தேனீ – அடை கட்டுமானமும் தற்காப்பும்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான்


ஒரு புதிய கூட்டை அமைப்பதற்கு முன், பணித்தேனீக்கள் தங்களை உடல்ரீதியாக தயார் செய்துகொள்ளும். அதாவது, தேன் அடைகள் மெழுகால் கட்டப்படும். இந்த மெழுகு பணித்தேனீக்களின் உடலிலிருந்தே சுரக்கிறது. பணித்தேனீக்களின் அடிவயிற்றில் சுமார் 4 சோடி மெழுகு சுரப்பிகள் இருக்கும். இந்த மெழுகு சுரப்பிகள் செயல்ிபட தொடங்கியவுடன், மெழுகு சுரந்து நீர்மமாக வெளியில் வரும். பிறகு இவை உறைந்து மெழுகு பாக்கட்களாக

மாறிவிிடும். தேவைப்படும்போது, பணித்தேனீக்கள் தங்களின் பின்னங்ிகால்களில் உள்ள மெழுகுசீப்புகள் மூலம் மெழுகு பாக்கட்களிலிருந்து மெழுகினைத் தோண்டி எடுக்கும். பிறகு அவற்றை வாய்க்குக் கொண்டுவந்து நன்கு மென்று, கட்டிடம் கட்டுவதற்கு ஏற்ற கலவையாக மாற்றிவிிடும். இதைக் கொண்டு புதிய கூட்டை கட்ட தொடங்கிவிிடும்.

பணித்தேனீக்கள் தங்களுடைய கால்களைப் பயன்படுத்தி புதிய கூட்டை கட்டும். ஒவ்வொரு அறையையும் அறுகோண வடிவில்தான் கட்டும். அவை ஐங்கோண வடிவிலோ, எண்கோண வடிவிலோ கட்டப்படுவதில்லை. ஏன் தெரியுமா ? கொடுக்கப்பட்ட பரப்பை, கொஞ்சம்கூட சேதமில்லாமல், முழுமையாகப் பயன்படுத்த ஏற்ற வடிவம் அறுகோணம் என்பது வடிவியல் கணிதம் கூறும் உண்மை. மேலும், ஒரு அறுகோண வடிவ அறையைக் கட்ட மிகக்குறைந்த அளவிலான மெழுகுதான் தேவைப்படும். எனவே, பணித்தேனீக்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, 2-3 இடங்களில் கூடு கட்ட தொடங்கும். இருந்தாலும், அனைத்துமே ஒரே அளவிலான அறுகோண அறைகளைக் கட்டிக்கொண்டே வந்து, மையத்தில் கொஞ்சம்கூட ஒட்டிய சுவடே இல்லாமல் ஒன்றிணைத்துவிடும். கட்டப்படும் இடத்தைப் பொறுத்து, அறைகள் கிடைமட்டமாகவோ (horizontal), செங்குத்தாகவோ (vertical), இரண்டுக்கும் இடையிலோ (Intermediate) இருக்கும்.

பிறகு அறைகளை ஒதுக்கீடு செய்யும். கீழே, அடிமட்டத்தில் உள்ள அறைகள், முட்டை மற்றும் புழுக்களுக்கானது. அதற்குப் பக்கத்தில் இருப்பது மகரந்தம் வைக்கும் அறைகள். மற்ற அறைகள் தேனை வைப்பவை. அதாவது, பூந்தேனை எடுத்துக்கொண்டு அடைக்குத் திரும்பிவரும் பணித்தேனீக்கள், அடையில் உள்ள பணித்தேனீக்களின் வாயிில் பூந்தேனை உமிழும். அவை, பூந்தேனை மற்ற அறைகளில் சேர்த்து வைக்கும். குறிப்பிட்ட வெப்பநிலையில் Ripening மூலம் பூந்தேனை தேனாக மாற்றி, தேன் அறைகளை மெழுகினால் சீல் வைக்கும்.

இத்தனை சிரமப்பட்டு உருவாக்கிய கூட்டிற்கோ, தனக்கோ ஒரு ஆபத்து எனும்போது, உடனடியாக பாதுகாப்பு பணியில் உள்ள பணித்தேனீக்கள் சிலிர்த்தெழுந்து, தாக்குதலைத் தொடங்கிவிிடும். அதற்கான ஆயுதம்தான் கொடுக்குகள். இராணித்தேனீயில் முட்டையிடும் கருவிதான், பணித்தேனீக்களிில் கொடுக்குகளாக உருமாற்றம் அடைந்துள்ளன.

அடிவயிற்றின் இறுதியில் கொடுக்கிற்கென ஒரு அறை உள்ளது. அதிலிருந்து ஒரு ஊசி போன்று கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். கொடுக்கு, தேவைப்படும்போது மட்டுமே வெளியில் வரும். மற்றபடி, கொடுக்கிற்கான அறைகளிலேயே இருக்கும் இடம் தொுயாமல் இருக்கும். கொடுக்கு, shaft எனப்படும் உள்ளீடற்ற ஊசி போன்ற பகுதியையும், அதற்ிகு அடியில் இருபுறமும் தட்டு போன்ற lancet என்ற பகுதியையும் கொண்டது. இவை முழுமையாக விஷப்பையுடன் இணைக்கப்பட்டிருக்கும். விஷப்பை இரண்டு அமில சுரப்பிகளையும், ஒரு கார சுரப்பிகயையும் கொண்டிருக்கும். ஒரு பணித்தேனீ தாக்குதலைத் தொடங்கியவுடன், ஒருவித Alarming pheromone எனப்படும் எச்சரிக்கை சுரப்பினை காற்றில் கலந்துவிிடும். உடனே சக பணித்தேனீக்கள் Alarming pheromone வரும் இடத்தை நோக்கி

சென்று தாக்குதலைத் தொடங்கிவிிடும். அவ்வாறு தாக்கும்போது, கொடுக்கு முன்னும் பின்னுமாக இயங்கும். அப்போது அமில மற்றும் கார சுரப்ிபுகள் ஒன்றுகூடி விஷமாக, தாக்கப்படும் உயிரிக்குள் செலுத்தப்படும். அதுவும் தாக்கப்படும் உயிரி மிருதுவான தோலுடன் இருந்தால் ஒன்றுமில்லை. இல்லையேல், கொடுக்குப் பிய்ந்து தோலுடன் ஒட்டிக்கொள்ளும். அப்போது விஷப்பையும் கொடுக்குடனேயே வந்துவிிடும். எனவே விஷம் தொடர்ந்து தாக்கப்படும் உயிரிக்குள் செலுத்தப்படும். இவையெல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிிடும். மேலும், கொடுக்கு அறுந்த பணித்தேனீயின் உடலிலுள்ள நீர் முழுதும் வெளியேறி இறந்துவிடும்.

என்ன நண்பர்களே, தேனீக்களைப் பற்றிய ஒருசில சுவையான மற்றும் சுவாரசியமான செய்திகளைத் தெரிந்துகொண்டார்களா ?

அது சரி, ஒரு பூச்சி மின்சாரம் தயாரித்து, மின்விளக்கும் எரிக்கிறதே!!!

அதைப்பற்றிி…. அடுத்த வாரம்!!


amrasca@yahoo.com

Dr.R.Srinivasan

Post Doctoral Fellow-Entomology

AVRDC, Taiwan

Series Navigation

இரா. சீனிவாசன்

இரா. சீனிவாசன்