ஒரு சிறுவனின் கனவு

This entry is part [part not set] of 52 in the series 20041216_Issue

பாரி பூபாலன்


அந்த சிறுவன் மும்முரமாய் வரைந்து கொண்டிருந்தான். வரைய வரைய அவனது முகத்தில் ஒரு மலர்ச்சி. ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கையில் ஒரு கலர் பேனாவுடன் எதிருள்ள மேசையில் இருந்த ஒரு பெரிய தாளில் வரைந்து கொண்டிருந்தான். அவ்வப்போது தலையைத்தூக்கி யோசனையுடன் அவனது அறைச் சுவற்றில் ஒட்டியிருந்த போஸ்டரைப் பார்த்துக்கொண்டான். அந்த பார்வையில் ஒரு கனவு தெரிந்தது. அந்த க னவில் ஒரு பெரிய பண்ணை. குதிரைகள் திரிந்து கொண்டிருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள். ஒரு பக்கம் சோளக்கதிர்கள். மறுபக்கம் பலவகைச் செடிகள். பறவைகளின் கீச்சுக்குரல்களும் குதிரைகளின் கனைப்புகளும் அவனது காதில் விழுந்துகொண்டு இருந்தன.

நாலைந்து குதிரைகள் இருக்கும் அந்த போஸ்டரில். அவை சுதந்திரமாய் வெட்ட வெளியில் திரிந்து கொண்டிருப்பதாய் இருந்தது அந்த போஸ்டர். அவனது அறையில், கட்டில் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சுவரோரமாய் ஒரு மேஜை நாற்காலி. அறையில் நிறைய விளையாட்டுச்சாமான்கள் இறைந்து கிடந்தன. விளையாட்டுச்சாமான்களில், குதிரை, மாடு போன்ற பிராணிகளின் பொம்மைகள் நிறைய. மேசைக்கருகி ல் நிறைய நோட்டுப்புத்தகங்கள். பிராணிகளைப்பற்றிய புத்தகங்கள் நிறைய கிடந்தன. அவனுக்கு எப்படி அத்தகைய ஆர்வம் வந்ததென்று தெரியவில்லை. பிராணிகளைப்பற்றிய ஆர்வமேலீடு அதீதமாய் இருந்தது அவனுக்கு.

முகத்தில் ஒரு திருப்தியுடன் வரைந்து கொண்டிருந்தான். சில குதிரைகளையும், வயல் வெளிகளையும் அவன் எண்ணிப்பார்த்ததில் இருந்த மாதிரி அந்த பேப்பரில் வரைந்தான். அப்படி ரொம்பவும் ஈடுபாட்டுடன் அவன் வரைந்து கொண்டிருக்கையில் கீழிருந்து அவனது அம்மாவின் குரல் குரல் கேட்டது.

‘சாப்பாடு ரெடி… தம்பி சாப்பிட வா.. ‘

அவன் காதில் விழவில்லை. இன்னும் ஒன்றிப்போய் அந்த படத்தை வரைந்து கொண்டிருந்தான்.

கொஞ்ச நேரத்தில் திரும்பவும் கூப்பிட்டாள்.

‘தம்பி என்ன பண்றே ? சீக்கிரம் வா! ‘

கீழிருந்து படியேறி வரும் சத்தம் கேட்கிறது. அம்மா மேலே வந்து கொண்டிருந்தாள்.

‘என்னடா.. கூப்புட்றது காதிலெ விழலியா ? சீக்கிரம் வந்து சாப்பிடு. எனக்கு வேலை நிறைய இருக்கு. ‘

‘இதோ வர்ரேம்மா… ‘

வரைந்து முடிந்தபின் திருப்தியுடன் அதைப்பார்த்துக்கொண்டு பதில் கூறினான்.

‘இந்த கண்றாவியிலேதான் உக்காந்துகிட்டு இருக்கியா ‘

அவள் பின்னால் வந்து அவன் செய்துகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டுக் கேட்டாள். அந்த கேள்வியிலும், கேட்ட முகத்திலும் எரிச்சல் நன்றாகவே தெரிந்தது.

‘ஒழுங்கா உக்காந்து படிக்காம, என்ன படம் வரஞ்சுக்கிட்டு இருக்கியா ? ஏன் இதெல்லாம் ? உருப்பட வழி தெரியலையா ? ‘

‘இல்லேம்மா. க்ளாஸ் ப்ராஜெக்ட். பின்னாடி என்னவா இருக்கனும்னு யோசிச்சு எழுதிகிட்டு வரச்சொன்னாங்க. நான் பெரிய பார்ம் வைக்கப்போறேன்.. ‘

‘ஏண்டா ஒனக்கு இப்படி புத்தி போவுது ? ஒரு டாக்டராவோ இல்லேன்னா இஞ்சினியராவோ வரனும்னு நெனைச்சா என்ன ? பார்ம் வெச்சா உருப்பட்ட மாதிரிதான். உங்கப்பா ஒன்னை மாதிரி நெனைச்சுருந்தார்னா, இன்னேரம் நீ ஊர்லே மாடு மேச்சுகிட்டு இருக்கவேண்டியதுதான். போட்டுக்க சட்டையும் இருக்காது. சாப்பிட நல்ல சாப்பாடும் இருந்திருக்காது. இதெல்லாம் வேணான்டா. அப்பா மாதிரி படிச்சு நல்ல வேலை_ecகுப்போகபாரு. ‘

‘பார்ம் வைக்கிரதும் நல்ல வேலைதாம்மா! ‘

‘சரி சரி. ஒங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க எனக்கு நேரமில்லை. மூடி வெச்சுட்டு சாப்பிட வா ‘

அவள் முகத்தில் கோபம்.

அவன் முகத்தில் வருத்தம்.

அவன் அந்த படத்தை சுருட்டி வைத்துவிட்டு சாப்பிட கீழே சென்றான். வருத்தமாயிருந்தாலும் அதனைப் பார்த்து சுருட்டுகையில், அவனது முகத்தில் ஒரு திருப்தி. சாப்பிடும் போதும் அவனது எண்ணங்கள் அவனது பண்ணையிலேயே இருந்தது.

மறுநாள் பள்ளிக்குச்செல்ல புறப்படுகையில் மறக்காமல் அவன் வரைந்த தாளை எடுத்து வைத்துக்கொண்டான்.

வகுப்பு இடைவேளையின் போது அவனது ஆசிரியயை இருந்த இடம் நோக்கி அந்த சிறுவன் அவளிடம் நடந்து சென்று, அருகில் சென்று நின்றுகொண்டு, அவளிடம் பேசினான் அவன்

‘Miss Clarence, I have finished my project work. You want to see ? ‘

‘Sure. Let me see it ‘

அவன் சுருட்டி வைத்திருந்த படத்தை விரித்து காண்பித்தான்ன்.

‘Wow.. Its very beautiful. Tell me all about it! ‘

‘This is my farm. When I grow up, I am going to work there. I have horses, cows and chicken in the farm. There is a huge corn field and then there is a Wheat field. I also grew vegetables like potatoes, tomatoes… I am going to send the corn, wheat and vegetables to all over world. Remember that day you told about some of the African countries, where they don ‘t have food to eat. I will send there too. ‘

பெருமையுடன் சொல்லிக்கொண்டிருந்தான். சொல்லும்போது அவன் கைகளை விரித்தும், முகத்தில் பாவனைகளுடன் அவன் விவரிப்பு இருந்தது.

டாச்சரின் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது.

‘very nice! very nice. Its an impressive work you have done there. You have a great dream. I am happy to know about your dream. I know you are going to make a difference when you grow up. Good job ‘

‘But my mom doesn ‘t like it. ‘

‘It doesn ‘t matter. Its all about you. Its all about the things you want to do, the things that will make you happy. It doesn ‘t matter. Your parents will understand later. You keep your dreams. Don ‘t lose it. ‘

‘ya. you are right. ‘

பெருமையுடன் அந்த படத்தை சுருட்டி வைத்துக்கொண்டான்.

பள்ளியிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்து ஷீவை கழட்டிக்கொண்டிருப்பதற்குள் அவனுக்குப் பிடிக்காத குரல் கேட்கிறது.

‘வந்தாச்சா. வா வா. போய் சீக்கிரமா மூஞ்சி கழுவி ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. ‘

‘அம்மா என்னோட ப்ராஜெக்ட் எங்க மிஸ்ஸிக்கு ரொம்ப பிடிச்சிருந்ததும்மா. ‘

‘உங்க மிஸ்ஸிக்கு என்னா தெரியும். ஒன்னை மாதிரியே அவளும் உலகம் தெரியாதவளா இருக்கா. நான் வந்து அவளைப்பாத்து பேசறேன். ஏண்டி இப்படி இருக்கேன்னு. நீ இப்போ சீக்கிரம் வந்து உக்காரு. மேத்ஸ் போடனும். ஒனக்கு உக்காந்து சொல்லிக்குடுத்துட்டு நா வேறெ வேலையெல்லாம் பாக்கனும். ‘

அவன் முகத்தில் ஒரு வெறுப்பு தெரிந்தது. அவனுக்குள் சொல்லிக்கொண்டான்.

‘மேத்ஸ்.. யாருக்கு வேணும் மேத்ஸ் ?. நீயே வெச்சுக்கோ. let me go to my own world. let me live in my dreams ‘

பதில் ஒன்றும் சொல்லாமல், அவன் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டு படுக்கையில் வீழ்ந்தான்.

படுக்கையில் படுத்தபடி அவனது அறையிலிருந்த போஸ்டரைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவனுக்குத் தன் கனவுலகத்துக்குப் போய்விட்டதாய் இருந்தது. அவன் உலகத்தில் பெரிய பெரிய வயல்வெளிகள், மாடுகளும் குதிரைகளும் கனைத்தபடி திரிந்து கொண்டிருந்தன. கோழிகள் குஞ்சுகளுடன் இரை தேடிக்கொண்டிருந்தன. பரந்து வளர்ந்து கிடந்தன சில மரங்கள். அவற்றில் காக்கைகளும் குருவிகளும் உட்கார்ந்து கூவிக்கொண்டிருந்தன. அவன் அங்கே சுதந்திரமாய் உலவிக்கொண்டிருந்தான். அவன் அம்மா கூப்பிடுவ து வெகு தூரத்திலிருந்து கேட்டது. அந்த குரலுக்கு அவன் உலகத்தில் இடம் இருப்பதாய்த் தெரியவில்லை.

**

pariboopalan@hotmail.com

**

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்