நஞ்சில் விளையும் பருத்தி

This entry is part of 48 in the series 20040610_Issue

– அசுரன்


பொருளாதார காரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பருத்தி இந்திய வேளாண்மையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பருத்தியின் தோற்ற இடங்களாக இந்தியாவும் பெருவுமே சுட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக பரப்பளவில் பருத்தி பயிரிடும் இந்தியா, உலகளவில் பருத்தி உற்பத்தியில் அமெரிக்கா, சீனாவையடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பயன்பாட்டிலோ இரண்டாமிடத்தில்.

இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் மூன்றிலொரு பங்கு துணி ஏற்றுமதியில் கிடைக்கிறது. இதில் மூலப் பொருளான பருத்தியின் பங்கு 60% ஆகும்.

இந்தியாவில் பருத்தி பயிரிடலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 6 கோடிபேர் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விவசாயிகள் ஆண்டுதோறும் பருத்தி விதைக்காக 500 கோடி ரூபாயும், வேதி உரத்திற்காக 500 கோடி ரூபாயும் பூச்சிக்கொல்லிகளுக்காக 2500 கோடி ரூபாயும் செலவிடுகின்றனர். இவ்வளவு செலவிட்டும் இந்தியாவின் பருத்தி விளைச்சல் மிகக் குறைவே. அதாவது, எக்டேருக்கு 300 கிலோவே உற்பத்தியாகிறது. உலக சராசரி 580 கிலோவாகும்.

இந்தியாவில் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளவர்கள் 70% சிறு விவசாயிகளே.

இந்தியாவில் 5% நிலப்பரப்பில் பயிரிடப்படும் பருத்தி 52%-59% பூச்சிக்கொல்லியை பயன்படுத்துகிறது. 24% நிலப்பரப்பில் பயிரிடப்படும் நெல் 17%-18% பூச்சிக் கொல்லியை பயன்படுத்துகிறது. அதே வேளை, 58% நிலப்பரப்பில் பயிரிடப்படும் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் போன்றவை யோ 6%-7% பூச்சிக்கொல்லியையே பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் பருத்தி பயிரிடலில் முதலிடத்தில் ஆந்திராவும், இரண்டாமிடத்தில் குஜராத்தும் மூன்றாமிடத்தில் மராட்டியமும், ஏழாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளன. ஆந்திராவில் 9,910 டன் பூச்சிக்கொல்லி இதற்காக ஆண்டுதோறும் பயன்படுத்தப்படுகிறதாம். இந்தியா முழுதும் பருத்தி விளை ?சலில் 75,417.70 டன் பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படுகிறது.

பருத்தியில் ஒரு பருவத்திற்கு 30 முறைக்கும் மேல் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. இத்தனை செலவு செய்வதால்தான் விளைச்சல் பாதிக்கப்படும்போதே, அதே பூச்சிக்கொல்லியை தாமே அருந்துகின்றனர் விவசாயிகள். இவ்வாறு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 2000-ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் ஆந்திராவும், இரண்டாமிடத்தில் உத்திரபிரதேசமும், மூன்றாமிடத்தில் தமிழ்நாடும் (9500டன்) உள்ளன.

இக்கட்டுரைகள் மே 2004 சுற்றுச்சூழல் புதிய கல்வி மாத இதழில் வெளியானவை.

தட்டச்சு: அசுரன் (asuran98@rediffmail.com)

சுற்றுச்சூழல் புதிய கல்வி- மாத இதழ்,

ஆண்டு சந்தா: ரூ. 75 (வெளிநாடுகளுக்கு: US $ 10)

நியூ-எட் பப்ளிகேசன்ஸ்,

ெ ?ச் 2-30, இராணிமங்கம்மாள் காலனி,

திண்டுக்கல்- 624001

தமிழ்நாடு, இந்தியா.

91-451-2461512

Series Navigation