‘செவ்வாயில் உயிர்வாழக்கூடிய ‘ கிருமிகள்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

டேவிட் ஒயிட்ஹவுஸ்


சமீபத்தில் புதிய பரிசோதனைகளில் செவ்வாயின் சுற்றுச்சூழலை பரிசோதனைச்சாலையில் உருவாக்கிப் பார்த்தபோது பல கிருமிகள் அங்கு உயிர்வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ‘அண்ட்ரோமேடா அறை ‘ என்ற ஒரு பரிசோதனைக்கருவியில் செவ்வாயின் தட்பவெப்பம், சுற்றுசூழல் ஆகியவற்றை உருவாக்கி பரிசோதனை செய்தபோது, மெதொனோஜென்ஸ் methanogens என்றழைக்கப்படும் ஒரு வித நுண்ணுயிரிகள் அங்கு குறைந்த காற்றழுத்தத்தில் வாழ்வதைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.

ந்த பரிசோதனை மூலம், ஆராய்ச்சியாளர்கள், கடந்த காலத்திலோ, இன்றோ, எதிர்காலத்திலோ உயிர்கள் வாழலாம் என்று உணர்கிறார்கள். இந்த பரிசோதனை அர்கன்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் டிமோதி அவர்கள் செய்தது.

செவ்வாய் மண் எப்படி இருக்குமோ அது போல மாதிரி வடிவமைக்கப்பட்ட மண்ணில் (எரிமலை சாம்பலில், அதே போல இருக்கும் வேதிப்பொருள்களோடும், அதேபோன்ற மண் துகள் அளவோடு, அதே போன்ற காந்த குணங்களுடன்) இந்த பரிசோதனையை நடத்தினார்கள். இதில் பல மெத்தனோஜென்களை வளர்த்துப் பார்த்தார்கள்.

அறிவியலாளர்கள் பிறகு, இந்த மண்ணை வெறும் ஹைட்ரஜனும் கார்பன் டை ஆக்ஸைடும் மட்டும் இருக்கும் ஒரு அறைக்குள் வைத்தார்கள். இந்த ஹைட்ரஜனும் கார்பன் டை ஆக்ஸைடும் இந்த மெத்தோனோஜன்கள் சக்தி தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள்.

ந்த மெத்தெனோஜென்கள் தங்களது வளர்ச்சியின் துணை உற்பத்தியாக மீத்தேன் வாயுவை உற்பத்திச் செய்கின்றன. அறிவியலாளர்கள் இந்த அறையில் அதிகரிக்கும் மீத்தேனின் அளவைக்கொண்டு, இந்த மெத்தனோஜென்கள் வளர்கின்றனவா அழிகின்றனவா எனச் சொல்ல இயலும். அடுத்து இந்த பரிசோதனையை ஆண்டோமெடா அறை எனச் சொல்லும் பெரிய ஸ்டெயின்லெஸ் எஃகு அறைக்குள் காற்றழுத்தம் இல்லாத வெற்றிடத்தில் வைத்து பரிசோதனைய தொடர்ந்தார்கள்.

இந்த அறை முன்பு, எரிகல் பரிசோதனைக்குப் பயன்பட்டு வந்தது.

ந்த அறிவியலாளர்கள் இந்த மெத்தனோஜென் கிருமிகளை பாட்டில்களில் வைத்து உறைய வைத்து, இந்த மண்ணுக்கு அடியே வைத்து பரிசோதித்தார்கள்

மிகக்குறைந்த காற்றழுத்தத்தில் இந்த நுண்ணுயிரிகள் வாழ்வதே தெரியவருகிறது. இப்போது இருக்கும் செவ்வாயின் தட்ப வெப்பம், சுற்றுச்சூழலிலேயே, இந்த நுண்ணுயிரிகளை வைத்தால், இந்தக் கிருமிகள் வாழலாம் என்பதும் அறிய வருகிறது.

செவ்வாயின் தரைக்குக் கீழ் பெரும் அளவில் தண்ணீர் உறைந்து இருக்கிறது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளதால், இந்த ஆராய்ச்சிக்கு இன்னும் ஒரு தூண்டுதலாக அது இருந்தது என்று பேராசிரிய க்ரால் தெரிவிக்கிறார்.

‘சமீபத்தில் செவ்வாய்ப் பயணங்களில், தரைக்குக் கீழ் பெரும் கடல்கள் உறைந்திருக்கலாம் என்பது தெரியவருவதால், அங்கு தரைக்குக் கீழ் உயிர்கள் இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது ‘ என்று இவர் கூறுகிறார்.

க்ரால் இந்த ஆராய்ச்சியைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும், இந்த ஆராய்ச்சியின் பயனாக, இந்த மெத்தனோஜென்கள் செவ்வாய்க்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வளர்க்கப்படலாம். (ஒரு வேளை மனிதர்கள் செவ்வாய்க்குச் செல்ல முடிவு செய்தால்)

‘மீத்தேன் என்பது கிரீன்ஹவுஸ் வாயுவாக இருப்பதால், இந்த மெத்தனோஜென்களை அங்கு கொண்டு சென்று அங்கு இருக்கும் வெப்ப அளவை உயர்த்த இந்த நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தலாம் ‘ என்று க்ரால் தெரிவித்தார்.

***

Series Navigation

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்