தேவை : நீதி வழுவா நெறிமுறை

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

நரேந்திரன்


1998-ஆம் வருடம் New York University Journal of International Law and Politics எடுத்த சர்வே ஒன்றின்படி, உலக அளவில் இந்திய நீதி மன்றங்களில்தான் அதிகமான அளவில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏறக்குறைய 25 மில்லியன் வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கின்றது அந்த சர்வே. அதாவது ஒவ்வொரு நாற்பது இந்திய ஆண், பெண், அலி, குழந்தைக்குத் தலா ஒரு ஒரு வழக்கு!

தற்போதைய ஆமை வேக விசாரணைகள் இப்படியே தொடர்ந்தால், இந்திய வழக்காடு மன்றங்களில் தேங்கிக் கிடக்கும் அத்தனை வழக்குகளையும் பைசல் செய்து முடிக்க இன்னும் 350 ஆண்டுகள் தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கின்றார்கள். சாதாரண ஒரு சிவில் வழக்குகளின் ஆரம்ப கட்ட விசாரணை மற்றும் வழக்காடுதல் ஒரு நீதிபதியின் முன் வருவதற்குச் சராசரியாக ஐந்து ஆண்டுகள் ஆகின்றனவாம். அதே வழக்கின் கடைசி கட்ட வழக்கு விசாரணைகள் முடிவடைந்து, இறுதித் தீர்ப்பு வழங்கக் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. சில சமயங்களில் அதற்கும் மேலாகக் கூட.

இன்றைக்கு இந்திய நீதி மன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பல வழக்குகள் 1950-களில் தொடரப்பட்டவை என்பது, இந்திய கோர்ட்டுகளின் செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்த ஒரு சராசரி இந்தியனுக்கு ஆச்சரியமளிக்காமல் போகக்கூடும். இதற்கு நேர்மாறாக, வேக வேகமாக நடத்தித் தீர்ப்பளிக்கப்படும்(!) பல வழக்குகள் சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

உலக அரங்கில் தன்னை மிகப் பெரிய ?னநாயக நாடாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவில் ஏன் இந்த நிலைமை ? ?னநாயகம் என்பது வெறும் ஓட்டளிக்கும் உரிமை மட்டும்தானா ? சாதாரண மக்களின் அபிலாை ?களையும், வழக்குகளையும், அன்றாடப் பிரச்சினைகளையும் உடனுக்குடன் விசாரித்துத் தீர்ப்பளித்தல் என்பது ?னநாயகத் தூண்களின் ஒன்றாகிய நீதித்துறையின் கடமையல்லவா ? பின் ஏன் இந்த மெத்தனம் ? ஒட்டு மொத்த மக்களுக்கும் ?னநாயகத்தின் மீதான நம்பிக்கையல்லவா தகர்ந்து போகும் ? இம் மாதிரியான செயல்பாடற்ற தன்மையால் ஏற்படும் விளைவுகள், ஆபத்துக்கள் பற்றி எனக்குத் தெரிந்தவரை கோடிட்டுக் காட்ட முயன்றிருக்கிறேன். தப்பித் தவறி இதைப் படிக்கும் சட்டத்துறை வல்லுனர்கள் எவரேனும் இதற்கான தீர்வுகளை விளக்கி எழுதுவார்கள் என்று நம்பிக்கையுடன்.

கணக்கற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்க முழு முதற்காரணம், நாட்டின் நீதிமன்றங்களுக்குத் தேவையான அளவு நீதிபதிகளை நியமிக்காமல் வைத்திருப்பது. இந்தியாவிலுள்ள உயர்நீதி மன்றங்களின் நீதிபதி பதவிகளில் ஏறக்குறைய நாற்பது சதவீத பதவிகள் நியமிக்கப்படாமல் காலியாக இருக்கின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். ஒவ்வொரு உயர்நீதி மன்ற நீதிபதியிடமும் குறைந்தபட்சம் மூன்றாயிரம் வழக்குகள் விசாரணைக்குக் காத்துக் கிடக்கின்றன. உலகின் இன்னொரு பெரிய ?னநாயக நாடான அமெரிக்காவில், ஒவ்வொரு மில்லியன் மக்களுக்கும் சராசரியாக 107 நீதிபதிகள் பணிபுரிகிறார்கள். அதே சமயம், மிகப் பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஒரு மில்லியன் மக்களுக்கு வெறும் 13 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

