ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

எஸ். அர்ஷியா


சித்ரவதை என்ற சொல்லை உச்சா¢க்கும் போது, நமக்குள் உண்டாகும் தாக்கத்தை விட, பாதிக்கப்பட்டவர்கள் அதைச் சொல்லும்போது ஏற்படும் அதிர்வு, அதிக வலியை உண்டு பண்ணுவதாக இருக்கிறது. கூ¡¢ய நகங்களைக் கொண்ட கொடிய கரமொன்று, நெஞ்சைப் பிளந்து உள்ளிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஈரக்குலையை உருவி எடுப்பது போலான பிம்பத்தை அந்த அதிர்வு, காட்சிப்படுத்தி விடுகிறது. வேதனை நிறைந்த அக்காட்சியின் பா¢மாணம், ஆறாத வடுவையும் நீண்ட காலத்துக்கு மனதில் வலியைக் கொடுக்கும் குடைச்சலாகவும் இருக்கிறது.

அப்படியொரு நேரடிப் பதிவு, கடந்த மாதம் மதுரை பாத்திமா கல்லூ¡¢யில் நடந்த, ‘சித்ரவதைக்கு எதிரான பொது விசாரணை’ நிகழ்ச்சி, அம்பலப் படுத் தியது.

‘சித்ரவதை’ எனும் சொல், எப்போது புழக்கத்திற்கு வந்தது என்று அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் ஏவாளிடம், ‘அந்த ஆப்பிளைப் புசியாதே!’ என்று சொல்லித் தடுத்த, ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தான் அதிகாரப் பூர்வக் கணக்குத் தொடங்கியிருக்க வேண்டும். அதன் நீட்சியாய், அடிமைகளைக் கொண்டு சுக ஜீவனம் நடத்திய ஆண்டான்கள், அப்பாவி மக்களைத் துன்புறுத்திச் செங்கோல் பிடித்தக் கொடுங்கோல் மன்னர்கள், சர்வாதிகா¡¢கள், பொ¢ய புஷ்க்கு முன்னோர்கள் தொடங்கி, இன்றைய சின்ன புஷ் உள்ளிட்டவர்கள் சித்ரவதைக்கு உயிரூட்டியவர்களாக இருக்கிறார் கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தனி மனிதச் சித்ரவதைகளைத் தாண்டி, இந்த வேலையை பொதுச் சித்ரவதையாய் செவ்வனே செய்து வருவது, நமது காவல் துறையும் அதன் பல்வேறு பா¢மாணங்களான அதிரடிப் படையும் ராணுவமும் தான்!

சில ஆண்டுகளுக்கு முன், அமொ¢க்கப் படையும் பி¡¢ட்டனின் படையும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இராக் சித்ரவதைகளை, நாம் காட்சி ஊடகங்களில் பார்த்து எப்படியெல்லாம் நெஞ்சு பதைத்துப் போனோம். சில இரவுகளின் தூக்கமும் பலவேளை உணவும் உட்செல்ல மறுத்து நம் உயிர்த்துடிப்பை அது எவ்வாறு பன்மைப் படுத்தியது. ஆனால் அந்தக் காட்சிகளையெல்லாம் ‘சும்மா..ஜூஜூபி’ செய்துவிடும் சக இந்தியனின் சித்ரவதையும், அதை அனுபவித்த இந்தியப் பிரஜைகளையும் ஓர் இந்தியனாக நாம் காணாமலே இருந்திருக்கிறோம்.

பொதுவாகவே இதுபோன்ற சித்ரவதைகளையும் காவல் நிலையச் சாவுகளையும் சீருடைப் பணியாளர்களின் முறைகெட்ட நடவடிக்கைகளையும் அரசே முன்முயற்சியெடுத்து மறைத்துவிடும். எப்போதாவது ஒன்றிரண்டு செயல்கள், வெளியுலகத்திற்குத் தொ¢யவரும். அதை, அப்போதைய எதிர்க்கட்சி அரசியலாக்கும். நாற்சந்திகளில் ஓ¡¢ரண்டு கூட்டங்கள் நடக்கும். ‘இதென்ன புதுத் தலைவலி?’என்று, ஒரு விசாரணைக் கமிஷனை அரசு நியமிக் கும். அன்றைய நாளிதழ்களில், அது கொட்டை எழுத்தில் அச்சாகும்!

