500 டாலர் நகைச்சுவை

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

வஹ்ஹாபி


மவ்லிதுகளின் ஒரேயொரு சொல்லெடுத்தும் பொருள் சொல்லாத ‘மவ்லிதுகளின் அர்த்தப் பரப்புகள்’ திண்ணையில் சென்ற வாரம் பரத்தப் பட்டிருந்தன [சுட்டி-1]. அதில், “அரபு மொழியிலமைந்த மவ்லிதுகளை நேரடி மொழிப்பெயர்ப்பை அளித்து அதற்கு மாசு கற்பிக்கும் உள்நோக்க வியாக்கியானம் செய்யும் அரசியல் வகாபிகளிடம் காணப்படுகிறது” என்ற அறிவார்ந்த? குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டதால் எதிர்வினை எழுத வேண்டியதாயிற்று.

இல்லாததை மடியிலிருந்து எடுத்துப் போட்டால்தானே ‘உள்நோக்க வியாக்கியானம்’ என்று சீறிப் பாயலாம்? நேரடி மொழிபெயர்ப்பிலேயே மாசு படுகிறதென்றால் விளக்கம் சொல்லப் புகுந்தால் என்னவாகும்?

மவ்லிது என்றால் தமிழில் ‘பிறப்பு’ என்ற பொருளையும் [சுட்டி-2] அதுவே மீலாது என்று வழங்கப் படுகிறது [சுட்டி-3] என்ற சிறு விளக்கத்தையுங்கூட அவ்வளவு பெரிய ‘பரப்பில்’ காண முடியவில்லை!

எவராலும் பெற்றெடுக்கப் படாத, எவரையும் பெற்றெடுக்காத [112: 003] ஏக இறைவனுக்கும் மவ்லிது; எவருக்கும் பிறந்தநாள் கொண்டாடாத இறைத்தூதருக்கும் மவ்லிது. போதாதென்று, அரபு விழுமியங்களுக்கும் ஒரு மவ்லிது பாடுகிறார் கட்டுரையாளர்.

இவருடைய பாட்டுக்குக் குர்ஆனையும் ஹதீஸையும் தஃப்ஸீரையும் தாளம் போடச் சொல்லிக் கெஞ்சுவதுதான் இதில் உச்சகட்ட நகைச்சுவை:
“மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு விழுமியங்களை புகழ்ந்தும் பாடப்பட்டிருப்பதற்கு புனித நூல்களான திருகுர் ஆன்,ஹதீதுகள், குர் ஆன் விரிவுரைகள்,ஹதீது விரிவுரைகள் மற்றும் வரலாற்று நூல்களில் பதிவுகள் நிறைய இருக்கிறது”

முஜீப் ரஹ்மானின் மேற்காணும் நகைச்சுவைக்கு 500 டாலர் காத்திருக்கின்றது [சுட்டி-4].

பரிசு பெறுவதற்காக அவர் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mawlid@muttaqun.com

மவ்லிது ஆர்வமுள்ள திண்ணை வாசகர்களுக்குத் தமிழில் மவ்லிது இலவசம் [சுட்டி-5].

ஃஃஃ

சுட்டிகள்:
1. http://www.thinnai.com/?module=displaystory&story_id=20607074&format=html

2. http://i-cias.com/cgi-bin/eo-direct.pl?mawlid.htm

3. http://www.therighteouspath.com/manhaj/barailwiyyah_mawlid.htm

4. http://muttaqun.com/mawlid.html

5. http://www.angelfire.com/tv2/avmaulid/

_____________________________

to.wahhabi@gmail.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி