உங்கள் மூதாதையர் யார் ?

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

நேஷனல் ஜியாகிராஃபிக்


ந்த மாத ஆரம்பத்தில், நேஷனல் ஜியாகிரஃபிக் சொசைட்டி நிறுவனமும், ஐபிஎம் நிறுவனமும் இணைந்து, ஒரு பெரும் திட்டத்துக்கு அடிகோலின. ஒரு லட்சம் மக்களின் டிஎன்ஏவை எடுத்து அவர்களது டிஎன்ஏவை ஆராய்வதன் மூலம், உஇலகின் மீது மனித பயணத்தைப் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்துக்கு வருவது இந்த திட்டத்தின் நோக்கம். இதனைப் பற்றிய ‘அறிவியல் ‘ பத்திரிக்கையின் கட்டுரை இங்கே இருக்கிறது.

http://www.sciencemag.org/cgi/content/short/308/5720/340a

நேஷனல் ஜியாகிரஃபிக் பத்திரிக்கையின் இணையப்பக்கம் மிகவும் அழகான படங்களுடனும், வரைபடங்களுடனும் உலகின் மீது மனிதனின் பிரயாணத்தை டிஎன்ஏ கொண்டு படம் பிடித்துக் காட்டுகிறது.

https://www5.nationalgeographic.com/genographic/

இங்குருக்கும் இஒரு நேரக்கண்ணாடி 60,000 வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய மனிதனின் பிரயாணம் எங்கெங்கெல்லாம் விரிந்திருக்கிறது. எவ்வாறு விரிந்திருக்கிறது. அவ்வாறு விரிந்திருக்கும் போது மனிதர்கள் விட்டுச் சென்ற காலடித்தடங்கள் கடந்த காலக் கதையை எவ்வாறு சொல்கின்றன என்று வரைகிறது இந்த இணையப்பக்கம்.

இந்த பக்கத்தின் உங்களது டிஎன்ஏவை எப்படி எடுத்து இவர்களுக்கு அனுப்பலாம் என்பதன் வரைமுறையும் அந்த டிஎன்ஏ முடிவுகள் எப்படி உங்களுக்கு கிடைக்கும் என்ற விவரமும் உண்டு.

இங்கு உங்களது டிஎன்ஏக்களை பதிந்து கொண்டு, உங்களது வரலாற்றையும் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்து எப்படி வந்தார்கள் என்பதனையும் அறியலாம்.

Series Navigation

நேஷனல் ஜியாகிராஃபிக்

நேஷனல் ஜியாகிராஃபிக்