மலர் மன்னன்
(நவம்பர் 13, 2006 அன்று குடந்தையில் குருஜி கோல்வால்கர் நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு ஊடகங்களும் ஹிந்துத்துவமும் என்பதற்கான கருத்துப் பரிமாற்றமாக அமைந்தது. அதனை நெறிப்படுத்தும் முகமாக வாசிக்கப்பட்ட கட்டுரை)
மீடியா என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ஊடகம் என்னும் அழகான பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆகையால் நானும் அந்தச் சொல்லையே பயன்படுத்துகின்றேன். கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகம் ஒரு பிரமாண்டமான மக்கள் தகவல் தொடர்புச் சாதனமாகப் பன்முகத் தன்மையுடன் விசுவரூபம் எடுத்துவிட்டிருக்கிறது. எனது இளமைப் பருவத்தில் மீடியா என்கிற சொல்லேகூடப் பயன்பாட்டிற்கு வந்திருக்கவில்லை. அன்று எங்களுக்குக் காகித வடிவிலான தின, கிழமை, மாத இதழ்களும் ரேடியோவும்தாம் வெளியுலகச் செய்திகளையும் தகவல்களையும் தெரிந்துகொள்வதற்கு உதவும் சாதனங்கள்.
ரேடியோ அரசின் வசம் மட்டுமே இருந்த தகவல் சாதனம். எனவே அரசு மக்களுக்குத் தெரிவிக்கத் தக்கனவாகக் கருதும் தகவல்களை மட்டுமே அது ஒலிபரப்பும். காகித வடிவிலான இதழ்கள் தமக்கென வகுத்துக் கொண்ட அரசியல் சமுதாயக் கோட்பாடு
களுக்கு ஏற்பத் தகவல்களை வெளியிடும்.
பொதுவாக அப்போதெல்லாம் தினமும் வெளிவரும் செய்திப் பத்திரிகைகள் தமக்குத் தாமே ஒரு கட்டுப்பாட்டை வகுத்துக்கொண்டு செய்திகளைச் செய்திகளாக மட்டுமே வெளியிட்டு வந்தன. ஒரு பத்திரிகையின் விமர்சனங்களையும் அதன் சமூகஅரசியல் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் கருத்துகளையும் அதன் தலையங்கத்தில் மட்டுமே காணமுடியும். இன்று செய்திகளை வெளியிடும்போதே பத்திரிகையின் கோட்பாட்டையும் புலப்படுத்தும் போக்கும் சில சமயங்களில் செய்தியைத் திரித்தேகூட வெளியிடும் வழக்கமும் காணப்படுகின்றன. பத்திரிகையின் விற்பனையைப் பெருக்குவதற்காக வேண்டுமென்றே ஒரு செய்தியைப் பரபரப்பாகவும் உணர்வுகளைத் தூண்டுகிற விதமாகவும் வெளியிடும் வழக்கம் சில பத்திரிகைகளிடையே காணப்படுகின்றது. ஒரு பத்திரிகையின் விருப்பு வெறுப்புகள் அதன் செய்தி வெளியிடும் தன்மையிலேயே தெரிந்துவிடுகிறது. இவையெல்லாம் பத்திரிகைத் துறையின் ஒழுக்க விதிகளுக்கு முரணானவையென்றே முன்பெலாம் கருதப்பட்டன. இன்று அத்தகைய பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை.
சிறு வியாபாரிக்குக் கூட ஒழுக்கவிதிகளை வகுத்துக்கொடுத்த விவேகம் மிகுந்த சமுதாயம்தான் நமது ஹிந்து சமுதாயம். சிறு வியாபாரிகளுக்கு என்ன, கிணற்றடியிலும், ஆற்றங்கரைகளிலும், நீர்நிலைகளுக்கு அருகாமையிலும் எதைச் செய்யலாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பன போன்று பொதுமக்களுக்குக்கூட ஒழுக்கவிதிகளை வகுத்து வலியுறுத்திய சமுதாயம் நம்முடையது.
