சின்னக்கருப்பனுக்கு சில விளக்கங்கள்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

நேச குமார்


“ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். .”

ஈராக் ஈரான் மீது போர் தொடுத்ததற்குக் காரணம், அங்கு ஏற்பட்ட ஷியா எழுச்சி தமது நாட்டிலும் பரவினால் அங்கு ஆளும் ஷீன்னி வர்க்கத்தவர்களின் கையை விட்டு ஆட்சியதிகாரம் போய்விடும் என்பதே. ஈராக்கில் ஷியாக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் மைனாரிட்டி ஷ¤ன்னியான சதாமே தொடர்ந்து பதவியைத் தக்கவைத்துக் கொண்டிருந்தார் – ஷியாக்களை மிகவும் கொடுமையாக அடக்கிக்கொண்டும் இருந்தார்.
மேலும் அறிய இந்த தொடுப்புகள் சின்னக் கருப்பனுக்கு உதவக்கூடும்:
“The Iran-Iraq War was multifaceted and included religious schisms, border disputes, and political differences. Conflicts contributing to the outbreak of hostilities ranged from centuries old Sunni-versus-Shia and Arab-versus-Persian religious and ethnic disputes, to a personal animosity between Saddam Hussein and Ayatollah Khomeini. ”

தொடுப்பு – 1

“The first chapter describes the religious, geo-political, historical,
and personal factors that have contributed to this present war. Religious
friction between the Shiite and Sunni Moslems; ethnic friction between the
Persians and the Arabs; personal enmity between the Ayatollah Khomeini and
President Saddam Hussein; and disputed borders are just a few examples of
some of the contributing factors.”