இந்திய அரசியல்வாதிகளுக்குப் பொதுவாக தங்களை மீறிய வலுவுள்ள அமைப்புகளின் மீது அச்சம் இருந்தே வந்திருக்கின்றது. அவ்வாறான அமைப்புகளின் ஆணிவேரை வெட்டிச் சாய்க்கவே அவர்கள் தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார்கள். அது காவல்துறையாகட்டும், பத்திரிகைச் சுதந்திரமாகட்டும் அல்லது நீதிமன்றங்களாகட்டும். தங்களுக்குத் தடைக்கல்லாக இருக்கும், தங்களைத் தட்டிக் கேட்கும், விமரிசிக்கும் எந்த அமைப்பும் அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருப்பதாக கருதுகிறார்கள். எனவே அவற்றின் செயல்பாடுகளை முடக்கிப்போட அவர்கள் ஒருபோதும் தயங்கியதில்லை. நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் அவர்கள் காட்டும் மெத்தனமும் இதன்பாற் பட்டதே.

நீதித் துறையின் முக்கிய அங்கமான இந்தியன் பீனல் கோட், ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னால், 1861-ஆம் வருடம் எழுதப்பட்டு, அவ்வப்போது சிற்சில மாற்றங்களுடன் இன்றும் தொடர்கிறது. மற்றொரு அங்கமான குற்றவியல் நடைமுறைச் சட்டமோ 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. இன்றைய நவீன உலகின் குற்றங்களுக்குச் சரியான தண்டனைகள், வேகமான தீர்வுகள் அவற்றில் இல்லவே இல்லை எனலாம். புதிதாக முளைத்து நிற்கும் சைபர் குற்றங்களுக்குத் தயாராக இந்திய நீதித்துறை தன்னை நவீனப்படுத்திக் கொள்ள இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் கிரிமினல்களும், வெளிப்படையாக நாட்டின் செல்வங்களைச் சுரண்டும் அரசியல்வாதிகளும், தேச துரோகம் செய்யத் தயங்காதவர்களும், தீவிரவாதம் பேசுபவர்களும் தழைக்கிறார்கள்.

போலி ?காரர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் கிரிமினல்கள், ரவுடிகள், கொலைகாரர்கள், அரசியல்வாதிகள்( ?) முகங்களில் தவழும் மந்த ?ாசப் புன்னகையைப் பார்த்திருப்பீர்கள். இந்திய குற்றவியல் சட்டத்தின் தோல்வி அவர்களின் புன்னகையில் அப்பட்டமாகத் தெரியும். பல்லுப் போன நமது சட்டங்களினால் அவர்களை ஒன்றும் செய்ய இயலாது என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். மிஞ்சிப் போனால் இரண்டு மாதங்கள் சிறையில் இருப்பார்கள். சரியான தொடர்புகள் இருந்தால் அதுவும் கூடத் தேவையில்லை. சத்தமில்லாமல் வெளியே வந்து அதே குற்றங்களை மீண்டும் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் தொடருவார்கள். இந்தியக் குற்றவியல் நீதித்துறையானது, தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் ஏராளமான வழக்குகளால் ?தம்பித்து, செயலற்றுப் போய்விட்டது.

எல்லாத் துறைகளிலும் எல்லோரும் மோசமானவர்களாக இருந்து விடுவதில்லை. ஒன்றிரண்டு நியாய உணர்வு உள்ளவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். கடமை உணர்வு உள்ள அதிகாரிகள் ஒன்றிரண்டு பேர்கள் போலி ?துறையிலும் இருக்கவே இருப்பார்கள். அதிபயங்கர குற்றவாளிகள் மிக எளிதாக சட்டத்திலிருந்து தப்பி விடுவது அவர்களின் மனசாட்சியை வதைக்கவே செய்யும். அந்நேரங்களில் சட்டத்திற்கு வெளியே, சட்டத்திற்குப் புறம்பான சில நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க நேரிடுகிறது. உதாரணமாக, பெருகி வரும் ‘என்கவுண்டர் ‘கள்.

ஆபத்தான குற்றவாளிகள் என்று அஞ்சப்படுபவர்களை, போலி ?ாரே ஒரு செயற்கையான மோதலை (அல்லது கற்பனையான) ஏற்படுத்திச் சுட்டுக் கொல்வது என்பது பெருவாரியான என்கவுண்டர்களின் பின்னனி. எளிதில் தப்பி விடக்கூடும் என்று அஞ்சப்படும் அல்லது தங்களுக்குத் தொல்லையாக இருக்கக்கூடும் என்று போலி ? அதிகாரிகள் நினைக்கும் பல கிரிமினல்கள் இம்மாதிரியான ‘என்கவுண்டர்கள் ‘ மூலம் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம், சந்தனக் கடத்தல் வீரப்பன்ர் ( ‘ன் ‘ வேண்டுவோர் ‘ன் ‘னுக! ‘ர் ‘ வேண்டுவோர் ‘ர் ‘ருக!).

கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு முன்பு ‘என்கவுண்டர்கள் ‘ இந்தியாவில் பரவலாக அறியப்பட்டதாகத் தகவலில்லை. ஆனால், கடந்த சில வருடங்களில் இம்மாதிரியான என்கவுண்டர்கள் பரவலாகி இருக்கின்றன. இதுபற்றி இந்திய நீதிமன்றங்கள் வாயே திறப்பதில்லை. மனித உரிமைக் கழகம் போன்ற அடிமட்ட அமைப்புகள் சிறிது கூச்சலெழுப்பி, பின்னர் அடங்கிப்போவார்கள். அந்த வி ?யம் அப்படியே அமுங்கிப் போகும். பின்னர் இன்னொரு என்கவுண்டர் எனத் தொடர்ந்து நடக்கும் அன்றாட நிகழ்வாகிப் போனது இது.

அன்றாட வாழ்க்கையில் காணப்படும் வன்முறையைக் கண்டு வெறுத்துப் போயிருக்கும் அப்பாவிப் பொது ?னங்கள் இவற்றைப் பற்றிக் கவலை எதுவும் படுவதில்லை. மாறாக, இம்மாதிரியான, அரசாங்கத்தால் நடத்தப்படும் வெளிப்படையான கொலைகளை வரவேற்கக் கூடச் செய்வார்கள். அவர்களைப் பொருத்தவரை ஒரு சமூக விரோதி ஒழிந்தான். அவ்வளவே. அதே சமயம், இது போன்ற நடவடிக்கைகளின் பின்னனியில் ஒளிந்திருக்கும் பேராபத்துகளை அவர்கள் அறிந்திருப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன், D-கம்பெனியும் (தாவூத் இப்ரா ?ிம்), சோட்டா ?கீல்களும், சோட்டா ரா ?ன்களும், அருண் காவ்லிகளூம் கோலோச்சும் மும்பை மாநகரத்தின் போலி ? அதிகாரிகளில் சிலருக்கு, மேற்கூறிய தாதாக்களின் ஆட்களை ‘என்கவுண்டர் ‘ மூலம் சுட்டுத்தள்ள உத்தரவளிக்கப்பட்டது. அந்த அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு போலி ? குழு கொடுக்கப்பட்டு, சக்தி வாய்ந்த ஆயுதங்களும் வழங்கப்பட்டன. அவர்களின் கைகளில் சிக்கிய தாதாக்களின் கையாட்கள் பொது இடத்தில் வைத்து, பலரும் பார்க்க சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களின் கைகளில், அவரவரின் நிழலுலக அந்த ?திற்கு ஏற்ப, துப்பாக்கிகள் சொருகப்படும். சிறிய தாதாவிற்கு ரிவால்வர். கொஞ்சம் பெரிய ஆசாமிக்கு ஏ.கே.47 அல்லது ஏ.கே. 56. இப்படி… கொல்லப்பட்ட கிரிமினலுக்கும், தங்களுக்கும் நடந்த மோதலில் மேற்படி ஆசாமியைக் கொல்ல வேண்டி வந்தது என்று கோர்ட்டில் காட்டுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதிகளில் பெரும்பாலோர் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். புகழ் பெற்ற சதா பாவாலே வழக்கை விசாரித்த நீதிபதி அகுயார் (Aguiar) தன் தீர்ப்பில் கீழ்க்கண்டவாறு எழுதினார்,

