தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எனக்குரிய இனியவனே !
மனக்கவலை தரும் மண்ணில் எறியப்பட்ட
எனைக் கைதூக்கி விட்டாய் !
உனது முத்தம் பெறுவதற்கு முன்னே
சோகச் சுருள் கூந்த லிடையே
உயிர் மூச்சு ஊதி
நெற்றியின் மினுமினுப்பு
முற்றிலும் தெரிகிறது,
தேவதைகள் கண்ணில் படுவது போல் !
உலகம் என்னை
விலக்கிச் சென்ற போது,
கடவுளை நான் தேடிப் போகக்
கண்ணில் பட்டது நீ !
எனக்குரிய நீ, எனக்குரிய நீ
என்னிடம் வந்தாய் !
உன்னைக் கண்டு பிடித்தவள் நான்,
பாதுகாப் பானது எனக்கு,
மனம் வலு வடைந்தது,
மகிழ்ச்சி பொங்கியது.
வாடா மல்லி போல் நிற்கிறேன்,
மூடாது பனித்துளி !
பின்னோக்கிப் பார்க்கிறேன்
மேல்குடி வாழ்க்கையில் உனது
சலித்துப் போன
சமயங்களை !
மார்பு பொங்கி எழும்ப
நல்லதுக்கும் கெடுதிக்கும்
நடுவே சாட்சி அளிப்பேன்
நானிங்கே,
வலுத்த மரணத்தைப் போல்
செழிப்பு நிலை மீள்கிறது
அந்தக் காதலுக்கு !
********************
Poem -27
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
My own Belovழூd, who hast lifted me
From this drear flat of earth where I was thrown,
And, in betwixt the languid ringlets, blown
A life-breath, till the forehead hopefully
Shines out again, as all the angels see,
Before thy saving kiss! My own, my own,
Who camest to me when the world was gone,
And I who looked for only God, found thee!
I find thee; I am safe, and strong, and glad.
As one who stands in dewless asphodel
Looks backward on the tedious time he had
In the upper life,–so I, with bosom-swell,
Make witness, here, between the good and bad,
That Love, as strong as Death, retrieves as well.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 25, 2007)]
- மகத்தான மக்கள் பணியில் மக்கள் தொலைக்காட்சி
- காதல் நாற்பது (27) – எனக்குரிய இனியவன் நீ !
- தமிழ்த் தேசியமும் சிங்களத் திரைப்படங்களும்
- ஜெயகாந்தன் / ஒரு நாள் ஒரு பொழுது!
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ?
- கனடா தேசீய கீதம்
- பூனைகளும் புலிகளும்
- பிரபஞ்சனுடன் ஒரு சந்திப்பு
- கலைச் செல்வன் இரண்டாம் ஆண்டின் நினைவு
- காலம் சஞ்சிகையின் இலக்கிய நிகழ்வு
- உயிர் எழுத்து இதழ் வெளியீடு
- முத்துக் கமலம் இணைய இதழ் வெளியீடு
- இலக்கியம் : உதவுதலும் ஊக்குவித்தலும் ஒன்றல்ல
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 6. வேலைதேடு – வேலைத்தேடு
- பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே – இந்தித் திரைப்படம். ஒரு பார்வை
- பட்டறிவு
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 16
- தம்பி நீ!!
- காலை புதிது ….. விழிக்கும் மனிதன் ? ….
- கதைகளின் கவிதை!
- விண்ணில் ஒரு நதியாய்…
- ஒரு மத அழிப்பின் கதை
- எண்கள் நெடுவரிசையில் செல்கின்றன – கணிதமும் வரலாற்று அரபுலகமும்
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் பதினாறு: ‘ஹரிபாபுவின் விளம்பரம்!’
- முறையீடு
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 7 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்
- கால நதிக்கரையில்……(நாவல்)-12