தொடுப்பு – 2

***
“உள்ள நாட்டில் “வெளியார் தூண்டுதல் இல்லையென்றால்” சமாதானமாகவே பிரச்னைகள் தீர்க்கப்படும் என்ற உத்திரவாதம் இருக்கும். அதனால்தான் இந்தியாவின் காஷ்மீர் பிரச்னைக்கும், இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளுக்கும் காரணம் பாகிஸ்தானே அல்லாது, இந்திய முஸ்லிம்கள் ஆதார காரணம் இல்லை என்று எழுதினேன். ”
இல்லை, இந்திய முஸ்லிம்கள் காரணமில்லை. இஸ்லாம் என்ற மதக்கோட்பாடே காரணம். இறை மறுப்பாளர்களும், இறையை இழிவுபடுத்துபவர்களுமான கா·பிர்களும் முஸ்லிம்களும் சரிநிகர் சமானமாக இருப்பதை கடவுள் விரும்பவில்லை என்று முகமது நம்பினார். முகமதுவை நம்புபவர்கள், அவர் நம்பியதெல்லாம் சரியே, அனைத்தும் இறைவனின் செய்திகள்-கட்டளைகள்-முன்னுதாரனங்கள் என்று நம்புகின்றனர், இதுதான் பிரச்சினையே. வெளியாட்கள் மீதெல்லாம் பழிபோட வேண்டாம். தூண்டிவிடுவது சீனா அல்லது அமெரிக்கா என்று நினைத்தால் அங்குள்ள இஸ்லாமியத் தலைவர்களும் தங்களது மதம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்கள். சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் ஏற்கெனவே கா·பிர்களான சீனர்களின் ஆதிக்கத்திலிருந்து வெளியேற விரும்பி அங்கங்கு குண்டுகளை வெடித்து அப்பாவி சீனர்களைக் கொன்று வருகின்றனர். அமெரிக்கா பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை, அனைவரும் நன்கு அறிவர்.
***
“ஸ்டாலினும் லெனினும் எப்படிப்பட்ட கொடுங்கோலர்கள் என்பதும், சமத்துவம் மிக்க சமுதாயம் என்ற பெயரில் எத்தனை அட்டூழியங்கள் செய்தார்கள் என்பதும் ஆவணமாகக் காணக்கிடைக்கிறது. எந்த ஒரு படிப்பறிவுள்ள மனிதனும் இந்த கொடுங்கோலர்களை ஆதரிக்க மாட்டான். ஆனால், இந்தியாவில் இந்த கொடுங்கோலர்களை படங்கள் வைத்து பூஜிக்கும் கம்யூனிஸ்டு கட்சிகளும், தொண்டர்களும் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்களே. அதற்காக எல்லா இந்துக்களையும் கூண்டில் ஏற்றபோகிறோமா?.”
இல்லை, இதனையும் அதனையும் ஒப்பிட முடியாது. ஸ்டாலின் மற்றும் லெனின் செய்த கொடூரங்களுக்குப் பின்னே இறை நியாயங்கள் இருப்பதாக கம்யூனிஸ்டுகள் நம்புவதில்லை. சி.க அவர்கள் இந்த சிறு ஆனால் மிக முக்கியமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் செயல் என்று ஒன்றை நம்பும்போது நம்மிடமிருந்து பகுத்தறிவு, நியாயவுணர்வு, இயல்பான மனித நேயம் என்று அனைத்தும் விடுபட்டுக் கொள்கிறது. ஏனெனில், இறைவன் தவறே செய்யமாட்டான் என்பது இறைவன் பற்றிய கருத்தாக்கத்தின் ஒரு அம்சம்.
ஸ்டாலின் மற்றும் லெனின் செய்தவை மனித குலத்துக்கான அழகிய எடுத்துக் காட்டு என்று (குரானில் கடவுள் முகமது குறித்து சொல்வது போல) கம்யூனிஸ்டுகள் நம்புவதில்லை. நாளையே கம்யூனிஸத்தை மட்டும் வைத்துக் கொண்டு அதிலிருந்து ஸ்டாலினையும் லெனினையும் கழட்டிவிடலாம் கம்யூனிஸ்டுகள். ஆனால், அல்லாஹ்வை வைத்துக் கொண்டு முகமதை தவிர்க்க முடியுமா முஸ்லிம்களால். ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு நிராயுதபாணிகளான பனு குரைசா ஜாதியைச் சேர்ந்த யூதர்களை நட்ட நடு கடை வீதியில் அலியும் மற்றவர்களும் வெட்டிச் சாய்ப்பதைப் பார்த்து மகிழ்ந்த முகமதுவை குறை சொல்ல முடியுமா ?
இதுதான் ஈமானுள்ள ஒரு இஸ்லாமியருக்கும், வர்க்கப் போராட்டத்தின் மீது பற்று வைத்து அதுதான் சமூக அவலங்களுக்கு தீர்வு என்று நம்பும் ஒரு கம்யூனிஸ்டுக்கும் உள்ள வித்தியாசம். காரல் மார்க்ஸ் இல்லாமல் கூட கம்யூனிஸம் நிற்கும் ஆனால் முகமது என்ற ஒற்றை மனிதரின் வார்த்தைகள், செயல்பாடுகள், தரிசனங்கள் ஆகியவற்றின் மீதே எழுப்பப்பட்டுள்ளது இஸ்லாமியக் கோட்டை.
மேலே கண்டதில் சி.க எழுப்பிய கடைசிக் கேள்வி விசித்திரமானது. ஏனெனில், இதே தர்க்கத்தைத் தான் இஸ்லாமிஸ்டுகளும் பயன்படுத்துகின்றனர். இணையத்தில் அவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, எல்.டி.டி.ஈ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அதை இந்துத் தீவிரவாதம் என்று ஏன் சொல்வதில்லை, இஸ்லாமியர்கள் செய்தால் மட்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொல்கிறீர்களே என்பது. எல்.டி.டி.ஈ பகவத்கீதையை ஒரு கையிலும் துப்பாக்கியை மறுகையிலும் பிடித்துக் கொண்டு, இந்து சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தவென சிங்களப்பிரதேசங்களில் புனிதப்போர் நிகழ்த்தினால் அவர்களை நிச்சயமாக உலக ஊடகங்கள் இந்துத்தீவிரவாதிகள் என்றே சொல்லும்.
கம்யூனிஸ்டுகள் இந்து மதத்தால் உத்வேகம் கொண்டு, இந்து மதத்தைக் காக்கிறோம், இந்துக்கடவுள்களுக்காக குண்டு வைக்கிறோம் என்று சொன்னார்கள் என்றால் சி.க கேட்கும் இந்தக் கேள்வியில் அர்த்தமுண்டு. அப்படி ஒருவேளை நிகழ்ந்திருந்தால், இந்துக்கள் அனைவரையும் உலகம் கூண்டிலேற்றித்தானிருக்கும். உதாரணமாக தமிழகத்தில் ஒரு ஆன்மீகக் குழு இருந்தது. அங்கே எமர்ஜென்ஸி காலத்தில் ரெய்டு நடத்தி தங்கக்கட்டிகளைப் பிடித்தார்கள். அக்குழுவின் உறுப்பினர்கள் பலருக்கும் தங்கம் புதைத்து வைக்கப்பட்டிருந்ததே தெரியாது. ஆனால், ஒரு குழுவை, ஒரு சித்தாந்தத்தை, குழுத்தலைவரை முன்மாதிரியாக ஏற்கும் நிலையில், அக்குழுவின் சித்தாந்தம் இதுதான் என்று நம்பும் ஒரு சிலர், அக்குழுத்தலைவரை பின்பற்றித்தான் தாங்கள் செயல்படுகின்றோம் என்று சொல்லும் ஒரு சிலர் – அந்தக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவது இயல்பாக நடக்கும் ஒன்றே.
இன்று இஸ்லாமியர்கள், தங்களுக்குள் பல குழுக்கள் இருந்தாலும் நிறுவனப்படுத்தப்பட்ட ஒரு குழுவாகவே இயங்குகின்றனர். மையமாக ஒரு ஜமாத் (அல்லது சில ஜமாத்கள் – இன்றைய சூழலில்), ஒரு மசூதி(கள்), ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்ற ஒரு சமூகம்(கங்கள்) -( இந்தப் பன்மைவிகுதிகளெல்லாம் தமிழகத்தில் பதினைந்தாண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்கள்) – என்றிருக்கின்ற நிலையில், ஒரு குறிப்பிட்ட ஜமாத்தைச் சேர்ந்த நபர், மசூதியில் தொழும் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நபர், ஒரு பின்னப்பட்ட சமூகத்தில் பிரஜையாக இருக்கின்ற நபர் தேசத்திற்கெதிரான குற்றத்தில் ஈடுபடும்போது மற்றவர்கள் வாய்மூடி மவுனிகளாக இருப்பது , அனைவரையும் குற்றவாளிக் கூண்டிலேற்றுவதை இன்றியமையாதவொன்றாக ஆக்கிவிடுகின்றது.

***
“இந்தியாவில் ஏபிவிபி என்ற ஆர்.எஸ்.எஸ் மாணவர் சங்கம், எஸ்.எ·ப்.ஐ என்ற கம்யூனிஸ்ட் மாணவர் சங்கம் போன்ற சங்கங்கள் இருக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் தங்களுக்கு என ஒரு சங்கத்தை அமைத்துக்கொள்ள விழைந்ததில் என்ன தவறு இருக்க முடியும்?”
பிரச்சினை மீண்டும் இஸ்லாத்தில் தான் இருக்கிறது. ஏ.பி.வி.பி தனது நோக்கம் இந்தியாவை அழிப்பது என்றறிவிக்கவில்லை. எஸ்.எ·ப்.ஐ தனது நோக்கம் கு·ப்ர் நிலவும் இருண்ட தேசமான இந்தியாவை அழிப்பது என்றறிவிக்கவில்லை. ஆனால் சிமியின் நோக்கம் இது:
“The Students Islamic Movement of India (SIMI), proscribed under the Prevention of Terrorism Act, 2002 (POTA), is an Islamist fundamentalist organization, which advocates the ‘liberation of India’ by converting it to an Islamic land. The SIMI, an organisation of young extremist students has declared Jehad against India, the aim of which is to establish Dar-ul-Islam (land of Islam) by either forcefully converting everyone to Islam or by violence…….
SIMI also attempts to utilize the youth in the propagation of Islam and also to mobilize support for Jehad and establish a Shariat-based Islamic rule through “Islami Inqulab”. As the organization does not believe in a nation-state, it does not believe in the Indian Constitution or the secular order. SIMI also regards idol worship as a sin and considers it to be a holy duty to terminate idol worship.”
சிமி பற்றிய விபரங்கள் அடங்கிய இந்தக் கட்டுரையை வாசகர்கள் படிக்க வேண்டுகிறேன்:

இக்கட்டுரையும் சிமி பற்றிய பல தகவல்களைத் தருகிறது:
Justice S.K. Aggarwal of Unlawful Activities (Prevention) Tribunal confirmed the ban notification of the Government and said:
“It is clear that the members, office bearers and activists of SIMI association have been indulging in unlawful activities…. I hold that there is sufficient cause for confirming the notification issued under sub-section(1) of Section 3 of the Act, declaring SIMI to be an unlawful association and the same is confirmed” (The Pioneer dated May 10, 2002). SIMI challenged the ban in Supreme Court and sought its revocation. “The Bench, however, declined to entertain the same cautioning the petitioner to either withdraw the petition or get it dismissed. The counsel appearing on behalf of SIMI subsequently chose to withdraw the petition” (Pioneer dated July 7, 2006).
Although, SIMI’s challenge to democratic and secular system was temporarily defeated, propagation of radical Islam by thousands of its Ansaars is still a source of concern for India particularly in a predominantly non-Muslim environment. Restoration of Caliphate might be the dream of radical Islamists but they ignore the historical records that suggest how Caliphate shifted to monarchy.

சிமி பற்றிய விபரங்கள் அடங்கிய கட்டுரை

ஏபிவிபியோ எஸ்.எ·.ஐயோ இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் தொடுக்க வேண்டும் என்று என்றாவது சொல்லியுள்ளனவா, இந்தியாவில் எத்தனை இடங்களில் ஏபிவிபி(அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்) அல்லது எஸ்.எ·.ஐ( இந்திய மாணவர் பேரவை – Students Federation of India) என்பதை சி.க அவர்களும் அவரைப் போன்று சிந்திப்பவர்களும் சற்றே சிந்திக்க வேண்டுகிறேன்.
***
“ஒருவர் தவறு செய்யும் முன்னர் அவருக்கு தண்டனை கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. ஏன் தவறான எண்ணத்துக்காகக்கூட தண்டனை கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. .”
இங்கே சின்னக்கருப்பன் கவனிக்க வேண்டிய அம்சம், இந்த தாமதமான நீதி என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒரு பிரச்சினைதான். இஸ்லாமியத் தீவிரவாதிகள் விஷயத்தில் மட்டும் தமிழக அறிவுஜீவிகளுக்கு ஏன் இவ்வளவு கவலை? சாதாரண ஈவ்-டீசிங் கேஸிலிருந்து கொலைக்கேஸிலிருந்து குடும்பத்தகராறு வரை நீதிமன்றத்துக்குப் போனால் மிகவும் தாமதமாகின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன, முறைமைகள் பற்றிய சிபிசி – சிஆர்பிசி போன்றவற்றில் உள்ள குறைபாடுகள், காலியாக உள்ள நீதியரசர்களின் பதவிகள், பெருகும் வழக்குகளுக்குத் தக்கவாறு நீதிமன்றங்களை விரிவு படுத்தாமை போன்ற பல பிரச்சினைகளின் காரணமாக நீதி வழங்குதல் மிகவும் தாமதமாக நடைபெறுகின்றது.
ஆனால், மதானியின் உடல் எடை குறைந்ததை குறித்து கவலைப்படும் நமது ‘இலக்கிய-எழுத்தாள-முற்போக்கு அறிவுஜீவிகள்’ சாதாரண பொதுமக்கள் இதுபோன்ற இழுத்தடிப்பில் பாதிக்கப் படும்போது வாய்மூடித்தான் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட காரணங்கள் தவிர இஸ்லாமிய தீவிரவாதிகள் விஷயத்தில் வழக்கு நடத்துவதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன. அரசியல் தலையீடு(சமீபத்தில், கோவையில் குண்டுவெடிப்பை தடுத்த இரத்தின சபாபதி என்ற டி.எஸ்.பியை கருணாநிதி அரசு உடனடியாக மாற்றிவிட்டது), மிரட்டல்கள்(நீதிபதிகளை முஸ்லிம் தீவிரவாதிகள் மிரட்டுவது சர்வசாதாரணமாக நடக்கின்றது) போலீசாரைக் கொலை செய்தல்(மதுரையில் ஜெயப்பிரகாஷ் என்ற ஜெயிலரையே கொலை செய்தனர் முஸ்லிம் தீவிரவாதிகள் – கோவையில் செல்வராஜ் என்ற போலீசாரை ஜிகாதிகள் கொலை செய்தவுடன் தான் மதக்கலவரம் வெடித்தது) என்றெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் காவல்துறை(அரசியல்வாதி பந்தோபஸ்துகளுக்கே ஆள் பத்தவில்லை) , ஆளும் அரசியல்வாதிகளிடமிருந்து தீவிரவாதிகளுக்கு சார்பான சமிக்ஞைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இயங்கும் ஒரு காவல்துறை, மிரட்டப்படும் நீதிமன்றம் – எப்பது துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து நீதியை வழங்க முடியும்?
இந்த தாமதமான நீதி என்பது இந்திய மக்கள் அனைவரும் அனுபவிக்கும் ஒரு பிரச்சினை. இதில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை மட்டும் ‘கொட்டடியில் அடைத்து வைப்பது போல அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என்று கண்ணீர்விடும் அறிவுஜீவி-எழுத்தாள-இலக்கிய-முற்போக்கு வர்க்கம், அப்படிப்பட்ட கோரிக்கைகளை வைக்கும்போது இந்தியச் சிறைகளில் வாடும் அனைவருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று கோரவேண்டும் – இதுவே நியாயமான, சரியான அணுகுமுறையாக இருக்கும்.
என்ன பிரச்சினை என்றால், மற்றக் குற்றவாளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று பேசினால், எழுதினால், அறிக்கையிட்டால் முற்போக்கு பட்டம் கிடைக்காது, மதச்சார்பின்மையாளர், பகுத்தறிவாளர், நியாய உணர்வு கொண்ட இலக்கிய ஜாம்பவான் என்கின்ற பட்டங்களெல்லாம் கிடைக்காது. அதனால் தான் நாம் மதானியைப்பற்றியும், ஜிகாத் என்று நீதிமன்றத்தில் கோஷம்போட்டுக் கொண்டிருக்கும் பாஷா பாய், அன்சாரி பாய், அகமது பாய் ஆகியோரைப்பற்றியும் மட்டும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
நான் ஏற்கெனவே சொல்லியிருந்தது போன்று, ஜிகாதிகளை ஒடுக்க தனி சட்டம் கொண்டுவரவேண்டும் – Prevention of Islamic Terrorism Act இதன் மூலம் போடா போன்று சாதாரண மக்கள் துன்புறுவது குறையும். மேலும் இவர்களுக்கென்று தனி நீதிமன்றங்கள், தனி முறைமைகள் , தனி தண்டனைகள்( உதாரணமாக மரண தண்டனை வழங்கப்படக் கூடாது – ஐம்பது வருடம், அறுபது வருடம் – தவறு செய்தது குறித்த தினசரி போதனை போன்றவற்றை) வழங்கவேண்டும். அதுவே இப்பிரச்சினையை ஓரளவுக்காவது சரி செய்யும்.
***
“சரி இன்றைக்கு முஸ்லீம்கள் மீது பழியை போடுகிறார்கள். நாளை தேவர்கள் மீதோ அல்லது தலித்துகள் மீதோ இப்படிப்பட்ட ஒட்டுமொத்த பழி விழாது என்பதற்கு என்ன உத்திரவாதம்? அப்போதும் இடைவிடாத பத்திரிக்கை பிரச்சாரங்களால், அப்பாவிகள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களை சகித்துக்கொள்ள வேண்டுமா?”
தேவர்கள் விஷயத்திலோ தலித்துகள் விஷயத்திலோ இல்லாத ஒன்று இஸ்லாமியர்கள் விஷயத்தில் இருக்கிறது. இஸ்லாமியர்கள் என்போர் ஒரு நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அந்த நம்பிக்கையே மற்ற நம்பிக்கைகள் இழிவானவை, தவறானவை அந்நம்பிக்கைகளைக் கொண்டோர் சரிசமமாக நடத்தப்படக்கூடாது என்றிருக்கிறது. நல்ல உதாரணம் , நாஸிசம். எப்படி நாஸிசம் என்ற கோட்பாடே ஆரிய மேலான்மை, மற்ற இனங்களின் தாழ்வுத்தன்மை, உலகை ஆள்வதற்கு, உலகில் வசிப்பதற்கு தூய இனம், உகந்த இனம் ஆரிய இனம் என்றிருக்கிறதோ அதுபோன்றே இஸ்லாமும் உலகை பிரிக்கிறது. மதநம்பிக்கைகள் காரணமாக மற்ற மதங்களை, வழிபாட்டு முறைகளை பின்பற்றுவோர் இழிவு படுத்தப்படவேண்டும், திம்மிக்களாக-இரண்டாம் தரக்குடிகளாக நடத்தப்படவேண்டும் என்கிறது(இது பற்றி வலைப்பதிவுகளில் ஆயிரம் முறை எழுதிவிட்டதால் இது சம்பந்தமான சுட்டிகளை இங்கு தரவில்லை). இப்படி, ஒரு குழுவின் நம்பிக்கையே மற்றவர்களுக்கெதிராக – philosophy of hate ஆக இருக்கும்போது அந்தக் குழுவை ஒரு அடைப்புக்குறிக்குள் நிறுத்தி விமர்சிப்பது இன்றியமையாததாக ஆகின்றது. தேவர்களையோ தலித்துக்களையோ இப்படியான அடைப்புக்குறிக்குள் அடைக்க முடியாது. அச்சாதியினருக்கென்று ஒரு பொது நம்பிக்கை, ஒரு பிலாஸபி கிடையாது.

***
“இந்து ஆன்மீக பாரம்பரியம் தலித்துகளுக்காக உரத்த குரலெழுப்பி வருவது அவருக்கு தெரியாமல் இருக்கலாம். கண்ணன் பாண்டவர்களையும் துரியோதனாதிகளையும் ஒதுக்கி விதுரன் வீட்டில் தங்கியதிலிருந்து ராமானுஜர் தலித்துகளுக்காக போராடியதிலிருந்து, நாராயண குரு ஈழவர்களுக்காக உழைத்ததிலிருந்து இன்னும் எத்தனை எத்தனையோ உதாரணங்கள். இந்த சமூகத்தில் தலித்துகளின் நிலைக்கு சமூக அமைப்பு காரணம்…… . ”
இல்லை – இந்நிலைக்குக் காரணம் வக்கிரப்பட்டுப் போன வர்ண முறை. இந்த வக்கிரம் முற்காலத்திலேயே தொடங்கிவிட்டதைத் தான் திருமந்திரமும், திருக்குறளும், தம்மபதமும் காட்டுகின்றது.
ஒருவரது விருப்பங்கள், குணங்களின் அடிப்படையில் அவரது தன்மையை பிரித்தது இந்து ஆன்மீக அமைப்பு. அந்த குணங்களின் அடிப்படையில் அவன் புரிய வேண்டிய செயலை, எச்செயல் புரிந்தால் அவனது கீழான உணர்வுகள் அழிந்து மனமற்ற நிலையை எய்துவான் என்று சொல்லி அதனை அதன் படி விட்டு அனைவருக்குமான பாதையைத் திறந்து வைத்தது இந்திய ஆன்மீகம். ஆனால், இதை பிறப்பின் அடிப்படையில் பின்பற்றலாயின மேலே சென்ற குழுக்கள். பிறரை கீழே வைத்துக் கொள்வதற்கும், தாம் வசதிகள் அனுபவிப்பதற்கும் பயன்படுத்தின.
வர்ண முறையின் தாத்பர்யங்கள் எப்படியிருந்தாலும், இன்று அது இழிந்துபோய்த்தான் காணப்படுகின்றது. இந்திய ஆன்மீக மரபுகள் வர்ண முறைக்கு தம்மிடத்தில் இடம் கொடுத்தது சாதிப்பிரச்சினையாக இதை ஆக்கிவிட்டது. இன்று திருவண்ணாமலையில் இளையராஜா அர்ச்சகராக முடியுமா? திருவண்ணாமலையை விடுங்கள், இன்று ரமணரின் சமாதிமேலே லிங்கம் வைத்து அபிஷேகம் செய்கின்றனர் – அங்கே ஒரு சூத்திரனை ஒரு நாளாவது தொட்டு அபிஷேகம் செய்ய அனுமதிப்பார்களா? சடங்குகளை பின்பற்றாது கோவணாண்டியாக நமது கண்முன்னே இருந்த ஒரு ஞானியின் ஆலயத்திலேயே இந்தக்கதி என்றால், திருவண்ணாமலைக் கோவிலில் பஞ்சமன் அர்ச்சனை புரிவது எப்போது? எங்கே போயிற்று கண்ணப்பனின் கால் பட்ட சிவனின் பாரம்பர்யம்?
பிரச்சினை ஆழமானது. அதை விவாதிக்காமல் வெறும் சமூகப்பிரச்சினையாகப் பார்ப்பது தவறு.
***
“பாலஸ்தீனர்களின் போராட்டம் பாண்டவர்களின் போராட்டம் போன்றது. யுதிஷ்டிரன் கண்ணனை துரியோதனனிடம் சமாதானம் பேச அனுப்பும்போது சொல்கிறான். பாண்டவர்களுக்கு ஐந்து நாடு கொடுக்கச் சொல், இல்லையேல் ஐந்து ஊர் கொடுக்கச்சொல். இல்லையேல் ஐந்து வீடுகள் கொடுக்கச்சொல் என்று அனுப்பி வைக்கிறான். துரியோதனன், ஐந்து ஊசி குத்தும் இடம் கூட கொடுக்க முடியாது என்றபின்னரே யுத்தம் ஆரம்பிக்கிறது. துரியோதனன் போல நிற்கும் இஸ்ரேல் இன்று பாலஸ்தீனர்களுக்கு செய்வது அதர்மம். ”
இல்லை, இஸ்ரேல் தொடர்ந்து தனது இருப்பை ஏற்கும்படி வேண்டியும், பாலஸ்தீனர்களோடும் ஏனைய அரபு நாடுகளோடும் சமரசம் செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்தும் வருகின்றது. ஏற்க மறுப்பது பாலஸ்தீனர்கள், அரபு நாடுகள் – பின்னணியில் இருப்பது யூதர்கள் நபிமார்களையெல்லாம் கொன்றவர்கள், கடவுளின் வேதத்தைக் களங்கப்படுத்தியவர்கள் எனவே அவர்கள் முகமது வாழ்ந்த புனித பூமியில்(வாழ்ந்த – புறாக் வாகனத்தில் முகமது அவர்கள் விண்வெளியிலேறி ஜெருசலேம் சென்ற புனித பூமியில்) வசித்து பூமியை அசுத்தப்படுத்தக் கூடாது என்ற இஸ்லாமிய நம்பிக்கைதான். எனவே சி.க தமது உதாரணத்தைத் திருப்பிப் பிடிக்க வேண்டும்.
இது ஒரு புறமிருக்க, இறக்கும் குழந்தைகள் அப்பாவிப் பொதுமக்கள் குறித்த கவலை, வருத்தம் எனக்கும் உண்டு என்பதைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பொதுமக்களின் சாவு வருத்தத்தை ஏற்படுத்துவதுதான். இஸ்ரேலைப் பற்றி சி.க போன்றவர்கள் நியாயவுணர்வு மேலிட கண்டனம் தெரிவிக்கும்போது, அதே கண்டனம் ஹமாஸின் மீதும் ஹெஸ்பொல்லாஹ் மீதும் விழ வேண்டும்.
