ச.ஹ.ரகுநாத்தின் கன்னடக் கவிதைகள்
தமிழில் பாவண்ணன்
(பதிவுகள் இலக்கிய அரங்கில் வாசிக்கப்பட்டவை)
1. தருக்கம்
நிலத்தில் வேர்பதித்து
ஓங்கிவளர்ந்த மரத்துக்கு
முழுச் சுதந்தரன் என்ற எண்ணம்
‘மண்ணின் சாரத்தை உறிஞ்சுவதில் தப்பென்ன ?
ஒரு நாள் நானே மண்ணுக்கு உணவாவேன் ‘
என்பது மரத்தின் தருக்கம்
மண்ணுக்கும் உண்டு அதன் தருக்கம்
‘என்னால் தான் மரமும் உயிரும்
நானில்லையென்றால் எப்படி வரும் பசுமை ? ‘
மண்ணின் தருக்கம் மண்ணைச் சார்ந்தது
மரத்தின் தருக்கம் மரத்தைச் சார்ந்தது
ஏனெனில்
மண்ணுக்கு மரமாகத் தெரியாது
மரத்துக்கு மண்ணாகத் தெரியாது.
***************
2. நாம் நாமல்ல
காலம் உருள்கிறது
இதிகாசம் வளர்கிறது
மனிதன் வளர்வதில்லை
பாம்பு சீறுவது
தற்காப்புக்காக கொல்வதற்கல்ல
பாம்புக்குப் பகை தெரியாது
புலி மானைக் கொல்வது
வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள
எந்த புதுமை படைக்கவுமல்ல
அச்சமற்ற இடத்தில்
பாம்பும் ஆடுகிறது கடிப்பதை மறந்து
வயிறு நிரம்பிய கணத்தில்
புலியும் சாதுவாகும் சீற்றம் மறந்து
சோற்றைக் கண்டதும் காகம்
சுற்றத்தைக் கூவி அழைக்கிறது
எறும்பு, கரையான், தேனீ
கூடி உழைத்து வாழ்கின்றன
உயிர் கொடுக்கும் பசுமை
மேகங்களைத் தடுக்கும் சிகரம்
அழகான இயற்கையின் உயிர்கள்
உயிருந்தும் உயிரற்றவை
அவை பொறாமைப்படுவதில்லை
நாட்டாமையை விரும்புவதுமில்லை
நாம் நாமல்ல
**************
3. சித்திரங்கள்
‘முன்னால போங்க.. போங்க முன்னால ‘
முன்னோக்கி நகர்பவர்களே இல்லை
பின்தங்குபவரே எல்லாரும்
முன்னோக்கி நகர்ந்தாலும் மீண்டும்
பின்னோக்கி வரத்தானே வேண்டும் ?
செங்கற்களாக ஒட்டிக்கொண்டிருக்கிறோம்
கான்கிரீட் இல்லாமல்
நாம் தளர்வதில்லை
ஒரு அங்குலமும் சரிவதில்லை
மறுபடியும் கூச்சல் ‘போங்க முன்னால போங்க ‘
மனங்கள் இங்கே உறைந்து கிடக்கின்றன
அவன் கை
அவள் உடல்
அளப்பதை அறிந்தாலும்
அவள் ஆட்சேபிக்கவில்லை
உடல்கள் இங்கே உறைந்திருக்கின்றன
அப்பப்பா, இன்று அதிகப்புழுக்கம்
பொங்கிவரும் வேர்வையை வழித்தபடி
உஸ் உஸ்ஸென்று மூச்சிழுத்தபடி
ஜன்னலுக்கு மறுபக்கம் கண்கள் திரும்பும்
மெளனமாக இருக்கும் போது
பேசத் தொடங்குவார்கள் சிலர்.
அவள் அவனைப் பார்த்து சிரித்தது
அவன் அவளைப் பார்த்து கண்ணடித்தது
பாத்திரத்திலிருந்த உப்புமா மாயமானது
இரவெல்லாம் தூங்காமல் குழந்தை தொல்லை தந்தது
துணிகள் வாங்கியது, வியப்பில் மூழ்கியது
அரசியல் வாதிகளின் பைத்தியத்தனங்கள்
குண்டு வெடிப்பு உயிர்பலிகள்
ஒன்றா இரண்டா
சளித்தொல்லை முதல் ரத்தம் சிந்தியது வரை
அப்பப்பா
எல்லா உலகச் செய்திகளும் இங்கே அலசப்படும்
சமுத்திரத்தில் இருந்த நான்
சட்டென்று திரும்பினேன்.
************
- ஒரு காதலனின் டைாிக் குறிப்பு !
- ஒரு கலப்பை கண்ணீர் வடிக்கிறது….
- அவள்
- இவளோ ?
- பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க போராடும் ஆப்கானியக் கலைஞர்கள்
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – 3
- இந்த வாரம் இப்படி – ஃபெப்ரவரி 11, 2001
- காதல்
- விடிவெள்ளியோடு ஓர் விடியல்
- பின்-நவீனத்துக்கு முன்னும் பின்னும் (பகுதி 2)
- நானோர் இந்தியக் குடிமகன்!
- ச.ஹ.ரகுநாத்தின் கன்னடக் கவிதைகள்
- எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ
- Day-O (The Banana Boat Song)
- உயிர்வழிஅடையாளத்துறை (Biometrics) -((எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் பேசப்பட்ட 10 முக்கிய எதிர்காலத் தொழில் நுடபங்கள் – 5 )
- கணினியில் ஆவணங்களை வடிவமைத்தல்
- இலக்கியமும் திரைப்படமும்–பாண்டிச்சேரி கருத்தரங்கு (ஒளிப்படங்களுடன்)
- குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு – அனுபவப் பதிவுகள். -2