மருத்துவர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் ஒழுக்கவிதிகள் வகுத்துத் தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு முரண்படாமல் தொழில் செய்வதாக உறுதிமொழியெடுத்தபின்தான் அவர்கள் தமது தொழிலைத் தொடங்கமுடியும். பத்திரிகையாளர்களுக்கும் இவ்வாறே ஒழுக்கவிதிகள் உண்டு. ஆனால் அவை மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஒரு பத்திரிகையாளன் தனது தொழிலை மேற்கொள்வதற்கு முன் ஒழுக்கவிதிகளை அனுசரிப்பதாக உறுதிமொழி ஏதும் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லாதபோதிலும், ஒரு செய்தியை அளிக்கையில் தனது சொந்த அல்லது தான் சார்ந்துள்ள பத்திரிகையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப அந்தச் செய்தியை அளிப்பது கூடாது என்கிற கட்டுப்பாடு இருந்தது. இன்று அதுபோன்ற கட்டுப்பாடு ஏதும் இருப்பதாகத் தெரிவதில்லை. நமது நாட்டில் இன்றைக்கு இருந்துவரும் ஊடகத்தின் பொதுவான போக்கை வைத்தே இக்கருத்தைப் பதிவு செய்கிறேன்.
இந்தப் பின்னணியோடுதான் மீடியா என்கிற ஊடகத்தின் செயல்பாடு பற்றிய நமது கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
மற்ற நாடுகளின் ஊடகங்களைப் பொருத்தவரை தத்தம் நாடுகளின் நலனுக்கு ஊறு நேராத வகையில் தகவல்களை வெளியிட வேண்டும் என்கிற கட்டுப்பாடு அடிநாதமாக இருந்துவருவதைக் காண்கிறேன். அமெரிக்க ஊடகங்களும் மேற்கத்திய ஜனநாயகங்களின் ஊடகங்களும் மட்டுமே பத்திரிகைச் சுதந்திரம் என்கிற அடிப்படையில் பல தருணங்களில் தத்தம் நாடுகளின் நலனுக்குப் பாதகமாகவும், உலக அரங்கில் தமது நாட்டிற்கு அவப் பெயர் ஏற்படுமாறும் தகவல்களை வெளியிட்டுவிடுகின்றன என்றாலும், நிலைமைகளின் தீவிரத்தையொட்டி, அவையும் தமது நாட்டின் நலனைப் பிரதானமாகக் கொண்டே தகவல்களை வெளியிடுகின்றன. நலன் என்கிற தமிழ்ச் சொல்லை இன்டரஸ்ட் என்கிற ஆங்கிலச் சொல்லுக்கான பிரயோகமாகவே இங்கு நான் கையாள்கிறேன். வெல்பேர் என்கிற பொருளில் அல்ல.
இனி, நம் நாட்டின் சூழலுக்கு வருவோம். இன்று நம் நாட்டில் நிலவிவரும் நிலைமை என்ன? இன்று நம்முடைய கவனத்தைப் பெரிதும் ஈர்த்துவைத்துள்ள தலையாய பிரச்சினை எது? இன்றைக்கு மக்கள் நலனுக்காகவும் தேவைகளுக்காகவும் போதிய அளவு நிதியை ஒதுக்க இயலாதவாறு திரட்டப்படுகின்ற வருவாயின் பெரும் பகுதியை தேசத்தின் பாதுகாப்பிற்கே செலவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது எதனால்?
எனது இளமைப் பருவத்தில் பதுகாப்புச் செலவு என்றால் நமது எல்லைப் புறங்களைப் பகைவர் ஆக்கிரமிப்பு நிகழாதவாறு காபந்து செய்வதைக் கடமையாகக் கொண்டுள்ள ராணுவத்தைப் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீடு என்றுதான் அர்த்தம். இன்றோ நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரம் மட்டுமல்ல, அதன் ஒவ்வொரு பிரதான பகுதியும், குறிப்பாக நமது நாட்டின் மிகப் பெரும்பான்மையினரான மக்களாக உள்ள ஹிந்துக்களின் முக்கியமான ஆலயங்களும் இருபத்து நான்கு மணிநேரமும் ஏராளமான மனித சக்தியாலும், நவீன சாதனங்களாலும் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு என்பார்களே அதுபோல மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதே இதற்காக நமது பாதுகாப்பு நடைமுறை பன்மடங்கு அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்ன? இதன் விளைவாக நம்முடைய பாதுகாப்பிற்கான செலவும் பன்மடங்கு கூடியுள்ளதே, இதற்கு யார் பொறுப்பு?
இந்தத் தகவலை நம் நாட்டு மக்களுக்கு உள்ளது உள்ளபடியே தெரிவிக்கவேண்டியது யாருடைய பொறுப்பு?
நம் நாட்டின் ஊடகங்களுக்கு இந்த உண்மையைத் தெரிவிப்பது தவிர வேறு என்ன வேலை? நம் தேசத்து ஊடகத்தின் தனியொரு பிரதிநிதியாக நானாகிலும் இந்த உண்மையைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
நமது நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்கும் மக்கள் நலனுக்கும் போதிய அளவு நிதியை ஒதுக்க இயலாதவாறு நமது நிதியாதாரங்களின் மிகப் பெரும் பகுதியை பாதுகாப்பு என்கிற பெயரில் விழுங்கிக் கொண்டிருப்பது முகமதிய பயங்கர வாதமும் கிறிஸ்தவ பயங்கர வாதமும் ஆகும்.
