தெருவொன்றின் குறு நேர வாழ்வு

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

இளைய அப்துல்லாஹ்


கீழே ஒரு ஆட்டோவில்
2பேர் போகிறார்கள்.
கடையில் ஒரு பெண்மணி
‘ஜின்ஜபியர் ‘ குடிக்கிறாள்
ஒரு செருப்புத்தொழிலாளி தைக்கிறார்.
பாடசாலைப்பையனொருவன் அழகான
பாடசாலைப் பெண்ணொருத்தியுடன்
உரசி உரசி போகிறான்.
ஒரு வாடகைக்காரில்
முழுநிறைக்கர்ப்பிணியை
பெறுவுக்காக ஆஸ்ப்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள்
வாழைப்பழ வண்டில்காரன்
ஏற்றத்தில் தள்ளுகிறான்
விலா எலும்பு துருத்தியபடிக்கு…
சாணை பிடிப்பவனும்
அயர்ண் பண்ணுபவனும்
தத்தமது வேலைகளின் பெயர் சொல்லிக்கூவுகிறார்கள்
ஒரு காகம் கரண்ட் கம்பியில் உட்காருகிறது
சத்தியமாள் அவர்கள் காதலர்கள்
கிள்ளலும் சிரிப்பும் போகிறார்கள்
முகமூடி பர்தா போட்ட பெண் பாதையைக்கடக்கிறாள்
மஞ்சள் கோடு கேட்பாரற்றுக்கிடக்கிடக்கிறது.
ஒரு நாய் போகிறது
ஒரு வான் ஒரு பஸ் ஒரு லொறி
ஒரு பாடசாலைச்சிறுமி கடக்கிறாள்…
வேகமாய் மிக வேகமாய் வந்த
மினிபஸ் நடுத்தெருவில்
மஞ்சள் கடவையில் வைத்து
அடித்துச்சிதைத்தது
அவள் தசையும் பிண்டமுமமாய்
சிதறிச்செத்துப்போனாள்

இளைய அப்துல்லா
இலங்கை
anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்