நைஜீரியா 4:நைஜீரியாவின் வன்முறைக்குப் பின்னே மதமல்ல , பொருளாதாரம் – ஒரு ஆராய்ச்சி

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

டான் இஸாக்ஸ், பிபிஸி


நைஜீரியா ஜனநாயகத்துக்குத் திரும்பிய வருடம் 1999. அதற்குப் பின்னர் சுமார் 10000 மக்கள் நாடெங்கும் இன – மதக் கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சமீபத்தில் இந்தக் கலவரங்களின் எண்ணிக்கை சற்றே குறைய ஆரம்பித்திருக்கிறது.

ஆனால், நைஜீரியாவின் மத்தியப்பீடபூமியில் நடக்கும் கலவரம் இது குறைகிறது என்ற நம்பிக்கையைத் தரவில்லை. மிக அதிகமான வறுமையும் நிலம் மற்றும் வேலைகளுக்கான தட்டுப்பாடும் இந்த கலவரங்களை அதிகப்படுத்திவிடுகின்றன.

சமீபத்திய வன்முறை முஸ்லீம்களையும் கிரிஸ்துவர்களையும் ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தி இருக்கிறது. ஆனால் இவை பெரும்பான்மையும் பல இன மற்றும் கலாச்சார இடைவெளிகளையே கொண்டிருக்கின்றன.

வடக்கில் பாலைவனமும், தெற்கில் பூமத்தியரேகை காட்டுப்பகுதியும் கொண்டிருக்கும் நைஜீரியாவில் சுமார் 12 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சுமார் 250 வெவ்வேறு இனங்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.

வடக்கில் ஹவுஸா மொழி பேசும் முஸ்லீம்களாகவும், தெற்கில் இருக்கும் கிரிஸ்துவர்கள் யோருபா என்ற இனத்திலும், இபோ என்ற இனத்திலும் இருக்கிறார்கள். இது ஒரு பரந்த பகுப்புதான் என்றாலும், ஏறத்தாழ இது தான் உண்மை.

மத்திய நைஜீரியாவில் ஒரு சாலை வழியே வண்டி ஓட்டிக்கொண்டு சென்றால், ஒவ்வொரு சிறு கிராமத்தில் நிறுத்தும்போதும் வெவ்வேறு இனங்களையும் வெவ்வேறு மொழிகளையும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சந்திக்க நேரிடும்.

இந்த இனக்கலவையை இன்னும் குழப்படிக்க பல நூற்றாண்டுகளாக மக்கள் நவீன நைஜீரியாவில் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஆகையால் தெற்கே பாரம்பரியமாக இருந்த கிரிஸ்துவர்கள் இப்போது வடக்கிலும் வாழ்கிறார்கள். வடக்கே இருந்த ஹவுஸா முஸ்லீம்கள் தெற்கு நாட்டிற்கும் சென்றிருக்கிறார்கள்.

ஆகவே இந்த இனங்களுக்கு இடையேயான பிரச்னைகள் மிகவும் சிக்கலானவையாக இருக்கின்றன

இந்த பிரச்னைகளுக்கு மூல காரணம் மத வித்தியாசங்களும் இருக்கலாம். சில வடக்கு நைஜீரிய மாநிலங்கள் முஸ்லீம் ஷாரியா சட்டத்தை அமல் செய்திருக்கின்றன. இது தீவிரமான பிரச்னைக்கு அடித்தளமாக உணரப் படுகிறது.

ஆனால் பெரும்பாலான வேளைகளில் தங்களை மண்ணின் மைந்தர்களாகப் பார்ப்பவர்களுக்கும் வந்தேறு குடிகளுக்கும் இடையேயான போராட்டமாகவே நடக்கிறது.

Whatever the historical justifications, the conflict is always and everywhere about access to scarce resources

வரலாற்றுக் காரணங்கள் இருந்தாலும், மற்ற இடங்களைப் போலவே இதுவும் வாழ்வாதாரங்களின் தட்டுப்பாடுகளினால் வருவதே.

இது விவசாய நிலங்கள், வேலை, அரசியல் அதிகாரம் ஆகியவைகளுக்கான போராட்டமாகவே இருக்கிறது. சில வேளைகளில் பக்கத்து கிராமத்தில் மின்சாரம் தண்ணீர் கிடைப்பதும் தன் கிராமத்தில் அவை இல்லாததும் இந்த சண்டைகளுக்கு அடித்தளமாக ஆகிவிடுகின்றன.

மிக மிக அடிப்படையில் இந்த வித்தியாசங்கள் உண்மையில் கலாச்சார ரீதியானவையோ அல்லது மதம் அடிப்படை கொண்டதாகவோ இல்லை. இவை பொருளாதார அடிப்படையில் அமைந்தவை.

நைஜீரியாவின் சோகம். கடந்த சில பத்தாண்டுகளில் இதன் மக்கள் தொகை வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு ஏராளமான எண்ணெய் வளம் இருந்தாலும், இந்த வளத்தை மக்களிடம் பங்கிடவும் இந்த பொருளாதாரம் மக்கள்தொகை வேகத்துக்கு ஈடாக வளர்வதும் இயலாததாக இருக்கிறது.

ஒரு பகுதியில் நடக்கும் கலவரங்கள் மற்ற இடங்களுக்குத் துரிதமாய்ப் பரவி விடுகிற்Fஅது. நைஜீரியாவில் வறுமை அதிகரித்தவண்ணமே உள்ளது.