விசாரணைக் கமிஷன்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அரசுக்குக் கொஞ்சம் கூடுதல் செலவு. அவ்வளவு தான்!

கமிஷனின் அறிக்கைகள் நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா என்றால்?.. பழைய பேப்பர் கடைகளில், பல கமிஷன்களின் அறிக்கைகளை நான் பார்த்திருக்கிறேன்.

இப்படியாகப்பட்ட கமிஷன்களின் மீது அவநம்பிக்கை அல்லது அவற்றின் நம்பகத் தன்மையில் நம்பிக்கைக் கொள்ளாத பொது அமைப்புகள், பொது விசாரணை என்ற பெயா¢ல், நடந்த சம்பவங்களை சம்பந்தப்பட்டவர்களின் வாயாலேயே பொதுமக்கள் முன்னிலையில் விசா¡¢ப்பதை நடைமுறைப் படுத் தின. கடந்த 1990களில், ராஜஸ்தான் மாநிலக் கிராமப் புறங்களில் நில வரையறை மற்றும் கூலி வரையறைக்கானப் போராட்டத்தின் நீட்சியாய் இந்தப் பொது விசாரணை முறையை அறிமுகம் செய்தன.

இந்த விசாரணை, மறைக்கப்பட்டுவிடும் பல்வேறு விஷயங்களை மக்கள் மன்றத்துக் கொண்டுவந்து விடும் ஆயுதமாக, கடந்த இருபது ஆண்டுகளாக இருந்து வருகிறது. குடிமைச் சமூகம் ஒடுக்கப்படும் போது, மீறல்கள் அன்றாடமாகும் போது, அதை அரசுக்குத் தொ¢யப்படுத்தவும் அரசின் கடப்பாட்
டை உறுதிப்படுத்தவும் உதவிகரமாக இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் பரப்பாக இந்தப் பொது விசாரணை முறைகளை நம்புகின்றனர். நீதிமன்றங்களிலும், விசாரணைக் கமிஷன்களிலும் முடக்கப்பட்டுவிடும் அல்லது மறைக்கப்பட்டுவிடும் உண்மைநிலையை, அரசுக்கும் அதிகார வட்டத்துக்கும் நேரடிக் கேள்வி எழுப்பும் வெளியாக இதைப் பார்க்கின்றனர்.

இந்தக் கேள்விகள் ஜனநாயகத்தை வேகமாக இயங்கச் செய்யும் முடுக்கியாக இருக்கிறது.

ஆசிய மனித உ¡¢மைகள் மையம், ‘இந்தியாவில் சித்ரவதை – 2008′ என்ற தலைப்பில், சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 2002 முதல் 2007 – ம் ஆண்டு வரையில் 7,468 பேர் சிறைக் காவலில் அல்லது போலிஸ் காவலில் மரணம் அடைந்துள்ளனர் என்றும் நாளொன்றுக்கு நான்கு பேர் வீதம் ஆண்டுக்கு 1,494 பேர் இறந்துள்ளனர் எனவும் புள்ளிவிவரம் கொடுத்துள்ளது (தினமலர் – மதுரைப் பதிப்பு 02-07-2008).

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்த சித்ரவதைச் சம்பவங்களின் எண்ணிக்கை 950. போலி மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13. காவல் நிலையங்களில் இறந்து போனவர்கள் 27 பேர். பதிவு செய்யப்படாதவை, எந்தக் கணக்கிலும் இல்லை!

நாளுக்கு நாள் அதிகா¢த்து வரும் சித்ரவதைகளின் எண்ணிக்கை, தேசத்தின் இறையாண்மைக்கும் அதன் மீதான நம்பிக்கைக்கும் சவால் விடுவதாக இருப்பதுடன் உயிர் வாழ்தலுக்கான உத்திரவாதத்தின் மீதும் தார்மீகமான பயத்தை உருவாக்கியிருக்கிறது. அந்த பயத்தை, சித்ரவதைக்கு உள்ளான வர்களோ அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களோ சொல்லும் போது, பயத்தின் மடங்கு பன்முகப் படுகிறதே தவிர குறைவதாகக் காணோம்.

சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள், வீரப்பனைப் பிடிப் பதற்காக அமைக்கப்பட்ட சிறப்புப்படையினரால் பாதிக்கப்பட்ட வழக்குகள் உட்பட எண்ணற்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

மனித உ¡¢மைகளின் மீது நம்பிக்கையும் அதை மீட்டெடுக்க முடியும் என்ற வேகமும் கொண்ட பல்வேறு துறையினா¢ன் முன்னிலையில் அவை விசா¡¢க்கப் பட்டன. அப்போது பாதிப்புக்குள்ளானோர் தங்கள் தரப்பை எடுத்து வைத்த போது,’இப்படியெல்லாம் நடக்க முடியுமா?’ எனும் கேள்விதான் முன்னெழுந்து நின்றது.

ஆனால் பாதிப்பின் சாட்சியங்கள், கேள்வியின் கழுத்தைத் திருகிவிட்டன. மேலும், ‘நாம் ஜனநாயக நாட்டில் தான் இருக்கின்றோமா.. இல்லை காட்டு மிராண்டிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிறோமா?’ எனும் ஐயப்பாட்டை நமக்குள் விதைத்துவிட்டதும் நிஜம்!

இந்தியத் திரு(?)நாட்டில், சித்ரவதைகளைத் தடுப்பதற்கு தனியாகச் சட்டங்கள் எதுவுமில்லை. அதே வேளையில் சித்ரவதைக்கு எதிரான ஐ.நா.வின் பிரகடனத்தில், அகில உலகம் சாட்சியாக இந்தியாவும் கையெழுத்திட்டிக்கிறது என்பது வேடிக்கையானது. வேடிக்கையாகக் கையெழுத்திட்டுள்ள இந்தியா தான், சித்ரவதைகளைக் கண்டும் காணாத அரசாகவும் இருந்து வருகிறது.

பொது விசாரணையில் கலந்து கொண்டவர்கள் சொன்ன தகவல்கள் தான் எத்தனையெத்தனை? கற்பனைக்கும் எட்டாத தகவல்கள்தான் எத்தனை யெத்தனை? வாணியம்பாடியைச் சேர்ந்த ஊனமுற்ற பெண், கள்ளச்சாராயச் சித்ரவதைக்கு உள்ளானவர். போலிஸ், ஜோடிப்பு வழக்கு (Put up case) தன் மீது எப்படிப் போட்டது என்பதை அழுதுகொண்டே சொன்ன போது, போலிஸ் மன ஊனம் கொண்ட ஒரு அரசுத்துறை என்பதை உலகத்துக்கு அறிவுறுத்தியது.

போலி மோதலில் கொல்லப்பட்டவர்களில் வெள்ளை ரவியின் மனைவி கமலா, குணாவின் மனைவி தமிழரசி ஆகியோர் சொன்னது, சித்ரவதையைத் தாண்டி அவர்கள் போலிஸால் உருவகப்படுத்தப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதேவேளையில் அதிரடிப்படையினர் செய்த அட்டூழியங்களை, பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துச் சொன்ன போது, அவர்களின் இந்தச் செயல்கள் தான் ‘சிறப்புப் படை’ எனப் பெயர் வரக் காரணமாக இருந்ததோ என்றும் யோசிக்க வைத்தது.

பொதுவாகவே, பொது விசாரணை எனும் பெயா¢ல், மாவட்ட வருவாய்த் துறை அதிகா¡¢ ஒரு அறிவிப்பு வெளியிடுவார். பெரும்பாலும் அதிக விற்பனை யாகாத.. அல்லது அரசுக்கு வேண்டப்பட்ட நாளிதழின் ஒரு மூலையில் யாருக்கும் படித்துவிடக் கூடாது என்ற முன்னேற்பாட்டுடன் பத்து அல்லது பனிரெண்டு வா¢களில் அந்தச் செய்தி வரும்.

