வாழ்க்கைக் கணக்கு

This entry is part of 34 in the series 20070906_Issue

வைகைச் செல்வி


கூடலில். . .
கூட்டல் கணக்காய்
இல்லற வாழ்க்கை.

பின்னர்
அவசர. . .அவசரமாய்
ஓடி. . .ஓடி
சொத்து பத்து எனப்
பெருக்கல் மட்டுமே
ஐம்பது வரையில்.

நாட்கள் நகர நகர
சொந்தங்களும் பந்தங்களும்
உள்ளத்தை
வகுத்து
நார் நாராய்க் கிழிக்க
எல்லாம் உதிரும்
மிச்ச வாழ்க்கையில்.

ஆற அமர….
வரவையும் செலவையும்
இனங்கண்டு எண்ணுவதற்குள்
காலச் சக்கரத்தின்
வேகம் குறைய
வெறும் கழித்தல் கணக்காய்
முடியும் வாழ்க்கை
முதியோர் இல்லத்தில்.


vaigai_anne@yahoo.com

Series Navigation