முகமதிய பயங்கர வாதம் என்றால் மக்களுக்கு இன்று ஓரளவுக்குப் புரியும். கிறிஸ்தவ பயங்கர வாதம் என்பதை அடையாளங் காண்பதில் சிறிது சிரமம் இருக்கும். ஆகவே அதனை ஓர் ஊடகப் பிரதிநிதியாகத் தெளிவுபடுத்திவிடுகிறேன்.
நமது வடகிழக்கு மாநிலங்களில் உல்பா போன்ற பயங்கர வாத இயக்கங்களுக்கெல்லாம் பக்க பலமாகக் கூட அல்ல, பங்காளியாகவே இருந்துகொண்டிருப்பது அங்கெல்லாம் தங்கு தடையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மிஷனரிகளேயாகும். வட கிழக்கு
மா நிலங்களை ஹிந்துஸ்தானத்திலிருந்து பிரித்து ஒரு கிறிஸ்தவத் தனி நாட்டை ஸ்தாபிக்கவேண்டும் என்கிற இலட்சியத்துடன் இலக்கு நிர்ணயித்துக்கொண்டு பயங்கர வாதச் செயல்களுக்குப் பின்னால் முழு மூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவை கிறிஸ்தவ மிஷனரிகள் என்கிற உண்மையினை இங்கு பகிரங்கப் படுத்துகிறேன். சில தினங்களுக்கு முன் அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் கோஹாத்தியில் நிகழ்ந்த இரு குண்டு வெடிப்புகளில் ஒன்று ஹிந்து சமய வழிபாடு நடைபெற்ற இடத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும்.
முதலில் இந்த உண்மையினை யதேற்சையாகத் தெரிவித்த ஊடகங்கள் அதன்பின் ஒரு குண்டு வெடிப்பு ஹிந்து சமய வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தில் நிகழ்ந்தது என்பதை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி உண்மையை ஒளிக்க வேண்டிய அவசியம் என்ன? யாரிடமிருந்து அதற்குத் தடையுத்தரவு வந்தது? அப்படியே வந்திருந்தாலும் அதற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் என்ன பத்திரிகைச் சுதந்திரம் நிலவுகிற ஒரு ஜனநாயக நாட்டில்?
நாங்கள் குனியத்தான் சொன்னோம்; அவர்களோ தரையில் தவழ்ந்தார்கள் என்று நெருக்கடி நிலைக்குப் பிறகான நிலவரத்தின்போது இந்திரா காங்கிரசார் விளக்கம் தந்து எள்ளி நகையாடிய பெருமைக்குரியன அல்லவா நமது ஊடகங்கள்?
இன்று வட கிழக்கு மா நிலங்களில் கிறிஸ்தவ மிஷனரிகளின் அஜன்டாவுக்கு இடைஞ்சலாக இருப்பது நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அல்ல, அந்தப் பகுதிகளில் மும்முர மாக நடைபெற்றுவரும் முகமதியமாக்கல்தான். பங்களா தேஷ் முகமதியர் அனுதினமும் ஆயிரக்கணக்கில் அங்கெல்லாம் புகுந்து பரவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தடுப்பதற்கான பாரத அரசு இயந்திரம் அங்கெல்லாம் செயலற்றுக் கிடக்கிறது. வெகு விரைவில் நமது வட கிழக்கு மாநிலங்கள் கிறிஸ்தவ அமைப்புகளும் முகமதிய அமைப்புகளும் இந்தக் கொள்ளை யாருக்குச் சொந்தம், உனக்கா, எனக்கா என்று போட்டா போட்டியில் இறங்கும் களமாக மாறப் போகின்றன.
வட கிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல, இன்றைக்கு நம் நாடு முழுவதும் பரவலாக நிகழ்ந்துவரும் நக்ஸலைட் பயங்கர வாதத்திற்கும் தூண்டுகோலாக இருப்பது கிறிஸ்தவ அமைப்புகளேயாகும். மார்க்சியத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் நிகழ்ந்துள்ள ரகசியத் திருமணம் என இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். எமது ஏசுபிரான் ஏழைப் பங்காளன்; எனவே நாங்கள் உங்கள் பக்கம் என்று சொல்லி கிறிஸ்தவ அமைப்புகள் நக்ஸலைட் இயக்கங்களை இன்று ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன. தமிழகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், பிஹார் என ஒரு ஆக்டோபஸ் போல கிறிஸ்தவ பயங்கர வாதம் நக்ஸலைட் என்ற போர்வையைப் போர்த்திக்கொண்டு விரைந்து பரவிக்கொண்டிருக்கிறது.
