உயிர்-தொழிநுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் – பரம்பரை உருமாற்றப்பட்ட உணவு. (Genetically Modified Food)

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

அ.மு.றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg).

புரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகள் என்பது உணவு உற்பத்தியை கூட்டும் அல்லது அதற்கான வல்லமையைக் கொண்ட ஓர்கனோ பொஸ்பேற்றைக் குறைவாக வேண்டி நிற்கும், நல்ல விளைச்சல் போன்ற நன்மைகளைத் தரும் உணவுகளாகும் என்று பொிய உயிர்-தொழில் நுட்பவியல் கம்பனிகளும், பொிய விவசாயத் தாபனங்களும், ஏகாதிபத்தியவாதிகளின் பல்தேசியக் கம்பனிகளும் வரைலிலக்கணப்படுத்தி, அதனை மேற்கில் பயிற்றுவிக்கப்பட்ட மூன்றாம் மண்டல நாடுகளின் பேராசிாியர்களின் மூலம் மூன்றாம் மண்டல நாட்டு; மாணவர்களுக்கு மனப்பாடமாக்கச் செய்விக்கின்றனர்.

இந்த வரைவிலக்கணத்தில் சிறிய உண்மை இருக்கலாம். ஆனால் இந்த இயற்கையைக் குழப்பும் தொழில்நுட்பத்தின் பயங்கரத்தை அதனை உருவாக்கியவர்களுக்கே அனுமானிக்க முடியாதளவுக்கு இப்போது நிலைமை வளர்ந்துவிட்டது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தொிந்திருந்தும், வாய் மூடி பேசாமல் இருக்கின்றது. ஏனெனில் ஐக்கிய அமாிக்காவினதும், மொன்சன்ரோ போன்ற பாாிய அமாிக்க கம்பனிகளினதும் நெருக்குதலினாலும். ஐக்கிய இராச்சியத்தை மட்டுமன்றி மேலும் பல நாடுகள் இந்த பரம்பரை உருமாற்றப்பட்ட உணவைப் பயன்படுத்துமாறு அமாிக்கா வற்புறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை உண்போர் வேற்றுகிரகத்து மக்கள் என்று நினைத்துக் கொண்டு, நுகா;வோர் கருத்துக்களும், விருப்பங்களும் மதிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படுகின்றன. அமாிக்கா வற்புறுத்த என்ன காரணம் இருக்கிறது ? வேறு என்ன காரணம். குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான பில்லியன்கள் இலாபத்தை சுரண்டிப் பெறுவதற்குத்தான்.

ஓரு அந்நிய பரம்பரையலகானது வெட்டி எடுக்கப்பட்டு அதனோடு முற்றிலும் சம்பந்தமில்லாத இன்னொரு உயிாியின் கலத்துடன்; டாஎன்ஏ மீளச் சேர்க்கை தொழில் நுட்பம் மூலம் ஒட்டப்படுகிறது. இங்கே மீனினது டாஎன்ஏ உருளைக் கிழங்குக்கும், மனிதனது பன்றிக்கும், தேளினது, தக்காளிக்கும், போன்ற பொருத்தமில்லாத மாற்றீடுகள் செய்யப்பட வாய்ப்பிருக்கின்றன. இதன் பின்னர் விஞ்ஞானிகள் அகோரமான உணவு அரக்கன்களைப் படைக்கிறார்கள். இந்த உணவுப் பொருட்கள்தான் பரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகள். சுருக்கமாக ஜீஎம் உணவுப் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த உணவுப் பொருட்கள் எத்தனை போின்; அங்கவீனத்திற்கும், சாவிற்கும் காரணமாக இருந்திருக்குமோ தொியாது. இது நாள் வரையும் மனிதனுடன் உணவு மூலம் சம்பந்தப்படாத புதிய நஞ்சு வகைகளும், ஒவ்வாமைக் காரணிகளும் தாவரங்களிலிருந்து மனிதனுக்கு இந்த ஜீஎம் உணவுப் பொருட்கள் மூலம் தொற்றியுள்ளன. பரம்பரை உருமாற்றப்பட்ட சோளத்திற்குள் செலுத்தப்பட்ட பயங்கர பக்டாாியாவானது, சோளத்திலிருக்கும் உருமாற்றப்பட்ட பக்டாாிய டாஎன்ஏ வானது மனிதக் குடலில் சோளம் சமிபாடடைந்த பின்னும் தங்கி நின்று மனிதனின் நிாப்பீடனத் தொகுதியை செயலிழக்கச் செய்கின்றன. இதற்கு உதாரணமாக அம்பிசிலின் செயலிழந்ததைச் சொல்லலாம்.

