இந்திய விவசாயத்தின் பிரச்னைகள்

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue


வளமையான இந்தியாவில் பசி என்பது இந்தியாவின் விவசாயத்துறையை தெளிவாக எடுத்துரைக்கும் வாசகம்.

விவசாயிகளிடையே ஏராளமான தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும். ஆனால், 700 லட்சம் டன்கள் தான்யங்களும், அளவுக்கு அதிகமான கோடைக்கால காரிஃப் விளைச்சலும் இவர்களது கஷ்டங்களை நீக்க முடியவில்லை.

மத்திய அரசாங்கம் 7 சதவீத விவசாய உற்பத்தி வளர்ச்சி வரும் என்று நல்ல எதிர்பார்ப்புடன் இருந்தாலும், பல நிபுணக்குழுக்கள் விதைகள், சந்தை, கொள்முதல் சம்பந்தமாகக் கொடுத்த பரிந்துரைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படாமல், இந்த 7 சதவீத உற்பத்தி வளர்ச்சி கனவாகத்தான் இருக்கும். வளமையான விளைச்சலின் பலன்கள் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கும், உபயோகப்படுத்துபவர்களான மக்களுக்கும் வராமல் இருப்பதற்குக் காரணம், இடையே இருக்கும் சங்கிலிகளில் இருக்கும் உள்ளார்ந்த பிரச்னைகள்.

எண்ணெய் விதைகள், தான்யங்கள், இன்னும் பல விவசாய உற்பத்திப் பொருட்கள் தட்டுப்பாடாகவும், கோதுமை, அரிசி மற்றும் இது போன்ற பயிர்களின் உற்பத்தி அதிகமாகவும் ஆகிக்கொண்டிருப்பதற்குக் காரணம், திட்டமிடப்படாத விவசாயமும், அறிவியற்பூர்வமற்ற விவசாயமுமே காரணம்.

விவசாயிகளுக்கு தள்ளுபடிகளும், தேவையான கட்டுமான அமைப்புக்களும் கொடுக்கப்படாமல் இருப்பதால், பரந்து பட்ட விதம்விதமான பயிர் விளைத்தல் என்பது காகிதத்திலேயே இருக்கிறது. அழிந்துவிடக்கூடிய பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாக்க தேவையான கட்டுமான அமைப்புக்கள் உருவாக்கித் தருவது இன்னும் காகிதத்திலேயே இருக்கிறது என்பதை யாரும் தேர்தல் காலங்களில் கூட பேசுவதில்லை.

தேசீய விவசாயக் கொள்கையும் பல உயர்மட்ட கமிட்டிகள் சந்தைகள் பற்றியும் விவசாய உற்பத்திப் பொருட்கள் பற்றியும் கொடுத்த அறிக்கைகள் மத்திய அரசாங்கத்தின் மேஜைகளிலும் மானில அரசாங்களின் மேஜைகளிலும் தூங்குகின்றன.

எதிர்பார்த்த அளவுக்கு இந்தத் திட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் இருந்தாலும், சில விஷயங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. எந்த அளவு உற்பத்தி செய்யமுடியும் போன்ற (quantitative restrictions QRs)வையும், விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி தடைகள் போன்றவையும் பெரும்பாலாக உடைக்கப்பட்டுவிட்டன. 10 விவசாயப்பொருட்கள் ஏற்றுமதி பிரதேசங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. விதைகள் சம்பந்தமான கொள்கைகள் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகள் மூலம் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Series Navigation

செய்தி

செய்தி