இந்த உண்மை நிலவரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய நமது ஊடகங்கள், தமது கடமையிலிருந்து நழுவிச் செல்லக் காரணம் என்ன? அவற்றுக்கு இதில் ஏற்பட்டிருக்கிற மனத் தடைக்கும் தயக்கத்திற்கும் காரணம் எதுவாக இருக்க முடியும்?
இன்று நமது ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்காலும் வாக்கு வங்கி சபலங்களாலும் ஹிந்துஸ்தானத்தின் சகல பகுதிகளிலும் பாகிஸ்தானிலிருந்தும் பங்களா தேஷிலிருந்தும் ஆட்கள் சொஸ்தமாகக் காலூன்றிக்கொண்டு, உள்ளூர் முகமதியரைப் பல வழிகளிலும் வசப்படுத்திக்கொண்டு வெற்றிகரமாகத் தமது நாசவேலைகளை அரங்கேற்றிக் கொண்டிருப்பது நமது ஊடகங்களுக்குத் தெரியாதா? தெரிந்தும் இது குறித்து அவை மவுனம் சாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்ன? அச்சமா? நியாயமாக நமது ஊடகங்கள் இதுபற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதோடு, அதற்கு எதிராக மக்களின் எழுச்சியைத் தோற்றுவிப்பதைத் தமது தலையாய கடமையாகக்கொண்டிருக்க வேண்டாமா? நமது ஊடகங்கள் வாளாவிருப்பதோடு முகமதிய பயங்கர வாதத்தை முகமதிய பயங்கர வாதம் என்றும், கிறிஸ்தவ பயங்கர வாதத்தைக் கிறிஸ்தவ பயங்கரவாதம் என்றும் அடையாளங் காட்டாமல் தயங்கி நிற்பது ஏன்? சில கற்றுக்குட்டி நிருபர்கள் பிரச்சினையின் அடிப்படையே தெரியாமல் பயங்கர வாதம் என்றுபொதுவாகத்தான் அடையாளப்படுத்த வேண்டும்; எந்த மதத்தையும் சுட்டிக்காட்டலாகாது என்றுகூட அப்பாவித்தனமாகக் கூறுவது எதனால்?
இங்கேதான் வருகிறது ஹிந்துத்துவம் என்கிற பிரக்ஞையின் தேவை.
நமது ஊடகங்களுக்கு ஹிந்துத்துவம் என்பது பற்றிய புரிதல் இல்லை என்பது மட்டுமல்ல, நமது போதாத காலம், அது பற்றிய தவறான தீர்மானமும் உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம்?
நமது கடந்த கால வரலாறு மட்டுமின்றி, சமீப கால வரலாறும் நமக்குச் சரிவரப் புகட்டப்பட வில்லை. நமது நாட்டின் அடிப்படைக் கலாசாரம், ஆன்மிக விழிப்பு, அரசியல், சமுதாயக் கோட்பாடுகள் யாவும் நமது கல்வித் திட்டத்தில் இடம் பெறவில்லை. வேண்டுமென்றே தவறான, திசை திருப்பும் தகவல்கள்கூட நமது சந்ததியாருக்கு நாம் புகட்டி வருகிறோம். பன்முகப் பட்ட நமது சமுதாயத்தில் மன மாச்சரியங்களுக்கு இடங்கொடுத்துவிடலாகாது என்கிற பெருந்தன்மையின் காரணமாக!
காலனி ஆதிக்கக் கல்வித்திட்டத்தின் தொடர்ச்சிதான் இன்று நமது சந்ததியாருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அத்திட்டத்தின் பிரகாரம் கற்றுத் தேர்ந்து வெளியே வரும் யுவர்களால்தான் நமது ஊடகங்களின் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இவர்களுக்கு நம் தேசத்திற்கான சாதகம் எது பாதகம் எது என்றுகூடத் தெரிவதில்லை. இங்குள்ள பாகிஸ்தான் தூதுவரை இஷ்டத்திற்குப் பேசவைத்து, ஹிந்துஸ்தானத்து மண்ணிலிருந்தே ஹிந்துஸ்தானத்திற்கு விரோதமாகக் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கிறார்கள்.
