இட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

பாரதி மகேந்திரன்


தேவை:

இட்டிலி மாவு – 1 லிட்டர்
பச்சை மிளகாய் – 6 – அல்லது தேவைப்படி
உப்பு (ஏற்கெனவே மாவில் உப்பு உள்ளது. கவனம்!) – தேவைப்படி
கறிவேப்பிலை – 2 ஆர்க்குகள்
கொத்துமல்லித் தழை – ஆய்ந்தது – 2 கைப்பிடிகள்
கொண்டைக்கடலை – 50 கிராம்
முழு உளுத்தம் பருப்பு (தோல் அற்றது) 50 கிராம்
பயத்தம் பருப்பு – 50 கிராம்
கொள்ளு – 50 கிராம்
கரம் மசாலாப் பொடி – 1 மே. க.
பொடியாய்க் கீறிய தேங்காய்ச் சில்லுகள் 3 கைப்பிடிகள்
கேரட் துருவல் – 3 கைப்பிடிகள்
பச்சைப்பட்டாணி – 50 கிராம்
சாம்பார் வெங்காயம் – 50 கிராம்
தோல் சீவிய – பொடியாக அரிந்த உருளைக்கிழங்குத் துண்டங்கள் 2 கைப்பிடிகள்
அரை உளுத்தம் பருப்பு – 1 மே.க.
கடுகு – அரை தே.க.
பெருங்காயப் பொடி – 1 தே.க.
நல்ல எண்ணெய் – 6 மே.க.

முதலில் கொண்டைக் கடலையைத் தனியாகவும், முழு உளுத்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கொள்ளு ஆகிய மூன்¨றையும் ஒன்றாகவும் (களைந்தபின்) நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

கொண்டைக் கடலை நசுங்குகிற பதத்துக்கு நன்றாக ஊறிய பின், கடாயை அடுப்பில் ஏற்றி 4 மே.க. எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகைப் போட்டு, அது முக்கால் வாசிக்கும் மேல் வெடித்த பின் உடைத்த உளுத்தப் பருப்பைப் போட்டு அது முக்கால் வாசி சிவந்த பின் பொடிப்பொடியாய் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் திருப்பி, உளுத்தம் பருப்பும் பச்சைமிளகாய், கறிவேப்பிலையும் முறையே சிவந்து, வதங்கிய பிறகு, பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர், நன்கு ஊறியுள்ள கொண்டைக்கடலை, முழு உளுத்தம்பருப்பு, பயத்தம் பருப்பு, கொள்ளு ஆகியவைற்றைச் சேர்த்துக் கிளறி வதக்கவும். இவை யாவும் நன்றாக வதங்கிய பின்னர், கேரட் துருவல், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்குத் துண்டங்கள், கரம் மசாலாப் பொடி, தேங்காய்ச் சில்லுகள், பெருங்காயப் பொடி முதலியவற்றை இவற்றுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இந்தக் கலவையைப் போதுமான உப்புப் பொடி, மீதமுள்ள பச்சை நல்ல எண்ணெய் பொடிப்பொடியாக அரிந்த கொத்துமல்லித் தழை ஆகியவற்றுடன் இட்டிலி மாவில் கொட்டிக் கலந்து இட்டிலிகளாக வார்த்து எடுக்கவும். (கொத்துமலல்¢த் தண்டுகள் இளசாக இருந்தால், அவற்றை வீணாக்காமல் பொடியாக அரிந்து மாவுடன் சேர்க்கலாம். கொத்துமல்லித் தழை நரம்புகளுக்கும், தண்டுகள் இரத்த நாளங்களில் இருக்கக் கூடிய அடைப்புகளைப் போக்கவும் உதவும் என்பார்கள்.)


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்


mahendranbhaarathi@yahoo.com

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்