யார் காட்டுமிராண்டிகள்?

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

அக்னிப்புத்திரன்


தமிழகத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி வாகை சூடி திமுக அமைச்சரவை பதவியேற்று இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக கலைஞர் ஐந்தாவது முறையாக அரியணையேறி சாதனை படைத்திருக்கிறார். வரலாற்றில் இடம் பெறும் வகையில் பதவியேற்ற அன்றே இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிக்கான உத்தரவையும் விவசாயிகளுக்கான கடன்தள்ளுபடி மற்றும் சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு இரு முட்டைகள் என்ன்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்திட அரசு உத்தரவில் தமிழக முதல்வர் கலைஞர் மக்கள் முன்பு கையொப்பமிட்டார்.

அதுமட்டுமில்லாமல், மின்னல் வேகத்தில் உழவர் சந்தை, மீண்டும் சமத்துவபுரங்கள், ஏழைப்பெண்கள் திருமண உதவி போன்ன்ற பல்வேறு நலத்திட்டங்களும் பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இஇடஒதுக்கீடு, பாராபட்சமற்ற முறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கிட நடவடிக்கை என்று ஆக்ககரமான செயல்கள் நடைபெறக்கூடிய வகையில் அரசு இஇயந்திரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளதை அரசியல் கவனிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர். பொது மக்களும் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர்.

இப்படி ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் ஆரம்பமே அழகாக இது ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் ஓர் அரசு என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இருளில் சிக்கித்தவித்த அரசு நிர்வாகத்துறையில் ஒரு ஒளிமயமான எதிர்காலம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சியற்றவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அதில் சற்றும் மிகையில்லை.

தமிழகத்தின் சூழல் இவ்வாறு அமைய, அண்மையில் அரசியல் அரங்கில் சில வேண்டத்தகாத காட்சிகளும் அரங்கேறியுள்ளன. ஒவ்வொரு காட்சியும் நாட்டு மக்களுக்கு உண்மையை உரக்க எடுத்துரைப்பவையாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பத்திரிக்கை உலகம் இஇதைத் திரித்து, முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதா ஏதோ சாதனை செய்து போல செய்திகள் வெளியிட்டு உண்மை நிலையை உலகுக்கு மறைத்துவிட்டன. இதோ அக்காட்சிகள் உங்கள் பார்வைக்கு!

காட்சி:1

சட்டமன்றத்தின் அதிமுக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்ததும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் நீங்கள் சட்டசபைக்குச் சென்ன்று ஜனநாயக கடமையை ஆற்றுவீர்களா என்ன்று வினா எழுப்பியபோது அவரின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கள் இருக்கின்றனவே அப்பப்பா அத்தனையும் முத்துகள். ஆளும் தரப்பில் காட்டுமிராண்டிகள் சட்டசபைக்கு வந்திருக்கின்றனர். நாகரீகம் தெரியாத காட்டுமிராண்டிக்கும்பல். 1989-ல் நடந்த செயல் நினைவு இல்லையா? அதே உறுப்பினர்கள் அதே அமைச்சர்கள் அதே முதலமைச்சர். எனவே நான் சட்டசபைக்குச் செல்லமாட்டேன்.

ஒரு முன்னாள் முதலமைச்சர் சற்றும் நாகரிகமற்று அக்னியை தன் வார்த்தைகளில் கொட்டி முழக்கி புதிய அரசையும் ஆட்சியாளர்களையும் வசைபாடி பேட்டியளித்தார். இது ஒரு சிறுபான்ன்மை அரசு வெகுவிரைவில் கவிழ்ந்துவிடும் என்று நல்வாழ்த்தும் கூறினார்.

காட்சி:2

சட்டமன்றத்தில் கவர்னரின் உரை மீது விவாதம் தொடங்குகிறது. அம்மா கூறியவாறே காட்டுமிராண்டித்தனமான செயல்களை அவரது கட்சியின் உறுப்பினர்களே நிகழ்த்தத் தொடங்கினர். கூச்சலும்குழப்பமும் விளைவித்ததுடன் பக்கத்தில் அமர்ந்திருந்த காங்கிரசு உறுப்பினர்களுக்கும் தர்மஅடிகளை மிகவும் தாராளமாகவே அதிமுக என்ம் எல் ஏக்கள் வாரிவாரி வழங்கியிருக்கின்றனர். முன்ன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேட்டை ரவுடிகள் போல மைக்குகளை உடைத்தும் ஆளும்கட்சியினர் மீது அவற்றை வீசியும் அமளியில் ஈடுபட்டனர். ஒருசிலர் இஇஇருக்கைகளின் மீது ஏறி ஆபாச நடனம் போல ஆடிக்கொண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறிப்பாக காங்கிரசு கட்சியினரைத் தாக்கியுள்ளனர். வேலூர்த்தொகுதி காங்கிரசு உறுப்பினர் ஞானசேகரன் கைகளில் பலத்த காயம்.