நமது அரசியல் சாசனமே உத்தரவாதமளித்துள்ள அனைவருக்கும் பொதுவான குடிமைச் சட்டத்தை ஏற்க ஏன் மறுக்கிறீர்கள் என்று ஒரு மவுலானாவிடம் கேட்டு, அதற்கு அவர் நாங்கள் எங்களுடைய மதம் விதித்துள்ள ஷரியத் சட்டப்படித்தான் நடந்துகொள்வோம் என்று பெருமையாகப் பேசிக்கொள்ள இடமளிக்கிறார்கள். அப்படியானால் குற்றங்களுக்கு மாறுகால் மாறுகை வாங்கும், தலையை வாளால் சீவி எறியும், கல் எறிந்து கொல்லும் ஷரியத்தின் குற்றவியல் சட்டங்களின்படித்தான் முகமதியரான எங்களை விசாரிக்க
வேண்டும் என்று நீங்கள் வற்புறுத்துவதில்லையே அது ஏன் என்று பதிலுக்குக் கேட்கத் தோன்றுவதில்லை!
ஹிந்துத்துவம் என்றால் அது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் கொள்கை என்பதாகவும், முகமதிய அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் என்பதுபோல் அது ஹிந்து அடிப்படை வாதம் என்றும் நமது ஊடகங்களிடையே ஓர் அபிப்பிராயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஹிந்து அடிப்படைவாதம் என்பதாக ஒன்று இருக்குமேயானால் உண்மையில் அது முற்றிலும் வரவேற்கத்தக்கதே யாகும். ஏனெனில், முகமதிய அடிப்படைவாதம், கிறிஸ்தவ அடிப்படை வாதம் ஆகியவற்றுக்கும் ஹிந்து அடிப்படை வாதத்திற்கும் அடிப்படையிலேயே வேற்றுமை உண்டு.
வசுதேவ குடும்பகம் என்பது ஹிந்து அடிப்படை வாதம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது ஹிந்து அடிப்படைவாதம். எவ்வித நிபந்தனைகளும் இன்றி உலகத்தோர் அனைவரும் அவரவர் கலாசாரம், நம்பிக்கை, பழக்க வழக்கம் ஆகியவற்றுக்கு ஒரு சிறிதும் சேதாரமின்றி ஒரே சமுதாயமாக வாழ வலியுறுத்துவது ஹிந்து அடிப்படை வாதம்.
முகமதிய அடிப்படை வாதமும் சரி, கிறிஸ்தவ அடிப்படை வாதமும் சரி, இதற்கு முற்றிலும்
மாறானவை. ஒரே புத்தகம், ஒரே வழிகாட்டி, ஒப்புக்கொள்ளவில்லையேல் கதிமோட்சம் இல்லை என்பவை முகமதிய, கிறிஸ்தவ அடிப்படை வாதங்கள். இந்தச் சிறு ஆனால் முக்கிய வேறுபாட்டைப் பற்றிய புரிதல் இன்றி நமது ஊடகங்கள் அதே தொனியில் ஹிந்து அடிப்படை வாதம் என்று பேசக் காண்கிறோம். இந்த அறியாமையை யார் களைவது? நியாயப்படி நமது கல்விமுறைதானே அதற்குப் பொறுப்பு?
நான் பள்ளி மாணவனாக இருக்கையில் கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரியர் வரலாறு கற்பிக்க வருவார். பாடத்தில் சத்ரபதி சிவாஜி மஹராஜ் மலை எலி என்று குறிப்பிடப்படுவார். கிருஷ்ணமூர்த்தி அந்தப் பகுதி வருகிறபோது அல்ல, அல்ல, இது நமக்கு எதிராக நம் மக்களையே தயார் படுத்துவதற்காகச் சொல்லப்பட்டது. உண்மையில் சிவாஜி மஹராஜ் மலைப் புலி. அவர் பெயர் கேட்டால் விரோதிகளுக்குக் கிலி என்று அறிவிப்பார். அத்தகைய ஆசிரியர்கள் இன்று மிகுதியும் தேவைப்படுகிறார்கள்.
முதலாவதாக, ஹிந்துத்துவம் என்பது ஹிந்து சமயம் அல்ல என்பதை நமது ஊடகங்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஹிந்துத்துவத்தில் ஹிந்து சமயமும் உள்ளது, அதே சமயம் அது ஹிந்து சமயம் மட்டுமேயல்ல.
எனில் ஹிந்துத்துவம் என்பது என்ன? அது ஒரு தேசியத்தின் திரு நாமம் என்பதை மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
விநாயக தாமோதர ஸாவர்கர்ஜி அவர்கள், ஹிந்துத்துவம் என்பது என்ன என்பதை விளங்க வைக்கும் அருமையானதோர் ஆவணத்தை நமக்குத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆதி சங்கரரும், ராமானுஜரும் தயானந்தரும் வள்ளலார் ராமலிங்க அடிகளும் சுவாமி விவேகானந்தரும் மேலும் பல சான்றோரும் நினைவூட்டிவிட்டுச் சென்ற நமது பாரம்பரிய மரபைத்தான் ஸாவர்கர்ஜி அவர்கள் ஒரு கருதுகோளாக நிறுவிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
மன்னும் இமய மலைச் சிகரம் தொடங்கி, நித்தம் தவம் செய் குமரியன்னையின் பாதங்களை வருடும் கடல் அலைவரையிலும் உள்ள அகண்ட பாரதத்தின் மக்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளம் ஹிந்துத்துவம். இந்த நிலப்பரப்பினை யாரெல்லாம் தமது தந்தையர் நாடாகவும் புனிதத் தலமாகவும் உணர்ந்து மெய் சிலிர்த்துப் போகிறார்களோ அவர்களின் பாரம்பரியம் ஹிந்துத்துவம். இன்று ஹிந்துஸ்தானத்தில் உள்ள முகமதியரும் சரி, கிறிஸ்தவர்களும் சரி, தங்களின் தாய் தந்தையருக்கும் முந்தியிருந்த மூத்தோர் யாவரும் இந்த நிலப் பரப்பினையே தமது புனிதத் தலமாகவும் கொண்டிருந்தனர் என்பதை உணரக் கூடியவராயிருப்பின், அவ்வாறு உணர்ந்து உரிய மரியாதையினைத் தம் முன்னோருக்குத் தரும் பக்குவத்தைப் பெற்றிருப்பின் அவர்களுக்கும் மெய்யாகவே, மெய்யாகவே ஹிந்துத்துவம் உரித்தானதேயாகும். இங்கிருந்து வெளியே செல்லும் கிறிஸ்தவராயினும் சரி, முகமதியராயினும் சரி, அவர்கள் வெளியே அறியப்படுவது ஹிந்து கிறிஸ்தவர், ஹிந்து முகமதியர் என்பதே யாகும். வெளி நாட்டு சமுதாயங்களே அவர்கள் யார் என்பதை நன்கு அறிந்திருக்கையில் தாம் யார் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பது அவசியமே அல்லவா?
ஹிந்து என்கிற சொல் பிறரால் நமக்குச் சூட்டப்பட்ட பெயர் என்கிற நினைப்பும் இருக்கிறது. இதுவும் காலனியாதிக்கக் கல்விமுறையின் கோளாறேயாகும்.
உண்மையில் ஹிந்து என்கிற சொல் ஸிந்து என்கிற சமஸ்கிருதச் சொல்லின் பிராகிருத மொழித் திரிபே தவிர வேறல்ல. பிராகிருதத்தில் ஸ என்கிற சமஸ்கிருத எழுத்து அல்லது உச்சரிப்பு ஹ என்கிற எழுத்து அல்லது உச்சரிப்பாகத் திரியும். சமஸ்கிருதத்தில் ஸிந்து என்பது பொதுவாக ஆறு, நீரோட்டம் ஆகியவற்றுக்குரிய பெயரேயாகும். எனவேதான் ஸப்த ஸிந்து என்று ஏழு ஆறுகள் குறிப்பிடப்பட்டன. ஸப்த ஹப்த ஆகியது. ஸிந்து ஹிந்துவாகியது. ஹிந்தி மொழியறிந்தவர்களுக்குத் தெரியும், ஹப்த என்றால் ஏழு நாட்கள் அடங்கிய ஒரு வாரம் என்பது. சமஸ்கிருதமும் பிராகிருதமும் நமது மொழிகளே. நமக்கு அந்நியமானவை அல்ல.
மொழியியல் தெரியாத மூடர் எவரோ ஹிந்து என்கிற சொல்லுக்குத் திருடர் என்கிற ஒரு பொருளும் உண்டு என்று போக்கிரித்தனமாகப் பேசியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன், மலையாளிகள் கொலையாளிகள் என்றெல்லாம் வெறுப்பு அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் சொல்லப்படுவது போன்றதுதான் இதுவும். பெர்சிய மொழியில் ஹிந்து என்கிற சொல்லுக்கு உறுதி மிக்க என்கிற பொருள் உண்டு. வாளின் வலிமையை ஹிந்துத் தன்மையுள்ளது என்று குறிப்பிடும் வழக்கம் பெர்சிய மொழியில் இருந்தது. இதையெல்லாம் நமது பிள்ளைகளுக்கு யார் எடுத்துச் சொல்வது? இதற்கெல்லாம் ஆசிரியர்களுக்கே ஆசிரியர் தேவைப்படும் காலமாகிப் போயிற்றே!
