புலம் பெயர் வாழ்வு (9) – சிங்கப்பூர் போல எமக்கும் ஒரு நாடு வேண்டும்

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

இளைய அப்துல்லாஹ்


சிங்கப்பூர் எப்பொழுதும் ஒழுங்குக்கும்; நேர்த்திக்கும் பெயர் போன இடம் என்று தான் கேள்விப்பட்டோம். அங்கு விமானத்தில் வந்து இறங்கி பாதைக்கு வந்த பொழுது அது சரி என்றுபட்டது.
அங்கு நின்ற குறுகிய கால அவகாசத்துக்குள் பல முக்கியஸ்தர்களை எழுத்துத்துறை சார்ந்தவர்களை ஒலிபரப்பு ஒளிபரப்புத்துறை பத்திரிகைத்துறை சார்ந்தவர்களை சந்தித்தேன்.
பிரமிப்ப+ட்டும் வகையில் சிங்கப்ப+ர் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கான வசதிகள் ஒழுங்குகள் எல்லாவற்றையும் அரசு செய்து கொடுத்திருக்கிறது. அதே போல் அரசு தனக்கான பணத்தை வரியாக, தண்டமாக வேறு வழிகளில் எல்லாம் உருவி எடுக்கிறது.
தமிழ் நாட்டு மூதாதையும், இலங்கை மூதாதையுர் என்ற வேரோடு இருக்கிறவர்கள் எல்லாம் தம்மை சிங்கப்âரியன் என்ற சொல்லிக் கொள்வதிலேயே மிகக் கவனமாக இருக்கின்றனர்.
இனம், மதம் மொழி என்ற பேதங்களைத் புறம் தள்ளி படித்தவனுக்கு அறிவாளிக்கு முதலிடம் கொடுக்கும் இடமாக சிங்கப்ப+ர் அமைக்கப்பட்டிருக்கிறது.
எல்லா பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து தமது பூமியை செழிக்கப்பண்ணிய தலைவர் லீ குவான் யூ வை இன்னும் மக்கள் மனதில் போற்றி வருகிறார்கள். அவர் தான் சிங்கப்பூரை உருவாக்கியவர். 1956ம் ஆண்டு ஏற்பட்ட கட்சிக் குழப்பங்கள் ய+னியன் பிரச்சனைகள் எல்லாம் சிங்கப்பூரை நாசப்படுத்தப் பார்த்த பொழுது முன்னின்று துணிவோடு உறுதியான முடிவுகளை எடுத்து பிளவுகள் வராமல் காப்பாற்றியவர். நச்சுகளை களைகொன்றொழித்த பெருமகன் என்று சிங்கபூரியன்கள் இன்னும் அவரை நெஞ்சார வாழ்த்துகிறான்றனர்.
ஆங்கிலம், சீன மொழியான மென்டரின், மலாய், தமிழ் நான்கு மொழிகளும் எங்கும் எதிலும் நீக்க மற நிறைந்திருக்கின்றன.
74 வீதமான சீனர்களையும் 16 வீதமான மலேயர்களையும் 7 வீதமான தமிழர்களையும் 3 வீதமான ஏனைய இனத்தவர்களையும் கொண்டிருக்கிறது சிங்கபூர்.
“வீடுகள் மிக வசதியாகவே இருக்கின்றன. ஆனால் உள் ஊர் உற்பத்தி என்பது அறவே இல்லாத ஒரு நாடு சிங்கப்பூர், ஆரம்பத்தில் 90 வீதம் குடி தண்ணீரே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இப்பொழுது 75 வீதம் குடி தண்ணீரை கடல் நீரையே சுத்திகரித்து வழங்குகிறார்கள் ஆனாலும் உலகில் வுலிந தண்ணி குடிக்கக் கூடிய அளவான கனியுப்புக்கள் கொண்ட நாடு என்று று.ர்.ழுசிபாரிசு செய்திருக்கின்றது என்கிறார் சிங்கப்பூரின் இரண்டாவது தலைமுறையான கே.கலையரசன்.
