கடப்பாரை

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

அருள்ராஜ் நவமணி


அதோ அந்த ஆலமரத்தின் அடியில் இருக்கும் சதுரமான சிமெண்ட் மேடையில்ி நாள்ி முழுவதும் அவரைப்பார்க்கலாம். எங்கள் அலுவலக வளாகத்திலே ஒரு புதிய கட்டடம் கட்ட இருந்தோம். அந்த இடத்தில் இருந்த பழைய கட்ிடடத்தை இடிக்கும் வேலையை காண்ட்ராக்ட் எடுத்திருந்தார்ி.

அவரை எந்நாளும் ஒரே மாதிரி உடையில்தான் பார்த்திருக்கிறேன். வெள்ளை வெளேரென்ற வேஷ்டி சட்டை. குட்டையான ஆனால் புஷ்டியான உடல் வாகு. தீர்க்கம்மான கண்கள். புஸுபுஸுவென்று ம.பொ.சி.யை ஞாபகப்படுத்தும் மீசை. தும்பபைப் பூப்போல நரைத்த தலை.

வெண்கலக் குரல் என்பார்களே, அப்படி ஒரு குரல் அவருக்கு. இருந்த இடத்ிதில் இருந்தபடியே அந்த கட்டிடத்தில் பல நிலைகளில் வேலை பார்த்த ஒவ்வொருவரையும் நெரிப்படுத்துகிற, எச்சரிக்கிற, வழிப்படுத்திகிற ஒரு குரல்.

எப்போதும் அவர் யாருடனாவது பேசியபடிதான் இருப்பார்ி. பேச்சில் அவர் குரல்தான் உரத்து ஒலிக்கும். அவருடைய வேலையாட்கள் யாரையவது கண்டிப்பதிலாகட்டும், இரண்டுபெருக்கிடையில் வழக்கு தீர்ப்பதிலாகட்டும் – அவருடைய குரல் தீர்மானமாக வெட்டு ஒன்று துண்டு இரண்டு என ஒலிக்கும். பழைய கட்டிடத்தில் பிரித்தெடுத்த மரங்கள், பலகைகள், இரும்பு மற்றும் செங்கற்களை வாங்க வந்திருப்பவர்களிடம் பேரம் பேசும்பொது கூட ஒரு வித கண்ிடிப்பும் அதிகாரமும் தொனிக்கும்.

நான் அலுவலகத்திற்கு வரும்போதும், விட்டிற்குப் போகும்போதும் மரியாதை நிமித்தம் அவ்ரிடம்ி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதுண்டுி.

“வேலை கொஞசம் மெதுவாக நடக்கிற மாதிரி தெரியுதே! அடுத்த பதினைஞ்சாம் தேதி புது கட்டிட வேலை ஆரம்பிக்க முடியுமா ?” என்றேன் ஒரு நாள்.

“கண்டிப்பா! நான் சொன்ன தேதியில உங்ககிட்ட பூமிய ஒப்படைக்கலேன்னா ‘ஏன் ‘னு கேளுங்க” என்றவர் தொடர்ந்து ஒரு விளக்கமும் கொடுத்தார். “அந்த காலத்து கட்டடம் பாருங்க. ஒவ்வொரு சாமானும் அவ்வளவு நேர்த்தியா இருக்கு. கொஞ்சம் மெதுவா ஒடச்சாதான் செங்கல்களை முழுசா எடுக்க முடியும். அதான் கொஞ்சம் பார்த்து உடைக்கச் சொல்லியிருக்கேன். அப்பதானே நானும் நாலு காசு பாக்க முடியும் ? ஆனா நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொன்ன நாளைக்குள்ள வெலையை முடிச்சசிடுவேன். இதென்ன சுண்டைக்காய் வேலை! என்னுடைய சர்விஸ்ல எவ்வளவு பெரிய கட்டடமெல்லாம் இடிச்சிிருக்கேன்!…” என்று ஒரு பட்டியல் போட ஆரம்பித்தார்.

எனக்கு அப்போது தான் ஒன்று தோன்றியது. எந்த நாணயமான வேலையும மோசமானதில்லைதான். ஆனால் இந்த மனிதர் தன்னுடைய சாதனைகள் என்று என்ன சொல்லுவார் ? பிற்காலத்திலே தன்னுடைய பேரப்பிள்ளைகளிடமோ மற்றவர்களிடமோ எந்தெந்த கட்டடங்களை ‘இடித்தேன் உடைத்தேன் ‘ என்றா பிரஸ்தாபிப்பார் ? அவருக்கு இந்த வேலை உண்மையிலேயே ஒரு திருப்தி தருகிறதா ? அல்லது இது அவருக்கு just இலாபம் தரும் ஒரு தொழில், அவ்வளவுதானா ?ி ஏனோ, அவரைப் பார்க்கும்பொதெல்லாம் இந்த கேள்வி எனக்குத் தோன்றியது.

ிி

ஒரு நாள் நான் அலுவலகம் வரும்போது, அவர் அந்த ஆலமரத்தடி மேடையில் இல்லை. அவருடைய உதவியாள்தான் நின்று வேலையைக் கண்காணித்துக் கொண்டிருந்தான். நானும்ி ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சொந்த வேலை அல்லது ஏதாவது கல்யாணம் காட்சி என்று போயிருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். ‘அல்லது இடிப்பதற்கு வேறு கட்டடம் இருக்கான்னு பார்க்கப் போயிருப்பார் ‘ என்று வக்ரமாக( ?) எண்ணிக்கொண்டேன்.

சாயங்காலம் அவரைப் பார்த்தேன். “என்ன, காலையிலே உங்களைக் காணலியே ? ஏதும் வேலையா போயிருந்தீங்களா ?” என்று கேட்டேன்.

ஒரு சின்ன சிரிப்புடன் அவர் சொன்னார். “வேலைதான் தினசரி இருக்கே. போன வருஷம் டெய்லர்ஸ் ரோடு பக்கத்தில ஒரு கட்டடம் இடிச்சிக் கொடுத்தேன். அங்க புது கட்டடம் கட்டி முடிச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அதான் போயி பாத்துட்டு வந்தேன். அப்பா.. எட்டு மாடி கட்டடம் புது பெயின்டுல பளபளன்னு என்னமா ஜொலிக்குது தெரியுமா ? கண்ணாடியும், அலுமினியமுமா போட்டு இழைச்சிருக்காங்க. என்னமோங்க, நான் உடைச்ச எந்த சைட்டுன்னாலும், புது கட்டிட வேலை முடிஞ்சதும் ஒரு நடை போய்ப் பாத்துட்டு வந்திடுவேன். அதுல ஒரு சந்தோஷம். உங்க கட்டட ப்ளானையும் பாத்தேன். நல்லா இருக்கு. முடிஞ்சதும்ி வந்து பார்ப்பேன்!”

இப்போது அவருடைய ஒரு புதிய பரிமாணம் எனக்கு புலப்படுவதுபோல தோன்றியது. அவருக்கும் தன் பேரப்பிள்ளைகளிடம் பிரஸ்தாபிக்க விஷயம் இருக்கிறது! கட்டட திறப்பு விழாவுக்கு மறக்காமல் அவருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

– அருள்ராஜ் நவமணி

arulraj52@yahoo.com

Series Navigation

அருள்ராஜ் நவமணி

அருள்ராஜ் நவமணி