நாகேஷ்

This entry is part of 34 in the series 20090205_Issue

ரஜித்


(அய்யா

நாகேஷ்
நாம் மரியாதை செய்யவேண்டிய ஒரு சிறந்த மனிதர்
பிறகுதான் நடிகர்
நன்றி)

நூறு மீட்டர் ஓடவே
நுரை தள்ளுகிறது
நீ ஆயிரம் மீட்டர் ஓடிவிட்டு
அடுத்து என்ன என்கிறாய்

இயக்குநர் சிகரம் இயக்க
நீ மலையானாய்
சர்வர்சுந்தரம் சரித்திரம்

ஜெயகாந்தனோடு
நீ யாருக்காகவோ அழுதாய்
எங்கள் கண்ணீரால்

காதலிக்க நேரமில்லை
செல்லப்பா
எங்கள் வயிறு புண்ணப்பா

சாத்தியமேயில்லை
இன்னொரு தில்லானா
இன்னொரு வைத்தி

உன் எதிர்நீச்சலில்
திசை திரும்பியது
நதிகள்

திருவிளையாடல்
தேரின் வலம்
தருமி நீ வடம்

உன் முகத்தின்
தளும்புப் புள்ளிகளும்
தமிழ் பேசும்

வதந்திகள் கிழிக்கும்
திரைவாழ்வில்
நீ ஆலாய் விரிந்து
ஆயிரம் கண்டாய்

ஓ கின்னஸ்
நீ என்ன செய்கிறாய்?

Series Navigation