365 நாட்கள் 365 முகாம்கள் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் சம்ஸ்க்ருதபாரதி

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

புதுவை சரவணன்


நம் நாட்டின் பாரம்பரிய சொத்தான சம்ஸ்க்ருத மொழியின் வளர்ச்சிக்காக அகிலபாரத அளவில் ‘ ‘சம்ஸ்க்ருதபாரதி ‘ ‘ என்ற அமைப்பு பல ஆண்டுகளாக சத்தமில்லாமல் சேவையாற்றி வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் சம்ஸ்க்ருதத்தை சாமான்ய மக்களிடத்திலும் கொண்டு செல்வதுதான். இதில் சம்ஸ்க்ருதபாரதி பெரும் வெற்றி கண்டுள்ளது.

பல ஆண்டுகளாக சம்ஸ்க்ருதத்திற்கு எதிராக பலமான குரல் ஒலித்துவரும் தமிழகத்தில்தான் சம்ஸ்க்ருதபாரதி பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 20,000 பேரை சம்ஸ்க்ருதத்தில் பேச வைத்துள்ளது இந்த அமைப்பு. இவர்களில் பெரும்பாலனவர்கள் இதற்கு முன் சம்ஸ்க்ருதத்தின் வாசனையே அறியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களைவிட தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகவேகமாக சம்ஸ்க்ருதத்தை புரிந்து கொள்கிறார்கள் என்பது சம்ஸ்க்ருதத்தை கற்றுத்தரும் பணிக்காகவே தங்களது வாழ்வை அர்ப்பணித்த சம்ஸ்க்ருதபாரதி ஊழியர்களின் அனுபவமாக இருக்கிறது. மற்ற மாநிலத்தவர்களைவிட தமிழர்கள் சம்ஸ்க்ருதம் கற்பதில் அதிக ஆர்வம் காட்டுவது சம்ஸ்க்ருதபாரதி ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சம்ஸ்க்ருதபாரதி மாநில அலுவலகத்தில் தினந்தோறும் நடக்கும் சம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி வகுப்பிற்கு ஆர்வத்தோடு பலர் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் கனிப்பொறி துறையில் படிக்கும் மாணவர்கள்.

சம்ஸ்க்ருதபாரதி சம்ஸ்க்ருத்ததை பரப்புவதற்காக 10 நாள் பேச்சு பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இந்த வகுப்பிற்கு சம்ஸ்க்ருதத்தில் ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். வயது, கல்வித்தகுதி எதுவும் இதற்கு தடையில்லை. தமிழகம் முழுவதும் இதுவரை ஆயிரக்கணக்கான 10 நாள் சம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி வகுப்பை சம்ஸ்க்ருதபாரதி நடத்தியுள்ளது. சம்ஸ்க்ருதபாரதி அமைப்பை பற்றி எழுதும்போது சம்ஸ்கிருதத்தின் சிறப்புகளை பற்றியும் எழுதுவது அவசியமாகிறது. சம்ஸ்க்ருதத்தின் சிறப்புகள் பற்றி எழுதுவது வானத்தில் உள்ள நட்சத்திரங்களை அளப்பது போன்றது. சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட உலகின் ஐந்து வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரான்ஸின் அதிபர் ஜாக் சிராக் தான் ?ார்வர்டு பல்கலைகழகத்தில் படிக்கும்போது சம்ஸ்க்ருத அறிஞராக விரும்பியதாக ‘இந்தியா டுடே ‘வு“ககு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் சம்ஸ்க்ருதத்தின் மூலம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியத்தை தெரிந்து கொண்டதாகவும், பாரீஸில் குப்தர் கால கலை கண்காட்சியை நடத்துவதாகவும், தான் பாரீஸில் உருவாக்கி வரும் பழங்குடி கலை காட்சியகத்தில் இந்திய பழங்குடி கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு இந்தியாவை பற்றி ஒரு உயர்வான எண்ணத்தை சம்ஸ்க்ருதம் ஏற்படுத்தியுள்ளது. சம்ஸ்க்ருத்ததின் சிறப்புக்கு இதை விட சிறந்த உதாரணத்தை சொல்ல முடியாது.

இந்து மதத்திற்கும், இந்து கலாச்சாரத்திற்கும் எதிரான நாத்திகர் என்ற அடையாளத்தை ஏற்றிருந்த நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவர்கர்லால் நேரு தனது ‘டிஸ்கவரி ஆப் இந்தியா ‘ எந்ற நூலில் சம்ஸ்க்ருத்ததின் சிறப்புகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதியுள்ளார். 1780ல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற அறிஞர் கிரேக்கம், லத்தின் மொழிகளைவிட சம்ஸ்க்ருதம் நேர்த்தியானது, வளமையானது என்று கூறியதையும், கி.பி. 7ம் நூற்றாண்டில் கம்போடியாவில் சம்ஸ்கருத நாடகங்களும், சம்ஸ்க்ருதத்தை முறைப்படி ஒப்புவிக்கும் பயிற்சி இருந்ததையும் நேரு தனது நூலில் பதிவு செய்திருக்கிறார்.எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல ஜெர்மனி அறிஞர் மாக்ஸ்முல்லர் .. ‘ ‘ இந்தியாவின் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் ஒரு மகத்தான பாலம் சம்ஸ்க்ருதமே ‘ ‘ என்று கூறியுள்ளார். இதையும் நேரு ‘டிஸ்கவரி ஆப் இந்தியா ‘வில் பதிவு செய்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இரன்டாவது தலைவரான ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் நூற்றான்டு விழாவை தமிழ்நாடு சம்ஸ்க்ருதபாரதி அமைப்பு வித்தியாசமாக கொண்டாட முடிவு செய்துள்ளது. கோல்வல்கர் நூற்றாண்டு தொடங்கும் பிப்ரவரி 24ந் தேதியிலிருந்து சென்னை மாநகரில் மட்டும் 365 நாட்களும் 365 சம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுன்ளது. இதற்கு ‘ ‘ சிபிரமாலா ‘ ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒவ்லொரு நாளும் ஒரு இடத்தில் பேச்சு பயிற்சி வகுப்பு துவக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த நூற்றுக்கணககானவர்களுக்கு சம்ஸ்க்ருதபாரதிபயிற்சி அளித்துள்ளது. இந்த சம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி வகுப்பை சென்னை மயிலாப்பூர் சம்ஸ்க்ருத பாரதி அலுவலகத்தில் சம்ஸ்க்ருதபாரதியின் மாநில பொறுப்பாளர் டாக்டர் ராமச்சந்திரன் துவக்கி வைக்கிறார். கடந்த ஆண்டு சென்னையில் சம்ஸ்க்ருத பராதி ஒரே நாளில் தொடங்கி, ஒரே நாளில் முடிவடையும் 100 சம்ஸ்க்ருத பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்தியது. அதுபோல இந்த 100 வகுப்புகளை நடத்த சம்ஸ்க்ருதபாரதி திட்டமிட்டுள்ளது.பாரதத்தின் பொக்கிஷங்களில் ஒன்றான சம்ஸ்க்ருத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் கம்ஸ்ருதபராதி அமைப்பை பற்றி சில தகவல்களை திண்ணை வாசகர்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

—-

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்