வீங்கலையால் பாதிக்கப்பட்டுள்ள கடலோர மக்களுக்கு மறுவாழ்வளிப்பதும் மீன் பிடித்தல், உள்நாட்டு நாவிகம் உட்பட்ட கடற்கரைப் பாதுகாப்பு

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

குமரிமைந்தன்


1, பாதிப்புக்குள்ளாகும் மட்டத்தை நிறுவுதல்

(அ) உள்ளூர் உசாவலின் மூலமும் நேரடி நோட்டத்திலும் வீங்கலை எட்டிய உயரத்தையும் திரும்பிய நீரின் உயர்மட்டத்தையும் உறுதிப்படுத்தல்,

(ஆ) அலை புகுந்த மட்டமும் திரும்பிய மட்டமும் எல்லா இடங்களிலும் ஓரே சீராக இருந்தனவா மண்டலங்கள் அந்தந்த இடத்துகேற்ப மாறுபட்டிருந்ததா என்பதை அறிதல்,

(இ) மண்டல அல்லது உள்ளூர் அளவில் இருந்தால் ஒரு சராசரியான அல்லது மண்டல அல்லது உள்ளூர் அளவிலான மட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானத்தில்,

(ஈ) மனிதத் தலையீட்டின் விளைவுகளை விலக்க கீழ்க்காணும் வகையில் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும்,

(க) கடற்கரை கடலினுள் புடைத்து நிற்கிறதா. உள் நாட்டை நோக்கிக் குழிந்து உள்ளதா ?

(உ) அலை கரையை எந்த திசையிலிருந்து தாக்கியது ?

(ங) கடற்கரையி;ல் மனிதர்கள் ஏற்படுத்திய தாழ்நிலங்கள்,

(ச) கடலினுள் பாயும் உள்ளூர் மழைநீர் ஓடைகள்,

(ரு) பாலங்கள். கட்டடங்கள் போன்ற தடைகள் கடலை நெருங்கி அமைந்திருத்;தல்,

(சு) கட்டுமரங்கள்.படகுகள் போன்று உதிரியாக விடப்பட்ட பொருட்கள் உள்ளமை,

புள்ளியியலாலிருடன் கடலியல் வல்லுநர்களின் பணி இதற்குப் பயன்படும்,

2, குடியிருப்பு இடங்களைத் தீர்மாணித்தல் ,

(அ) பாதிப்பு மட்டத்தின் சமமட்டக் கோட்டைத் தடம்பிடித்து பொருத்தமான மட்டமுள்ள ஓர் இடத்தை இனங்காணுதல்,

(ஆ) அந்த இடம் உள்நாட்டுடனும் மீன்பிடி தளத்துடனும் எளிதில் இணைக்கத் தக்கதாய் இருக்க வேண்டும்,

இதற்கு இந்திய நில அளவைத்துறை. மாநில நிலஅளவை மற்றும நில ஆவணங்கள் துறை. வருவாய்த் துறை ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்,

3, குடியிருப்பு வகையை முடிவு செய்தல் ,

(அ) தரைத் தளத்தைக் குடியிருப்பு அல்லாத நோக்கங்களாக்காக ஒதுக்கி விட வேண்டும்,

(ஆ) வீங்கலையிலிருந்து பாதுகாப்புக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பு சிறந்தது, தரூ2 விரும்பத்தக்கது,

(இ) கான்கிரீட் முளைகள் மீது அமைந்த தூண்கள் மீது கட்டடங்களை எழுப்ப வேண்டும்,

இங்கு பயனாளிகளின் தேர்வைக் கணக்கில் கொள்ள வேண்டும்,

கட்டுமானப் பொறியாலர்கள். மண்பொறியியல் வல்லு}நர்கள். கட்டடக் கலைஞர்கள் ஆகியோரின் பணி தேவை, நகர ஊரமைப்புத் துறையினர். உள்ளாட்சி அமைப்பினர் ஆகியோரையும் கலந்து செயற்பட வேண்டும்,

