ஆப்பிள் சாஸ்

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue


ஆப்பிள் சாஸ் என்பது ஆப்பிள் ஜாம் போன்றது. சிறு குழந்தைகளும் செரிக்கக்கூடிய உணவு. இதனை நிறையச் செய்து வைத்துக்கொள்ளலாம். கடையில் கிடைக்கும் ஆப்பிள் சாஸைவிட வீட்டில் செய்யும் ஆப்பிள்சாஸ் சுவையானது. கிராம்பும் பட்டையும் போட்ட இந்த ஆப்பிள் சாஸ் மணமுள்ளது.

தேவையான பொருட்கள்

4 பச்சை ஆப்பிள்கள் (இவை காய் அல்ல. பழமான ஆப்பிள்களிலேயே பச்சைத்தோல் ஆப்பிள்கள் கிடைக்கும்)

2 மேஜைக்கரண்டி சர்க்கரை

1/2 கோப்பை தண்ணீர்

2 முழு கிராம்புகள்

1 பட்டை குச்சி

1/2 எலுமிச்சைப்பழம் சாறாக

செய்முறை

1. தோல் உறித்து நடுவே இருக்கும் கடினமான பகுதியை எடுத்துவிட்டு ஆப்பிள்களை சரிசமமான சிறிய கனசதுரங்களாக வெட்டிக்கொள்ளவும்

2. எலுமிச்சை சாறு தவிர அனைத்து பொருட்களையும் ஒரு குளிர்ந்த சட்டியில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும், தீயை குறைத்து 10 நிமிடங்கள் மெதுவான தீயில் வேகவிடவும். (simmer) தீயிலிருந்து எடுத்துவிடவும்.

3. கட்டிகட்டியான சாஸ் உங்களுக்குப் பிரியமென்றால், ஒரு தேக்கரண்டியை வைத்து பிசையவும். (கிராம்பையும் பட்டைக்குச்சியையும் எடுத்துவிடவும்). மாவு போன்ற சாஸ் வேண்டுமென்றால், சல்லடை வழியாக இந்த சாஸை அனுப்பி பிசையவும்.

4. இத்துடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்துகொள்ளவும். இதனை சூடாகவோ, குளிர்ச்சியாகவோ பறிமாறலாம்.

இந்த செய்முறை படி கிடைக்கும் ஆப்பிள்சாஸ் ஒரு கோப்பை.

Series Navigation