முனைவர் கு.சிதம்பரம்,சீனா
அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதறர்கள்.அவர்களின் பெயர்கள் இங்கு குறிப்பிட வேண்டாம் என எண்ணுகிறேன்.அவர்கள் இருவருமே எனக்கு நெருங்கிய மேல்நிலைப் பள்ளி நண்பர்கள். அதற்க்கு பிறகு பல வருடங்கள் அவர்களுடன் எனக்கு தொடர்பற்று போய்விட்டது. ஒரு சில நாட்களுக்குமுன் ஏதேச்சையாகக் கேள்விப்பட்டேன்@அவர்களில் ஒருவன் மிகவும் நோய்வாய்பட்டிருப்பதாக. எங்கள் கிராமத்து பூற்வீக வீட்டிற்க்குப் போகும் வழியில் அவர்களையும் பார்த்துவிட்டு வரலாமென்று அவர்கள் வீட்டிற்க்கு சென்றேன். அவர்களில் ஒருவனை மட்டுமே பார்க்க நேர்ந்தது.
“நெடுந்தொலைவு சிரமத்தையும் பொருட்படுத்தாமல் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாய.; எப்படி நன்றி தெறிவிப்பதென்றே எனக்கு தெறியவில்லை” என்றான்.மேலும் “ என் தம்பி நேய்வாய்பட்ட செய்தி உன் காதிற்க்கு எட்டியது ஆச்சரியமான விசயம்! அவன் இப்போது மிகவும் தேறிவிட்டான். அலுவல்பணி நிமித்தமாக எங்கி;யோ போயிருக்கின்றான்” என்று கூறினான். பிறகு சிறித்துக்கொண்டே “பள்ளி சிநேகிதன் என்ற முறையில் இதை உனக்கு காட்டுவதால் தவறொன்றுமில்லை”.அவன் தம்பியின் இறண்டு நாட்குறிப்பேடுகளை என்னிடம் கொடுத்து, “இதைப்பார்த்தால் அவன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்ன நிலையில் இருந்தான் என்பதை உன்னால் அறிந்துக்கௌ;ளமுடியும்” என்றான்.
அவ்விரு நாட்குறிப்பேடுகளையும் எடுத்துக்கெண்டு, விடைப்பெற்று திரும்பி வந்துவிட்டேன். அடுத்தநாள் மிகவும் கவனமாக அவ்விரு நாட்குறிப்பேடுகளையும் வாசித்தேன். அவற்றிலிருங்து அவன் மனநோயால் பாதிக்கப்பட்டவன் என்பதை உணர்ந்தேன். கையெழுத்து மிகவும் கிறுக்கலாகவும்;;; வாக்கியங்கள் கோற்வையற்றும் ஒன்றுக்கொன்று முரனாகவும் இருங்தன.மேலும் பத்திகள் ஒன்றோடொன்று தெடர்பற்று கிடந்தன.குறிப்பேட்டில் தியதி எதுவும் குறிப்பிடாமல் இருந்தான். சமூகத்தின் காட்டுமிராண்டிதனத்தை நிறைய இடங்களில் குறிப்பிட்டிருந்தான். எழுத்துமையின் நிறங்களை வைத்து அவை ஒரே நாளில் எழுதியவையல்ல என்;பதை அறியமுடிந்தது. அதிலிருந்து ஒருபகுதியை மட்டும் மருத்துவ ஆராட்சிக்காக எந்தவித மாற்றமும் திருத்தமும் செய்யாமல் எழுதி எடுத்துக்கொண்டேன். அதில் இடம்பெற்றிருந்த உலகமறியப்படாத மானிடர்களின் பெயர்களை மட்டுமே மாற்றியுள்ளேன். மேலும் அவன் மனநிலை தேறியப்பிறகு அந்நாட்குறிப்பேட்டிற்க்கு அவன் வைத்திருந்த தலைப்பையும் நான் எவ்வித மாற்றமும் செய்யவில்லை.
1
இன்றிரவு நிலவு ரொம்ப பிரகாசமாக ஒளிற்கிறது.
நான் கடந்த முப்பது வருசமாக நிலவைப் பார்க்கவில்லை. இன்று அதைப் பார்த்தபோது வழக்கத்துக்குமாறாக நான் பரவசமடைவதை என்னால் உணரமுடிந்தது.மேலும் கடந்த முப்பது வருசமாக இருளில் மூழ்கியிருந்திருக்கிறேன் என்பதை மெதுவாக உணரஆரம்பித்தேன். ஆனால் இனிமேல்தான் நான் மிகவும் எச்சறிக்கையாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டால் திருவாளர் Nஐhவின் நாய் என்னை இரண்டுமுறை முறைத்து முறைத்து பார்க்கவேண்டிய அவசியமென்ன?
என் பயத்திற்க்கு காரணம் இருக்கின்றது.
2
இன்றிரவு நிலவு இல்லவே இல்லை. இது கெட்ட சகுணமென்று எனக்கு தெறியும். இன்றுகாலை நான் ரொம்பவும் எச்சறிக்கையாக தெருவில் நடந்துப் போய்கொண்டிருந்தபோது திருவாளர் Nஐhவின் பார்வையில்
ஒரு மாற்றம் இருந்ததைக் கண்டேன்:எனனைப்பார்த்து அஞ்சுவதைப்போல@ எனனை கொலை செய்யவேண்டும் என்பதைப்போல. ஏழெட்டுபேர் என்னைப் பற்றி முனுமுனுத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் பார்பதைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் மட்டமல்ல நான் கடந்துச் சென்ற அனைவருமே. அவர்களிடம் ஒரு வெறித்தனம் இருந்தது. என்னைப் பார்த்து நரநரவென பல்லைக் கடித்தார்கள். அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை அறிந்தவுடன் உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு நடுங்க ஆரம்பித்துவிட்டது.
இருந்தாலும் நான் பயப்படவில்லை. நான் தொடர்ந்;து போய்க்;கொண்டிருந்தேன்.அவர்களுக்கு முன்னிருந்த சிறுவர்களும் என்னைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தார்கள்.அவர்களின் பார்வையும் திருவாளர் Nஐhவின் பார்வையைப்போலவே இருந்தது.மேலும் அவர்களின் முகங்கள் குட்டிசாத்தான் முகம்போல இருந்தன. என்மேல் அவர்களுக்கு என்ன வெருப்பு. ஏன் இப்படி நடந்துக்கொள்கிறார்கள். எனக்கு எதுவும் விளங்கவில்லை;! நீங்களே சொல்லுங்கள்.ஆனால் அவர்கள் ஓடிவிட்டார்கள்.
என்மேல் திருவாளர் Nஐhவுக்கு என்ன வெறுப்பு. தெருவிலுள்ள அனைவருக்கும் என்மேல் என்ன வெருப்பு. எனக்கு எல்லாமே ஆச்சரியமாக இருக்கின்றது. இருபது வருடங்களுக்குமுன் நடந்தவைகள் மட்டுமே எனக்கு நேபகத்தில் உள்ளது. திரு கூ ஐ{யு யின் பழைய ஏட்டுசுவடை மிதித்து விட்டேன்.அதற்க்காக அவர் மிகவும் கோபப்பட்டாh.;; திருவாளர் Nஐhவுக்கு அவரைத் தெறியாவட்டாலும் அவருடைய ஏட்டு சுவடைப் பற்றி கேள்விப் பட்டிருப்பார்.அவரைப்பற்றி ஒரு மதிப்பீடு செயிதிருப்பார். இதற்க்காக எனக்கு எதிராக தெருவில் இருப்பவர்களுடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சிறுவர்கள் ஏன்?
அவர்கள் அப்போது பிறக்கக்கூட இ;ல்லை. ஏன் இன்று அவர்கள் என்னை இப்படி வெறித்து வெறித்து பார்க்க வேண்டும:எனனைப்பார்த்து அஞ்சுவதைப்போல@ எனனை கொலை செய்யவேண்டும் என்பதைப்போல?
இது உண்மையிலே என்னை பயமூட்டுகிறது. இது எனக்கு குழப்பத்தையும் எறிச்சலையும் ஏற்படுத்துகிறது.
எனக்கு தெறியும் இதை அவர்களின் பெற்றோர்களிடமிருந்துதான் கற்றிருக்கவேண்டும்.
3
இவற்றையெல்லாம் புறிந்துக்கொள்ள தீவிரமாக யோசிக்கிறேன் ஆகையால் என்னால் இரவு நேரங்களில் உறங்க முடிவதில்லை.