யாராலுமே எப்போதுமே என்னவாயிருக்கும் ?, எப்படியிருக்கும் ?; என்று அறுதியிட்டுக் கூற முடியாத பல்லாயிரக் கணக்கான உருமாற்றப்பட்டு, அவை ஒன்றும் செய்யாது தீமை பயக்காது என்று நம்பவைக்கப்பட்டு, உயிாிகளை புதிய சூழலுக்கு விடுவிக்கிறோம், சாப்பிடுகிறோம். வியட்நாமிய யுத்தத்தில், வியட்நாமிய போர்வீரா;கள், கொில்லாக்கள் இருந்த காடுகளின் இலைகளை உதிரச் செய்ய பயன்படுத்திய, அந்நாளில் கொில்லாக்களுக்கும், படைவீரா;களுக்கும் மிகுந்த உடல்நல, சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்திய இரசாயனப் பொருளைப் பாவித்து அமாிக்க மொன்சன்ரோ கம்பனி ஓரஞ்சுப் பழங்களை உருவாக்கியுள்ளது. பசுமாட்டுக்கு ஓமோன் ஊசி அடிப்பதன் மூலம் பாலுற்பத்தியை இதே கம்பனி பெருக்கியிருக்கின்றது. ஆனால் அந்தப் பால் நுகா;வோருக்கம், விற்பனையாளர்களுக்கும் ஓமோன் ஊசி மூலம் உருவாக்கப்பட்ட பால் என்று அறிவுறுத்தப்பட்டதா என்பது கேள்விக்குாிய விடயமே.

மொன்சன்ரோ உருவாக்கியிருக்கும் நிறைய உணவுப் பொருட்கள்; மூளைப் புற்றுநோயை உருவாக்க வல்லன என்று கருதப்படுகின்றன. பீடைக்கும், நோய்க்கும் எதிர்த்து நிற்கும் (சுப்பர்) பயிர்களை உருவாக்குகிறோம் என்று பீற்றிக்கொண்டு, அந்தப் பயிர்களை என்றுமே கட்டுப்படுத்த முடியாத (சுப்பர்) களைகளாக மாற்றிய பெருமையும், பரம்பரைப் பொறியியல் (Genetical Engineering) மூலம் புதிய மீனினங்களை உருவாக்குகிறோம் என்று கூறிக் கொண்டு, விரைவாக வளரும் மீனினங்களை உருவாக்கி, அவற்றை நீர்;நிலைகளில் விட்டு, காலம் காலமாக இலட்சக் கணக்கான வருடங்களாக நீர்நிலைகளில் வாழ்ந்த உள்நாட்டு மீனினங்களை அடித்து துரத்தி அவற்றை அழிவுக்குள்ளாக்கிய பெருமையும் இந்த அழிச்சாட்டிய கம்பனிகளுக்குத்தான் சாரும்.

