புலம் பெயர் வாழ்வு (3)

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

இளைய அப்துல்லாஹ்


உணவு என்பது வெறுமனே வயிற்றை நிரப்புவதற்காக மட்டும் அல்லாது. ரசித்து, சுவைத்து அனுபவித்து உண்பதற்காகவுமே. பலர் அந்த சுவையின் மனோரதியத்தை அனுபவிக்க மாட்டார்கள். எனது அதிபர் ஆ.தா.ஆறுமுகம் நல்ல ஆஜானு பாகுவானவர். 6 ஆம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை அவர்தான் அதிபர். உணவின் சுவையை அனுபவித்து சாப்பிடும் ஒரு அற்புதமான மனிதர். ரசித்து சுவைப்பதில் அவர் சிறப்பானவர். லண்டனுக்கு போன புதிதில் இலங்கைச் சுவையை, கொஞ்சம் நாக்குக்கு உறைப்பான தைத்தேடித் திாிய வேண்டிய ஒரு இக்காட்டான நிலை இருந்தது.

நாங்கள் இருந்த இடத்தில் இந்தியர்களதும் பாகிஸ்தானியர்களதும் கடைகளும் ரெஸ்ரூரண்ட்டுகளும் இருந்தன. “தண்தூாி” கோழி பார்ப்பதற்கு சிவப்பாக இருக்குமே தவிர, எடுத்து வாயில் வைத்தால் ”சப்” பென்று இருக்கும்.

எங்கள் தமிழ் ருசியைத் தேடி அலைந்தோம். உண்மையில் உறைப்பு சாப்பிடுவதற்கென்று ஒரு மணித்தியாலம் கார் ஓடினோம்.

அதற்குப் பிறகு தமிழர்கள் வாழும் பிரதேசங்களுக்கு வந்ததன் பின்தான் வாயும் வயிறும் மகிழ்ந்து போயின. “சுள்” ளென்று படும் உணவு வகைகளை தமிழர்களது உணவகங்கள் இப்பொழுதும் தருகின்றன.

இலங்கை பிளேன்ரீ, வறுத்து இடித்த கோப்பி என்று எல்லாம் கிடைக்கும் ஈஸ்ட்ஹம், அல்பேட்டன், வெம்பிளி, ஹரோ போனீர்களென்றால் தமிழ், தமிழ், தமிழ் மயமே. 2 சோடி பால் அப்பம் 3 பவுண்ஸ்கள், 10 இடியப்பம், உறைப்புக்கறி, ஒரு சொதி பக்கட் 3.50, சோறு, கறி 3.50, கொத்துரொட்டி 4 பவுண்ஸ், பிலாக்கொட்டை 250 கிராம் 2 பவுண்ஸ், முருங்கைக்காய், கதலி வாழைப்பழம், பாண், பணிஸ், மாலு பாண் என்று எல்லாமே கிடைக்கும். இலங்கைச் சுவை பிலாக் கொட்டையில் இருந்து பொல் சம்பல் வரைகிடைக்கும். அங்கு சாப்பாட்டுப் பார்சல் ஒரு வெற்றிகரமான பிஸ்னஸ். பலர் ரக்ஸ் இல்லாத பிஸ்னஸாக அதனை கையகப்படுத்தி உள்ளனர். வீடுகளில் சமைத்து கடையில் வைத்து விற்பனை செய்யலாம். ஒரு சாப்பாட்டுப் பார்சலுக்கு 2 பவுண்ஸ் லாபம் கிடைக்கும் இப்போதைய இலங்கை ரூபா கிட்டத்தட்ட 400 என்று வையுங்கள். ஒரு பவுண் இப்பொழுது 190 ரூபா….இலங்கையில்

லண்டனில் இன்னுமொரு டக்ஸ் கட்ட தேவையில்லாத அல்லது கட்டாமல் இருக்கக் கூடியலாபமுள்ள வீட்டுத் தொழில் ாியூசன். இலங்கையில் இருந்து வரும் ஆங்கிலம் தொியாத பிள்ளைகளுக்கென்று ஆரம்பித்த ாியூசன் வகுப்புகள் இப்பொழுது எல்லாப் பாடங்களுக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

பிள்ளைகளை ாியூசனுக்கு விடுவது. தாய் மார்களின் தினக் கடமைகளில் ஒன்றாகிவிட்டது. லண்டனில் இருந்து வரும் தமிழ் பத்திாிகைகள், சஞ்சிகைகள் என்று எதனைத் திறந்தாலும் விளம்பரப் பக்கத்தில் தமிழர்கள் நடத்தும் ாியூசன் வகுப்புகளைப் பற்றிய விளம்பரம் இருக்கும். பொி கொட்டகை போட்டு ாியூசன் செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அது ஒரு தொழில் என்று வந்து விடும். கவர்மென்டுக்கு டக்ஸ் கட்ட வேண்டும் என்று பாாிய பிரச்சினை.

இது, வீட்டில் ஒரு ஹோலில் ஏழு, எட்டு வாங்குமேசை போட்டு “ாியூசன்” வகுப்புகள் வலு மும்மரம். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்று வகுப்புகள் நடக்கின்றன. தமிழ் வகுப்புகளும் உண்டு. தமிழ் வகுப்பில் ஒரு முறை “அ-அம்மா, ஆ-ஆடு, உ-உரல்” என்ற ரீச்சரை. பிள்ளை எழும்பிக் கேட்டது “உரல் என்றால் என்ன” ரீச்சருக்கு அந்த சிறுமியின் யூகம் கூட விளங்கவில்லை. எமது தமிழ் நெடுங்கணக்கு மட்டையை வைத்து “உ-உறி” என்று பாடம் நடத்துபவர்களையும் கண்டிருக்கிறேன்.