அவர்கள் ஒருசிலரை கட்டபஞ்சாயத்தில் வைத்து அவமானப்படுத்தினார்கள். கட்டிவைத்து அடியடியென அடித்தார்கள். கடனைத் திருப்பி செலுத்தாதவர்களின் மனைவிமார்களை எடுத்துக்கொண்டார்கள். ஒருசிலர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலைச் செய்துக்கொடண்டார்கள்.
நேற்று தெருவில் ஒரு சிறுவனைப்போட்டு ஒருத்தி அடியடியென அடித்துக்கொண்டிருந்தாள.; “குட்டி பிசாசே என் கேபத்தைக்கிளப்பாதே உன்னைக் கடித்து கொதறிவிடுவேன்”.என்று கத்தினால் வினோதமானக. இருப்பினும் அவள் என்னையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தால்.என்னுடைய எதிர்ப்பைக் காட்டினேன். என்னுடைய எதிற்ப்பு குணத்தை என்னால் காட்டாமல் இருக்க முடிவதில்லை. அதன்பிறகு என்னை வெறித்தனமாக அவர்கள் முறைத்துப் பார்த்தார்கள். அவர்களின் நீண்ட பற்களைக்காட்டி உறும தொடங்கினார்கள.; அதைப்பார்த்த பெரியவர் சென் என்னை வீட்டிற்க்குள் இழுத்துக்கொண்டு வந்து விட்டார்.
வீட்டிலுள்ளவர்களும் என்னை புறிந்துக்கௌ;ளாத மாதிரி நடித்தார்கள். இவர்களும் அவர்களைப்போலவே என்னை வெறித்தனமாக பார்க்கின்றார்கள.; என்னை கோழிக்குஞ்சியை அடைப்பதைப்போல
அடைத்துவைத்துவிட்டார்கள். இவர்களின் செயல் மேலும் என்னை பித்தனாக்கிவிட்டது.
ஒரு சில நாட்களுக்குமுன் குள்ளநரி கிராமத்திலிருந்து எங்கள் குத்தகைதாரர் ஒருவர் வீட்டிற்க்கு வந்திருந்தார்.இந்த வருடம் விவசாயம் பொய்த்துவிட்டதை கூறுவதர்க்காக. இதற்க்கெல்லாம் காரணமன ஒரு கெட்ட சத்தியை அக்கிராமத்தார்கள் அடித்துகொண்றுவிட்டதாக கூறினாh.; பிறகு சிலர் அவர்களின் தையரியத்தை அதிகப்படுத்துவதற்;க்காக அதனடைய இதயத்தையும் ஈறளையும் எண்ணையில் பொறித்து திண்றுவிட்டதாக கூறினார். நான் அப்பேது குறுக்கிட்டேன்.அவர்கள் இருவரும் என்னை முறைத்து பார்த்தார்கள். இவர்களின் பார்வையும் அவர்களின் பார்வையைப் போலவே இருப்பதை இன்றுதான் என்னால் சரியாக உணரமுடிந்தது. இவர்களும் நரமாமிசத்தை உண்ணுகிறார்கள்.
என்னை சுற்றியுள்ள அணைவருமே நரமாமிசத்தை உண்ணுபவர்கள். என்னையும் ஒருநாள் திண்றுவிடுவார்கள். இதை நினைக்கும்போது உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு நடுங்குகிறது.
தெருவில் அந்தப்பெண் ‘கடித்து கொதறிவிடுவேன’;.என்று கூறியது. அவர்களின் நீண்ட பற்கள் சிவந்த முகங்கள.; குத்தகை தாரர் கூறிய செய்தி;;;;;@ அவர்கள் பேச்சிலுள்ள விசமம்;;@ சிறிப்பிலுள்ள ஆபத்து எல்லாமே ரகசிய குறியீடுகள்தான் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களின் நீண்ட வெள்ளைப் பற்கள் பலரை பதம்பார்த்திருக்கறது.
நான்கெட்டவன் இல்லை. இருப்பினும் திரு கூஐ{யு யின் பழைய ஏட்டுசுவடை மிதித்தது அவ்வப்பேது என் மனதிற்க்கு வந்து செல்கிறது. அவர்கள் எனக்கெதிராக சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறாh.;ஆனால் என்னால் சரியாக ஊகிக்க முடியவில்லை. அவர்கள் யார்மீதாவது கடும் கோபம்கொண்டால் ‘கெட்ட சத்தி’ என்று அழைப்பார்கள.;என்னுடைய சகோதரர் எனக்கு கட்டுரை எழுத கற்றுக்கொடுக்கும்போது கூறியது இன்னும் நேபகத்தில் இருக்கின்றது. “ஒருவன் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக வாக்குவாதம் செய்தால் ‘கெட்டசத்தி’ என்று தீர்மானித்துவிடுவார்கள். சதிகாரர்கள் மன்னித்து விட்டால் பிளைத்துபோ- உனக்கு நல்ல காலம்- என்று அர்த்தம்.இதுதான் அவர்களின் இயற்க்கை குணம்”.