4, கரைப் பாதுகாப்பு ,

(அ) தேரியை (மணற்குன்று) கடற்கரை நெடுகிலும் மீட்டல்,

(ஆ) தேவைப்படும் மண்ணை. உள்நாட்டு வாய்க்கால் தோண்டுகையிலும் மீதியைக் கடற்கரையிலிருந்தும் பெற வேண்டும்,

(இ) தேரியின் மேல் மட்டம் ஒரே சீராக அல்லது களநிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டுமா என்பதை 1(ஆ) பத்தியின் படி முடிவு செய்ய வேண்டும்,

(ஈ) தேரியின் உச்சி அகலம் ஒரு நால்வழிப்பாதை செல்லுமளவுக்கு இருப்பது சிறப்பு. இருவழிப்பாதை இண்றியமையாதது, இரு நேர்வுகளிலும் கடல் நோக்கியும் கரைநோக்கியும் பார்வையாளர் தளங்களை ஆங்காங்கே அமைக்க வேண்டும்,

(உ) ஆற்றுக் கழிமுகங்களில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீண்;ட இடைவெளிகளிலும் கூடுதல்; உயரத்திலும் எழுப்பப்படும் தூண்களின் மீது பாலங்களை அமைக்க வேண்டும்,

(ஊ) உள்நாட்டினுள் இட்டுச் செல்லும் சாலைகளுடன் இணைப்புக்கு உள்நாட்டு நாவிகக் வாய்க்காலில் படகுகள் சொல்லுமளவுக்கு உயரத்தில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்,

(எ) காற்று மற்றும் கடல் அரிப்புகளை அடம்பு அல்லது கடம்பு எனப்படும் கொடி. அங்குவளமும் தனிப் புல்வகைகள். தென்னை. பனைவகை மரங்கள் முந்திரிமரம் போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்த வேண்டும், சவுக்கு. உடை. நீலகிரிபோன்ற விறகுக்கும் தடிக்கும் ஆன மரங்களை தேரிச் சாய்வுகளில் வளர்க்கக்கூடாது,

இப்பணிக்கு கான்துறை. தோட்டக்கலைத்துறை. சூழலியலாளர்கள். நெடுஞ்சாலைப் பொறியாளர்கள். மண்வளப் பாதுகாப்புத்துறையினர் ஆகியோர் தேவைப்படுவர், சுற்றுலாத்துறையினரையும் கலந்து கொள்ள வேண்டும்,

5, உள்நாட்டு நாவிக வாய்க்கால்

(அ) வாய்க்கால். பகுதியோ முழுமையோ தூர்ந்துள்ள இடங்களில் அதனை உயர் மற்றும் தாழ் ஓத மட்டங்களில் பயணிகள் மற்றும் சரக்கு நீர் வழிப் போக்குவரத்து கிடைக்குமளவு கொள்ளளவுடன் மீட்க வேண்டும்,

(ஆ) கடலில் நேரடியாகக் கழிமுகங்களைக் கொண்ட ஆறுகளினுள் பாயாமல் இடையில் உள்ள நிலங்களில் பெய்யும் மழைநீரையும் கொள்ளுமாறு வாய்க்காலின் கொள்ளளவு இருக்க வேண்டும்,

(இ) கழிமுகங்களுக்கிடையில் பாயும் மழைநீரின் அளவுக்கேற்ப கால்வாயின் கொள்ளளவு மாறலாம்,

(ஈ) இந்த மழைநீரை இயற்கையான தாழ்நிலங்களிலோ தோண்டப்பட்டோ அமையும் காயல்களில் பாயவிட்டு வாய்க்காலினுள் விடுதல் நன்று,

(உ) காயல்களிலிருந்து மழைநீரை கால்வாயின் நிலம் நோக்கிய கரையில். உப்புநீர் காயலில் புகாத வகையில் உயர் ஓத மட்டத்தில் உச்சி மட்டத்தைக் கொண்;ட நீரேந்திகளின் வழியாக கால்வாயினுள் விட வேண்டும்,

(ஊ) காயலின் மேலீற்று நீர் மட்டம். அதாவது மேலீற்றுக் காயல் மட்டம் (மே,கா,ம) நயமான நீரேந்தி நீளத்தில் அதன் ஏந்துகைப் பரப்பிலுள்ள மேலீற்று வெள்ளத்தைப் பாயவிடத் தக்கதாயிருக்க வேண்டும்,

