முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி
மின்சார உற்பத்தியில் இன்று அணு மின் உற்பத்தி மிக இன்றையமையாத இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் அணுவின் உட்கூறுகளை அறியாமல் அணு ஆற்றலை வெளிக் கொணர்வதென்பது இயலாதாது. இவ்வகையில் உலகம் ரூதர்போர்ட் அவர்களை இன்று நன்றியுடன் நினைவு கூர்கிறதென்றால் அது மிகையல்ல. அவர்தான் அணுவைப்பற்றிய உலகப் புகழ் மிக்க அணுக்கருக் கொள்கையை (Nuclear Theory of Atom) அளித்தவர்.
ரூதர்ஃபோர்ட் ஒரு பிரிட்டிஷ் இயற்பியல் அறிஞர்; கதிர்வீச்சு (Radio-active) வேதியியலில் அவருடைய சேவையைப் பாராட்டி 1908ஆம் ஆண்டு அவருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ரூதர்ஃபோர்ட் 1871ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் திங்கள் 30ஆம் நாள் நியூசிலாந்து நாட்டின் ஸ்பிரிங் குரோவ் நகரில் தோன்றியவர். இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். படிப்பில், குறிப்பாக இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் மிகச் சிறந்து விளங்கினார். தமது 17ஆம் வயதில் பல்கலைக்கழக ஊக்கத்தொகை பெற்றார். அந்தச் சிறு வயதிலேயே கதிரலைகளைக் (radio waves) கண்டறியும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்து அதனைப் பற்றிய கட்டுரை ஒன்றையும் வரைந்தார். 1895ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கியது. பின்னர் கேவண்டிஷ் பல்கலைக்கழகம் சென்று அங்கு ஆய்வுக்கூடத் தலைவராகப் பொறுப்பேற்று கதிர்வீச்சியலில் ஆய்வு மேற்கொண்டார். புகழ் பெற்ற அணுவியல் அறிஞரான ஜே. ஜே. தாம்சன் அவர்களின் வழிகாட்டுதலில் பணியாற்றிய ரூதர்ஃபோர்ட், ஆறாண்டு காலத்தில் மிகச் சிறந்த பெயரும் புகழும் பெற்றார்;
கதிர்வீச்சுப் பொருள்களிலிருந்து பல்வேறு வகையான கதிர்கள் வெளிவருகின்றன என்பதை ரூதர்ஃபோர்ட் கண்டுபிடித்தார். அவற்றுள் சில வகைக் கதிர்கள் ஆல்ஃபா கதிர்கள் (alpha rays) என்றும், வேறு சில பீட்டா கதிர்கள் (beta rays) என்றும் அழைக்கப்பட்டன. ஆல்ஃபா கதிர்களின் துணை கொண்டு ரூதர்ஃபோர்ட் அணுவின் கட்டமைப்பை ஆய்வு செய்தார்; அணுவின் பெரும்பாலான நிறை (mass) மிக நுண்ணிய அணுக்கருவில் (tiny nucleus) பொதிந்துள்ளது என்பதைக் கண்டறிந்தார். ஏற்கனவே டால்டன் என்பவர் பொருட்கள் மிகச் சிறிய அணுக்களால் ஆனவை என்பதைக் கண்டறிந்து வெளியிட்டார்; எனினும் அவ்வணுக்களையும் பிளக்க இயலும் என்பதைக் கண்டறிந்த பெருமை ரூதர்ஃபோர்டுக்கே உரியது.
1907ஆம் ஆண்டு ரூதர்ஃபோர்ட் கனடாவிலிருந்து மான்செஸ்டருக்கு இடம் பெயர்ந்தார். மேற்கொண்டு ஆய்வு செய்ததன் வாயிலாக ஆல்ஃபாக் கதிர்கள் நேர்மின்னேற்றம் உடையவை என்றும், பீட்டாக் கதிர்கள் எதிர் மின்னேற்றம் உடையவை என்றும் கண்டறிந்தார்; இவை தவிர்த்து இரண்டிலும் சேராத வேறு வகையான நடுநிலைக் (neutral) கதிர்கள் இருப்பதையும் கண்டறிந்து அவற்றைக் காமாக் கதிர்கள் (gamma rays) என அழைத்தார்.