இஸ்ரேலின் எதிர் நடவடிக்கை குறித்த சரியான அனுமானமின்றி அங்கே வன்முறையை நிகழ்த்திய இஸ்லாமியத் தீவிரவாதிகளும் இந்த துயர சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும். இவ்வளவு பொதுமக்கள் இறந்தும், பிடித்த இஸ்ரேலிய போர் வீரர்களை ஒப்படைக்க மறுக்கும் அவர்கள்மீதும் நாம் குறை கூறவேண்டும்.
இந்தியா போன்று பாதிக்கப்பட்டும் போதிமரத்தடி புத்தராய் அமர்ந்திருந்தால், இந்நேரம் இஸ்ரேலியர்களை ஒழித்துக் கட்டியிருப்பார்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள். இன்று இஸ்ரேலுக்கு இருப்பது போன்ற ஆயுத பலம், செயல் திறன் அவர்களுக்கு இருந்திருந்தால் இஸ்ரேலை விட பல்லாயிரம் மடங்கு அதிக அட்டூழியங்கள் – எவ்வித குற்றவுணர்வும் இன்றி (கடவுளுக்காக, கடவுளின் வீரர்களான ஜிகாதிகளால்) இவர்களால் நடத்தப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
எப்படியோ, இஸ்ரேல் தற்போது போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளது(திரை மறைவில் நிகழ்ந்துள்ள ஒப்பந்தங்கள் நமக்குத் தெரியவில்லை ). அப்பாவிப் பொதுமக்கள் இறப்பு இனியாவது நிற்கும் என்று நம்புவோம்.
***
“ஏன் போர்முறைக்கும் கூட தர்மம் இருக்கிறது. அப்பாவி மக்கள் மீது குண்டு மழையை ஆகாய விமானத்திலிருந்து வீசும் இஸ்ரேலை எந்த இந்து ஆதரிக்க முடியும்? ஆயுதம் ஏந்தாத போர்வீரனோடு கூட போர் புரியாத தர்மமே இராமன் காட்டும் தர்மம்.”
எதோடு எதை ஒப்பிடுகிறார் சி.க? இன்று போய் நாளை வா என்று கோரி முகமதுவை மன்னித்து பெருந்தன்மையோடு அனுப்பிய பிருத்விராஜின் கதை தெரியாதா? அதைத்தான் இந்து தர்மம் போதிக்கின்றதென்றால், அந்த தர்மம் நமது நாட்டிற்கு, சமூகத்திற்கு இன்று தேவையில்லை.
எப்படி இந்திய ஆன்மீகத்தத்துவங்கள் வக்கிரப்பட்டுப் போய் சாதியின் பிடியிலும், வரட்டு கவுரவம், பாரம்பர்யம் என்கிற பிசாசுகளின் பிடியிலும் மாட்டிக் கொண்டதோ அதே நிலைதான் இந்த விஷயத்திலும் ஏற்பட்டிருக்கின்றது. இராவணன் என்கிற அசுரன் பலவித போர் தர்மங்களை நியாயங்களைக் கடைப்பிடித்தான். அந்நிலையில் எதிர்தரப்பு கடைப்பிடித்த தர்மங்களுக்கேற்றவாறு இராமனும் தர்மத்தைக் கடைப்பிடித்தான். ஆனால், இங்கே என்ன தர்மத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடைப்பிடிக்கின்றனர்? சீதை இராவணனிடம் இருந்த போதும் கற்புடன் இருந்தாள் – ஆனால், இஸ்லாம் என்கிற வன்கோட்பாட்டால் கற்பிழந்த யூதநங்கைகளின் கதைகள் பற்றிய ஹதீதுகள் எங்கும் காணக்கிடக்கின்றன. போரில் எவ்வித உபாயத்தையும் கைக்கொள்ளலாம் என்பது முகமது போதித்த ஒன்று(போரே ஒரு பெரும் சூழ்ச்சிதான் என்கிற முகமதுவின் ஹதீது அவுரங்கசீப்புக்கு மிகவும் பிடித்தமானதொன்று).
இப்படி இந்துக்கள் உயர்வானவர்கள், ஆகையினால் கையைக்கட்டி, வாயை மூடிக்கொண்டு, காதைப்பொத்திக் கொண்டு கம்மென்றிருப்போம் என்றெண்ணி சி.க உபதேசிக்கிறார் என்றால், அந்த உபதேசத்தை சிதம்பரம் கோவிலில், காஞ்சி மடத்தில், சைவ மடங்களில் , இருக்கிற பிரபலமான ஆகமக்கோவில்களில் போய்ச் சொல்ல வேண்டும். தலித்துகளுக்கு வழிவிட்டு ஏனையோர் கோவில்களிலிருந்து வெளியேற வேண்டும். தமிழுக்கு கோவில்களிலும் பூஜைகளிலும் இடம் தர வேண்டும். இந்துக்களின் பிரதிநிதியாக தம்மை முன்னிறுத்திக் கொள்கின்ற காஞ்சி மடத்தில் அனைத்து சாதியினரும் பீடாதிபதியாக வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கவேண்டும். காஞ்சி மடம் மட்டுமல்ல, சமஸ்கிருதத்தை எதிர்க்கிறோம், வடவர்களை எதிர்க்கிறோம் என்று சொல்லுகின்ற சைவ மடங்கள் தங்களது தலைமைப் பதவிகளை அனைத்து தமிழருக்கும் தரவேண்டும்.

உள்ளே அப்பட்டமான துவேஷம், குறுகிய சிந்தனை, இறுகிய உணர்வு, வெளியே பெருந்தன்மை பரோபகாரம் என்கிற சுய-வீழ்ச்சிச் சிந்தனையில் வீழ்ந்து கிடக்கின்றோம் நாம். இதற்கு இராமனையும் இந்து தர்மத்தையும் துணைக்கழைப்பது அப்பட்டமான கோணல் சிந்தனை.
– நேச குமார் –
17.08.2006

Series Navigation

நேச குமார்

நேச குமார்