அதில், தகவல் தொ¢ந்தவர்கள் நோ¢ல் வந்து சொல்லலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மொன்னையான இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, யாராவது வந்து தகவலை ¨தா¢யமாகச் சொல்வார்களா? வந்து சொல்லலாம் என்று நினைப்பவருக்கு அரசு எந்தவொரு பாதுகாப்பும் அளிக்காது. அன்றைய தினத்தின் கூலியை விட்டு விட்டு வருபவருக்கு, வழிச் செலவுக்கான காசையும் உருப்படியாகக் கொடுக்காது. அதை அரசு “ஆப்பீஸர்ஸ்”களிடமிருந்து வாங்க, எழுபத்திரெண்டு பேப்பா¢ல் கைநாட்டு உருட்டி, எழுதியதில் பாதிக்காசைத் தான் வாங்க முடியும். இப்படித்தான் இருக்கிறது அரசு தரப்பில் நடத்தப்படும் பொது விசாரணை!

ஆனால் இந்த பொது விசாரணை, மதுரையிலும் மதுரையைச் சுற்றிய மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. விசாரணை அதிகா¡¢களாக அல்லது நடுவர் களாக முன்னாள் நீதிபதிகள், முன்னாள் துணை வேந்தர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகா¡¢கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், பெண்ணு¡¢மை அமைப்பினர் இருந்தனர்.

விசாரணைக்குப் பின், நீதிபதிகள் இந்திய அரசுக்குச் செய்த பா¢ந்துரைகளில் சில: சித்ரவதைத் தொடர்பான, குடிமை அரசியல் உ¡¢மைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகளை நடைமுறைப் படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கைகளைச் சட்ட அமலாக்கம் செய்ய வேண்டும். உள்நாட்டுச் சட்டங்களின் மூலம் சித்ரவதையை குற்ற நடவடிக்கை என உறுதி செய்ய வேண்டும். சர்வதேசச் சட்டங்களுக்கு ஏற்ப உள்நாட்டுச் சட்டங்களும் இருக்க வேண்டும். சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு, உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வுபெற அரசும் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.

இவையெல்லாம் நம்நாட்டுக்குப் புதிய பா¢ந்துரைகளா என்றால்.. அதுதான் இல்லை! இதே பா¢ந்துரைகள், எத்தனையோ முறை செய்யப்பட்டுள்ளன. அதன் பலன்? கேள்விக் குறிதான்!

மனித உ¡¢மை மீறல்கள், இப்போதெல்லாம் பரவலாகப் பேசப்படுகின்ற வார்த்தை ஆகிவிட்டது. அந்த வார்த்தைகளை, அடிக்கடி அச்சு ஊடகங்களிலும் திரை ஊடகங்களிலும் பார்க்க முடிகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, மாநில மனித உ¡¢மை ஆணையங்கள் தானே முன்வந்து, வழக்காகப் பதிவு செய்து கொண்டு, அதன் மீது விசாரணை நடத்தலாம் என்று விதியிருந்தும், மனித உ¡¢மை ஆணையங்கள் மிக அ¡¢தாகவே செயல்படுகின் றன. அவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கு உட்பட்டு, எதிர் வினையாற்ற என்ன தயக்கம் என்பது வெளிப்படையாகத் தொ¢யவில்லை!

சக மனிதனிடம், சக வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த முரண்களைக் களையும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, மனதுக்குள் பொ¢ய பாதிப்பை உண்டாக்கிவிட்டது என்னவோ நிஜம் தான்!

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பைச் சொல்லி, அரசின் கவனத்தை ஈர்க்க முடியும் எனும் நம்பிக்கையை ஊட்டியது, இந்தப் பொது விசாரணை!

வீடு திரும்பி வண்டியை நிறுத்திவிட்டு, கதவைப் பூட்ட எத்தனித்த போது, ஷெட்டினுள் ஒரு பூனை. அதன் பக்கத்தில் ஒரு சுண்டெலி. குற்றுயிரும் குலையுயிருமாய்!

என்னைப் பொருட்படுத்தாத பூனை, தனது கூ¡¢ய நகம் கொண்ட காலால், சுண்டெலியைச் சீண்டிக் கொண்டிருந்தது.


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா