மனத்தின் வைரஸ்கள் – 3 – விஞ்ஞானமும் ஒரு வைரஸா ?

This entry is part [part not set] of 20 in the series 20011118_Issue

ரிச்சர்ட் டாகின்ஸ்


விஞ்ஞானமும் ஒரு வைரஸா ?

4. அறிவியல் ஒரு வைரஸா ?

இல்லை. எல்லா கணினி நிரல்களும் (computer programs) வைரஸ் என்று சொன்னால், அறிவியலையும் வைரஸ் என்று சொல்லலாம். நல்ல, உபயோகமான நிரல்கள் பரவுவதற்குக் காரணம், அவைகள் மனிதர்களால் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன, மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன. கணினி வைரஸ்கள் பரவுவதற்குக் காரணம் — அவைகளின் உள்ளே ‘என்னைப் பரப்பு ‘ என்பதே கட்டளையாக இருப்பது தான். அறிவியல் கருத்துக்கள், மற்ற எல்லா மீம்களைப் போலவும், இயற்கைத் தேர்வுக்கு (Natural Selection) உட்படுத்தப்படுகின்றன. இது மேலாகப் பார்க்கும் போது வைரஸ் போலத் தோன்றலாம். ஆனால், இந்த அறிவியல் கருத்துக்களை மிகவும் நுண்ணியமாக அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் சக்திகள் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்வதில்லை. தன்னைத்தானே பாராட்டிக்கொள்ளும் நடத்தைக்கும், அர்த்தமற்ற கருத்துக்களுக்கும் அனுமதி தருவதுமில்லை; இவைகளைத் தெரிவு செய்ய சரியான அளவு கோல்களும், சட்டங்களும் இருக்கின்றன. தகுதரம் வாய்ந்த சரிபார்க்கும் முறை இந்த அறிவியல் கருத்துக்கள்மீது பிரயோகம் செய்யப்படுகிறது. பரிசோதித்துப் பார்க்கும் முறை, சாட்சியாக இருக்கும் ஆதாரம், நுணுக்கம், எண்ணிக்கையாக ஒரு விஷயத்தை அளவிடும் முறை, தொடர்ந்து அதே விளைவுகளை எப்போதும் உருவாக்கும் ஆரம்ப காரணிகள், மற்ற சரிபார்த்த விஷயங்களோடு ஒத்துப்போகும் குணம், எல்லா நேரங்களிலும் காலங்களிலும் இடங்களிலும் ஒரே மாதிரியாக விளைவை உருவாக்கும் குணம், கலாச்சாரம் சார்ந்திருக்காக குணம் (testability, evidential support, precision, quantifiability, consistency, intersubjectivity, repeatability, universality, progressiveness, independence of cultural milieu) ஆகியவை. மத நம்பிக்கையோ மேற்கண்ட எந்த விதமான குணங்களும் இல்லாதது என்பதை நாம் உணர வேண்டும். இருந்தும் மத நம்பிக்கை (வைரஸ் ஆகப்) பரவுகிறது.

தொத்து நோய் பரவும் விதத்தில் சில கூறுகளை அறிவியல் கருத்துக்கள் பரவுவதில் கூட கண்டு பிடிக்கலாம். ஒரு நல்ல அறிவியல் கருத்து வெகு வேகமாக அறிவியலாளர் சமூகத்தில் பரவுவதை மீஸல்ஸ் தொத்து நோய் பரவுவதோடு ஒப்பிடலாம். ஆனால், அதற்கு அடியே உள்ள காரணங்களை ஆராயும் போது, அவை சரியானவையாகவும், அறிவியல் பகுப்பாய்வு முறைக்கும் அதன் தகுதரத்துக்கும் ஏற்பவையாகவும் இருப்பதைக் காணலாம். ஒரு மதத்தின் பரவலுக்கு நீங்கள் தொத்து நோயைத் தவிர வேறெதையும் பார்க்க இயலாது. ஒரு மனிதர் ஒரு விஷயத்தை மத ரீதியாக நம்புவதற்கும், இன்னொருவர் இன்னொரு மதத்தை நம்புவதற்கும் ஒரே காரணம் இவர் ஒரு கண்டத்திலும் அவர் இன்னொரு கண்டத்திலும் பிறந்திருப்பது மட்டுமே ஆக இருக்கும். பரிசோதித்துப் பார்க்கும் குணம், ஆதாரத்தின் துணை போன்ற விஷயங்கள் எல்லாமே கணக்கில் எடுத்துக்கொள்ளவே படுவதில்லை. ஆனால், அறிவியல் முறைக்கு, தொத்து நோய் குணம் பின்னால் தான் வருகிறது. அது ஒப்புக்கொள்ளப்படும் வரலாற்றின் போது மட்டுமே இது பிரயோகிக்கப் படுகிறது. ஆனால், மத நம்பிக்கைக்கோ, தொத்து நோய்க்குணமே முழு முதல் காரணம்.

