தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue


தென்னாப்பிரிக்காவின் ஒரு மருந்துச் செடி எய்ட்ஸ் நோயால் வருந்தும் பல கோடி ஏழை மக்களுக்கு பல வகையிலும் உதவுவதாக அறியப்பட்டிருக்கிறது.

சுத்தர்லேந்தியா ஃப்ரூட்டெஸென்ஸ் (Sutherlandia Frutescens, sub-species Microphylla) தென்னாப்பிரிக்காவில் பல மருத்துவமனைகளில் அதன் வியாதி தடுக்கும் குணங்களை ஆராயப்பட இருக்கிறது.

மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு இந்த வருடமும் அடுத்த வருடமும் இந்தச் செடியின் மருந்துகளைப் பயன்படுத்தி, இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் இது பற்றிய அறிக்கை வெளியிடுவதாக வாக்களித்திருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகள் இந்த மருந்துகளின் நன்மையைப் பற்றி வாய்வழிச்செய்திகள் கூறுவதன் மூலம் இது உண்மையிலேயே பயனுள்ளது என பரவிக்கொண்டிருக்கிறது.

இந்த செடி மேற்கத்திய முனையிலும், (வெஸ்டர்ன் கேப்) இடங்களிலும், சுலுலாந்து இடங்களிலும் காட்டுச்செடியாக வளர்கிறது.

பல நூற்றாண்டுகளாக, இந்தச் செடி தென்னாப்பிரிக்காவின் மூலிகை மருத்துவர்களால், மருந்துச் செடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பெயர் கூட இன்ஸிஸா என்று வழங்குகிறது. இன்ஸிஸா என்றால் இருட்டைப் போக்குவது என்று பொருள். இதனை சக்தி கொடுக்கும் மருந்தாகவும், மன அழுத்தத்துக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.

சுலு சாங்கோமஸ் என்ற பாரம்பரிய மருத்துவர்கள் இதனை ‘உன்வலி ‘ என்று அழைக்கிறார்கள். இந்த மருந்தின் மூலம், 1918ஆம் வருடம் 20 மில்லியன் மக்கள் உலகெங்கும் இறந்தபோது இதனை இந்த பகுதியில் அழிக்க இதனைப் பயன்படுத்தினார்கள்.

ட்ஸ்வானா மக்கள் இதனை முககானா என்று அழைக்கிறார்கள். இது கொனேரியா, ஸிபிலிஸ் போன்றவற்றை அழிக்கப் பயன்படுத்துகிறார்கள். ஆஃப்ரிகானர்கள் இதனை கான்கர்போஸே (அல்லது கான்ஸர் செடி) என்று அழைக்கிறார்கள். இது உள் கேன்ஸருக்கு மருந்தாகவும், உடல் அழிவுக்கு மருந்தாகவும் இவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பிராந்திய மருத்துவ நிறுவனம் ஒன்று பைடோ நோவா என்ற பெயரில் பிராந்திய மருந்துகளை ஆராய்ச்சி செய்யவும் இந்த பிராந்திய மருந்துகளின் வேதிப் பொருள் கூட்டமைப்பை அராயவும், முக்கியமாக இந்தச் செடியை ஆராயவும் மூன்று வருடங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டது.

பைடோ நோவா என்ற இந்த நிறுவனம் இந்த செடியை பல ஏக்கர்களில் பயிரிட்டிருக்கிறது

டாக்டர் நிகல் ஜெரிக்கே என்பவரின் தலைமையில் பல நிபுணர்கள் கொண்ட ஒரு குழு இந்தச் செடியில் பல வேதி மூலக்கூறுகள் இருப்பதையும் இந்த மூலக்கூறுகள் புற்றுநோய், காசநோய், சர்க்கரை நோய், மனப்பிறழ்வு நோய், பைத்தியம் போன்றவற்றுக்கும், எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாகவும் இது இருப்பதை கண்டறிந்திருக்கிறது.