‘It is amazing that despite Sada Pawle having fired from a sophisticated weapon, namely, an AK-56 which is capable of firing 600 rounds per minute and having an effective range of 300 meters, neither API Mr… nor PSI Mr…, or any of the police officers, suffered any bullet injury…. The police officers must surely bear a charmed life. ‘

மும்பையில் கொஞ்ச நாளைக்கு எல்லாம் சரியாக நடந்தது. அப்புறம் ஒரு அதிகாரி சோட்டா ?கீலிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவனுக்கு எதிரியாக உள்ள கூட்டத்தினரைப் போட்டுத் தள்ளினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மற்றவர்களும் அதனையே செய்திருக்கக் கூடும் (வெவ்வேறு ஆசாமிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு). ஆக, ‘என்கவுண்டர்கள் ‘ என்பது எப்போதும் சரியான பலன்களைக் கொடுப்பதில்லை. நோக்கம் சரியானதாக இருந்தாலும்.

இதே சூழ்நிலையை, ஒரு வாதத்திற்காக, இன்றைய தமிழ்நாட்டுச் சூழலுடன் பொருத்திப் பார்ப்போம். தமிழ்நாட்டின் இருபெரும் அரசியல் கட்சித் தலைவர்களும் சர்வாதிகார மனப்பான்மையும், ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்வும், பொறாமையும், சுயநல நோக்கமும் கொண்டவர்கள் என்பதை நன்கறிவோம். தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு எல்லா விதமான கீழ்த்தரச் செய்கைகளயும் செய்யத் தயங்காதவர்கள். அவர்களின் அதிகார பீடம் வன்முறையாலும், தகிடுதத்தங்களினாலும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும்பொழுதும், தங்களுக்குப் பிடிக்காதவர்களை, தங்களின் செயல்களுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களை, அவர்கள் ஐ.ஏ.எ ? அதிகாரிகளாக இருந்தாலும் சரி, ஐ.பி.எ ? அதிகாரிகளாக இருந்தாலும் சரி, பந்தாடத் தயங்காதவர்கள் என்பதும் நீங்கள் அறிந்ததே.

திராவிடக் கட்சிகளின் அடித்தளம் லோக்கல் ரவுடிகளினாலும், கிரிமினல்களினாலும், தாதாக்களினாலும் ஆனது (என்று வைத்துக் கொள்வோம் ;>)). ஆட்சியில் இருக்கும் ஒரு திராவிடக் கட்சியானது, தனது எதிர்க்கட்சியின் கிரிமினல்களை (மட்டுமே) கைது செய்யலாம். தேவைப்பட்டால் அவர்களை ‘என்கவுண்டர்கள் ‘ மூலம் சுட்டுத்தள்ளலாம். இதன் மூலமாகவே, தங்களை எதிர்த்து எழுதும் பத்திரிகைகளை அடித்து நொறுக்கவும், எழுதுபவர்களை, வழக்குத் தொடுப்பவர்களை வதைக்கலாம். மிரட்டலாம். அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற நிலை வந்து விடக்கூடும். இதனால் நான், நீங்கள், அவர், இவர் என்று யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படக் கூடிய நிலை வருவது மிகவும் சாத்தியமானதே.

ஒரு சில நேர்மையான அதிகாரிகளின் நல்லெண்ணம் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தீமையாகவே முடியக் கூடிய சாத்தியங்களே அதிகம். ஏற்கனவே தவறானவர்கள் கையில் இருக்கும் அதிகாரம் இதனால் தீமையான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, ?னநாயக அமைப்பில் என்கவுண்டர்கள் ஒரு சரியான தீர்வாக இருக்கவே முடியாது. குற்றவியல் நீதிமன்றங்கள் முழுமையாக overhaul செய்யப்பட்டு, வழக்குகளை விரைவாக முடிப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.

பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகள் நீதி மன்றங்களையும் அதன் தீர்ப்புகளையும் மதிப்பதில்லை. 1975 தேர்தலில், மறைந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் பெற்ற வெற்றி செல்லாது என அலகாபாத் கோர்ட் தீர்ப்பளித்த பின்பு நடந்தவைகள் இந்திய ?னநாயகத்தில் ஒரு கரும்புள்ளியாகவே இன்றைக்கும் இருக்கிறது. மீண்டும் அதுபோல நிகழாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. மீண்டும் நிகழ்வதற்கான சாத்தியங்களே இன்றைய இந்தியச் சூழலில் அதிகம். அசாதாரணமான சூழ்நிலைகளில் இந்திய கோர்ட்டுகளின் நடவடிக்கைகள் சத்தமின்றி அடங்கி விடுவதுவே அடிக்கடி நிகழ்கிறது.

பொழுது போகாத அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் வழக்குத் தொடர்ந்து கொள்ளும் காட்சிகள் இந்தியாவில் ஏராளம். தீர்ப்பு தனக்குச் சாதகமாக வருகிறதா, இல்லையா என்பது பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. தன் எதிராளியைத் தொல்லை செய்யும் ஆயுதமாக அந்த வழக்குகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டு அகமகிழ்வார்கள். மாபெரும் ஓட்டைகளுடன் சட்டங்கள் இயற்றுவதில் நம்து அரசியல்வாதிகள் விற்பன்னர்கள். சரியான முறையில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் தண்டனை பெறுவதில் அவர்களே முதலாக இருப்பார்கள் என்பதால்.

நமது காவல் நிலையங்களோ எந்தவிதமான நியதிக்கும் கட்டுப்படாதவை. ஒரு காவலதிகாரி நினைத்தால் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைமையே இன்று காணப்படுகிறது. Custodial death எனப்படும் காவல் நிலையச் சாவுகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். சென்ற 2004-ஆம் ஆண்டு மும்பைக் காவல் நிலையங்களில் மட்டும் 300 விசாரணைக் கைதிகள் மரணமடைந்திருக்கிறார்கள். இந்த நிலையே இந்தியா முழுமையிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான காவல் நிலையங்களிலும் இருக்கிறது. இவற்றில் வெளிவராமல் போகும் கே ?களே அதிகம். அப்படியே வெளிவந்தாலும் அது, கட்டிலிலிருந்து தவறி விழுந்து இறந்தார் அல்லது கட்டில் அவர்மேல் விழுந்ததால் இறந்தார் என்பதாகவே இருக்கும். இதை எதிர்த்து யாராவது வழக்குத் தொடுத்தால்தான் உண்டு. அப்படியே தொடுத்தாலும் உடனடி நீதி என்பது எட்டாக் கனிதான்.

இந்தியாவில் யாரும் யார்மீதும் நயா பைசா செலவில்லாமல் வழக்குப் போடலாம். எந்தச் செயலையும் ‘ ?டே ஆர்டர் ‘ வாங்கி முடக்கி வைக்கலாம். வழங்கப்படும் ?டே ஆர்டரால் சமுதாயத்திற்கு நன்மையா, இல்லையா என்பது பற்றியெல்லாம் கோர்ட்டுகள் கவலைப்படுவதில்லை. அது பொதுமக்களுக்கு மிக அத்யாவசியமான சாலைப் பணியாகட்டும் அல்லது நடைபாதைக் கடைகளாகட்டும் அல்லது வேறு முக்கியப் பணியாகட்டும். கவலைப்படுவோர் ஒருவருமில்லை.

ஒத்தி வைக்கப்படும் வழக்குகளுக்கும் அளவில்லை. ஒரு நீதிபதியின் முன் வரும் வழக்கை அவர் காலவரையின்றி தொடர்ந்து ஒத்தி வைத்துக் கொண்டே போகலாம். உலகின் எந்த நாட்டிலும் இது போன்ற நடைமுறை வழக்கத்தில் இல்லை. இதனால் ஆகும் கால மற்றும் பண விரயம் குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. ஒருவர் மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அவர்களின் பேரன், பேத்திகள் காலத்திலாவது வழங்கப்பட்டால் அதுவே மிகப் பெரிய சாதனையாகக் கூட இருக்கக்கூடும். இந்தியச் சிறைகளில் வாடும் பெரும்பாலான கைதிகள் அவர்களின் வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வருவதற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்களே அதிகம். அவர்களின் வழக்கு விசாரிக்கப்பட்டு முடிக்குமுன், அவர்கள் செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் நியாயமான தண்டனையை விடவும் அதிகமான தண்டனையை அவர்கள் அனுபவித்து முடித்திருப்பார்கள்.

திறமையற்ற போலி ?காரர்களால் ே ?ாடிக்கப்பட்டு, திறமையற்ற அரசாங்க வக்கீல்களால் வாதிடப்படும் பல வழக்குகள் தோல்வியிலேயே முடிவதால், குற்றவாளிகள் எளிதில் தப்பி விட முடிகிறது. கிரிமினல்களும், ஊழல்வாதிகளும், சமூக விரோதிகளும் தங்கு தடையின்றி உலா வருகிறார்கள். ஏழைகளும், பெரிய இடத்துத் தொடர்பு இல்லாதவர்களும், சிறு சிறு குற்றங்கள் புரிபவர்கள் போற்றோருக்கு வழங்கப்படும் சிறைத் தண்டனையில் ஒரு சிறு பகுதி கூட கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்பவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்தியாவின் பல வழக்குகளின் முடிவுகள் ‘சூட்கே ? ‘களால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது பொய்யாக இருக்க முடியாது. ?ர் ?த் மேத்தாவிலிருந்து நேற்றைய முகமதலி வரை ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. போஃபோர் ? போன்ற ஒரு துக்கடா வழக்கிற்கு 250 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. இறுதியில் தண்டனை பெற்றவர்கள் ஒருவருமில்லை. ஏழைகளின் வரிப்பணம் பாழானதுதான் மிச்சம். இதே நிலைதான் மற்ற high profile வழக்குகளுக்கும். கொள்ளை போன பணம் போனதுதான். திரும்பி வரப்போவதுமில்லை. யாரும் தண்டனை பெறப்போவதுமில்லை. பின் எதற்காக இந்த நாடகம் ?

இந்தியாவில் சட்டங்களை உடைத்தால்தான் சர்வைவ் ஆக முடியும் என்ற எண்ணம் பொதுவாக அனைவரிடமும் காணப்படுகிறது. சட்டத்தினை மதிக்க வேண்டும் என்ற உணர்வே பொது மக்களில் பலருக்கு இருப்பதில்லை. சட்டத்தை மீறிச் செயல்படுவது ஒரு சராசரி இந்தியனைப் பொறுத்தவரை சாதாரண நிகழ்வு. அது டிராஃபிக் சட்டமாகட்டும் அல்லது ப்ளாக்கில் சினிமா டிக்கெட் வாங்குவதாகட்டும் அல்லது வேறு சட்ட விரோதச் செயலாகட்டும். யாரும் கவலைப்படுவதில்லை. கான் ?டபிள் பிடித்துக் கொண்டாரா ? இலஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொள். யார் கோர்ட், கே ? என்று அலைவது ? என்று இருப்பவர்களே அதிகம் அங்கே.