ஹிந்துத்துவம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உயிர்த் துடிப்புடன் விளங்கிவரும் ஓர் ரம்மியமான கலாசாரத்தின் பெயர். இந்த மண்ணில் முகிழ்த் தெழுந்த நுட்பமான கலைகள், சிந்தனைத் தடங்களின் கூட்டுப் பெயர் ஹிந்துத்துவம். தமிழின் மிகத் தொன்மையான தொல்காப்பியம் அடையாளங் காட்டுவது ஹிந்துத்துவத்தைத்தான். தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் சைவ சித்தாந்தம் வட கோடியின் காஷ்மீரத்தில் எதிரொலித்தது எங்ஙனம்? அதன் ஆதார ஸ்ருதி ஹிந்துத்துவம் என்பதாக அமைந்ததுதான் சூட்சுமம்.
ஹிந்துத்துவம் என்பது ஒரு தேசியம் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டால் நமது ஊடகங்களின் குழப்பம் ஓரளவுக்குத் தீர்ந்துவிடும். மக்களுக்குத் தகவல்களை விவரமாகவும் விரிவாகவும் தெரிவிக்கும் பொறுப்பில் உள்ள ஊடகங்களுக்கு அடிப்படையான விஷயங்களில் சரியான புரிதல் இருப்பது அவசியம், அவ்வாறு
இரு ந்தால்தான் மக்களுக்கும் இதுபற்றிய தெளிவான புரிதல் இருக்கும் என்பதால்தான் குருஜி கோல்வால்கர் அவர்கள் ஊடகங்களிடையே உறவாடுவதில் அதிக கவனம் செலுத்தி கலந்துரையாடி வந்தார்கள். அவ்வப்போது அவர் அளித்து வந்த விளக்கங்களால் விஷய ஞானம் பெற்ற ஊடகப் பணியாளர்கள் பலப் பலர். குல்தீப் நய்யார், குஷ்வந்த் சிங் போன்றவர்களிடங்கூட நட்பு பாராட்டி, அயர்வின்றி நமது பாரம்பரிய உணர்வினைத் தோற்றுவிக்க முற்பட்டவர் குருஜி.
நமது பாரம்பரியத்தின் அஸ்திவாரத்தை முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிற இன்றுள்ள புதிய தலைமுறை ஊடக சகோதரர்களை குருஜியின் செயல் திட்டப்படி அணுகினால், எந்த மதத்தவரையேனும் புண்படுத்திவிடுவோமோ என்கிற மனத் தடையின்றி, முகமதிய பயங்கர வாதம், கிறிஸ்தவ பயங்கர வாதம் ஆகியவற்றை அவர்கள் மக்களுக்குச் சரியாக அடையாளங் காட்டத் தவற மாட்டார்கள்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆந்திரப் பிரதேசத்தில் கிறிஸ்தவரான சாமுவேல் ராஜசேகர ரெட்டியின் கைக்கு அதிகாரம் போய்விட்டதையொட்டி திருப்பதிக்கு வந்த ஆபத்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏழுமலையானை இருமலையானாக்கப் பார்த்தார்கள். அதாவது திருப்பதி எல்லைக்குட்பட்ட பகுதிகளைக் குறைத்து அங்கெல்லாம் சிலுவைகளை ஊன்றும் முயற்சி தொடங்கியது. திருப்பதி வெங்கடேஸ்வர பலக்லைக் கழகத்திலும் தேவஸ்தான நிர்வாக ஊழியர் மட்டத்திலும்கூடக் கிறிஸ்தவம் ஊடுருவியது. ஆந்திரத்துப் பத்திரிகைகள் வெகுண்டெழுந்து கண்டனங்களை வீசலாயின. அதன் வெப்பம் தாங்காது கிறிஸ்தவம் பின் வாங்கியது. கேரளத்து ஐயப்பன் ஆலய விவகாரமும் இவ்வாறானதுதான். ஊடகங்களின் இயற்கையான சீற்றம் கிறிஸ்தவத்தைப் பின் வாங்கச் செய்திருக்கிறது.
இவையெல்லாம் அந்தந்தப் பகுதிகளின் விவகாரங்களாக முற்றுப்பெற்றுவிடாமல்
ஹிந்துஸ்தானம் முழுவதும் எதிரொலிக்கச் செய்யும் பணியினை ஹிந்து அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். ஒதுங்கும் ஊடகங்களை இழுத்துப் போட்டுக்கொண்டு ஹிந்து அமைப்புகள் நாடு முழுவதற்கும் பொதுவான விவகாரங்களாக இவைபோன்ற விஷயங்களைப் பிரபலப்படுத்த வேண்டும்.
