மணி வேலுப்பிள்ளை
முனைவர் எம். வேதசகாயகுமார் தமது கட்டுரை ஒன்றில் “அவதானகம்” என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார் (போலி அறிவியல் சாயல், திண்ணை, 2004/01/15). சுந்தர ராமசாமி “கவனங்கள்” என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்;: ( ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம், திண்ணை, 2004/10/07).
Observation என்பது “அவதானகம்” என்றும், Observations என்பது “கவனங்கள்” என்றும் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “அவதானகம்” ஒரு பொருந்தாத, வேண்டாத, நூதனமான தமிழாக்கம். அதனை நாம் பிறிதொரு தருணத்தில் கருத்தில் கொள்வோம். “கவனங்கள்” என்னும் சொல்லையே இங்கு நாம் கருத்தில் கொள்ளப் போகிறோம்.
My observations with regard to these (matters) have been widely recorded in my writings என்று அல்லது என்ற மாதிரி ஆங்கிலத்தில் முகிழ்த்த ஓர் எண்ணம், “இவை சார்ந்த என் கவனங்கள் என் எழுத்துக்களில் பரவலாகப் பதிவாகியிருக்கின்றன” என்று தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. அகத்துள் நிகந்த ஒரு மொழிபெயர்ப்பு, புறத்தில் ஒரு முழுமுதற் கூற்றாக முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு என்பது மொழிக்கு மொழி வேறுபடும்.. அந்த வகையில் இந்த எண்ணத்தை இயல்பான தமிழில் மிகவும் அழகாக எடுத்துரைக்கலாம்: இவை தொடர்பாக நான் கண்டறிந்தவற்றை எனது ஆக்கங்களில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளேன் அல்லது இந்த விடயத்தில் நான் கவனித்தவற்றை அல்லது அவதானித்தவற்றை அல்லது கண்டுகொண்டவற்றை என்றெல்லாம் குறிப்பிடலாம். இத்தகைய ஆங்கிலப் பெயர்ச் சொல்லின் பொருளை ஒரு வினையால் அணையும் தமிழ்ப் பெயர்ச் சொல் எத்துணை நேர்த்தியாய் எடுத்துரைக்கின்றது! இதனைச் சொல்லுக்குச் சொல்லாக மொழிபெயர்க்க முயன்று அவதானகம், கவனங்கள் என்றெல்லாம் குறிப்பிடுவது மொழியை வதைப்பதில்தான் போய் முடியும். அத்துணை தூரம் செல்லத் தேவையில்லை. கூற்றுகள், அல்லது குறிப்பீடுகள் அல்லது கருத்துரைகள் என்றாவது குறிப்பிடலாமே!
A ceasefire is being observed in Sri Lanka. இலங்கையில் ஒரு போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. observe என்னும் சொல் கடைப்பிடி, பின்பற்று, அனுட்டி, அமைந்தொழுகு என்றெல்லாம் பொருள்பட வல்லது. இதே பொருளில் அதன் பெயர்ச் சொல் observance ஆகும் ; Norway is monitoring the observance of the ceasefire in Sri Lanka. இலங்கையில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதை நோர்வே கண்காணித்து வருகிறது.
According to observers, foreign powers are doing their best to upset the military balance in Sri Lanka. இலங்கையில் நிலவும் படைபலச் சமநிலையைக் குலைப்பதற்கு அந்நியத் தரப்புக்கள் அரும்பாடுபட்டு வருவதாக அவதானிகள் தெரிவிக்கிறார்கள். observers என்பது ஈழத்தில் பெரிதும் அவதானிகள் என்றும், தமிழகத்தில் பெரிதும் நோக்கர்கள் என்றும் கொள்ளப்படுவது வழக்கம். இவை இரண்டும் ஒத்த சொற்களே. பி.பி.சி. தமிழோசை வாயிலாக நோக்கர்கள் என்ற சொல்லைக் கேள்விப்பட்ட ஈழத்துச் செய்தியாளர்களும் உலகத் தமிழ்ச் செய்தியாளர்களும் அதே சொல்லையே தற்பொழுது அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அது பரவாயில்லை. ஆனால் அவதானிகள் என்னும் சொல்லை அவர்கள் உதறித் தள்ளக் கூடாது.
