல்லுக்குப் பொருத்தமான தலைப்புச் செய்தி கிடைத்துவிட்டது. அக்டோபர் 14 கூட்டணி தர்மம் பற்றிய சோனியா காந்தியின் பேச்சுக்கு கலைஞர் பாராட்டு. சோனியாவின் பேச்சின் சாரம்சம் “கூட்டணிக் கட்சிகள் ஒரு வரை ஒருவர் புரிந்து கொண்டு ஒத்துப் போக வேண்டும். ஒரு திட்டம் நிறைவேறாவிட்டால் பொது நன்மைக்காக சில தியாகம் செய்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாகும் பொது நன்மை என்பது, ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து பதவியிருப்பது. சாதகமில்லாதபோது தேர்தலைத் தவிர்ப்பது.
கம்ய+னிஸ்ட்டுகளும், காங்கிரஸ் தலைமையும் 123 அனு ஒப்பந்த விஷயமாய், காரசாரமாய் சன்டையிட்டு, பின்னர் கூட்டணி தர்மம் காரணமாக (தேர்தலை தவிர்ப்பதின் நோக்கத்திற்காக) ஒரு தத்துவம் உதிர்த்து பின் கூட்டணிக்கட்சிகள் தற்போது தேர்தலைச் சந்திக்கும் அபாயத்திலிருந்து விடுபட்டு பெருமூச்சு விட்டு ஒருவரை ஒருவர் “சுப்புடு விமர்சன பாஷையில்” முதுகு சொரிந்து கொண்டு, (ம்யுட்சுவல் அட்மைரேஷன்) அறிக்கை விட்டனர். என்னைப் பொறுத்தவரை இந்தியக் கம்ய+னிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கொள்கை மார்க்ஸ் சொன்னது போல “பாட்டாளி வர்க்கத்தின் யதேச்சதிகாரம்” அல்ல தங்கள் செல்வாக்குடன், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆட்சியில் இருக்கச் செய்வதே. தான் ஆட்சியில் பங்கேற்காமல் வெளியே இருந்து ஆட்டிவைத்து, “கீரி பாம்பு” சண்டை, போல பாவ்லா காட்டி பின்னர் சண்டையில்லாமல் ஆட்டத்தை முடித்து வேடிக்கைப் பார்ப்பவரின் வேட்டியை உருவும் வேலையைத்தான் கம்ய+னிஸ்ட் கட்சி செய்து வருகிறது, சென்ற வாரம் மத்திய அரசுக்கு எதிராக பந்த் அறிவித்த கலைஞர், இந்த வாரம் சோனியவிற்கு புகழாரம் சூட்டுகிறார்.
இப்படி ஏதாவது தத்துவம் உதிர்த்து, எல்லோர் காதிலும் ப+ சுற்றுவதே இன்றைய கூட்டணி அரசியல். சோனியாவின் கூட்டணி தர்மம் பற்றி பாராட்டிய கலைஞருக்கு அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடந்த கூட்டணி மோசடியை, தண்டிப்பதை விட்டு, தாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், பஜாகா தலைமையில் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கூட்டணி தர்மத்தினால் உந்தபட்டு அங்கு அரசியலமைப்புச் சட்டம் 356வது பிரிவில் சட்டமன்றத்தை சஸ்பென்ட் செய்து கவர்னர் ஆட்சியை கொண்டு வந்த மத்திய அரசின் ஒரு அங்கமான கலைஞருக்கு ஏன் தோன்றாமல் போயிற்று? ஒரு வேளை பேரம் பேசி சஸ்பெண்ட் செய்யப்பட்ட குமாரசாமி அமைச்சரவையை மீண்டும் காங்கிரஸ் “கூட்டணி தர்மத்தில்” இணைத்து சூதுகவ்விய தர்மத்ததை மீண்டும் வெல்லச் செய்யலாம், யார் கண்டது!
“தர்மம்” கூட எல்லோருக்கும் பொது இல்லையா, நேரத்ததுக்கு நேரம் மாறுமா? தனக்கொரு தர்மம் பிறர்க்கொன்றா? அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
“தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்” என்ற பாரதியார்யின் இந்த வரிகளில் “தர்மம்” என்ற சொல்லுக்கு “சந்தர்ப்பவாதம்” என்ற பொருளில் படிக்கவும்;;. இந்த நேரம் பார்த்து “ஆறு மணமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறில்” முதல் கட்டளையான “ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி!” என்ற வரி ஞாபகம் வந்து தொலைத்தது!
kmvijayan@gmail.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)
- சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
- இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்
- காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7
- சாருவின் ஜனனி:
- கோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு
- பொது ஒழுக்கம்
- தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு
- வானப்பிரஸ்தம்
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்
- நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்
- காந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்
- பன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre
- திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை
- சும்மா
- கால நதிக்கரையில்……(நாவல்)- 28
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 32
- நாக்குநூல்
- இறந்தது யார்?
- சிறுகதையில் என்ன நடக்கிறது?
- குற்றாலம் பதிவுகள்
- படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்
- புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)
- கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
- திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்
- எங்கள் தாய் !
- வெள்ளைக்காதல்
- வஞ்சியென்றால் என்னை…
- “ நிற்பவர்கள்”
- வாசம்