ஆங்கில மொழியில் சிந்திக்கின்ற தமிழ் பிள்ளைகளுக்கு அவர்களுக்குத் தொிந்த பொருட்களை சேர்த்துக் கொண்டு விளங்கப்படுத்த வேண்டும் என்ற காிசனையே இல்லாமல் தமிழ்ப் பாடங்களை எமது பழைய உபாத்தியாயர்களும் உபாத்தியாயினிகளும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் வாகனத்தில் ஹோர்னை (ஒலிப்பான் என்று எழுதுவதில் எனக்கு உடன் பாடில்லை. விளங்கும் விதமாக இருக்கட்டும்) கோபம் வந்தால் அடிப்பார்கள் அல்லது அதிக சந்தோசத்தை வெளிப்படுத்த அடிப்பார்கள். இலங்கையில் இந்தியாவில் என்றால் செவிப்பறை கிழிந்து போகும் வரை அடிக்கிறார்களே ஏன் ? ஒரு முறை இந்தியர்கள் கிாிக்கெட்டில் வென்றதற்காக “ லண்டன் சவுத்ஹோல்” பகுதியில் அடித்தார்களே “ஹோர்ண்” அப்படி ஒரு சத்தம், அதற்காக யாரும் கோபப்படவில்லை. பின்னர் “ரொனி பிளையர்” வென்ற நேரம், அதற்குப் பிறகு ஒரு முறை தீயணைப்புப் படையினர் வேலை நிறுத்தம் செய்த போது அவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆதரவாக… வாகனங்களை விட்டுக்கொடுத்து ஓடுபவர்கள் அந்தப் புண்ணியவான்கள். தினமும் கொழும்பில் பயணம் செய்பவர்கள் ஏதோ சபிக்கப்பட்டவர்கள் போல, எமக்குத் தொிவார்கள்.

சுத்தம் என்பது எவ்வளவு முக்கியமானது. லண்டனில் கண்ட இடத்தில் “ஸிப்பை” திறந்ததற்காக ஒரு நாள் பொலிஸ் ஸ்ரேஸனில் ஒரு தமிழர் தடுத்து வைக்கப்பட்டு கவுன்ஸிலிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.

சுத்தம் பற்றி சின்ன வயதில் இருந்தே வெள்ளைக்காரர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பூிய வைக்கிறார்கள். அவர்கள் அதனைக் கடைப்பிடிக்கின்றனர். வீதியில் ஏதாவது பேப்பர்துண்டு இருந்தால் கூட, பொியவர்கள் முதல் பிள்ளைகள் வரை எடுத்து அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்கள்.

எமது நண்பனின் அண்ணா ஸ்கொட்லாந்தில் கலியாணம் முடித்து இருக்கிறார். அண்ணி ஒரு பல் டொக்டர். பாதையில் நடந்து போகும் போது, அண்ணா ஒரு பேப்பரை நிலத்தில் வீசி விட்டார். வெள்ளைக்கார அண்ணிக்கு பிடிக்கவில்லை. “நீ என் நாட்டை அசுத்தப் படுத்துகிறாய்” என்று சொல்லி ஒரு நாள் முழுக்கப் பேசவில்லை. என்று நண்பன் சொன்னான் அது வியப்பில்லை.

இங்கிலாந்தில் வேல்ஸ் பகுதியில் எனக்குத் தொிந்தவர் ஒருவர் இருக்கிறார். ரம்மியமான மலைப்பாங்கான இடம். பார்ப்பதற்கும் வசிப்பதற்கும் தோதுவான இடம். எனது வைத்திய நண்பர் காலில் கட்டுப் போட்டிருந்தார். அவர் விட்டுக்கு ஓய்வு நாட்களில் போவேன்.

இம்முறை வலு கஸ்டப்பட்டார். அது ஒரு பொிய கதை என்று வைத்திய நண்பர்ின் மனைவி சொன்னா. நண்பர் தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்பவர். அப்படி நடைப்பயிற்சியின் போது, வேறு ஒருவர் தனது நாயோடு பயிற்சிக்கு வந்திருக்கிறார்.

திடாரென்று நாய் கடித்து விட்டது. அது உயரமான வகையைச் சேர்ந்த நாய். நாய்ச் சொந்தக்காரர் மிகவும் கலவரப்பட்டுப் போனார். அது கடிக்கக் கூடிய நாய் இல்லை. மாதமொரு முறை சிகிச்சை, பாிசோதனை எல்லாம் செய்த நாய், ஆனால் கடித்துவிட்டது. பல் ஆழமாகப் பட்டுவிட்டது. காலின் கீழ் சள்ளையில் வாக்கான கடி. உடனடியாக மருந்துவ மனைக்கு போயிருக்கிறார். நண்பரும் நாயும் உடனடியாக பாிசோதனை செய்யப்பட்டது. நாய்க்கு வருத்தமில்லை.

நாய் கடித்ததற்கு வழக்குப் போட்டார் இவர். தீர்ப்பு உடனடியாக வந்தது. நாய் கடித்ததற்கு நண்பருக்கு நாய்ச் சொந்தக்காரர் ஐயாயிரம் பவுண்ஸ் நட்ட ஈடு கொடுக்க வேண்டும். அவர் மனரீதியான உளைச்சலுக்கும் சேர்த்து இது. அடுத்தது நாய்க்கு உடனடியாக வாய்க்கு பூட்டு போட வேண்டும். (நாய்க்கான வாய்ப்பூட்டு கடையில் இருக்கிறது) தொடர்ந்து மருத்துவ செலவுக்கும் பணம் கொடுக்க வேண்டும். நாய் கடித்தாலும் காசு.

-இளைய அப்துல்லாஹ்-

லண்டன்

—-

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்