இறால் பஜ்ஜி

This entry is part of 20 in the series 20011202_Issue


இறால் –1/2கிலோ

மிளகாய்த்தூள் –5டாஸ்பூன்

எலுமிச்சம்பழம் –1

மஞ்சள்தூள் –1/2ஸ்பூன்

கடலைமாவு –150கிராம்

அரிசி மாவு –50கிராம்

மைதாமாவு –2ஸ்பூன்

பஜ்ஜிகலர் –தேவையானது

சோடாஉப்பு –2சிட்டிகை

பெரிய இறாலாகப் பார்த்து வாங்கி வந்து சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்புத்தூள் சேர்த்து வேகவைத்து நீரை வடித்து விடவும். மூன்று ஸ்பூன் மிளகாய்த்தூள், எலுமிச்சம்பழம் சாறு கலந்து விட்டு எண்ணெயில் நன்கு வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மைதாமாவு, 2ஸ்பூன் மிளகாய்த்தூள், நீர், உப்பு, பஜ்ஜிகலர், சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய வைக்கவும்.

இறாலை பஜ்ஜி மாவில் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

Series Navigation