குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

செல்வன்


By:செல்வன்

டார்வின் 1871’ல் The Descent of Man and selection in relation to sex என்ற புத்தகத்தை எழுதினார்.அதில் அன்றைய விஞ்ஞானிகள் மனிதன் ஒரு குரங்கு என்பதை ஒத்துக்கொள்ள மறுத்ததை கடுமையாக சாடினார்.அன்றைய விஞ்ஞானிகள் மனிதனை பிமானா என்ற ஒரு இனமாக,குரங்கிலிருந்து வித்யாசமானவனாக கருதினர்.

இப்படி மனிதனை ஒரு தனி இனமாக பிரிப்பதையே டார்வின் வேடிக்கையாக நினைத்தார்.”மனிதன் தன்னை தானே பாகுபடுத்துவதால் தான் தன்னை ஒரு தனி இனமாக நினைக்கிறான்” என்று அவர் எழுதினார்.
டார்வினின் கருத்துக்களுக்கு ஆதரவு வேகமாக பரவியது.

1863’ல் டக்ஸ்லி ஏப்பையும் மனிதனையும் பாயின்ட் பை பாயின்டாக ஒப்பீடு செய்தார்.டார்வினின் அனைத்து கருத்துக்களும் உண்மை என்பதை அவர் கண்டார்.டக்ஸ்லி அடுத்து மனித்னையும் கொரில்லாக்களையும் ஒப்பீடு செய்தார்.ஒப்பீட்டின் அடிப்படையில் கொரில்லாக்களும் மனிதனும் வெகு நெருக்கமானவர்கள் என்று கண்டார்.கொரில்லாக்கள் வேறு எந்த வகை குரங்குகளையும் ஏப்களையும் விட மனிதனுக்கு நெருக்கமானவை என்று அவர் கண்டார்.

மனிதன்,கொரில்லா,போனபோ,உராங்க் உடான்,சிம்பன்ஸி,குரங்கு ஆகிய குரங்குகள் அனைத்தும் ஓரினம் தான்.இவை அனைத்துக்கும் ஒரே மூதாதைதான்.25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குரங்கார் இந்த இனத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போய்விட்டார்.2 – 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் குரங்கு இனத்தில் இருந்து பிரிந்து போய்விட்டான்.

மனிதனை இப்படி கொரில்லா,போனபோ,உராங்குடான் வகை குரங்குகளில் சேர்த்தபிறகும் சர்ச்சைகள் ஓயவில்லை.டார்வினின் கருத்துக்கு அசைக்க முடியாத ஆதாரம் 1905’ல் ஜார்ஜ் நடால் மூலம் கிடைத்தது.

நட்டாலின் ஆய்வு முறை மிகவும் எளிதானது.முயல்களை எடுத்துகொண்டு அவற்றின் உடலில் மனித ரத்தத்தை செலுத்தினார்.மனித ரத்தத்தை முயல் ரத்தம் ஏற்றுக்கொள்ளாது.மனித ரத்தத்தை ஒரு வெளிநாட்டு படையெடுப்பாளர் போல் முயலின் நோயெதிர்ப்பு அணுக்கள் கருதும்(Immune system).உடனடியாக சீரத்தையும்(serum),அன்டிபாடிகளையும் (anti bodies) முயலின் நோயெதிர்ப்பு அணுக்கள் உற்பத்தி செய்யும்.

அந்த முயல் ரத்தத்தை நட்டால் சுத்தம் செய்து சீரத்தை எடுத்தார்.அந்த சீரம் மனித எதிர்ப்பு ஆன்டிபயாட்டிக்குகளை(anti human serum) கொண்டிருந்தது.இதே போல் முயல் உடம்பில் இருந்து சிம்பன்ஸி எதிர்ப்பு சீரம் (anti chimp serum),உராங் உடான் எதிர்ப்பு சீரம்,எலி எதிர்ப்பு சீரம், குதிரை எதிர்ப்பு சீரம் போன்ற பல மிருகங்களின் எதிர்ப்பு சீரங்களை அவர் எடுத்தார்.

அடுத்ததாக மனித ரத்தத்தை எடுத்து எலி எதிர்ப்பு சீரத்தில் கலந்தார்.உடனடியாக நுரை லேசாக பொங்கியது.மனித ரதத்தை மனித எதிர்ப்பு சீரத்தில் கலந்ததும் நுரை பொங்கி பிரிஸிபிடேட் உண்டானது.மனித எதிர்ப்பு சீரம் மனித ரத்ததை அவ்வளவு கடுமையாக எதிர்த்தது.

மனித ரத்தத்தை குரங்கு எதிர்ப்பு சீரத்தில் கலந்ததும் அதை விட குறைவாக எதிர்ப்பு பதிவானது.ஆனால் ஏப் எதிர்ப்பு சீரத்தில் மனித ரத்தத்தை கலந்ததும் மிக கடுமையான எதிர்ப்பு வந்தது.

மனித ரத்தத்தை மனித எதிர்ப்பு சீரம் எந்த அளவு எதிர்க்குமோ அதே அளவு எதிர்ப்பு ஏப் எதிர்ப்பு சீரமும் காண்பித்தது.மனிதன் ஏப் இனம் என்பதை அறிவியல் பூர்வமாக நார்ஜ் நடாலின் இந்த புகழ் பெற்ற ஆய்வு காட்டியது.அதன் பிறகு டார்வினின் கோட்பாடு உலகெங்கும் ஏற்கப்பட்டது.

—————————-
[holyox@gmail.com]

Series Navigation

செல்வன்

செல்வன்