I observed her leaving the auditorium. அவள் அவைக்களத்தை விட்டு வெளியேறியதை நான் கவனித்தேன் (அல்லது அவதானித்தேன்). இங்கே இவ்விரு சொற்களும் சரிநிகரான முறையில் உரிய பொருளை உணர்த்துகின்றன. இதே பொருளில் இதன் பெயர் – உருவம் observation ஆகும். The patient is under observation என்பது நோயாளி அவதானிக்கப்பட்டு வருகிறார் என்றும், Observation Post என்பது அவதானிப்பு மையம் என்றும், Observatory என்பது வானிலை அவதானிப்பு நிலையம் என்றும் பொருள்படும்.
The visiting constitutional expert observed “Democracy is not exclusive rule by the majority. It includes the consent of the minority”. அதாவது: “மக்களாட்சி என்பது தனியே பெரும்பான்மை ஆட்சி ஆகாது. அதனுள் சிறுபான்மையோரின் இசைவும் அடங்கும்” என்று இங்கு வருகை தந்துள்ள அரசியல்யாப்பு நிபுணர் குறிப்பிட்டார். இங்கே observed என்னும் சொல் commented அல்லது remarked என்று பொருள்படுகிறது. அந்த வகையில் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம் குறிப்பிடு என்னும் சொல்லைச் சுட்டிக்காட்டியமை முற்றிலும் பொருத்தமானதே. He began by making a few general observations about the report (Oxford Advanced Learner ‘s Dictionary). அவர் அந்த அறிக்கையைப் பற்றி ஒருசில கருத்துரைகளைத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கினார். குறிப்பீடு (observation), கருத்துரை (comment), குறிப்புரை (remark) என்பன ஒத்த பொருளை உணர்த்த வல்லவை.
Observe என்னும் சொல்லுக்கு The Concise Oxford Dictionary ஒரு தனிப் பொருளையும் கற்பித்துள்ளது: Examine and note (phenomena) without the aid of equipment. அதாவது கருவிகளின் துணையின்றி (நேர்வுகளை) ஆராய்ந்து குறிப்பிடு என்பது அதன் பொருள். இதனையே சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம் கண்டுரை என்று குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில்The constitutional expert ‘s observations என்பது அரசியல்யாப்பு நிபுணர் கண்டுரைத்தவை ஆகின்றன.
எமது சொல்லேருழவர்கள் பலர் தத்தம் அகத்துள் நிகழும் தமிழாக்கங்களைத் தமது முழுமுதற் கூற்றுகளாக வெளியிட்டு வருகிறார்கள். அவற்றை எல்லாம் மேற்கோள் காட்டுவதற்கு இங்கே இடம் பற்றாது. இத்தகைய தமிழாக்கத்தை அரை நூற்றாண்டுக்கு முன்னரே சாடியிருக்கிறார் பாரதியார்: ‘..தமிழ் நாட்டிலோ முழுவதும் தமிழ் நடையை விட்டு இங்கிலீஷ் நடையில் தமிழை எழுதும் விநோதமான பழக்கம் நமது பத்திராதிபர்களிடம் காணப்படுகிறது. ‘ (பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1997, ப.207). தமிழக எழுத்துகள் மூலமாகவும், பி.பி.சி தமிழோசை வாயிலாகவும் அந்த விநோதமான பழக்கம் ஈழத் தமிழ் உட்பட உலகத் தமிழைப் பீடித்து வருகிறது. அச்சில் ஒன்று கண்ணில் பட்டால் அல்லது வானொலியில் ஒன்று காதில் விழுந்தால், அதனை ஆராயாது உள்வாங்கும் போக்கை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்வது தமிழுக்கு நாம் செய்யும் கைமாறாய் அமைதல் திண்ணம்.
manivelupillai@hotmail.com
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- கடிதம் நவம்பர் 25,2004
- தமிழ் அரசியல்
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- பழைய சைக்கிள் டயர்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- தொலைந்து போன காட்சிகள்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005