இவர் ஆசியஃபசுபிக் இளைஞர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி இருக்கிறது. 18 வயதாகியதும் இந்த இராணுவப் பயிற்சிக்கு போக வேண்டும். இது இரண்டு வருட இராணுவப்பயிற்சி. அங்கு எல்லா வகையான நவீன ஆயுதப் பயிற்சியும் வழங்கப்படும் அத்தோடு கடுமையான எல்லா நேரத்துக்கும் ஏற்ப உடற்பயிற்சியும் வழங்கப்படும். அவசர காலத்தேவைக்கு உடனடியாக அவர்கள் தயாராக வேண்டும். அத்தோடு வருடம் 2 வாரம் பயிற்சி வழங்கப்படுகிறது.
சிங்கப்பூர் இராணுவம் அதி நவீன ஆயுத தளபாடங்களைக் கொண்டிருக்கிறது.
அண்டை நாடுகள் அடர்ந்தேறினால் தாக்குதல் நடத்தினால் 3 நாட்களுக்கு நின்று தாக்குக் கொண்டிருக்கக் கூடிய வல்லமை சிங்கப்பூருக்கு இருக்கிறது. 3 நாள் தாக்குப் பிடித்தால் அமெரிக்கவோ அவுஸ்ரேலியாவோ உதவிக்கு வந்துவிடும் முக்கியமான வேலையில் இருந்தாலும் விரும்பிப் போவார்கள் சிங்கப்பூரியன்கள்.
இராணுவப் பயிற்சிக்கு போகும் போது அவர்களுக்கு லீவு கொடுக்கப்படுகிறது வேலை செய்யும் கம்பனிகளில் முழு சம்பளத்தை இராணுவம் கொடுக்கிறது.
அண்மையில் தான் அந்த 2 வாரப் பயிற்சியை முடித்துக் கொண்டு வந்திருந்தார் கலையரசன்
இளந்தலை முறையினரின் மொழி ஆர்வம் தொடர்பாக இப்பொழுது பெற்றோரிடம் கவலை மிகுந்திருக்கிறது. பெற்றோர் தமிழில் பிள்ளைகளோடு பேசினாலும் பிள்ளைகள் ஆங்கிலத்தில் தான் பதில் சொல்கிறார்கள்.
சூழல் ஆங்கிலத்துக்குள் அவர்களை செருகி வைத்திருக்கிறது. ஐரோப்பிய கலாச்சாரத்துக்குள் பிள்ளைகள் நுழைவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது என்று கவலைப்பட்டார் வசந்தம் சென்றல் தொலைக்காட்சி பொறுப்பாளர் மொஹமட் அலி.
தற்போதைய தலைமுறை தமிழ் கலாச்சாரத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை என்றார் அவர்.
“வீட்டிலும் வற்புறுத்த முடியாமல் இருக்கிறது பிள்ளைகளை தமிழில் பேசும்படி. எமது கட்டுப்பாட்டை மீறிவிடுமோ எனும் அச்சமாக இருக்கிறது. இது ஒரு பக்கம், மறுபக்கம்
இளைய வயதினர் ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகள் விடயத்தில் மிகவும் கவலையாக இருக்கிறது. திருமணம் குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவது வேதனையளிக்கிறது. பெண்கள் அனேகமாக எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். இதனால் தனி வங்கிக் கணக்கு மற்றவர்களை எதிர்பார்க்காத தனித்துவம் இதன் காரணமாக திருமணம் முடித்த இளம் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கின்றன. அத்தோடு விவாகரத்து முன்னைய காலங்களை விட கடந்த ஐந்து ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது.
இன்னும் இப்பொழுது புதிய கலாச்சாரமொன்று தமிழர்களிடையே உருவாகி வருகிறது அதுதான் மிகவும் ஆபத்தானது.
ஒற்றைப் பெற்றோர் (Single Parents) முறை. கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்று வாழ்வது. இது மிகவும் சுதந்திரமான முறை என்று பெண்கள் நம்புகிறார்கள். ஏனைய சீன, மலாய சமூகத்தவரிடையே பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அஞ்சியே இம்முறை பெருகி வந்தது. குடும்பப் பிரச்சனை, மாமன் மாமி, உறவுகள் தொல்லை என்று எல்லாவற்றையும் உதறிவிடடு தன்னந்தனிய மிகவும் சுதந்திரமாக பிள்ளையோடு அல்லது பிள்ளைகளோடு வாழ்வது இலகு என்று தமிழ் பெண்களும் யோசித்து விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ளுiபெடந Pநசயவெள முறை சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது. எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்று பெண்கள் நினைக்கிறார்கள். அது அபரிதமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. எமது சமூகத்தில் இப்பொழுது.
இப்படியே எல்லாப் பெண்களும் நினைத்தால் என்ன ஆகுமோ என்று பயமாக இருக்கிறது.
ஆனால் அரசு இந்த விடயம் தொடர்பாக இப்பொழுது அவதானம் செலுத்தி வருகிறது. அத்தோடு உடையும் குடும்பங்கள் மற்றும் விவாகரத்து, குடும்பப்பிரச்சனைகள் தொடர்பாகவும் ளுiனெய என்கின்ற சிங்கப்ப+ர் இந்திய மேம்பாட்டு சங்கம் தமிழ் சமூகத்தினரிடை அக்கறை கொண்டு கவுன்ஸிலிங் முறைகளை செய்து வருகிறது” என்று பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்தார் ஊhயnநெட நேறள யுளயை வில் செய்திப்பிரிவு நுஒநஉரவiஎந நுனவைழச ஆக பணிபுரியும் திரு.விம்.எம்.கார்மேகம் (56)
தமிழ் மொழி தொடர்பாக மிகவும் அக்கறையோடு மூத்த தமிழர்கள் காணப்படுகிறர்கள். எங்காவது விளம்பரப் பலகைகளில் தமிழ் எழுத்துப்பிழை இருந்தால் உடனடியாகவே அரச தமிழ் மொழிப்பிரிவிற்கு ரெலிபோன் செய்து ஏசி அதனை மாற்றச் செய்து விடுவார்கள் என்றார் வசந்தம் சென்றலின் திரு சபா-முத்து நடராஜா (37).
பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு மிகுந்த கவலைக்கிடமாகவே இருக்கிறது. பெற்றோர்கள் முழு நேரம் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள். பிள்ளைகள் உறவுகள் துண்டிக்கப்பட்டு தனித்து விடப்படுகிறார்கள். வேலைக்காரரோடு இருக்கும் பிள்ளைகள் விரக்தியின் உச்ச நிலையை அடைகிறார்கள். இது ஒரு பாரிய தலைமுறைப் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. இதனால் சின்ன வயதினில் மதுப்பழக்கம், போதைப்பொருள் பாவித்தல், இளந்துணை தேடல், என்று விரியும் இந்த நெருக்கு வாரங்கள் இளம் குற்ற வாளிகளை உருவாக்குகிறது என்கின்றார் சபா முத்து நடராஜா (37)
சிங்கப்ப+ரில் ஏழைகள் இருக்கிறார்கள் அவர்கள் யாரென்றால் அளவுக்கதிகமாக மது பாவிப்பவர்கள் போதைப் பொருள் பாவிப்பவர்கள் இவர்கள் அங்குள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகட்ட முடியாமல் திண்டாடுகின்றனர் என்றார் சபா.
எல்லாமே பணம் கொடுத்து வாங்க வேண்டும். 20 கொண்ட ஒரு சிகரட் பெட்டி 12 சிங்கப்ப+ர் டொலர் (768 இலங்கைரூபா). மதுவகை சிகரட் எல்லாமே அதிஉச்சவிலை.
மதுவகைகளை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரமுடியாது. யுiசிழசவ இல் உள்ள னுரவல குசநந கடையில் ஒரு லீட்டர் மட்டும் மது வாங்கி வெளியில் கொண்டு போக முடியும். சிகரட்டும் கொண்டு போக முடியாது சிங்கப்ப+ருக்குள். எங்களோடு வந்த ஒருவர் மது போத்தல் ஒன்று கொண்டு வந்தார். அதனை செக்பண்ணிய கஸ்டம்ஸ் அதற்கு 35 சிங்கப்ப+ர் டொலர் அபராதம் கட்டிவிட்டுத்தான் போக வேண்டும் என்றார்கள் எனது கண் முன்னே. அல்லது திரும்பிப் போகும் போது எடுத்துப் போங்கள் இங்கே வைப்பதற்கு வாடகை 4 சிங். டொலர் கட்டணம் என்றார்கள். அவர் 4 டொலர் கட்டி யுiசிழசவ இல் வைத்து விட்டு சிங்கப்ப+ருக்கு போனார்.
ஒருவர் கொண்டு வந்த 4 சிகரட் பெட்டிகளை வாங்கி பிளேட்டால் வெட்டி குப்பை வாளியில் போட்டார்கள் கஸ்டம்ஸில்.