5 முடிவுரை.

வைரஸ்கள் எப்போதும் வெற்றி பெறுவதில்லை என்பது ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம். முல்லாக்களும், கன்யாஸ்திரிகளும் வீசி எறியும் மோசமான விஷயங்களிலிருந்து பெரும்பாலான குழந்தைகள் அதிக காயங்கள் இன்றி வெளிவந்து விடுகிறார்கள். அந்தோனி கென்னி அவர்களது கதையும் சந்தோஷ முடிவுடன் கூடியது. அவர் இறுதியில் கத்தோலிக்க மதத்துக்குள் இருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற முரண்பாடுகளை அவரால் சகித்துக்கொள்ள முடியாமல் போய்விட்டதால், அவர் அந்த மடங்களிலிருந்து வெளிவந்துவிட்டார். ஆனால், இந்த நோய் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை. அவரது மூளையையும் ஞானத்தையும் கொண்டும் முப்பது வருடங்கள் அவர் போராட வேண்டியிருந்தது. எனது ஆறு வயது சிறு குழந்தையின் ஆன்மா குறித்து ( இப்படிப்பட்ட மோசமான வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி விடுமே என்று) நான் அனாவசியமாகப் பயப்படுகின்றேனோ என்னவோ ?

நன்றி:

ஹெலனா க்ரோனின் அவர்களது நுண்ணிய ஆலோசனைகளுக்கும், ஒவ்வொரு பக்கத்திலும் நடையை சரி செய்ததற்கும்.

உசாத்துணை நூல்கள்:

Browne, Sir T. (1635) Religio Medici, I, 9

Dawkins, R. (1976) The Selfish Gene. Oxford: Oxford University Press.

Dawkins, R. (1982) The Extended Phenotype. Oxford: W. H. Freeman.

Dawkins, R. (1989) The Selfish Gene, 2nd edn. Oxford: Oxford University Press.

Dennett, D. C. (1983) Intentional systems in cognitive ethology: the “Panglossian paradigm ‘ ‘ defended. Behavioral and Brain Sciences, 6, 343–90.

Dennett, D. C. (1984) Elbow Room: The Varieties of Free Will Worth Wanting. Oxford: Oxford University Press.

Dennett, D. C. (1990) Memes and the exploitation of imagination. The Journal of Aesthetics and Art Criticism, 48, 127–35.

Grafen, A. (1990a) Sexual selection unhandicapped by the Fischer process. Journal of Theoretical Biology, 144, 473–516.

Grafen, A. (1990b) Biological signals as handicaps. Journal of Theoretical Biology, 144, 517–46.

Hofstadter, D. R. (1985) Metamagical Themas. Harmondsworth: Penguin.

Kenny, A. (1986) A Path from Rome Oxford: Oxford University Press.

Kilduff, M. and Javers, R. (1978) The Suicide Cult. New York: Bantam.

Thimbleby, H. (1991) Can viruses ever be useful ? Computers and Security, 10, 111–14.

Williams, G. C. (1957) Pleiotropy, natural selection, and the evolution of senescence. Evolution, 11, 398–411.

Zahavi, A. (1975) Mate selection — a selection for a handicap. Journal of Theoretical Biology, 53, 205–14.

Text taken from Dennett and His Critics: Demystifying Mind, ed. Bo Dalhbom (Cambridge, Mass.: Blackwell, 1993).

Typed 9 March 1995 | Last changed 2 September 2001 (thanks to Mitch Porter, Steve Bliss, Richard Smith, Brendan Lalor and Eric Meyer for typo warnings)

(எழுதப் பட்டது 9 மார்ச் , 1995- கடைசி மாறுதல் 2 செப்டம்பர் 2001-ல் செய்யப்பட்டது)

Series Navigation

ரிச்சர்ட் டாகின்ஸ்

ரிச்சர்ட் டாகின்ஸ்