இத்தோடு, அரசாங்கம் தன் மக்களுக்கு அடிப்படை கல்வி கொடுக்காததும், படிப்பறிவு பெற்றவர்களுக்கு வேலை கிடைக்காததும் கோபம் கொண்ட நகர்ப்புற வேலையற்ற இளைஞர் கூட்டத்தை உருவாக்கியிருக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டத்தில் ஒதுக்கப் பட்ட இந்தக் கூட்டத்தையே அரசியல் அதிகாரம் நோக்கி ஆர்வப்படும் அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் குறிவைக்கிறார்கள்.

சில வேளைகளில் இந்த கூட்டத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இந்த அரசியல்வாதிகள் இவற்றோடு இணங்கிச் செல்கிறார்கள்

ஆனால் பல வேளைகளில் அரசியல் மதத்தலைவர்களின் ஆர்வம் இவர்களைக்கொண்டு அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதே

அரசியல் அதிகாரம் இல்லாத அரசியல்வாதிக்கு எந்த வலிமையும் இல்லை. தனக்குப் பின்னால் ஆள்பலம் இல்லாத அரசியல்வாதி தேர்தலில் வெல்ல முடியாது.

இந்தக் கலவரங்கள் மத-கலாசாரம் மூல காரணம் அல்ல என்று பல நோக்காளர்கள் கருதுகிறார்கள்.

நைஜீரியாவின் சந்தைகளும் கடைகளும் முஸ்லீம்களாலேயே நடத்தப்படுகின்றன

சமூகப்பிளவை கொண்டு பிராந்திய மற்றும் நாடு தழுவிய விதத்தில் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவதே அரசியல்வாதிகளால் செய்யப்படுகின்றது.

இது கொச்சையான பார்வையாக இருந்தாலும் இது உண்மை என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது.

அபுஜா நகரத்தில் இருக்கும் மத்திய அரசாங்கத்திலிருந்து கிராம அளவு வரைக்கும் இதன் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் பணம் எப்படி வினியோகிக்கப்படுகிறது என்பதைப் பார்த்தாலே இதன் ஊழல் அமைப்பு புரியும்.

இவை தனக்கு வேண்டிய அரசியல் மதத்தலைவர்களுக்கு கொடுக்கும் காண்டிராக்ட் வழியாகவே இந்த பணம் பயணிக்கிறது.

இந்த காண்டிராக்ட்கள் சாலைகளை அமைக்கவும், பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் அமைக்கவும், மின்சாரம் தண்ணீர் ஆகியவைகளைக் கொடுக்கவும் வழங்கப்படுகின்றன

உண்மையில் இந்த நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பே காண்டிராக்ட் கொள்கை அடிப்படையிலேயே நடக்கிறது. அரசியலதிகாரம் உடையவர்களிடமே காண்டிராக்ட்கள் சேர்கின்றன. அரசியலதிகாரம் இல்லாதவர்கள் காண்டிராக்ட்களுக்காக போராடுகிறார்கள். இருப்பவர்கள் நிறைய காண்டிராக்ட்களை கோருகிறார்கள்.

இந்த காண்டிராக்ட் சண்டைக்குள் மாட்டியவர்கள் சாதாரண நைஜீரியர்கள். சாதாரண பிரச்னைகள் இந்த அரசியல் மதத்தலைவர்களால் ஊதிப் பெரிது படுத்தப்பட்டு கலவரத்தை உருவாக்க ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு பணம் கொடுக்கிறார்கள்.

அவ்வளவுதான் கலவரம் உருவாகக் காரணம்.

ஒருமுறை ஆரம்பித்துவிட்டால் அந்த வன்முறைச் சுழலுக்கு தானே ஒரு வேகம் வந்துவிடுகிறது.

வேறொரு இடத்தில் முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கேள்விப்படும் முஸ்லீம்கள் அருகே வாழும் கிரிஸ்துவர்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்குகிறார்கள்.

இதனால், நாட்டின் வேறொரு பகுதியில் வாழும் கிரிஸ்துவர்கள் தங்களது சகோதரர்கள் முஸ்லீம்களால் கொல்லப்படுவதை கேட்டு அருகே வாழும் முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதங்களைத் தூக்குகிறார்கள்.

இந்த வன்முறைச் சுழலை எளிதில் உடைக்க முடிவதில்லை. அரசியல்வாதிகளாலும் இன்னும் வெளிநாட்டினராலும் இது ஊதிப் பெரிதுபடுத்தப்படுகிறது.

2001இல் கானோ நகரத்தில் நடந்த தெருக்கலவரங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

அங்கே வாழும் முஸ்லீம்கள் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தனில் குண்டு வீசுவதற்கு எதிராக அமைதியான முறையில் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள்.

ஆனால் இது வெகு விரைவிலேயே கிரிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான வன்முறை போராக பிராந்திய அரசியல் எதிரிகளால் தூண்டப்பட்டு சீரழிந்தது.

ஆகவே காரணம் மதம் அல்ல. ஆனால் முஸ்லீம்களும் கிரிஸ்துவர்களும் எதிரெதிரே நின்று போரிடுவதால் பார்ப்பதற்கு அப்படித் தெரிகிறது.

http://news.bbc.co.uk/2/hi/africa/1630089.stm

Series Navigation

டான் இஸாக்ஸ், பிபிஸி

டான் இஸாக்ஸ், பிபிஸி