தெளிவற்ற நடைமுறைகளும், மெத்தனமான நீதிமன்ற நடவடிக்கைகளும் ஒரு ‘பாரல்லல் எகானமி ‘யை உருவாக்கி இருக்கின்றன. இலஞ்சம் கொடுப்பது அல்லது வாங்குவது யாருடைய மனசாட்சியையும் உறுத்துவதில்லை. ஃபா ?ட் ஃபுட் காலத்தில் எல்லாருக்கும் இன் ?டண்ட் ரிசல்ட் தேவைப்படுகிறது.

வீட்டைக் காலி செய்யாத குடித்தனக்காரர் மேல் கே ? போட்டு, அது விசாரணைக்கு வந்து, தீர்ப்பு வருவதற்கு முன், வீட்டுச் சொந்தக்காரர் இறந்தே போயிருப்பார். ஒரு கட்டைப் பஞ்சாயத்துக்காரரையோ, லோக்கல் தாதாவையோ (அரசியல்வாதி என்றும் அறிக) அனுகினால், தகராறு செய்யும் குடித்தனக்காரர் ஒரே வாரத்தில் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஒடியிருப்பார் அல்லது ஓட்டப்பட்டிருப்பார் என்பது நாம் தினமும் பார்த்து அனுபவிக்கும் ஒரு உதாரணம். இதே உதாரணம் அனேகமாக நமது எல்லா தினப்படி நடைமுறைகளுக்கும் பொருந்திவரும்.

இந்தியாவில் நிலவிவரும் பல விசிச்த்திரமான நடவடிக்கைகளில், நீதிமன்றங்களை யாரும் விமரிசிக்கக் கூடாது என்பதும் ஒன்று. பத்திரிகைகளாகட்டும் அல்லது வேறு ஊடகங்களாகட்டும். யாரும் நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமரிசிக்கத் துணிவதில்லை. ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ‘ என்ற கத்தி அவர்களின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். நாட்டின் பிரதம மந்திரியையே விமரிசிக்கும் பத்திரிகைகள், நீதிமன்றங்களை மட்டும் விமரிசிக்கக் கூடாதாம். என்னய்யா ?னநாயகம் இது ? கடுமையான விமரிசனம் செய்யப்படும் பல துறைகளே சரிவர இயங்காமலிருக்கும் போது, விமரிசிக்கவே கூடாத நீதி மன்றங்கள் எவ்வாறு செயல்படும் என்பதை இங்கு விளக்கத் தேவையில்லை. ‘ஒளி வட்டம் ‘ பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் என்றால், அந்தத் துறை ஏன் இந்த அளவிற்குச் சீர்கெட்டுக் கிடக்கிறது ?

‘உயர்நீதி மன்றங்களில் பணிபுரியும் 20 சதவீதத்திற்கும் மேலான நீதிபதிகள் ஊழல்வாதிகள்! ‘ சொன்னது உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி. இவர்களை விமரிசிப்பதில் என்ன தவறு ? அமெரிக்கா போன்ற ?னநாயக நாடுகளில் இதுபோன்ற தடைகள் எதுவுமில்லை. யாரும் யாரை வேண்டுமானாலும் விமரிசிக்கலாம். அங்கு நீதித் துறையின் செயல்பாடு திருப்திகரமாகத்தானே இருக்கிறது ?

நீதிமன்ற செயல்பாடுகள் இழந்த நம்பிக்கையை மக்களிடம் மீட்டெடுக்கும் வரை, தமிழ் சினிமாக் கதாநாயகர்கள் சட்டத்தைக் கையிலெடுத்து கழைக்கூத்தாடுவதைக் கண்டு ரசித்து, விசிலடித்து வருவதைத் தவிர வேறு வழி இல்லை என்றே தோன்றுகிறது.

(இக் கட்டுரையில் காணப்படும் பல தகவல்கள் Suketu Mehta எழுதிய Maximum City என்ற, ஆங்கிலத்தில் மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ள புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும், இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள பல கருத்துக்கள் எனது சொந்தக் கருத்துக்களே. ‘திண்ணை ‘ ஆசியருக்கோ அல்லது அதன் ஆசிரியர் குழுவினருக்கோ எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்).

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்