பைடோ நோவா நிறுவனம் இந்த செடி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டானிக் போல உதவும் என்று நம்பி விவசாயிகளிடம் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக்கொண்டு இதனை பல ஏக்கர்களில் பயிரிடவும் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிறுவனம் இந்த செடிகளிலிருந்து உயர்ந்த ரக மாத்திரைகளையும், ஜெல்களையும், தூளையும் தயாரிக்கிறது.

நன்றாக உணவு உண்ணும் நோயாளிகளுக்கு இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்று நம்பி இந்த மருந்தை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வினியோகம் செய்து வருகிறது.

டாக்டர் ஜெரிக்கே அவர்கள், ‘பல நோயாளிகள் இந்த மருந்தை உட்கொண்டு, எய்ட்ஸ் கேன்ஸர் போன்றவற்றின் வீர்யம் குறைந்து, மீண்டும் உடல் எடை ஏறுவதையும், பசி வருவதையும் எங்களிடம் தெரிவித்து வருகிறார்கள் ‘ என்று கூறுகிறார்.

‘சுத்தர்லாந்தியா செடி எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் என்று நாங்கள் கூறவில்லை. பல மடங்கு தற்போதைய வாழ்க்கை தரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று மட்டுமே கூறுகிறோம் ‘ என்று கூறுகிறார்.

டாக்டர் கிரெடோ முட்வா என்ற பெரும் புகழ் வாய்ந்த பாரம்பரிய மருத்துவர் இந்த மருந்தைக்கொண்டு பல எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வருகிறார்.

‘என்னுடைய அத்தைக்கு 103 வயதாகிறது. அவள் என்னிடம் இந்த மருந்தை எய்ட்ஸ்க்கு எதிராக பயன்படுத்தும்படிச் சொன்னாள். நான் என்னுடைய அத்தையிடம் சொன்னேன், ‘அத்தை, வெள்ளைக்காரர்கள் இந்த வியாதிக்கு மருந்து கிடையாது என்று சொல்கிறார்கள் ‘ என்று ‘

‘என் அத்தை சொன்னாள், எல்லா வியாதிக்கும் ஒவ்வொரு மருந்து உண்டு, இந்த மருந்தை உபயோகித்துப் பார் ‘ என்றாள். நான் உபயோகிக்கிறேன் ‘ என்கிறார் இந்த மருத்துவர்.

‘பல மருத்துவர்கள் கைவிட்ட பல நோயாளிகளை அவர்கள் இறக்கும் தருணம் தாண்டி 3 வருடங்களுக்குப் பின்னரும் நலமாக இருப்பதை இந்த மருந்து மூலம் காண்கிறேன். இது அற்புதமான மருந்து ‘ என்று கூறுகிறார்.

வடக்கு கேப் நகரமான குருமான் நகரத்தில் இருக்கு மருத்துவமனை நர்ஸ் விர்ஜினியா ராத்தேலே இந்த மருந்தை சுமார் 300 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொடுத்துவருகிறார்.

‘நான் என் நோயாளிகளை நன்றாகச் சாப்பிடச் சொல்கிறேன். சுத்தர்லாந்தியா மருந்து வெறும் கஞ்சிசாதம் சாப்பிட்டால் வேலை செய்யாது. நன்றாக காய்கறிகளைச் சாப்பிடவேண்டும் ‘ என்று இவர் கூறுகிறார்.

இப்போதைக்கு, ஒரு மாதத்துக்கு தேவையான பைடோ நோவா மாத்திரைகள் சுமார் 120 இந்திய ரூபாய்களுக்குள் கிடைக்கும். இரண்டு மாதங்களுக்கு தேவையான தூள்வடிவத்தில் இருக்கும் மருந்து சுமார் 25 ரூபாய்க்கு கிடைக்கும்.

பைடோ நோவா தென்னாப்பிரிக்க அரசாங்கத்தை அணுகி, இந்த மருந்துச் செடியை பரவலாக பயிரிடும்படி கேட்டுக்கொண்டது.

இதுவரை அவர்களுக்கு எந்த விதப் பதிலும் கிடைக்கவில்லை.

– நன்றி பிபிஸி

Series Navigation

செய்தி

செய்தி