இதைவிடக் கொடுமையான காட்சியும் ஒன்று நிகழ்ந்ததுள்ளது. திமுக உறுப்பினர்கள் புடை சூழ அமர்ந்திருக்கும் போதே தமிழக முதல்வர் கலைஞரைத் தாக்குவதற்கு அதிமுக உறுப்பினர் ஒருவர் இருமுறை முயன்ன்றுள்ளார். திமுகவின் கருப்புசாமி பாண்டியன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ஆகிய இருவரும் அரணாக இருந்து பாதுகாத்ததன் விளைவாக தாக்குதலிருந்து அதிர்ஷ்டவசமாக கலைஞர் தப்பி இருக்கிறார். இவ்வாறு சட்டசபையின் மாண்பைச் சீர்குலைத்த அதிமுகவினர் அனைவரும் சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள தடைவிதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

காட்சி:3

அதிமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அக்கட்சியின் தலைவி சட்டசபைக்குத் தனியாக வருகிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எடுத்துவந்த குறிப்புகளை வாசித்துவிட்டும், காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ன்ஸ்சை கிண்டல் தொனிக்கும் விதத்தில் நக்கல் மற்றும் நையாண்டி இசெய்துவிட்டும் என் உரையின் இடையே முதல்வர் மற்றும் அமைசர்கள் எப்படிக் குறுக்கிடு செய்யலாம் என்று சபாநாயகரை நோக்கி வினா தொடுத்தும் கூடுதல் நேரம் பேச அனுமதி கேட்டும் சபை நடவடிக்கைகளில் சுதந்திரமாகக் கலந்துகொள்கிறார். எந்தவிதமான அசம்பாவிதமும் நிகழவில்லை. சபை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அமைதியாக இயங்கியது. சிறிதுபொழுதில் சபையிலிருந்து வெளியேறிச் செல்லுகிறார் அம்மையார்.

வழக்கம்போல எப்போதும் திமுகவைக் குறைகூறுவதையே தொழிலாககொண்ட அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி.ஜெயலலிதா வெளியில் சென்றதும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்னைச் சபையில் சரியாகவே பேசவிடவில்லை என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவிக்கிறார்.

அரசியல் உலகில் அனாதை ஆனந்தனான வை.கோபாலசாமியும் அவர் பங்குக்குச் செல்வி ஜெயலலிதாவை ஜான்ஸி ராணி எலிசபத் ராணி என்று புகழ்ந்து அறிக்கை விட்டார். மக்கள் செல்வாக்கு சிறிதும் இல்லாத வைகோ புகழ்வதில் ஒரு அர்த்தம் உள்ளது. இன்றைய சூழலில் அரசியல் சர்க்கஸ்சில் கோமாளியாக வலம் வரும் அவருக்கு இப்போது அதிமுகவை விட்டால் வேறு நாதியில்லை. எனவே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். ஆனால் நடுநிலைப் பத்திரிக்கைகளுக்கு என்ன நேர்ந்தது? அப்பத்திரிக்கைகளும் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, ஆகா ஓகோ என்று புகழ்ந்து தனியாக வந்தார், பேசினார் யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்றெல்லாம் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து கட்டுரைகள் படைத்த செயல்கள் ஏற்புடையதுதானா?

மேற்கண்ட மூன்ன்று காட்சிகளும் நமக்குக் காட்டும் உண்மை என்ன்ன?

1. எப்போது எல்லாம் அதிமுகவினர் சபையில் எதிர்க்கட்சியினராக இருக்கிறார்களோ அப்போது எல்லாம் குழப்பம் விளைவித்து கண்ணியக்குறைவாக நடந்து சபையின் நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கின்றனர் என்ற உண்மை புலப்படுகிறது.

2. திமுவினர் பெரும்பான்மையினராக உள்ள ஓர் அவையில் செல்வி.ஜெயலலிதாவால் தனியாக வர முடிகிறது. சபையில் கருத்துகளை தைரியமாக எடுத்துச்சொல்ல முடிகின்றது. ஜனநாயக மரபு கண்ணியத்துடன் காக்கப்படுகிறது.

3. அதேசமயம் திமுக தலைவரை முதல்வர் பதவியில் இருப்பவரை அவரது கட்சியினர் இஅவையில் சூழ்ந்து இருக்கும்போதே அதிமுகவினர் தாக்க முயலுகின்றனர். (இப்படிப்பட்ட நிலையில் முன்பு அதிமுகவினர் பெரும்பான்மையாக இருந்த ஒரு சூழலில் கலைஞர் மட்டும் தனியாகச் சென்று இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்?)

இக்காட்சிகள் காட்டும் உண்மைகள், யார் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யார் காட்டுமிரண்டிக்கும்பல் என்பதை உலகுக்கு உரக்க வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டன. அதே சமயம் 1989-ல் சட்டசபையில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் நன்கு விளங்கிக்கொள்வதற்கும் இப்போதைய நிகழ்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

-அக்னிப்புத்திரன்.

Series Navigation

அக்னிப்புத்திரன்

அக்னிப்புத்திரன்