அரசியல் கட்சிகள் வெற்றி, மக்கள் தோல்வி

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

குண்டலகேசி


பா.ஜ.கவின் ‘இஇந்தியா ஒளிருகிறது ‘ என்ற மாயையும், எங்களால் மட்டுமே நிலையான அரசு தர முடியும் என்ற பிரசாரமும், கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற ஆணவமும், பத்திரிகைகள் எழுதிய பொய்ப் பிரசாரங்களும் உடைத்து எறியப் பட்டிருக்கிறன. பா.ஜ.க

அதிகாரத்தில் மூழ்கி எதார்த்தத்தை மறந்து மகாபாரத திருதிராஷ்டிரன் போல குருடாக காட்சி அளிக்கிறது. கடும் கோடையில் தேர்தல் வைத்தஇவர்களின் அரசியல் அறிவை பாராட்டாமல் இருக்க முடியாது. இதே அரசியல் அறிவுதான் திமுகவை கூட்டணியிலிருந்து துரத்தியது போலும்.

சோனியா வெளிநாட்டவர் என்ற பிரசாரமும் எடுபடவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியிருந்தும், காவிரி டெல்டா

பாலைவனமானதற்கு வாஜ்பாய் தான் காரணம் என்று சொன்னபோதே ஈவர் அசல் இந்திய அரசியல்வாதி ஆகிவிட்டார்.

சோனியாவை அரசியல் கத்துகுட்டி என்று வர்ணித்த ஜெயலலிதாவிற்கு யார் கத்துகுட்டி என்று புரிந்திருக்கும். தமிழக அரசு ஊழியகர்களின்

வாழ்க்கையை வைத்து பகடை ஆடி கருணாநிதி(சகுனி) தன் அரசியல் (சூழ்ச்சி) அறிவால் ஜெயலலிதாவை கத்துகுட்டி ஆக்கியிருக்கிறார். இந்த முறை அரசாங்க ஊழியர்கள் தாங்கள் வெளியூர் சென்றிருந்தாலும், ஓட்டு போடுவதற்காக தவறாமல் தங்கள் சொந்த ஊருக்கு

சென்று ஓட்டளித்திருக்கிறார்கள்.

மக்கள் ரஜினியின் கணிப்பை உண்மை ஆக்கியிருக்கிறார்கள். இவர் தமிழக மக்கள் புத்திசாலிகள் என்று கூறினார். ஆம். சொல்வார் பேச்சு கேட்டு ஓட்டு போடாமல், தங்கள் சொந்த மூளையை உபயோகித்து ஓட்டளித்திருக்கிறார்கள்.

தேர்தல் வந்தால் தான் மக்களை காப்பாற்ற முடியும் என்று மு.க.ஸ்டாலின் ஒரு ‘பொதுப்படையான ‘ உண்மையை உதிர்த்திருக்கிறார்.

ஆனால், எத்தனை நாட்களுக்கு காப்பாற்ற முடியும் என்று சொல்லவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி அடைந்த காங்கிரஸ் கர்னாடகாவிலும், கேரளாவிலும் தோல்வி அடைந்துள்ளது. ஆந்திராவில் நாயுடுவிற்கு கல்தா. ஜெயலலிதாவிற்கு அதிர்ச்சி வைத்தியம். மத்தியில் பா.ஜ.க விற்கு pink slip.

இந்த தேர்தல் முடிவுகள் பாசிசத்திற்கு எதிரான முடிவு போல தெரியவில்லை. ஆளும் கட்சிகளுக்கு எதிராக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியைத் தான் காட்டுகிறது. இஇந்த முடிவிற்கு காங்கிரசும், திமுகவும், மற்ற முகக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது போலியானது. தவறானது. மக்களை கேலி செய்வதுக்கு ஒப்பானது. இந்த தேர்தலில் mandate அரசியல் கட்சிகளுக்கு எதிரான mandate என்று

எடுத்து கொள்ள வேண்டும்.

இஇஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் ‘போதும் உங்கள் ஆட்சி. நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் ‘ என்று சொல்வது

வாடிக்கை ஆகிவிட்டது. வேறு வழியில்லாமல் தான் மக்கள் ஒவ்வொரு முறையும் மாறி மாறி ஓட்டு போடுகிறார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு கவலையில்ல. அது வரை முடிந்த வரை சொத்து சேர்ப்போம் என்பதே

கட்சிகளின் குறிகோளாக இருக்கிறது.காசு வாங்கிக் கொண்டு கட்சி மாறி ஓட்டு போட்ட மக்களையும் ஏமாற்றி விடுகிறார்கள்.

இப்பொழுது தோல்வி அடைந்தாலும் இன்னொரு ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் நமக்கு ஓட்டு போடுவார்கள் என்ற கணக்கை

கட்சிகள் தெளிவாக தெரிந்து வைத்துள்ளன.

இந்திய அரசியல் கட்சிகளுக்கு Job Security மிக அதிகம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவர்களுக்கு மக்களின் நியாபகமே வருகிறது.கலிபோர்னிியா மாகாணத்தில் ஆண்டு கொண்டிருந்த டெமொக்ராட் கட்சியின் ஆட்சியை மக்கள் வாபஸ் வாங்கியதைப் போல எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் தாங்கள் போட்ட ஓட்டை, ஆட்சியை வாபஸ் வாங்கும் உரிமையை கொண்டு வரவேண்டும். அப்பொழுது இவர்களின் நியாபக சக்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

kundalakesi_s@yahoo.com

Series Navigation

குண்டலகேசி

குண்டலகேசி