சிக்கன் ஃபிரைடு ரைஸ்

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue


சிக்கன் –3/4கிலோ

பிரியாணி அரிசி –3/4கிலோ

பெரிய வெங்காயம் –200கிராம்

தக்காளி –100கிராம்

பச்சைமிளகாய் –8

பூண்டு –12பற்கள்

இஞ்சி –1துண்டு

புதினா, கொத்துமல்லி –தேவையான அளவு

எலுமிச்சம் பழம் –1

தேங்காய் –1/2மூடி

மிளகாய்த்தூள் –2ஸ்பூன்

சீரகத்தூள் –1/2ஸ்பூன்

கிராம்பு –4

ஏலக்காய் –4

பட்டை –1துண்டு

பிரிஞ்சி இலை –தேவையான அளவு

முந்திரிப் பருப்பு –20கிராம்

நெய்யும், சமையல்

எண்ணெயும் } –150கிராம்

கோழியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி எலுமிச்சம்பழச்சாறு, அரை ஸ்பூன் மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் காரத்தூள், உப்புத்தூள் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளியை நீள நீளமாக மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை ஒன்றிரண்டாக தட்டவும்.

தேங்காயைத் துருவி பாலெடுக்கவும்.

அரிசியை வேக வைத்து (உதிராக) ஆற வைக்கவும்.

கொத்துமல்லி, புதினாவைப் பொடியாக நறுக்கவும்.

பெரிய வாணலியில் நெய், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலைப் போட்டு வெடித்ததும் தட்டி வைத்திருக்கும் மசாலா சேர்த்து வாசனை வருகையில் பாதி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளித்துண்டுகள் சேர்த்து சுருளக் கிளறவும்.

காரத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக்கிளறி, கோழித் துண்டுகளைப் போட்டு சிறுதீயில் வேகவைக்கவும், கோழித்துண்டுகள் எண்ணெயிலேயே பாதி வேக்காட்டில் வெந்ததும் தேங்காய்ப்பால், திட்டமாக உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

நீர் வற்றி எண்ணெய் மேலாகப் பிரிந்து வந்ததும் வேகவைத்திருக்கும் சாதத்தைக் கொட்டி நன்கு கிளற வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரிப்பருப்புகளை வறுத்தெடுக்கவேண்டும். அதே எண்ணெயில் மீதி இருக்கும் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி கடைசியில் புதினா, கொத்துமல்லி சேர்த்துக்கிளறி ஃபிரைடு ரைஸில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

Series Navigation