நேசிக்கிறேன்

This entry is part of 26 in the series 20050722_Issue

பாஷா


எறிந்த என் மெளனத்தை
எடுத்தெடுத்து என் முன்னிடுகிறது
இந்த அலைகள்!
மெளனத்தின் ஆழத்தில்
மெல்ல காதல் அழிந்ததாய்
கற்பிதம் கொண்டாலும் காற்றில்
முகம் உரசிப்போகும் உன்
முந்தானையில் மீண்டும்
உயிர்கொள்கிறது என் காதல்!

காதல் இல்லையென
அடுக்கடுக்காய் ஆயிரம் காரணங்கள்
அள்ளி தெளித்தாலும்
பிறந்த நாள் பாிசாய் எனக்களித்த
புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும்
பதிந்து வைத்திருக்கிறாய்
உன் பெயரை மட்டுமல்ல
உன்னையும்!

உன்னவன் இவனென
உன் உதடுகள் உச்சாித்தபொழுது
நின்றுதான் போனது உன்னை
துரத்திகொண்டிருக்கும் என்
நிமிடங்கள்!
பின்
கரம் பற்றியவன்
காலடியில் கொட்டினேன்
தழும்பும் என் காதலை!
உன்னை மட்டுமல்ல
நீ நேசிக்குமெல்லாவற்றையும்
நானும் நேசிக்கிறேன்!

sikkandarbasha@hotmail.com

Series Navigation