வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

சாம் வாக்னின்


இஸ்ரேலில் 1960களில் நான் வசித்து வந்தபோது, விலைமதிப்பற்ற தண்ணீரை சேமிக்க எங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மழை எப்போதாவதுதான் வரும். அதுவும் குறைவாகவே. சூரியனோ கொளுத்தும். இஸ்ரேலின் சுத்தத்தண்ணீர் ஏரி சிரியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்தது. இஸ்ரேலிகள் பயிரிடும் வயல்களுக்காக தண்ணீர் எடுக்கும் இஸ்ரேலிகள் சிரியர்களால் சுடப்பட்டார்கள். தண்ணீர் உண்மையிலேயே வாழ்வுக்கும் சாவுக்குமான விஷயம்.

வறட்சி பெரும்பாலும் மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளாலேயே வருகிறது. மாசடோனியா நாட்டில் வந்த பெரும் வறட்சி அங்கு நடந்த உள்நாட்டுப்போரின் விளைவால் வந்தது. ஆஃப்கானிஸ்தானில் இன்றும் தொடர்கிறது வறட்சி. வெட்டுப்பூச்சிகள், வேகமான திட்டமிடப்படாத நகரமயமாதல், பாலைவனமாக்குதல், பொங்கும் மக்கள்தொகை, திடுமென வரும் பொருளாதார வளர்ச்சி, அதுவும் முக்கியமாக தண்ணீர் மிகவும் அதிகமாகத் தேவைப்படும் தொழிற்சாலைகளான மைக்ரோபுரோஸஸர் தொழிற்சாலைகள் இவை எல்லாம் உலகம் இதுவரை கண்ட வறட்சிகளை எல்லாம் விட மிகப்பெரிய வறட்சியை எதிர்நோக்க வைத்துள்ளன.

அரசாங்கங்கள் மிகத் தாமதமாய்த் தான் இந்தப் பிரசினயை மிகத் தயக்கத்துடன் ந்திர்கொண்டுள்ளன. நீர்ச் சேமிப்பு, உப்புநீக்குதல், நீர் உரிமைப் பரிமாற்றங்கள் , தண்ணீர் உபயோகம் பற்றிய ஒப்பந்தங்கள், தனியார்-அரசு கூட்டமைப்பு, தண்ணீர் வினியோகம் தனியார் மயமாக்குதல் என்று கொஞ்சம் கொஞ்சமாய் , ஆனால் தாமதமாய்ச் சில செய்கைகள் செய்திருக்கிறார்கள்.

வருமானப் பெருக்கமும், அரசியல் ரீதியான அழுத்தங்களும், தன்னார்வக் குழுக்களும் தண்ணீர் தரம் உயர்வு மற்றும் பெருமளவில் வினியோகம் கோரிக் குரல் எழுப்பக் காரணமாயின. ஆனால் அரசுகள் உதவ முடியுமா ? உலக வங்கியின் கணக்குப் படி 2010-க்குள் 2600 பில்லியன் டாலர் இப்போதைய தண்ணீர் இருப்பைப் பாதுகாக்கவும், நீர் இருப்பை அதிகரிக்கவும் தேவைப்படும்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்ட அமைப்பு ஆய்வுப் படி 25 வருடங்களில் தண்ணீர் போதாமை ஆப்பிரிக்காவில் பாதி ஜனத் தொகையைப் பாதிக்கும். சுற்றுப் புறச் சூழல் நிறுவனம் ஒன்று – பி பி சி செய்தியின் படி – உணவு இறக்குமதியை தண்ணீர் போதாமைக்கு தீர்வாய்ச் சொல்கிறதாம்.

1 டன் தானியம் உற்பத்தி செய்ய 1000 டன் தண்ணீர் தேவைப் படுகிறது. உலக தண்ணீர் உபயோகத்தில் 70 சதவீதம் விவசாயத்திற்குச் செலவாகிறது. ஆனால் வளர்ந்த 30 நாடுகளின் உபயோகமோ வெறும் 30 சதவீதம் தான். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க்க நாடுகள் இறக்குமதி செய்யும் தானியங்களை உற்பத்தி செய்ய நைல் நதி முழுமையுமே செலவாகிறது. தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள் சில பஞ்சும், அரிசியும் பயிரிடுகின்றன. இவை இரண்டுமே தண்ணீரை ஏராளமாய்ப் பயன் படுத்தும் பயிர்கள். உலக வங்கியின் கணக்குப் படி உலக தண்ணீர்த் தேவையில் 17 சதவீதம் குறைபாடு 2020-க்குள் வந்து விடும்.

அமெரிக்கா தன் தண்ணீர்க் கையிருப்பில் ஐந்தில் ஒரு பங்கை ஒவ்வொரு வருடமும் உபயோகிக்கிறது. அதாவ்து பெல்ஜியத்துடன் ஒப்பிடுகையில் , பாதி தான். ஆனால் புதிய தண்ணீரை அமெரிக்கா மிகத் தாராளமாய்ப் பயன்படுத்துகிறது. எண்ணெய் வளர்ந்த முப்பது அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இரு மடங்கு சராசரி உபயோகம் அமெரிக்காவினுடையது. பெல்ஜியமும், பிரிட்டனும் தம் உபயோக சராசரியை 1980-95 வருடங்களில் 20 சதவீதம் குறைத்தும் இருக்கிறார்கள் – காரணம் நிலத்தடி நீர் வெகுவாய் இறங்கியதும் கூட.

மே 14 அன்று ஸ்ட்ராட்ஃபார் என்ற ஒரு அமைப்பு, மெக்சிகோவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் தண்ணீர் பற்றி ஏற்பட்டுள்ள சச்சரவை செய்தியாய் அளித்தது. 1944-ல் இடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் படி கொலொராடோ, ரியோ காஞ்சோ, ரியோ கிராண்ட் நதிகளின் நீர்ப் பங்கீட்டில் மெக்சிகோ சரியா நடந்து கொள்ளவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

வெகு காலப் பஞ்சத்தினால் கடந்த எட்டு வருடங்களில் மெக்சிகோ ஒன்றரை மில்லியன் ஏக்கர்-அடி தண்ணீரைக் க்டனாய்ப் பெற்றுள்ளது. ஒரு ஏக்கர் அடி என்பது 1.2 மில்லியன் லிட்டருக்கி சமம். மெக்சிகோவின் அணைகளில் 25 சதவீதமே தண்ணீர் இருப்பு உள்ளது. அமெரிக்கச் சந்தைக்காக காய்கறிகளை உற்பத்தி செய்ய மெக்சிகோவின் எல்லை மானிலங்கள் பயன் படுவதால் டெக்சாஸ் மானில விவசாயிகளின் தண்ணீரை மெக்சிகோ பயன்படுத்த வேண்டியுள்ளது.

மே 3-ல் மெக்சிகோவை டெக்சாஸ் மானிலம் எச்சரித்தது. வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தைத் திருத்தி தமக்கு வேண்டிய தண்ணீர் பெறுவதற்காக, பொருளாதாரத் தடைகளையும் விதிக்க வேண்டும் என்று டெக்சாஸ் கேட்டுக் கொண்டது.

மெக்சிகோவின் பாடு தான் பல நாடுகளின் நிலை. அதன் ஆறுகளில் 9 சதவீதமே குடிதண்ணீராய் இருக்கத் தகுதியானவை. நிலத்தடி நீரும் பெரும் மாசடைந்து விட்டது. அதன் கட்டுமானப் பணிகளும் மோசமாகிவிட்டதால், ஐந்தில் இரண்டு பகுதி தண்ணீரில் பிற மாசுகள் கலக்கின்றன.

தண்ணீரின் விலை குறைவாய் இருப்பதால், வீணாவதும் அதிகம். மெக்சிகோவின் நீர் இருப்பைச் சரிசெய்ய 60 பில்லியன் டாலர்கள் தேவைப் படும் என்று ‘ஸ்ட்ராட்ஃஆர் ‘ கணித்துள்ளது.

உலக தண்ணீர்ப் பிரசினைகள் பற்றி எழுதிய வில்லியம் கே ரைலி என்பவர் , தண்ணீர்ப் பற்றாக்குறையால் மில்லியன் பேர்கள் வருடம் தோறும் இறக்கிறார்கள் என்றும், பில்லியன் மக்கள் நல்ல தண்ணீர் கிடைக்காமல் அவதிப் படுகிறார்கள் என்றும் , சொல்கிறார். இவர் அமெரிக்காவின் சுற்றுச் சூழல் ஏஜன்சியில் இருந்தவர்.

1990-களில் நல்லதண்ணீர் இல்லாமல், காலரா கண்டு 11000 பேர் லத்தீன் அமெரிக்காவில் இறந்தார்கள். உலக வங்கியின் கணக்குப் படி எவ்வளவு தண்ணீர் பயன் படுகிறதோ, அதே அளவு தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் மாசு பெறுகின்றது. பல இடங்களில் – குறிப்பாக ஆப்பிரிக்காவில் – தண்ணீர் தேடி மக்கள் பல மைல்கள் நடக்க வேண்டியுள்ளது.

சிசிலி யிலிருந்த்து, மலேசியா வரையில் தண்ணீர் பிரசினை தொழில் வளர்ர்சியால் இன்னமும் கடுமையாகியுள்ளது. சீனாவின் மிக முக்கியமான ஆறான மஞ்சள் ஆற்றின் கீழோட்டப் பகுதிகள் வருடத்தில் நான்கு மாதம் காய்ந்து கிடக்கிறது. சீனாவின் வளம் மிக்க வடக்குப் பகுதியில் வருடத்திற்கு ஒன்றரை மீட்டர் நிலத்தடி நீர் கீழிறங்கி வருகிறது.

சிறீ லங்காவில் வந்த கடுமையான பஞ்சத்தினால் உலக செஞ்சிலுவைச் சங்கம் அவசர உதவி கேட்க வேண்டியதாயிற்று. சீனாவிலிருந்து வியட் நாம் செல்லும் மேகாங்க் ஆற்றின் மீது ஆறு அணைகளை சீனா கட்டி தண்ணீரைத் தடுத்துள்ளது. அணைகள் கட்டி முடிக்கப் பட்டவுடன் ஆறின் நீர் வரத்து பாதியாய்க் குறைந்து விடும்.

ஏழு நாடுகளில் 200 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப் படுவார்கள். இதற்கு பதில் சொல்லும்படி, லாவோஸ் நாடு தன் பங்கிற்கு மேகாங்கில் 23 அணைகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. இந்த அணைகளின் யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப் படப் போவதி வியட் நாமே. தாய்லாந்து தன் அண்டை நாட்டாரிடமிருந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முடியும்.

ஆஸ்திரேலியாவிலும் பிரசினை உள்ளது. ஸ்னோயி ஆறு திசை மாற்றப் பட்டதால், பெரும் பரப்புகளில் உப்புப் படிந்து விட்டது. இதன் உபநதிகள் இப்போது விவசாயத்துக்கும், குடிக்கவும் லாயக்கில்லாமல் ஆகிவிட்டன. இந்தியாவில் கங்கையில் ஆர்செனிக் நச்சு கலக்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா – பங்களா தேஷ் இடையே தண்ணீருக்கான சச்சரவு வெகு காலமாய் நடந்தவண்ணம் உள்ளது. பேச்சு வார்த்தை நடந்தாலும் பயனில்லை. நைல் நதிக்கரைகளில் இது போலவே, 1993-ல் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து எகிப்து ஒரு புறமும், சூடான், எதியோப்பியா ஒரு புறமும் புகார் கூறி வருகின்றன.

ஆப்பிரிக்காவின் நதிப் பங்கீடு பற்றி 2000- ஆண்டு சூலை மாதம் உலக வங்கியும், ஐ நாவும் சேர்ந்து நடத்திய ஒரு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வினியோகம் பற்றி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும், 2001-பிப்ரவரி மாதம் நைல் ஒத்துழைப்புச் சம்மேளனத்தில் தண்ணீர் உபயோகிப்பு உரிமை பற்றி மட்டுமல்லாமல், அதன் நீர் மின்சாரம் வினியோகம் பற்றியும் பேசப்பட்டது.

***

இறுதிப்பகுதி அடுத்த வாரம்

***

http://www.nthposition.com/politics_water.html

Series Navigation

சாம் வாக்னின்

சாம் வாக்னின்