ஜப்பானிய யந்திர மனித உடை மனித சக்தியை அதிகரிக்கிறது

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

ராய்ட்டர்ஸ்


ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ‘இயந்திர மனித உடை ‘யை இஉஇருவாக்கியிருக்கிறார்கள். இது உழைப்பாளர்கள் அதிக எடையை தூக்கவும், உடல் ஊனமுள்ள மக்கள் படிகளில் ஏறவும் பயன்படும்.

இந்த உடையை தயாரித்த ட்சுகுபா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் யோஷியுகி சாங்காய் அவர்கள் ‘மனிதர்கள் சூப்பர்மேனாக மாறுவது எதிர்காலத்தில் சாத்தியப்படும் ‘ என்று தெரிவித்திருக்கிறார்.

15 கிலோகிராம் உள்ள இந்த பாட்டரி சக்தி உள்ள உடையின் பெயர் HAL-5 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தோலின் மேல்புறத்தில் இருக்கும் மெல்லிய மின்சார சிக்னல்களை அறிந்து அதனை பல மடங்கு அதிகரித்து செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இது தானியங்கியாகச் செயல்படும் வண்ணமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் வயதானவர்களும் உடல் ஊனமுற்றவர்களும் நடக்கவும், சில செயல்களைச் செய்யவும் முடியும் என்று இதனை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள்.

இதன் மாதிரி அமைப்பு உலக கண்காட்சியில் காட்டப்பட்டுள்ளது. இந்த உலகக் கண்காட்சி ஆச்சி என்னும் இடத்தில் மத்திய ஜப்பானில் நடந்து கொண்டு இருக்கிறது.

வயதானவர்களுக்கு உதவும் படியான தொழில்நுட்பதிற்கான சந்தை ஜப்பானில் விரிவடைந்து வருகிறது. மிகவும் குறைவான இளம் ஜப்பானியர்களே குடும்பத்தை ஆரம்பிப்பதிலும், குடும்ப வாழ்க்கையிலும் அக்கறை காட்டுவதால், ஜப்பான் வயதானவர்களின் தேசமாக மாறி வருகிறது.

ஓய்வூதியம் வாங்கும் ஜப்பானியர்களின் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 19.5 சதவீதமாக இருக்கிறது என்று ஒரு அரசாங்க அறிக்கை தெரிவிக்கிறது. 2050இல் இது 35 சதவீதத்தை தொட்டு விடும் என்றும் இது எச்சரிக்கிறது.

Series Navigation

ராய்ட்டர்ஸ்

ராய்ட்டர்ஸ்