ஹிந்துத்துவம் பற்றிய புரிதல் நமது ஊடகங்களுக்கு இல்லை என்பதோடு அதுபற்றிய தவறான அபிப்பிராயமும் உள்ளது என்றால் ஹிந்து அமைப்புகள்தாம் மராமத்து வேலையை மேற்கொண்டாகவேண்டும். புறக்கணிப்பு இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் திரும்பத் திரும்ப ஊடகச் சகோதரர்களை அணுகி உறவாடி, இவர்கள் சொல்வதிலும் விஷயம் இருக்கிறது என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்குவதற்கான தூண்டுதலைத் தோற்றுவிக்க வேண்டும். இந்த முயற்சி எவ்வளவுக்கு எவ்வளவு இடைவிடாமலும் சோர்வின்றியும் நடைபெறுகிறதோ அவ்வளவுக் கவ்வளவு நமது ஊடகங்கள் ஹிந்துத்துவத்தின் அவசியம் உணர்ந்து செயல்படத் தொடங்கும். முகமதிய பயங்கரவாதத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரிப்பது முகமதியருக்கு எதிரானது அல்ல என்பதையும், கிறிஸ்தவ பயங்கர வாதத்தை அடையாளங் காட்டுவது கிறிஸ்தவ மக்களுக்கு விரோதமானது அல்ல என்பதையும் நமது ஊடகங்கள் புரிந்துகொண்டு நாட்டு நலனை முன்னிறுத்திப் பொறுப்புடன் செயல்படத் தொடங்கும். இவ்வாறான மாற்றம் நிகழ்ந்தால் முகமதியரும் கிறிஸ்தவரும் தம்மிடையே ஊடுருவியுள்ள புல்லுருவிகளைத் தாமே களையெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
குருஜி நம்மிடையே வாழ்ந்த காலத்தில் முகமதிய பயங்கர வாதமோ, கிறிஸ்தவ பயங்கர வாதமோ நமது மண்ணில் வலுவாகக் காலூன்றியிருக்கவில்லை. எனினும், தீர்க்க தரிசியான குருஜி பிற்காலத்தில் இதுபோன்ற சோதனைகளை ஹிந்துஸ்தானம் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கத் தவறியதில்லை. அவரது எச்சரிக்கையினை இப்போதாகிலும் தீவிரமாக எடுத்துக்கொண்டு, மக்களின் நேரடித் தொடர்புக்குப் பெரிதும் பயன்படும் ஊடகங்களுடன் சலிப்பின்றிக் கலந்துரையாடிப் பயன் காண்பது குறித்து ஹிந்து அமைப்புகள் ஆலோசிக்க முன்வருமாறு வேண்டுகிறேன். நாட்டு நலனுக்கு முன்னுரிமை தருவதில் எப்போதுமே முன்னிற்கும் ஹிந்து அமைப்புகள் இந்த விஷயத்தில் எவ்விதத் தயக்கமும் காட்டமாட்டா என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
- இருளும் மருளும் நேச குமாரும் – சில வரிகள்!
- ருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் “ஆரிய” வாதம்
- திருக்குர்ஆன்(புனிதம் சார்ந்த) கற்பிதமா…………?
- நாள் முழுதும் இலக்கியம் – நவம்பர் 25 சனிக்கிழமை
- கடித இலக்கியம் – 32
- கவிஞனின் கடப்பாடு
- கவிதைகள்
- பெரியபுராணம் – 112 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்
- கீதாஞ்சலி (99) – மௌனமான என் புல்லாங்குழல்!
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 11
- இலை போட்டாச்சு – 2 : பாசிப்பருப்புப் பாயசம்
- தமிழால் முடியும்!
- ஒன்றும் ஒன்றும் ஒன்று
- மாண்புமிகு மந்தியாரும் மதிப்பிற்குரிய பன்றியாரும்
- மடியில் நெருப்பு – 12
- சுப்புணியின் நாடக அரங்கேற்றம்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:4) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்
- ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்
- ஓர்ஹான் பாமுக் – 1: பேச்சுரிமையின் பிரதிநிதி
- கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]
- மெளனமான உணர்த்துதல்கள்
- பேசும் செய்தி – 7
- பதஞ்சலியின் சூத்திரங்கள்-(4)
- வீணைமகளே என்னோடு பாடவா!
- அன்பு ! அறிவு ! அழகு !
- நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?
- வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை
- தாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்
- இந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்
- உள்அலைகளும் புனித குரானும்
- மழைபோல……