இந்திய வம்சாவளியினர் செல்வச் செழிப்பாக இருக்கின்றனர். அதிபர் தமிழர் எஸ்.ஆர்.நாதன் எளிமையானவர் பந்தா இல்லாதவர் யாரும் அவரை போய் பார்க்கமுடியும் அவரை ‘மக்கள் அதிபர்’ என்றே சீனர் மலாயர், தமிழர் எல்லோரும் அன்பாக அழைக்கின்றனர்.
625 சதுர கிலோ மீற்றர்தான் சிங்கப்ப+ரின் மொத்த பரப்பு ஆனால் இப்பொழுதும் கடலை மண்போட்டு நிரவி நிலமாக்கிக் கொண்டிருக்கும் கைங்கரியத்தை அவர்களிடம் தான் கற்க வேண்டும்.
ஏற்கனவே ஒரு பிள்ளை மட்டும் போதும் என்று கண்டிப்பான உத்தரவால் வேறு பிள்ளைகளைப் பெறாத சிங்கப்ப+ரில் இப்பொழுது பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் அரசாங்கமே பிள்ளைகளை பெறுவதற்கு ஊக்குவிப்பு தொகை வழங்குகிறது. ஆனால் மக்கள் ஒரு பிள்ளை முறையில் இருந்து இன்னும் நினைவு திரும்பவில்லை.
பிள்ளை பெறும் பெண்களுக்கு சலுகைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. 3 மாதம் முழுமையான சம்பளத்துடன் லீவு, வேலை செய்யும் பெண்மணிக்கு கர்ப்பிணிகளுக்கு சலுகை. பிள்ளை பெற்றால் வெகுமதி 20 ஆயிரம் சிங்கப்ப+ர் டொலர் பணம் (12 லட்சத்து 80 ஆயிரம் இலங்கை ரூபாய்) வழங்கப்படுகிறது அரசால். ஆனால் பெற்றோர் ஒன்றே போதும் என்று வாளாவிருப்பவர்களே அதிகம். பழகிவிட்டது அவர்களுக்க.
நாடாளுமன்றத்தில் 8 தமிழர்கள் அங்கம் விகிக்கின்றனர். அதில் 5 பேர் அமைச்சர்கள். ஒரு பெண் எம்பியும் இருக்கிறார். தமிழ் போதனா மொழியாகவும் இருக்கிறது. முதல் மொழி ஆங்கிலம். இரண்டாம் மொழி தத்தமது தாய் மொழியை நிச்சயமாக தேர்ச்சி செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறது. வெகு விரைவில் தமிழ் மொழி மூலமான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்கள்.
90 வீதமானவர்களுக்கு சொந்த வீடு இருக்கிறது. படிப்புக்கேற்ப கைநிறைய சம்பாதிக்கிறார்கள் சிங்கப்ப+ரியன்கள்.
ஒரு தொலைக்காட்சி ‘வசந்தம் சென்றல்’ ஒரு வானொலி ‘ஒலி 96.8’ ஒரு தினசரி பத்திரிகை ‘தமிழ் முரசு’ ஆகியவை தமிழ் மொழி மூலமான தொர்பு சாதனங்கள்.
சிங்கப்ப+ர் வானொலியில் நல்ல தமிழை கேட்டு ஆனந்தித்தோம் நானும் நண்பன் ராஜ்உம்.
உண்மையில் தமிழை வளர்க்க இந்த தலைமுறையினர் செய்யும் பங்களிப்பு அளப்பரியது. ஒலி 96.8 அறிவிப்பாளர் அழகிய பாண்டியன் முகம் தெரியாவிடினும் நெஞ்சத்துள் நிறைந்திருக்கிறார் தமிழால்.
அவர்கள் தரும் நாட்களுக்கு மேல் நாட்டில் தங்கி இருப்பவர்களுக்கு Overstay ஒரு நாளுக்கு ஒரு கசையடி வழங்கப்படும். என்பது முதலே நான் கேள்விப்பட்ட தண்டனை அது ஆயுள் முழுக்க உடலைவிட்டு அழியாதாம்.
தண்டனைகள் தான் மனிதனை வழிப்படுத்த ஒரே வழி என்பதனை சிங்கப்பூர் நேர் சாட்சியாக இருக்கிறது. அங்கு லஞ்சம் இல்லை என்று பெருமையாகச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அப்படி ஒரு நாடு வேண்டும்.

இளைய அப்துல்லாஹ்

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்