சிக்கன் கட்லெட்

This entry is part [part not set] of 2 in the series 20000909_Issue


சிக்கன் -3/4கிலோ

வெங்காயம் -1

மிளகாய்த்தூள் -2டாஸ்பூன்

மிளகுத்தூள் -1டாஸ்பூன்

ரொட்டி -6துண்டுகள்

பால் -1/2கப்

முட்டை -2

வெண்ணெய் -50கிராம்

இஞ்சி -1துண்டு

பூண்டு -10பற்கள்

சிக்கனிலிருந்து எலும்புகளை நீக்கி, மாமிசத்தை மட்டும் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். உப்பு சேர்த்து அரை வேக்காட்டில் வேகவைத்து மிக்ஸியிலிட்டு விழுதாக அரைக்கவும்.

ரொட்டித் துண்டுகளின் ஓரப்பகுதிகளை எடுத்துவிட்டு பாலில் ஊற வைக்கவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை அரைக்கவும்.

வாணலியில் வெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். சிக்கன், பாலில் ஊற வைத்திருக்கும் ரொட்டி மிளகாய்த்தூள் சேர்த்து வெண்ணெயிலேயே வேக வைக்கவும்.

மிளகுத்தூள் சேர்த்து நீர் வற்றும் வரை வதக்கி இறக்கி ஆற வைக்கவும்.

முட்டைகளை நுரைக்க அடிக்க வேண்டும். சிக்கன் மசாலாவை விருப்பமான வடிவங்களில் அமைத்து முட்டையில் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

 

 

  Thinnai 2000 September 11

திண்ணை

Series Navigation