இருந்தாலும் அவர்களின் சங்கேத குறியீட்டை எப்படி புறிந்துக்கௌ;வது – குறிப்பாக அவர்கள் மனித மாமிசத்தை கூறுபோட தயாராக இருக்கும்போது.
இவற்றையெல்லாம் புறிந்துக்கௌ;ள மிக தீவிரமாக யோசிக்கவேண்டி இருக்கிறது.புராணக் காலங்களில் நரமாமிசம் புசிக்ககூடிய கூட்டங்கள் உண்டு என்பதை அறிந்திருக்கிறேன். இது எனக்கு தெறிந்த ஒன்றுதான்.
என் வரலாறு தியதியின்றி இருக்கின்றது.அனைத்து பக்கங்களும் வார்த்தைகளால் நிறப்பப்பட்டிருக்கின்றது: ‘கண்பூசியஸின் நற்குணம் நற்பண்பு.’ ஆனால் அந்த ஏட்டுசுவடு முழுவதும் இரண்டே இரண்டு வார்த்தைகளால் நிறப்பப்பட்டுள்ளது:‘மனிதனை உண்ணு’. இவ்வார்த்தைகளில் புதைந்திருக்கும் ஆபத்தை அறிந்ததால் என்னால் இறவு முழுவதமே உறங்க முடிவதில்லை.
அந்த ஏட்டில் எழுதப்பட்டுருக்கும் வார்த்தைகளும், எங்கள் குத்தகைதாரர் கூறிய வார்த்தைகளும் சிலேடையாக என்னைப் பார்த்து புண்முறுவலிடுகிறது.
நானும் மனிதன்தான்.ஆகையால் என்னையும் அவர்கள் திண்ண பார்க்கிறர்hகள்!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -42 << உன்னை நேசிப்பது எப்படி ? >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதல் கீதம் >> கவிதை -12 பாகம் -1
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1
- நாற்பது ஆண்டுகள் கடந்து நாசா வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்ணுளவச் செல்கிறது !
- விமர்சனக் கடிதம் – 4
- இன்னும் கொஞ்சம் … நட்புடன்!
- நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் ‘கெவின் லிஞ்ச்’ இன் நகரொன்றின் பிம்பக்’ கோட்பாடு பற்றிய புரிதலு
- ஒரு கனவும் ….கனவு கொடுத்த ஆசைகளும்…….
- உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
- சொல்வனம் 26-06-2009 இதழின் உள்ளடக்கம்
- கவிதா ஜெயச் சந்திரன் -நேச குமாரின் கட்டுரைகளைப் பற்றி
- கி பி அரவிந்தன் நூல் வெளியீட்டு விழா
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தொன்று
- மலை உச்சியில் கரையும் மரவீடுகள் ( குறுநாவல் பாகம் 1 )
- மீறும் பெண்மையின் சித்திரம் -(சல்மா கவிதைகளை முன்வைத்து)
- வாணிமஹால்
- சங்கச் சுரங்கம் – 20: மலைபடு கடாம்
- கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்
- தொடக்கத்திலிருந்து வந்து தொலைகிறேன்
- வேத வனம் -விருட்சம் 39
- கனவுப் பெண்ணின் புன்னகை
- பேசும் மௌனங்கள்…
- முத்துக் குளியல்
- அறிவியல் புனைகதை: நான் எங்கிருக்கிறேன்? நான் யார்?
- கண்ணீர்ப் பிரவாகம்
- விளம்பரம்
- இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 7
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 2
- சுய நிர்ணயத்தில் வாழும் வாழ்வு ஒன்று – 1
- பதிப்புரிமை, எழுத்தாளர்கள், சுரண்டலின் பல வடிவங்கள்
- நல்லது … கெட்டது.
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 2
- ஒரு மனநோயாளியின் நாட்குறிப்பு – 1
- ஹேண்டில் பார்…
- அவன்
- மென்மையான உருளைக்கிழங்குகள்