1912ஆம் ஆண்டில் டேனிஷ் இயற்பியல் அறிஞர் நெயில்ஸ் போர் (Neils Bohr) என்பவருடன் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் விளைவாக அணுவின் ஆற்றல் அனைத்தும் அதன் உட்கருவில், அதாவது அணுக்கருவில்தான் செறிந்துள்ளது என்பதனை ரூதர்ஃபோர்ட் நிரூபித்தார். 1914ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் வெடித்தது; இதன் விளைவாக உலகின் அறிவியல் அறிஞர்கள் பலரும் வெவ்வேறு நாடுகளுக்குச் சிதறிச் சென்றனர். ரூதர்ஃபோர்டும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரும் கேவண்டிஷ் ஆய்வுக்கூடத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்ல நேர்ந்தது. ஒரு தனிமத்தைக்கொண்டு இன்னொரு தனிமத்தில் மின்னேற்றம் செய்ததன் வாயிலாக அறிவியல் உலகையே வியப்பில் ஆழ்த்தினார் ரூதர்ஃபோர்ட். நைட்டிரஜன் அணுக்களில் ஆல்ஃபாத் துகள்களைக்கொண்டு மின்னேற்றம் செய்து இவ்வறிவியல் விந்தை நிகழ்த்தப்பெற்றது.
1919ஆம் ஆண்டு வரை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கேவண்டிஷ் இருக்கையின் தலைவராக ஜே.ஜே.தாம்ஸன் இருந்தார்; அவருக்குப்பின் ரூதர்ஃபோர்ட் அவ்விருக்கையின் தலைவராக நியமிக்கப்பெற்றார். 1925 முதல் 1930 வரை ராயல் கழகத்தின் தலைவராகவும் அவர் விளங்கினார். ரூதர்ஃபோர்டின் அறிவியல் பணிகளுக்காக பல விருதுகளும், பரிசுகளும், பாராட்டுகளும் அளித்து, பிரிட்டிஷ் அரசு அவரைப் போற்றிப் பாராட்டியது.
எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்த ரூதர்ஃபோர்ட் 1937ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 19ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது பருவுடல் லண்டன் நகரில் வெஸ்ட் மின்ஸ்டர் அப்பேயில் நல்லடக்கம் செய்யப்பெற்றது. அவரது அறிவியல் சேவையை நினைவுகூறும் வகையில் அணு எண் 104ஐ உடைய தனிமத்திற்கு ரூதர்ஃபோர்டியம் என்று பெயரிட்டு வேதியியல் உலகம் தன் நன்றியை வெளிப்படுத்தியுள்ளது.
முனைவர் இரா விஜயராகவன் Dr R Vijayaraghavan
பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி BTech MIE MA MEd PhD
மொழிக் கல்வித்துறை (தமிழ்) Dept. of Language Education (Tamil)
வட்டாரக் கல்வியியல் நிறுவனம் Regional Institute of Education (NCERT)
மைசூர் 570006 Mysore 570006
E mail: ragha2193van@yahoo.com
- இலையுதிர்க் காலம்.
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது -4( தொடர்கவிதை)
- வலி
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- ஆவலும் அப்பாவித்தனமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 36-வைக்கம் முகம்மது பஷீரின் ‘ஐஷூக்குட்டி ‘)
- ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)
- செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் ஜோலியட் கியூரி [Irene Joliot Curie] (1897-1956)
- அறிவியல் மேதைகள் ரூதர் ஃபோர்ட் (Ruther Ford)
- பாட்டு படும் பாடு
- நீங்கள் இன்று…
- படிக்க மறந்த கவிதை
- நலமுள்ள நட்பு
- பால்
- கடற்கரை வாக்கிங்
- வட்டத்தின் வெளி
- வேங்கூவர் – கனடா
- வேகத் தடுப்புகள்
- வாழ்வும் கலையும் (இறுதிப்பகுதி)
- சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை
- எஸ் என் நாகராஜன் 75 ஆண்டு நிறைவு : மலர் வெளியீடு
- என் குர் ஆன் வாசிப்பு
- சுற்றம்
- அரிசிபால்தீ
- நாங்கள் பேசிக்கொள்கிறோம்