இந்த இலக்குகளை அடைய நீரியலாளர்கள். பாசனப் பொறியாளர்கள் மற்றும் நாவிக வல்லுநர்களின் பணியைப் பயன்படுத்த வேண்டும்,

6, துறைமுகங்களும் தூண்டில் வளைவுகளும்

(அ) மிகச்சிறு. சிறு. சிறுதர. பெருந்தர மீன்பிடி துறைமுகங்களை ஆற்றுக் கழிமுகங்களின் மேலோடையில் கழிமுகங்களின் அளவுக்கேற்ப உரிய துணை அமைப்புகளோடு அமைக்க வேண்டும்,

(ஆ) துறைமுகங்களுக்கிடையிலான தொலைவு குறிப்பிடத்தக்கதாக இருந்தால் இடையில் சின்னஞ்சிறு துறைமுகங்களை பொருத்தமான இடங்களில் அமைக்க வேண்டும்,

(இ) ஒவ்வொரு துறைமுகத்திலும் மீன்பிடி தொழிலாளர்களுக்கு தங்கு கூடங்கள். மீன்படி தளவாடங்களை வைக்கும் அறை. படகு பராமரிப்புத் தளம். மீன் பிரித்து சந்தைக்கு அனுப்பும் இடம். வலை முதலிய தளவாடங்களைப் பராமரிக்கும் கூடம். வலை உலர்த்தும் தளம். மீன் உலர்த்தும் தளம். குளிர்பதனக் கிடங்கு. உணவகம். மனமகிழ் மன்றம். மருத்துவமையம். நு}லகம். படிப்பகம். வானிலை நோட்டகம். குறியறிமையம். பேரிடர் புகலிடம். பேரிடர் எச்சரிக்கை மையம். மீன்பிடி தொழில் தொடர்பான பயிற்சி நிலையங்கள் முதலியவை இருக்க வேண்டும்,

(ஈ) பொருத்தமான இடங்களில் முறையான பெருந்துறைமுகங்களை அமைக்க வேண்டும்,

இப்பணிகளுக்கு துறைமுகப் பொறுப்புக் கழகங்கள். நாவிக வல்லுநர்கள். புவியியங்கியலாளர்கள். கடலியலாளர்கள். மீன்பிடி வல்லுநர்கள். கடலியற் கட்டுமானப் பொறியாளர்கள். காலநிலைக் கணிப்பாளர்கள். தொலை உணர்வியலாளர்கள். குறியறி சிறப்பாளர்கள் ஆகியோரின் பணிதேவை,

மொத்தத்தில் கீழ்க்கா ?ணும் துறை வல்லுநர்களின் ஒருங்கிணைப்பு இன்றியமையாதது ?

1,புள்ளியியல்.

2,இந்திய நில அளவைத் துறை.

3,மாநில நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறை.

4,வருவாய்த் துறை.

5,கட்டடப் பொறியாளர்கள்.

6,கட்டடக் கலைஞர்கள்.

7,மண் பொறியாளர்கள்.

8,நகர ஊர் அமைப்புத் துறையினர்.

9,உள்ளாட்சிகள்.

1,0நெடுஞ்சாலைத் துறை.

11,மண்வளப் பாதுகாப்புத் துறை.

12,தோட்டக்கலை வல்லுநர்கள்.

13,கான்துறை.

14,சுற்றுலாத்துறை.

15,சூழியல் துறை.

16,நீரியல் துறை.

17,பாசனத் துறை.

18,துறைமுகப் பொறுப்புக் கழகம்.

19,நாவிகத் துறை.

2,0புவி இயங்கியல் துறை.

21,கடலியல் கட்டுமானப் பொறியாளர்கள்.

22,வானிலைக் கணிப்புத்துறை.

23,தொலை உணர்வுத் துறை.

24,குறியறி துறை.

25,பேரிடர் மேலாண்மை.

26,கடலியலாளர்கள்,

குமரிமைந்தன்.

பொறியாளர் பொ,ப,து,. (ஓய்வு).

kumarimainthan@sify.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்