அன்பர் தினம் துணையே

This entry is part of 24 in the series 20070215_Issue

ரஜித்


வேர்கள் தொலைத்து
கிளைகள் தொலைத்து
வாழ்ந்த காடு தொலைத்து
தேக்குப் பொருளாகிப்போன
ஒரு தேக்குமரம்
தொலைத்¢ததை விடவும்
துணையே
துணைவன் எனக்காக
நீ தொலைத்தது அதிகம்

துணி துவைக்கும்
எந்திரத்தில்
துணிகளின் பாட்டைவிட
துணையே
துணைவன் எனக்காக
நீ படும்பாடு அதிகம்

எனக்காக நீ
இழந்தவைகள்
இலையுதிர் கால
மரமிழந்த
இலைகளினும் அதிகம்

உனக்காக
நான் இழந்தது
துணையே
இந்தக் கவிதை பிரசவிக்கின்ற
கணங்கள் மட்டுமே

Series Navigation