ஏற்கனவே பெரும்பாலான ஜீஎம் உணவுப் பொருட்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் சுப்பர் மார்க்கட்டுக்களின் அலுமாாிகளை நிரப்பியிருக்கின்றன. இன்னும் ஆயிரக்கணக்கான உணவுப் பொருட்கள் விற்பனைக்குத் தயாராக அணிவகுத்து நிற்கின்றன. இதன் அடுத்த பாய்ச்சல் மூன்றாம் மண்டல நாடுகளை நோக்கித்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. நமது நாடுவரை இன்று ஜீஎம் உணவுப் பொருட்கள் வந்துவிட்டன. மூன்றாம் மண்டல நாடுகள் அதற்குப் பெயரளவில் எதிர்ப்புத் தொிவித்தாலும், பல்தேசியக் கமபனிகளின் நிர்ப்பந்தம் இருக்கின்ற நிலையிலும், ஜீஎம் உணவுப் பொருட்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் இல்லாத போதும், அதனது படையெடுப்பை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது கேள்விக்குாிய விடயமே. மேலும் எளியவர்களை நோக்கிய வலியவர்களின் புத்திசாதூியமான படையெடுப்பே இந்த உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியமாகும்.

மூன்றாம் மண்டல நாடுகளுக்கிடையே சண்டை ஏற்படுத்துவதிலும் இந்த உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம் குறியாயிருக்கின்றது. மூன்றாம் மண்டல நாடுகள் மிகுந்த எத்தனத்தின் மத்தியில் ஒரு சிறந்த தானிய இனத்தையோ அல்லது பயிரையோ கண்டு பிடித்தால் (அது பேடன்ட் செய்யப்பட்டது என்றாலும்) இந்த பல்தேசியக் கமபனிகள் வைரசுகளையம், பக்டாாியாக்களையம் புகுத்தி அதனைவிட கூடிய விளைவைத் தரும் அதே மாதிாி போலி ஜீஎம் தானியங்களை அல்லது பயிர்களை கண்டுபிடித்து அதன் அயல்நாடுகளுக்கு கொடுத்து அல்லது அதன் பயன்களை அனுபவித்து, முக்கிய வருமானம் தரும் வழிகளில் ஒன்றாக இருந்த அந்தப் பயிர்களை நம்பியிருக்கும்; அந்நாடுகளை பொருளாதாரீதியில் ஆட்டம் காணவைக்கிறார்கள். இதற்கு உதாரணமாக, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளின் சில அாிசி, எண்ணெய்ப் பயிர்களைக் குறிப்பிடலாம்.

இதிலிருந்து பரம்பரையியல் மாசுபடல் ((Genetical pollutionெ) என்ற சொல்லாடலின் கருத்தாடலுக்கு நாங்கள் வரவேண்டியிருக்கின்றது. பரம்பரை உருமாற்றப்பட்ட, பழைய நிலைக்கு மீண்டும் வரமுடியாத, தானாகப் பெருகிக் கொண்டேயிருக்கும் உயிாிகளால் சூழலில் ஏற்படுத்தப்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் பரம்பரை மாசுபடல் எனலாம். இந்த மாசுபடல் பயங்கரமானது. உதாரணமாக ஒரு இரசாயனப் பொருள் (டாடாாி) உயிாினங்களின் உடம்புக்குள் சென்றால் காலக்கிரமத்தில் அது அளவில் குறைவடைந்து இல்லாமலாகிவிடும்;. ஆனால் அந்த ஜீஎம் உயிர்கள் முடிவற்றுப் பெருகி;க் கொண்டே இருக்கும்.

எவ்வளவுதான் சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுக்ள் இருந்தாலும் கிழக்கு ஐரோப்பிய, மூன்றாம் மண்டல நாடுகள், உலக வங்கி, சர்வதேச நாணய சபை, வல்லரசுகள் போன்றவற்றின் கடன்களையும், நிவாரணங்களையும் எதிர்பார்த்து நிற்பதாலும், உலக வங்கி, சர்வதேச நாணய சபை, வல்லரசுகள் போன்றவைகளின் அனைத்து உயிாிகளின் நலனை நோக்கிய பொருளாதார நோக்கினைத் தவிர்த்து, இலாபத்தை மையப்படுத்திய பொருளாதார நோக்கு இருப்பதாலும் இந்த உயிர்-தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதத்திலிருந்து மீளுவது கடினமாக ஒன்றாகவே இருக்கும்.

—-

riyasahame@yahoo.co.uk

Series Navigation

அ.மு.றியாஸ் அஹமட்

அ.மு.றியாஸ் அஹமட்