ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

சித்ரா சிவகுமார்



‘உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி” இது தான் ஜப்பானிய மொழியில் முதன் முதலாக யாரையேனும் சந்திக்கும் போது கூறப்படும் வாசகம். அடிக்கடி எல்லோராலும் பயன்படுத்தப்படும் வாக்கியம்.

நானும் இந்தப் தொடரின்; மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த தொடரின் மூலமாக உங்களை ஜப்பானிற்கு அழைத்துச் செல்லப் போகிறேன்.

ஜப்பான். நிஹோன். நிப்பான்.

இப்படியெல்லாம் அழைக்கப்படும் ‘சூரியன் உதிக்கும் நாடு” எங்கே இருக்கிறது தெரியுமா? அது கிழக்கு ஆசியாவில் பசிபிக் பெருங்கடலில் உள்ளது.

நிஹோன் என்றால் ‘சூரியனின் ஒளி” என்று பொருள். ஜப்பானியர்கள் பெண் சூரியக் கடவுளான அமெதெராசு வழியில் அவர்களின் பேரரசர் வந்தார் என்று நம்புகின்றனர். அதனாலேயே இந்நாடு நிஹோன் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜப்பான் பல தீவுகளால் ஆனது. வடக்கிலிருந்து தெற்கு 3000 கிலோ மீட்டர்கள் (1865 மைல்கள்) கொண்டது. அதன் அகலம் 402 கிலோ மீட்டர்கள் (250 மைல்கள்) மட்டுமே. ஜப்பானில் மக்கள் வாழும் பகுதிகளில் நீங்கள் எங்கு நின்றாலும் கடலிலிருந்து 100 மைல்கள் மேல் இருக்கவே இருக்காது.

நான்காயிரம் தீவுகள் வரை உள்ள ஜப்பானில் குறிப்பிடத்தக்க வகையில் நான்கு பெரிய தீவுகள் உண்டு. அவை ஹான்ஷ_இ ஹொக்கைடோஇ ஷிகோகூஇ கூயூஷ_. அதன் அண்டை நாடுகள் சீனாஇ கொரியா மற்றும் ரஷ்யா. மேலும் கிழக்கில் பசிபிக் பெருங்கடலைக் கடந்து அமெரிக்காவும் கனடாவும் உள்ளன.

ஜப்பான் கடற்கரைகளும் மலைகளும் கொண்ட நாடு. மூன்றில் ஒரு பங்கு மலைகளே. மலைகள் அனைத்தும் அடர்ந்த காடுகளையும் நதிகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டவை. பெரும்பாலான ஜப்பானியர்கள் கரைகளில் இருக்கும் நகரங்களில் தான் வசிக்கின்றனர்.

ஹான்ஷ_ தீவில் தான் பெரிய அளவிலான நிலப்பகுதியான கான்டோ பகுதி உள்ளது. ஜப்பானின் தலைநகரம் டோக்கியோ. இரண்டாவது பெரிய நகரம் யோக்கஹாமா. மற்ற முக்கிய பெருநகரங்கள் ஓசகாஇ கியோதோஇ நகோயாஇ நராஇ கோபே. இவை அனைத்துமே கான்டோ நிலப்பகுதியில் தான் உள்ளன.

பல இலட்சம் வருடங்களுக்கு முன்பு கடலில் ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாகஇ கடல் பகுதி மேலே எழுந்து இந்த நிலப்பரப்பை ஏற்படுத்தியது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இன்றும் கூட அத்தகைய அதிர்வுகளால் ஜப்பான் எப்போதுமே பாதிக்கப்பட்டே வருகின்றது. நில நடுக்கம், எரிமலை வெடிப்புகள் அங்கு மிகவும் சர்வ சாதாரணமாக ஏற்படக் கூடிய விஷயங்கள்.

மக்கள் எங்கே வாழ்ந்தாலும் அடிக்கடி நிலப்பகுதியில் நடுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு வருடத்தில் ஆயிரம் நில நடுக்கங்கள் வரை ஏற்படுகின்றன. பலவும் மிகவும் குறைந்த மிதமான நடுக்கங்கள் என்பதால்இ அவை எளிதில் உணர முடியாதவை.

ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ அருகே மிகப் பெரிய மலை ஒன்று உண்டு. அதை ‡ப+ஜி என்று அழைப்பர். அது வெறும் பாறைகளும்இ காடுகளும் கொண்ட மலை அல்ல. அது மிகப் பெரிய எரிமலை. அது 12400 அடிகள் (3779 மீட்டர்கள்) உயரமானது. இம்மலை 1707 முறை எரிமலையாக வெடித்து இருக்கிறதாம். அதற்குப் பிறகு கடந்த 300 ஆண்டுகளாக அது மிகவும் அமைதியாக இருக்கிறது.

இது போன்று பற்பல எரிமலைகள் அங்கு உள்ளன. எரிமலைகள் மலைக்கு நடுவே இருக்கும் நீரைச் சுட வைத்துஇ நீருற்றாய் மாறுவது சிறப்பான விஷயம். நீருற்றுக்கள் குளங்களாக மாறும் போதுஇ அதை ‘ஒன்சன” என்று அழைப்பர். மக்கள் அதில் குளித்து மகிழ்வர். மும்முறை குளித்தால் உடலில் இருக்கும் நோயை விரட்டி அடிக்கலாம் என்ற நம்பிக்கையும் உண்டு.

அங்கு ஆறுகளுக்கும் பஞ்சமே கிடையாது. ஷநாநோ என்ற ஆறு தான் மிகப் பெரிய ஆறு. அது 367 கிலோமீட்டர்கள் (228 மைல்கள்) நீளம் கொண்டது.

இத்தகைய நிலத்தில் வாழும் மக்கள் தங்களுக்கு என்றே பற்பல லாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களது கலாச்சாரம்இ பண்பாடு மற்ற நாடுகளைப் போன்றே தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். அவற்றை ஒவ்வொன்றாக இந்த நூலில் ஒரு சிறிய அறிமுகம் தர உள்ளேன்.


Series Navigation

சித்ரா சிவகுமார்

சித்ரா சிவகுமார்